பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறும் ஒரு நாடே உலக அரங்கில் வல்லரசாகத் திகழ முடியும். சமீபகாலமாக உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதை நாம் அறிவோம். இதற்கு கொரோனா வைரஸின் தாக்கத்தையும் குறிப்பிடத்தக்க ஒரு காரணமாகக் கூறலாம்.
உலகப் பொருளாதார வீழ்ச்சியில், இந்தியாவில் அதன் தாக்கம் அதிகமாக இருப்பது வருந்தத் தக்கதாகும். தீடீர் பொருளாதார வீழ்ச்சியை வளர்ந்த நாடுகளால் சமாளிக்க முடியும். வளர்ந்துவரும் நாடுகள் தீடீர் சரிவிலிருந்து தம்மைக் காப்பதற்கு மிகுந்த பேராட்டத்தைச் சந்திக்கநேரும்.
உலகளவில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடிக்கு ஜோதிடரீதியான காரணத்தை இந்த கட்டுரையில் காணலாம்.
ஒரு நாட்டின் பொருளாதாரம் என்பது தொழில்நுட்ப வளர்ச்சி, சமூக நிறுவனங் களின் வளர்ச்சி, வரலாறு மற்றும் அதன் புவியியல், இயற்கை வளம், தட்ப- வெப்ப நிலை போன்ற காரணிகளை உள்ளடக்கியுள்ளது. சமூகரீதியாகப் பொருளாதாரம் என்பது மனித நடவடிக்கைகளுக்கு நேரடியாகத் தொடர்புள்ள உற்பத்தியில், பரிமாற்றத்தில், விநியோகத்தில், நுகர்வில் பங்கேற்கும் அனைத்து வகை யான தொழில்கள், வேலைகள் போன்ற காரணிகளை உள்ளடக்கியது.
நுகர்வு, சேமிப்பு மற்றும் முதலீடு போன்ற பொருளாதாரக் காரணி கள் நாட்டின் பண மதிப்பிற்கேற்ப மாறுபடும். நாட்டின் பொருளாதார நடவடிக்கையின் முக்கியத் துறைகளான விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறை மற்றும் கனிம வளங்கள் ஆகியவை மாறாத நிலையான கூறுகளாகும்.பொருளாதார வீழ்ச்சியும் பண வீக்கமும் இணைந்தே செயல்படும் காரணிகள். இதை இரண்டு நிலைகளாக வகைப்படுத்தலாம்.
1. மிகச்சிறிய மிதமான பணவீக்கம்
மிகச்சிறிய பணவீக்கம் எப்பொழுதும் வளர்ந்துவரும் நாடுகளில் நிலவும் சாதாரண பிரச்சினை. இது அத்தியாவசியமானதும் நன்மை தருவதாகவும் அமையும் எனலாம். ஏனென்றால் மக்களின் மனநிலையை எளிதில் பிரகடனப்படுத்துவது சிறிய பணவீக்கம். சாதாரணமாக சந்தைகளில் மக்களின் தேவைக் குப் பொருட்கள் கிடைக்காத காலங்களில் விலை உயரும். அதாவது பொருட்களின் உற்பத்தி குறைவாகவும், தேவை அதிகமாகவும் இருக்கும். மக்களின் தேவை குறைவாக இருக்கும் பொருட்களின் உற்பத்தியானது, தேவைக்கு அதிகமாக இருக்கும் காலங்களில் விலை வீழ்ச்சி ஏற்படும். இந்த சிறிய விலையேற்றம் மற்றும் வீழ்ச்சியானது நாட்டையோ நாட்டு மக்களையோ பெரிதாக பாதிக்காது. இது மிகக்குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும்.
