செவ்வாயின் நீச வர்க்கோத்தமம்!

2024 ஐப்பசி மாதம் 7-ஆம் தேதி (அக்டோபர் 23) அன்று செவ்வாய் கடக ராசிக்கு மாறுகிறார்.

செவ்வாய் கடக ராசியில் நீசம்பெறுவார் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான்.

Advertisment

ஆனால் செவ்வாய் அக்டோபர் 23 முதல் நவம்பர் 1-ஆம் தேதிவரை புனர்பூசம் 4-ஆம் பாதத்தில் சஞ்சரிக்கிறார்.

இதனால் செவ்வாய் ராசியிலும் கடகத்தில் இருப்பார்; அம்சத்திலும் கடகத்திலேயே இருப்பார். எனவே செவ்வாய் நீச வர்க்கோத்தமம் பெறுகிறார்.

"செவ்வாய் எனும் கிரகம் காலபுருஷனின் 8-ஆம் அதிபதியாகி நீச வர்க்கோத்தமம் பெறுவது மிகத்தீமையான ஒன்றாகும். இதனால் செவ்வாயின் காரக செயல்கள் பதட்டம் அடையும்.

Advertisment

muu

செவ்வாய் பூமியையும் கட்டடத்தையும் குறிப்பார்.

எனவே பூமி அதிர்வும் கட்டடம் உடைவதும் உண்டாகும். செவ்வாய் ரத்தக்காரகன். எனவே இவை சம்பந்த நிகழ்வுகள் அதிகமாகும். திருடர், தீவிரவாதிகள் தொல்லை அதிகரிக்கும்.

எனினும் அக்டோபர் 24, 25, 26 தேதிகளில் சந்திரன் கடக ராசியில் செல்வார். அப்போது செவ்வாயின் நீசம் பங்கமாகிவிடும்.

அதனால் செவ்வாய் தனது தீவிரவாதத் தைக் குறைத்துக்கொள்வார்.

அக்டோபர் 27, 28, 29, 30, 31 மற்றும் நவம்பர் 1-ஆம் தேதிகளில் செவ்வாயின் ஆட்டம் அதிகமாக இருக்கும். எனவே மக்கள் சற்று விழிப்புடன் இருப்பது அவசியம். திருச்செந்தூர் முருகனை வழிபடவும்.

நவம்பர் 1-ஆம் தேதிக்குப்பிறகு அம்சம் மாறிவிடுவார். அதனால் செவ்வாயின் கொடூரம் இவ்வளவு அதிகமாக இருக்காது.