தைதுலை இக்கரணம் சுபத் தன்மையான கரண மாகும். திதிக் ஷா என்ற சமர் வார்த்தை யில் இருந்துவந்தது தைதுலை என்பதாகும்.
அதிதேவதை - ஆதித்யன்
மிருகம் - கழுதை
மலர் - மல்லிகைப்பூ
ஆகாரம் - அப்பம்
பூசுவது - கோரோசனம்
ஆபரணம் - வச்சிரம்வைரம்
தூபம் - குங்கிலியம்
வஸ்திரம் - மஞ்சள்
பாத்திரம் - இரும்பு
தெய்வம் - சேஷ்டாதேவி
கிழமை - புதன்கிழமை
அதிபதி - பெருமாள் வழிபாடு
தேவதை - பித்ருக்கள்
இந்த கரணத்தில் பிறந்தவர்கள் அரசு சம்பந்தமான தொடர்புகளை கொண்டவர் கள். ஆச்சார அனுஷ்டானங்களை பின் பற்றக் கூடியவர்களாக இருப்பார்கள். சுயநலமும் சிந்தனையும் இவர்களிடம் உள்ளது எதையும் புத்திக்கூர்மையுடன் செயல்பட கூடியவர்கள் உடல் வலிமை யுடன் இருப்பார்கள். வீடு, வண்டி வாகன வசதிகளை உடையவர்கள் பெற்றோர்கள் மீதும் அதிக அன்பு வைத்திருப்பார்கள். இவர்களுக்கு புத்தகத்தில் இருக்கும் கருத்துக்களைவிட புத்தகத்தின் தலைப்பில் தான் இவர்களுக்கு கவனம் இருக்கும். வீட்டுக்குள்ளே இருக்கும் அமைப்பைவிட வீட்டு வாசலில்தான் இவர்களுக்கு அதிக
தைதுலை இக்கரணம் சுபத் தன்மையான கரண மாகும். திதிக் ஷா என்ற சமர் வார்த்தை யில் இருந்துவந்தது தைதுலை என்பதாகும்.
அதிதேவதை - ஆதித்யன்
மிருகம் - கழுதை
மலர் - மல்லிகைப்பூ
ஆகாரம் - அப்பம்
பூசுவது - கோரோசனம்
ஆபரணம் - வச்சிரம்வைரம்
தூபம் - குங்கிலியம்
வஸ்திரம் - மஞ்சள்
பாத்திரம் - இரும்பு
தெய்வம் - சேஷ்டாதேவி
கிழமை - புதன்கிழமை
அதிபதி - பெருமாள் வழிபாடு
தேவதை - பித்ருக்கள்
இந்த கரணத்தில் பிறந்தவர்கள் அரசு சம்பந்தமான தொடர்புகளை கொண்டவர் கள். ஆச்சார அனுஷ்டானங்களை பின் பற்றக் கூடியவர்களாக இருப்பார்கள். சுயநலமும் சிந்தனையும் இவர்களிடம் உள்ளது எதையும் புத்திக்கூர்மையுடன் செயல்பட கூடியவர்கள் உடல் வலிமை யுடன் இருப்பார்கள். வீடு, வண்டி வாகன வசதிகளை உடையவர்கள் பெற்றோர்கள் மீதும் அதிக அன்பு வைத்திருப்பார்கள். இவர்களுக்கு புத்தகத்தில் இருக்கும் கருத்துக்களைவிட புத்தகத்தின் தலைப்பில் தான் இவர்களுக்கு கவனம் இருக்கும். வீட்டுக்குள்ளே இருக்கும் அமைப்பைவிட வீட்டு வாசலில்தான் இவர்களுக்கு அதிக கவனம் இருக்கும். இவர்கள் சிறந்த விசுவாசிகளாகவும் கடுமையான உழைப் பாளிகளாகவும் இருப்பார்கள். இவர்கள் நேர்வழியைவிட குறுக்கு வழிகளையும் சில நேரங்களில் தேடிக்கொள்வார்கள். இவர்கள் பிறருக்கு ஒரு வேலையை செய்துதருவதில் அல்லது பிறரிடம் சிறப் பாக பணிபுரிவதில் நல்ல பெயர்களை வாங்குவார்கள். இக்கரணம் பெண்களுக்கு மிகவும் சிறப் பானதாகவும் இருக்கும் .ஆண்களுக்கு சற்று குறைவான நல்ல பலன்களைத் தருகிறது.
பெண்கள் பெயரில் செய்யும் தொழில்களுக்கும் காரியங்களுக்கும் இந்த கரணம் சிறப்பானதாக இருக்கும். இந்த கர்ணத்தில் பிறந்த பெண்கள் தொழில்துறையில் சிறப்பான வெற்றியை பெற்றிருக்கிறார் கள். இந்தக் கரணத்தில் பிறந்த பெண்கள் நடத்தும் கடைகளில் பெரும் கூட்டம் எப்பொழுதும் கூடுதலாகவே இருக்கும் அல்லது கூட்டம் சேரும் தன்மைகளில் இவர்களின் கடைகள் இருக்கும். இக்கர்ணத்தில் பிறந்தவர்கள் எப்போதுமே இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார் கள். இவர்களுக்கு இருக்கும் பிரச்சினையில் தங்கள் பக்கம் நியாயம் இருந்தா லும் பிரச்சினையை அதிகாரத் தன்மையுடன் தீர்க்காமல் அமைதியான முறையில் தீர்ப்பார்கள். பிரச்சினைகளைத் தீர்க்க அடாவடியாக இறங்க மாட்டார்கள்.