2. பொருளாதார வீழ்ச்சி அல்லது பொருளாதார நெருக்கடி
ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்துவது பொருளா தார வீழ்ச்சி அல்லது பொருளாதார நெருக்கடி. ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ச்சியாக இரண்டு மாதங் களிலிருந்து ஆறு மாத காலம்வரை மிகமிகக் குறைவாக இருந்தாலோ அல்லது உற்பத்தியான பொருட்கள் சந்தைப்படுத்த முடியாமல் தேக்கமடைந்து இருந்தாலோ அது பொருளாதார நெருக் கடியை ஏற்படுத்தும். கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் உற்பத்திக் குறைவும், முறையற்ற சந்தைப்படுத் தலும் பொருளாதார வீழ்ச்சியை அதிகப்படுத் தியது. நாட்டு மக்கள் தங்களின் உபரி வருமானத்தை பங்குச் சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட் மற்றும் வங்கிகளிலேயே முதலீடு செய்கிறார்கள். மேலே கூறியுள்ள முதலீடுகளில் ஏற்படும் ஏற்ற- இறக் கமே உலக நாடுகளின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாகும். அத்துடன் அரசின் சட்ட திட்டங்கள், வரிச் சலுகைகள் மற்றும் அரசியல் மாற்றங்கள், இயற்கை சீற்றம், இயற்கைப் பேரிடர், கொடூர ம
பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறும் ஒரு நாடே உலக அரங்கில் வல்லரசாகத் திகழ முடியும். சமீபகாலமாக உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதை நாம் அறிவோம். இதற்கு கொரோனா வைரஸின் தாக்கத்தையும் குறிப்பிடத்தக்க ஒரு காரணமாகக் கூறலாம்.
உலகப் பொருளாதார வீழ்ச்சியில், இந்தியாவில் அதன் தாக்கம் அதிகமாக இருப்பது வருந்தத் தக்கதாகும். தீடீர் பொருளாதார வீழ்ச்சியை வளர்ந்த நாடுகளால் சமாளிக்க முடியும். வளர்ந்துவரும் நாடுகள் தீடீர் சரிவிலிருந்து தம்மைக் காப்பதற்கு மிகுந்த பேராட்டத்தைச் சந்திக்கநேரும்.
உலகளவில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடிக்கு ஜோதிடரீதியான காரணத்தை இந்த கட்டுரையில் காணலாம்.
ஒரு நாட்டின் பொருளாதாரம் என்பது தொழில்நுட்ப வளர்ச்சி, சமூக நிறுவனங் களின் வளர்ச்சி, வரலாறு மற்றும் அதன் புவியியல், இயற்கை வளம், தட்ப- வெப்ப நிலை போன்ற காரணிகளை உள்ளடக்கியுள்ளது. சமூகரீதியாகப் பொருளாதாரம் என்பது மனித நடவடிக்கைகளுக்கு நேரடியாகத் தொடர்புள்ள உற்பத்தியில், பரிமாற்றத்தில், விநியோகத்தில், நுகர்வில் பங்கேற்கும் அனைத்து வகை யான தொழில்கள், வேலைகள் போன்ற காரணிகளை உள்ளடக்கியது.
நுகர்வு, சேமிப்பு மற்றும் முதலீடு போன்ற பொருளாதாரக் காரணி கள் நாட்டின் பண மதிப்பிற்கேற்ப மாறுபடும். நாட்டின் பொருளாதார நடவடிக்கையின் முக்கியத் துறைகளான விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறை மற்றும் கனிம வளங்கள் ஆகியவை மாறாத நிலையான கூறுகளாகும்.பொருளாதார வீழ்ச்சியும் பண வீக்கமும் இணைந்தே செயல்படும் காரணிகள். இதை இரண்டு நிலைகளாக வகைப்படுத்தலாம்.
1. மிகச்சிறிய மிதமான பணவீக்கம்
மிகச்சிறிய பணவீக்கம் எப்பொழுதும் வளர்ந்துவரும் நாடுகளில் நிலவும் சாதாரண பிரச்சினை. இது அத்தியாவசியமானதும் நன்மை தருவதாகவும் அமையும் எனலாம். ஏனென்றால் மக்களின் மனநிலையை எளிதில் பிரகடனப்படுத்துவது சிறிய பணவீக்கம். சாதாரணமாக சந்தைகளில் மக்களின் தேவைக் குப் பொருட்கள் கிடைக்காத காலங்களில் விலை உயரும். அதாவது பொருட்களின் உற்பத்தி குறைவாகவும், தேவை அதிகமாகவும் இருக்கும். மக்களின் தேவை குறைவாக இருக்கும் பொருட்களின் உற்பத்தியானது, தேவைக்கு அதிகமாக இருக்கும் காலங்களில் விலை வீழ்ச்சி ஏற்படும். இந்த சிறிய விலையேற்றம் மற்றும் வீழ்ச்சியானது நாட்டையோ நாட்டு மக்களையோ பெரிதாக பாதிக்காது. இது மிகக்குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும்.
