Advertisment

பூர்வீக சொத்துப் பிரச்சினை தீர பரிகாரம் உண்டா?

/idhalgal/balajothidam/there-solution-real-estate-problem-0

சென்ற இதழ் தொடர்ச்சி...

பூர்வீக சொத்து பிரச்சினைக்கு 5, 9-ஆம் அதிபதியின் தசைக்காலத்தில் மட்டுமே தீர்வு உண்டு. சாரநாதனும் 5, 9-ஆம் அதிபதி, 5, 9-ஆம் பாவகத்துடன் சம்பந்தம்பெற வேண்டும். இதை இரண்டு உதாரண ஜாதகங்களின்மூலம் பார்க்கலாம்.

ஜாதகம்- 1

ஜாதகர் பிறந்த தேதி: 12-3-1951.

பிறந்த நேரம்: இரவு 10.15 மணி.

27-2-2019 அன்று பகல் 12.05 மணிக்குப் பார்க்கப்பட்ட ஜாதகம்.

இந்த ஜாதகத்தில் 5-ஆம் அதிபதி சனி வக்ரம் பெற்று 12-ல் மறைவு.

5-ஆம் அதிபதி, 12-ஆம் அதிபதிகளாகிய புதன், சனி பரிவர்த்தனை.

5-ல் துலா லக்ன பாவி சூரியன்.

5-ல் சூரியன், ராகு இணைவு- பித்ருதோஷம், கிரகண தோஷம்.

5-ல் ராகு- பூர்வீக சொத்தில் சட்டச் சிக்கல்.

Advertisment

இந்த ஜாதகரின் ஜாதகத்தைப் பார்த்தவுடன், "உங்களுக்கு பூர்வீகம், குலதெய்வம் தொடர்பான கோர்ட் கேஸ், பிரச்சினை இருக்கிறதா?' என்று கேட்டேன். “"ஆமாம்'’ என்றார். இந்த ஜாதகத்தில் 5-ஆம் அதிபதி சனி 12-ல் வக்ரமாக நின்று, தசை நடத்திக்கொண்டிருந்தது. சனியின் சாரநாதன் சூரியன் நின்ற இடம் 5. ராகு தசை, குருதசை இவருக்கு நல்ல ஏற்றத்தைத் தந

சென்ற இதழ் தொடர்ச்சி...

பூர்வீக சொத்து பிரச்சினைக்கு 5, 9-ஆம் அதிபதியின் தசைக்காலத்தில் மட்டுமே தீர்வு உண்டு. சாரநாதனும் 5, 9-ஆம் அதிபதி, 5, 9-ஆம் பாவகத்துடன் சம்பந்தம்பெற வேண்டும். இதை இரண்டு உதாரண ஜாதகங்களின்மூலம் பார்க்கலாம்.

ஜாதகம்- 1

ஜாதகர் பிறந்த தேதி: 12-3-1951.

பிறந்த நேரம்: இரவு 10.15 மணி.

27-2-2019 அன்று பகல் 12.05 மணிக்குப் பார்க்கப்பட்ட ஜாதகம்.

இந்த ஜாதகத்தில் 5-ஆம் அதிபதி சனி வக்ரம் பெற்று 12-ல் மறைவு.

5-ஆம் அதிபதி, 12-ஆம் அதிபதிகளாகிய புதன், சனி பரிவர்த்தனை.

5-ல் துலா லக்ன பாவி சூரியன்.

5-ல் சூரியன், ராகு இணைவு- பித்ருதோஷம், கிரகண தோஷம்.

5-ல் ராகு- பூர்வீக சொத்தில் சட்டச் சிக்கல்.