திடமான மனதைக் கொண்டவர்களாக, மனதை திடப்படுத்தும் மனதிற்காக தனி பயிற்சி எதுவும் எடுத்துக்கொள்வதில்லை. எப்படியிருந்தாலும் இவர்கள் இயற்கை யிலேயே சிறப்பான மன உறுதி கொண்ட வர்களாகவும் எப்படிப்பட்ட சவால்களை ஏற்றுக்கொண்டும் அதில் வெற்றியும் அடைவார்கள். பொதுவாக எல்லா காலத்திற்கும் பாதுகாப்பை கொடுக்கும் உத்தியோகங்களில் சேர்ந்து பணிபுரிவார்கள். எதற்கும் தர்மம் செய்யாத கருமியான கஞ்சக் குணத்தையும் கொண்டவர்கள். இவர்கள் வழிபடும் தெய்வத்தை கோரோசனம் பூசி வில்வப் பொடியை இரும்பு பாத்திரத்தில் கலக்கி அவ் வில்வப் பொடியினால் அபிஷேகம் செய்து மஞ்சள் துணி கொண்டு அலங்கரித்து வைரமாலை அணிவித்து அப்பத்தை படையில் வைத்து மல்லிகை பூக்களால் அர்ச்சித்து வழிபட்டுவர தெய்வம் மனம் குளிர்ந்து கரண நாதன் பூரண பலம் அடைகிறார்.
இந்த கர்ணத்தில் பிறந்தவர்கள் பல வேலைகளுக்கு முக்கியமான காரியங்களுக்கு செல்லும்போது மஞ்சள் ஆடைகளை அணிந்து சென்றால் காரியங்களில் வெற்றிபெற்று வரலாம். எந்தக் கோவிலுக்கு போனாலும் மல்லிகை பூக்களைக் கொண்டு சென்று அர்ச்சனை செய்துவரலாம். கோவில்களில் நடக்கும் பெரிய ஹோமங்களுக்கு மல்லிகை பூக்களை தானமாக கொடுக்கலாம். எப்போதும் உங்கள் கரணநாதன் உடைய மிருகத்தை நீங்கள் எந்த விதத்திலும் துன்புறுத்தக்கூடாது அவற்றுக்கு உணவுகள் கொடுப்பது பராமரிப்பது நல்லது. உங்களுடைய வாழ்க்கையில் ஏதாவது தடை, தாமதங்கள் ஏற்பட்டிருந்தால் உங்களுடைய கரணநாதனை நீங்கள் தொடர்ந்து வழிபட்டுவந்தால் தடை விலகி காரியங்கள் கைகூடும். நவகிரகங்களில் சனியின் கர்ம தோஷங்களை போக்குவதற்காக தானமாக கொடுக்கப்படும் இரும்பு சட்டிகளை இத்தருணத்தில் கொடுத்து சனியினால் ஏற்பட்ட கர்ம வினைகளை நீக்கி ஜாதகர் சிறந்த வாழ்வை அமைத்துக்கொள்ள வழிவகுக்கிறது. இந்த கரணத்தில் பிறந்தவர்கள் வெளியில் செல்லும்போது சிலர் சகுன நிமிர்த்தமாக மல்லிகைப்பூ விற்பதை காண்பது விருந்துக்கு செல்லும் இடத்தில் அப்பம் வைத்திருப்பது சபரிமலை அப்பம் பிரசாதமாக உங்களுக்கு கிடைப்பது இதுபோன்ற சகுன நிமித்தங்கள் உங்களுக்கு காரிய வெற்றிகளை கொடுக்கும்.
கண்ணைக் கவரும் வைர அலங்காரம், வைரம் வியாபாரம் செய்பவர்களுக்கும் சிறப்பு. வைரம் என்று பெயர் வைத்துக்கொண்ட நபர்களால் உங்களுக்கு நல்ல உதவிகள் கிடைக்கும். மஞ்சள் ஆடை அணிந்தவர்கள், இரும்பு பாத்திர வியாபாரிகள் போன்றவர்கள் எதிரில் தென்பட்டாலும் கரணநாதன் உதவிசெய்ய உடன் இருக்கிறார் என்பதை நீங்கள் உணரலாம். நீங்கள் வெள்ளிக்கிழமையில் சாம்பிராணி தூபம் போடும்பொழுது குங்கிலியம் மருதாணி இலைபோட்டு வீட்டில் பூஜையறையில் தலைவாசலில் தூபம் காட்டி வழிபாடு செய்வது சிறப்பு. உங்கள் கர்ணநாதருக்குரிய கோவில் வந்தவாசி போகும் வழியில் பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் ஷேஷ்டா தேவி கோவில் உள்ளது. அங்குசென்று உங்களுடைய கோரிக்கைகளை வைத்து வழிபட்டுவந்தால் காரியங்கள் கைகூடும். தைதுலை கரணம் வரும் நாளில் சென்று வழிபாடு செய்தால் இன்னும் சிறப்பாக கைமேல் பலன் கிடைக்கும்.
கட்டுரை மற்றும் ஜோதிடம் தொடர்பாக பேச: 90802 73877