2. பொருளாதார வீழ்ச்சி அல்லது பொருளாதார நெருக்கடி
ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்துவது பொருளா தார வீழ்ச்சி அல்லது பொருளாதார நெருக்கடி. ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ச்சியாக இரண்டு மாதங் களிலிருந்து ஆறு மாத காலம்வரை மிகமிகக் குறைவாக இருந்தாலோ அல்லது உற்பத்தியான பொருட்கள் சந்தைப்படுத்த முடியாமல் தேக்கமடைந்து இருந்தாலோ அது பொருளாதார நெருக் கடியை ஏற்படுத்தும். கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் உற்பத்திக் குறைவும், முறையற்ற சந்தைப்படுத் தலும் பொருளாதார வீழ்ச்சியை அதிகப்படுத் தியது. நாட்டு மக்கள் தங்களின் உபரி வருமானத்தை பங்குச் சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட் மற்றும் வங்கிகளிலேயே முதலீடு செய்கிறார்கள். மேலே கூறியுள்ள முதலீடுகளில் ஏற்படும் ஏற்ற- இறக் கமே உலக நாடுகளின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாகும். அத்துடன் அரசின் சட்ட திட்டங்கள், வரிச் சலுகைகள் மற்றும் அரசியல் மாற்றங்கள், இயற்கை சீற்றம், இயற்கைப் பேரிடர், கொடூர மான நோய்த் தாக்கம் போன்றவையும் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தும் பிரதான காரணிகள்.
பங்குச் சந்தை
ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் பங்குச் சந்தை பெரும்பங்கு வகிக்கிறது. நாட்டின் பெரும் தொழிலதிபர்கள் மற்றும் பணவசதி படைத்தவர்கள் பலரின் பெரும் முதலீடுகள் பங்குச் சந்தையில்தான் செய்யப்படுகின்றன. வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவை தங்களுடைய உபரி வருமானத்தை பங்குச் சந்தையில்தான் முதலீடு செய்கின்றன. பங்குச் சந்தை முதலீடு அபாயகரமானது என்று தெரிந்தும், அந்த வணிகத்தின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக் கிறது. ஆன்லைன் வர்த்தகம் எனும் பங்குச் சந்தை வர்த்தகம் தற்போது நடுத்தர மக்களை யும் குறிவைக்கத் துவங்கியுள்ளது. 500, 1000 என சிறிய லாபத்தை சம்பாதித்தவர்கள், புலி வாலைப் பிடித்த கதையாக பெரும் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு வாழ்வாதாரத்தை பங்குச் சந்தையில் இழக்கிறார்கள். பங்குச் சந்தை முதலீடுகள் கார்ப்பரேட் கம்பெனி களுக்கு உபரி வருமானத்தைத் தரும் தொழிலாக வும், சாமானியர்களுக்கு பாதகத்தை மிகைப்படுத்தும் தொழிலாகவும் இருக்கிறது.
ஜோதிடரீதியாக, யூக வணிகமெனும் பங்கு வர்த்தகத்திற்கும் ராகுவுக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. கோட்சார ராகு மற்றும் புதன் பங்குச் சந்தையின் போக்கை நிர்ணயம் செய்கின்றன. கோட்சாரத்தில் புதன் மற்றும் ராகுவுடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் போக்கிற்கு ஏற்ப வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் பெறும் இழப்பை சந்திப்பதில்லை. மேலும் பங்கை வாங்கிய அன்றே விற்கும் தின வர்த்தகத் தில் ஈடுபடாமல், நிலையான நீண்டகால முதலீட்டு முறையில் தரமான கம்பெனி பங்குகளில் முதலீடு செய்பவர்கள் பெரும் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதே உண்மை.
ரியல் எஸ்டேட்
நாட்டில் பெரும் பணம் புரளும் தொழில் களில் ரியல் எஸ்டேட்டும் ஒன்று. ரியல் எஸ்டேட் என்ற சொல்லைக் கேட்டாலே பலருக்கும் மனதில் இனம்புரியாத ஒரு சந்தோஷம் ஏற்படும். ஏனென்றால் சிறிய முயற்சியில் பெரும் லாபத்தைத் தரும் இந்தத் தொழிலை முயன்று பார்க்காதவர்களே இல்லை எனலாம். சிறிய பெட்டிக்கடை வைத்தி ருப்பவர்கள் முதல் பெரிய தொழிலதிபர்கள் வரை ரியல் எஸ்டேட் தொழிலில் பணம் சம்பாதித்திருப்பார்கள்.
கட்டுமானத் தொழிலுக்கும் ரியல் எஸ்டேட்டுக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. மிக வேகமாக வளர்ந்து மிகப்பெரிய அளவில் வீழ்ந்ததில் கட்டுமானத் தொழிலும் ஒன்று. நடுத்தர மக்கள் பலரும் கடன்வாங்கி சொந்த வீடுகளில் முதலீடுகளைச் செய்ய ஆரம்பித்தனர்.
வீட்டுக் கடன்களைக் கொடுத்த வங்கிகள், இதனை முதலீட்டுப் பத்திரங்களாக மாற்றின. இதன் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது.
ஒரு கட்டத்தில் இந்த வீடுகளின் விலை அதிகரிக் காமல், அசலைவிட வட்டி மிகுதியாகுவதை உணர்ந்த மக்கள் வீடுகளை விற்றுவிட்டு கடனை முன்கூட்டியே அடைக்க முயன்றனர். அதனால் முதலீடு செய்த நிறுவனங்கள் பெரும் சிக்கலைச் சந்திக்க ஆரம்பித்தன. வீடுகளின் விற்பனை எந்த வேகத்தில் அதிகரித்ததோ, அதே வேகத்தில் குறைய ஆரம்பித்தது. அதனால் வீடுகள் பெரும் எண்ணிக்கையில் மறு விற்பனைக்கு வந்தன. இது பிரச்சினையை இன்னும் தீவிரமாக்கியது. இதனால் பலர் வீடுகளையும் சொத்துகளையும் இழந்தனர். முதலில் வீட்டுவசதித் துறையில் துவங்கிய இந்தப் பிரச்சினை, பிறகு பிற துறைகளையும் பாதிக்க ஆரம்பித்தது. கட்டுமானத் துறையில் ஏற்பட்ட பிரச்சினையும் பொருளாதார நெருக் கடிக்குக் காரணமாகிவிட்டது.
தங்கம்
உலகத்தின் முக்கிய வர்த்தகப் பொருட்களில் ஒன்று தங்கம். பளபளக்கும் உலோகமான தங்கம் பல்லாயிரம் ஆண்டுகளாக உலகின் முடிசூடா மன்னனாக வலம் வந்துகொண்டிருக்கிறது. தங்கத்தை வாங்காத நாடுகள் இல்லை. விரும் பாத மக்கள் இல்லை. கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கோலார் தங்கவயல் மூடப்பட்டதால், இந்தியாவில் தங்கம் உற்பத்தி இல்லை என்பதால் மொத்த தங்கமும் வெளிநாட்டிலிருந்துதான் இறக்குமதியாகிறது. சர்வதேச சந்தைகளே தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஓராண்டாக தங்கத்தின் பயன்பாட்டில் நிலவிவரும் ஏற்ற- இறக்கங்கள் பொருளாதார வளர்ச்சியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் இயற்கை சீற்றம் மற்றும் கொடூர நோய்த் தாக்கம் போன்றவையும் நாட்டையும் நாட்டு மக்களையும் துயரத்தில் ஆழ்த்துகிறது.
வருட கிரகங்களான குரு, ராகு- கேது, சனி ஆகியவற்றின் பெயர்ச்சிப் பலன்கள் மனிதர்களின் வாழ்விலும் நாட்டின் பொருளா தாரத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்து கின்றன. உலகப் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்பவர் குருபகவான். குரு என்றால் பணம். ஒவ்வொரு ஆண்டும் குருப் பெயர்ச்சியின்மூலம் மனிதர்களின் பொருளாதார வாழ்வில் ஏற்ற- இறக்கத்தை ஏற்படுத்தி, உலகப் பொருளாதாரத் தையே முழுக் கட்டுப்பாட்டில் வைப்பவர் குரு பகவான். குருப் பெயர்ச்சியால் மூன்றுவிதமான பலன்களை உலகிற்கு வழங்குகிறார்.
1. சீரான சிறப்பான பொருளாதார வளர்ச்சி
ஒரு ராசியில் ஒரு வருடம்வீதம் சஞ்சாரம் செய்யும் குருபகவான் நட்பு கிரகங்களின் சம்பந்தம் ஏற்படும் காலங்களில் நாடு மற்றும் நாட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சியை மிகைப்படுத்துவார். நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் நடுத்தர மக்களை யும் சென்றடையும். கனிமவளங்கள் முறையாகப் பயன்படுத்தப்படும். உள்நாட்டு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். உபரிப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுவதால் நடுத்தர மக்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் இணைந்து பயன்பெறு வார்கள்.
2. சீரற்ற நிலையற்ற பொருளாதார நிலை
குருபகவான் ராகுவுடன் சம்பந்தம்பெறும் காலங்களில், சர்வதேச பொருளாதார நிபுணர்களால்கூட நிர்ணயிக்க முடியாத வகையில் பொருளாதாரத்தில் மிகப்பெரிய ஏற்ற- இறக்கத்தை ஏற்படுத்தி, உலக வர்த்தகத் தில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துவார். தற்போதைய கோட்சார குரு சதய நட்சத் திரத்தில் சஞ்சாரம் செய்த காலத்தில் கொரோனா இரண்டாவது அலையால் இந்தியாவில் பல மாநிலங்கள் முழு ஊரடங்கில் இருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. வரும் 2022-ஆம் ஆண்டின் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குரு பகவான் சதய நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் தங்கம் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர் கள் கவனத்துடன் இருக்கவேண்டும்.
3. கடுமையான பொருளாதார மந்தம்
குருபகவான் நீசம்பெறும் காலங்களிலும், கேதுவுடன் சம்பந்தம்பெறும் காலங்களிலும் உலகநாடுகளில் பொருளாதார வீழ்ச்சி மற்றும் மிகுதியான பொருளாதார நெருக்கடி ஏற்படும். சரியாக 12 வருடங்களுக்குமுன் 2008- 2009-ல், பல வங்கிகள் திவாலாகின. அந்த காலகட்டத்தில் (2008-2009-ல்) உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. அப்பொழுது குருபகவான் தன் பலமிழந்து நீசவீடான மகரத்தில் நின்றார். இந்த நெருக்கடி 2007 டிசம்பரிலிருந்து ஜூன் 2009 வரை நீடித்தது. 2007-ஆம் ஆண்டின் இறுதியிலேயே பொருளாதாரப் பெருமந்தம் துவங்கிவிட்டாலும், 2008-ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில்தான் இதன் தாக்கம் வெளியில் தெரிய ஆரம்பித்தது. 2007-ல் குரு கேது சாரத்தில் நின்றபோது ஏற்பட்ட பொருளாதார மந்தம், 2008- 2009-ல் குரு மகரத்தில் நீசம்பெற்றபோது அதிகமாகியதை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.
இவ்வளவு ஏன்- கடந்த 2019-ஆம் ஆண்டு குரு, கேது சாரத்தில் நின்றபோது சில வங்கிகள் வாராக் கடனால் அவதியுற்றதும் நாமறிந்ததே. 2020 மார்ச் முதல் ஜூன் வரை குரு பகவான் அதிசாரத்தில் நீசம் பெற்ற காலத்தில், உலகமக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து தடுமாறினர். ஒரு பொருளை அல்லது ஒரு உயிரை அழிப்பது ராகுவின் குணமாகும். தான் சஞ்சாரம் செய்யும் ராசியின் தன்மைகளை அழிக்கும் சக்தி படைத்த கிரகம் ராகு. ஒரு பொருளை அனுபவிக்கவிடாமல் தடைசெய்வது கேதுவின் குணமாகும். தான் நின்ற ராசியின் பலன்களை அனுபவிக்கவிடாமல் தடைசெய்பவர். ஆக, ராகு- கேது இரண்டுமே பிரிவினை மற்றும் தடைகளை உண்டாக்கும் கிரகங்களாகும். ராகு- கேதுவின் கோட்சாரத்தில் சுபப் பலன்கள் நடப்பது மிகக் குறைவு. தீய பலன்கள் நடப்பது அதிகம்.
உதாரணமாக விவசாயத்தையும், விவசாயிகளின் நிலைமையையும் ஆய்வு செய்வோம். ஆதிமனிதனின் முதல் தொழிலான விவசாயமும், விவசாயிகளுமே இந்திய நாட்டின் முதுகெலும்பு. உலகில் பல புதிய தொழில்கள் தோன்றி மறைந்தாலும், உலக இயக்கம் உள்ளவரை மனிதர்களுடன் வாழும் தொழில் விவசாயம் மட்டுமே. இந்தியா விவசாய நாடு என்பதால், இந்தியாவின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் நேரடியாகவோ மறைமுகமாகவோ விவசாயத்தையே சார்ந்துள்ளனர். இயற்கைப் பேரிடர் மற்றும் பல்வேறு நடைமுறை சிக்கலினால் பல பரம்பரை விவசாயிகள்கூட விவசாயத்தையே மறந்து வேறு தொழிலுக்குச் சென்றுவிடலாம் என்ற மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக பசு வளர்த்தல், பால் கறத்தல், மரம் வளர்த்தல், விவசாயம் செய்தல் போன்றவை கேவலம் என்னும் வாழ்வியல் மாற்றத்தை பல இளைய தலைமுறையினர் விரும்பத் தொடங்கிவிட்டனர். கலாச்சார மாற்றம் ஒருபுறம் இருந்தாலும், நன்கு படித்த அல்லது படிக்கமுடியாத பல கோடி விவசாயிகளின் இளைய தலைமுறையினர் தங்கள் வாழ்வாதாரத்திற்குப் போராடி வருகின்றனர். பலர் பரம்பரை விவசாய நிலத்தை இழந்து, வட்டிக்கு வட்டிகட்டி உயிரையே மாய்த்துக்கொள்ளவும் துணிந்துவிட்டனர். சுமார் ஒன்பது மாத காலங்களாக வட மாநில விவசாயிகள் தொடர் போராடத்தில் ஈடுபட்டு வருவதே இதற்குச் சான்று.
இதற்கு அரசியல், அறிவியல், புவியியல், நோய்த் தாக்கம் என்று ஆயிரமாயிரம் காரணங்களைச் சொல்லலாம். அதாவது நடுத்தர மக்களிடம் பணப்புழக்கம் அதிகமாக இருந்தால், உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து மக்களின் வாழ்வாதாரம் உயரும். நடுத்தட்டு மக்களின் பண வீக்கத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தும் கார்ப்பரேட், வெளிநாட்டு நிறுவனங்கள் சிறிய விவசாயிகளை வாழ வைக்காது. பல்வேறு புதிய தொழில் மூலம் சம்பாதித்த பணத்தை விவசாயத்தில் முதலீடு செய்து பலகோடி சம்பாதித்து, விவசாயத்தில் சம்பாதித்த பணமா என்று வியக்கும் வகையில், சாதனையாளர்களாக வலம்வரும் பெரும் முதலீட்டாளர்களிடம் அந்த பணமெல்லாம் போய்ச் சேரும்போது, சாதாரண மக்களின் வாழ்வாதாரம் உயராது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி சீராக இருக்காது.
கோட்சாரமும் பொருளாதாரமும்
காலபுருஷ நான்காமிடமான கடகம் உணவுப் பொருட்கள் உற்பத்தி, விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றைப் பற்றிக் கூறுமிடம். இதன் அதிபதி சந்திரன் உச்சம்பெறும் வீடான ரிஷப ராசியில், சந்திரனின் நட்சத்திரமான ரோகிணியில் ராகு சஞ்சாரம் செய்துகொண்டிருப்பதும், மகரத்தில் ஆட்சிபெற்ற சனி சந்திரனின் திருவோண நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதுடன், காலபுருஷ நான்காமிடமான கடகத்தைப் பார்ப்பதும் விவசாயிகளின் திண்டாட்டத்திற்கு, பேராட்டத்திற்குக் காரணமாகின. பல சில்லரை வணிகர்கள் உருவானார்கள் என்றாலும், மக்களின் அன்றா டத் தேவைகள்தான் நிறைவேறின.
பொதுவாக செவ்வாய், சனி, ராகு- கேது சம்பந்தம் ஏற்படும் கோட்சாரம் அசாதாரணமான- நிலையற்ற தன்மையையே மக்களுக்குத் தரும். ராகு தான் நின்ற பாகவகப் பலனை பிரம்மாண்டப்படுத்தி சிதைப்பதுடன், பீதி, வதந்தி, இனம்புரியாத அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய கடுமையான நோய், விஷக் கிருமிகள், கூட்டு மரணம், கொடூர விபத்து, உலக நாடுகளிடையே போர் அபாயம் போன்றவற்றை ஆர்ப்பாட்டத்துடன் ஏற்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்த ஒரே கிரகம். கடுமையான நோய்த்தாக்கம், திடீர் கெட்ட விளைவு, அசம்பாவிதம், கூட்டு மரணம், வரலாற்றில் இடம்பெறக்கூடிய சம்பவங்கள் நடக்கும்போது அசுபர்களான சனி, செவ்வாய், ராகு தொடர்பு நிச்சயம் இருக்கும்.
காலபுருஷ அஷ்டமாதிபதியான செவ்வாய் பகவான் முரட்டுத்தனமான தீவிர செயல்களால் பிரச்சினைகளை அதிகப்படுத்துபவர். இதுபோன்ற கொடூர விளைவுகளில் செவ்வாயின் பங்கு அளப்பரியது. இந்த நிலையில் கோட்சாரத்தில் செவ்வாய் 22-10-2021 முதல் துலாத்திலிருந்து தனது எட்டாம் பார்வையால் ராகுவைப் பார்க்கும் காலத்திலும், விருச்சிகத்தில் கேதுவுடன் இணையும் 15-1-2022 வரையான காலத்திலும் கவனத்துடன் செயல்படவேண்டும். இது கொரோனாவின் மூன்றாவது அலையின் தாக்கமாகவும் இருக்கலாம்.
அதேபோல் உலகப் பொருளா தாரத்தை நிர்ணயம் செய்யும் குரு பகவான் 12-9-2021 முதல் 13-11-2021 வரை மகரத்தில் செவ்வாய் சாரத்தில் நீசமடைகிறார்.14-11-2021 முதல் 1-1-2022 வரை கும்பத்தில் செவ்வாய் சாரத்தில் சஞ்சாரம் செய்கிறார். குரு என்றால் குழந்தை, பொருளாதாரம். காலபுருஷ அஷ்டமாதிபதி செவ்வாய் சாரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்வதால், இந்த காலகட்டத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.பொருளாதார ஏற்ற- இறக்கமும் மிகையாக இருக்கும்.
பஞ்சபூதங்களும் நவகிரகங்களும் இணைபிரியா சக்திகள். நவகிரகங்கள் தங்களின் இயக்கங்களினால் உலகிற்கு நன்மை மற்றும் தீமைகளை பஞ்சபூதங்கள் வாயிலாகவே வெளிப்படுத்துகின்றன. மனிதன் இயற்கையின் கொடைகளை ஆக்கத்திற்குப் பயன்படுத்தும்போது நவகிரகங் களின் பரிபூரண நல்லாசிகள் பூமிக்குக் கிடைக்கும். அதேநேரத்தில் இயற்கை வளங்களை அழிவிற்குப் பயன்படுத்தும்போது நவகிரகங்கள் தக்கசமயத்தில் இயற்கைப் பேரிடர்களாகவும், நோயாகவும், விபத்தாகவும், உலக நாடுகளுக்கிடையே இணக்கமற்ற சூழல், போர் அபயம், பொருளாதார வீழ்ச்சி போன்ற காரணிகளால் பூமிக்கு எச்சரிக்கை விடவும் தயங்குவதில்லை. அந்த வகையில் தற்போது உலகம் அனுபவித்து வரும் நோய்த் தாக்கம், அண்டை நாடுகளிடையே இணக்கமற்ற சூழ்நிலைகளையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
உளவியல்ரீதியாக பொருளாதார நெருக்கடி என்ற பிரச்சினைக்குத் தீர்வு காணமுயன்றால், ஜோதிடம், அறிவியல், புவியியல், வானியல், மருத்துவவியல் போன்ற எல்லாவற்றையும்விட வலிமையானது இந்தியாவின் இயற்கை வளங்கள். இயற்கைக்கு எதிரான சிந்தனையில் மனிதன் ஈடுபடும்போது ஏற்படும் இயற்கை சீற்றங்களே மனிதர்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தும். இயற்கை வேறு; நவகிரகங்கள் வேறல்ல. இயற்கையைப் போற்றினால் நவகிரகங்களின் நல்லாசிகள் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பரிபூரணமாகக் கிடைக்கும்.