Advertisment

இந்த ஜாதகரின் ஜாதகத்தைப் பார்த்தவுடன், "உங்களுக்கு பூர்வீகம், குலதெய்வம் தொடர்பான கோர்ட் கேஸ், பிரச்சினை இருக்கிறதா?' என்று கேட்டேன். “"ஆமாம்'’ என்றார். இந்த ஜாதகத்தில் 5-ஆம் அதிபதி சனி 12-ல் வக்ரமாக நின்று, தசை நடத்திக்கொண்டிருந்தது. சனியின் சாரநாதன் சூரியன் நின்ற இடம் 5. ராகு தசை, குருதசை இவருக்கு நல்ல ஏற்றத்தைத் தந்து, பணத்தின் சுவையைக் காட்டியிருக்கிறது. 6-ஆம் அதிபதி குரு 5-ல் நின்று தசை நடத்தி, தசைமுடிவில் கடனின் விஸ்வரூபத்தையும் காட்டிவிட்டது. சனிதசையின் பத்து வருடங்களும் அவரின் கடன்சுமை பாவ, புண்ணியத்தை உணர்த்தி இருக்கிறது.

p

அத்துடன், ஆண்வாரிசு இன்றி தலைமுறையே முடியும் நிலையில் இருக்கிறது. ஒரே பெண்ணுக்கும் திருமண வாழ்க்கை சிறப்பில்லை. 160 வருடங்களுக்குமுன் கோவில் சொத்தை இவருடைய முன்னோர்கள் அபகரித்துள்ளனர்.

Advertisment

பூர்வீக சொத்து பங்கு பிரித்ததில், அபகரித்த குலதெய்வக் கோவில் சொத்து இவர் பெயருக்கு வந்துவிட்டது. சனிதசை ஆரம்பித்த பத்து வருடங்களில் கடுமையான தொழில் இழப்பு, பூர்வீக சொத்தில் வம்பு, வழக்கு என மிகுந்த மனவேதனையில் என்னை சந்தித்தார். அவரிடம், "உங்கள் பங்கிற்குள்ள கோவில் சொத்தை விற்று, கோவிலுக்கு ஒரு பகுதியைக் கொடுத்துவிட்டு, மீதித்தொகையை வேறு முதலீடுசெய்து பயன்படுத்துங்கள்' என்றேன். அந்த ஜாதகர், "இந்த கோவில் சொத்து மதிப்பு பத்து கோடி முழுவதையும் கோவிலுக்கு எழுதிவைக்க முடிவு செய்துவிட்டோம். எஞ்சிய ஆயுள்காலத்திலாவது நிம்மதியுடன் இருக்கவேண்டும். எங்களுடைய பரம்பரை வாரிசான ஒரே பெண் நிம்மதியாக வாழவேண்டும்'’ என்றார். குலதெய்வம் 160 வருடம் காத்திருந்து தன் சொத்தை மீட்டுவிட்டது. 160 வருடங்களுக்குமுன் குலதெய்வ சொத்தை அபகரித்தவரும் இவராகவே இருந்திருப்பார். ஒரு வினையைச் செய்தவரின் சம்பந்தமில்லாமல் அந்த வினை முடிவுக்கு வராது.

5-ஆம் இடம் என்பது சென்ற ஜென்மம். 5-ஆம் அதிபதி சனி தன் தசையில் பாவ, புண்ணியப் பலனை உணர்த்திவிட்டார். இனி, அவருடைய எஞ்சிய காலம் நிம்மதியாக இருக்கும். அந்த ஜாதகத்தில் 5-ல் சூரியன், ராகு, குரு, புதன் என நான்கு கிரகங்கள். எல்லாமே நெருங்கிய டிகிரியில். எனவே, 5-ஆம் அதிபதி சம்பந்தமில்லாமல் பூர்வீகம் தொடர்பான பிரச்சினை முடிவுக்கு வராது என்பது கண்கூடான உண்மை.

ஜாதகம்- 2

பிறந்த தேதி: 19-2-1974.

பிறந்த நேரம்: அதிகாலை 3.00 மணி.

ஜாதகர் 3-3-2019 அன்று பகல் 12.22 மணிக்கு என்னைச் சந்தித்தார்.

5-ஆம் அதிபதி சனி 6-ல்.

கர்மகாரகன் சனி, புதன் வக்ரம், பரிவர்த்தனை.

இவரும் பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைக்காகவே சந்தித்தார். அவருக்கு நடப்பில் குருதசை, புதன் புக்தி இருந்தது. சாரநாதன் செவ்வாய். இந்த ஜாதகருக்கு 1, 4-ஆம் அதிபதி குரு நின்ற இடம் லக்னத்தின் பாவத்பாவமான 3-ஆம் வீடு. 4-ஆம் வீட்டிற்குப் பின்வீடு. சாரநாதன் செவ்வாய், 5-ஆம் அதிபதி நின்ற இடம் 6. இவருக்கு ஒரு தம்பி மட்டும். தம்பிக்கு வாரிசு உள்ளது. ஜாதகருக்குத் திருமணம் நடக்கவில்லை. இவரின் ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி புதனும், குடும்பாதிபதி சனியும் பரிவர்த்தனை, வக்ரம் பெற்று 3-ல் மறைவுபெற்றதால், சட்டரீதியாக குடும்பம் நடத்தாமல் திரைமறைவில் குடும்பம் நடத்துபவர்.

“"உங்களுக்கு பூர்வீக சொத்தில் விருத் தியில்லை. அதை விற்று வேறுசொத்தாக முதலீடு செய்யுங்கள்' என்றேன். “"என் தம்பிக்கு ஆண், பெண் குழந்தைகள் இருக் கிறார்கள். அவர்களுக்கு விருத்தியில்லாத பூர்வீக சொத்து வேண்டாம். பூர்வீக சொத்தை தந்தையிடமிருந்து என் பெயருக்கு மாற்றி, பூர்வீகம் தொடர்பான பிரச்சினைகளை பிள்ளையில்லாத நானே ஏற்றுக்கொள்ளப்போகிறேன். சொத்து முழுவதும் என் பெயருக்கு மாறிவர வாய்ப்பிருக்கிறதா?' என்று கேட்டார்.

கர்மா அவரை அழைக்கும்விதம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். இவருக்கு சட்டரீதியான குழந்தைகள் இல்லாதபோது, சொத்து முழுவதும் அவருடைய தம்பி குழந்தைகளுக்கு சட்டரீதியாகவே சென்றுவிடும். கர்மாவின் தாக்கம் யாரையும் விட்டுவைக்காது. புதன்புக்தி முடிந்து கேதுபுக்தி வரும்போது, கோட்சாரக் கேது சனியுடன் இணைந்து, இவருக்குத் தரப்போகும் கடன் பிரச்சினை பிரபஞ்ச ரகசியம். இவருடைய பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினை இவருடைய அடுத்த ஜென்மத்தில்தான் முடியும்.

எனவே, பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகள் 5, 9-ஆம் அதிபதியின் தசையிலே முடிவுக்கு வரும். சாரநாதனும் 5-ஆம் பாவகத்தோடு சம்பந்தம் பெற்றால் மட்டுமே முடிவுக்கு வரும்.

பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினையை சந்திப்பவர்களுக்கான பரிகாரங்கள்:

பூர்வீக சொத்துகளை விற்று புதிய சொத்துகளாக மாற்றிவிட வேண்டும்.

பூர்வீக மனையில் வசிக்காமல் இருத்தல் நலம்.

ராகு, கேது தொடர்பு 5-ஆம் இடத்திற்கு இருப்பின் துர்க்கை, காளி, பிரத்தியங்கரா தேவி வழிபாடு செய்யலாம்.

தேய்பிறை அஷ்டமியில் பைரவர், காலபைரவர் வழிபாடு செய்யலாம்.

முறையான பித்ருசாந்தி வழிபாடு நல்ல பலன் தரும்.

செல்: 98652 20406

bala290319
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe