விலகும் கால சர்ப்ப தோஷம்! - மகேஷ் வர்மா

/idhalgal/balajothidam/term-serpent-evil-departure-mahesh-verma

கொரோனா என்னும் தீநுண்மி இன்று உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக் கிறது. இதற்கு காரணங்கள் பல இருந்தாலும், கிரகங்களும் காரணமா உள்ளனவா?

ஆமாம். 26-12-2019-ஆம் நாளன்று சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இந்த சூரிய கிரகணம் முக்கிய காரணம் உள்ளது. சூரிய பகவான் 5-க்குரிய கிரகத்துடன் சேர்ந்தார். சூரியன், குரு, சனி, சந்திரன், கேது, புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை அன்று உண்டானது. சூரியன், குரு, கேது சேர்ந்தால், நோயுண்டாகும். அதே நேரத்தில் குரு, சனி, கேது சேர்ந்தால், பெரிய அளவில் பிரச்சினைகள் உண்டாகும்.

ss

குருவும் சனியும் கேது அல்லது ராகுவுடன் சேர்ந்தால், அந்த சமயத்தில் அவை எந்த ராசியில் சேர்கின்றனவோ, எந்த ராசியைப் பார்க்கின்றனவோ, அந்த ராசியைச் சேர்ந்த வர்களுக்குப் பிரச்சினைகள் அதிகமாக உண்டாகும்.

உடலில் இருக்கும் ஒவ்வோர் உறுப்பும் ஒரு ராசியைக் குறிக்கும்.

தலை- மேஷம், முகம்- ரிஷபம், இதயத் திற்குமேலே இருக்கும் ரத்தக் குழாய்கள்- மிதுனம், இதயம்- கடகம், வயிற்றின் மேற்பகுதி- சிம்மம், தொப்புள்- கன்னி, பிறப்புறுப்பிற்கு மேலே இருக்கும் பகுதி- துலாம், பிறப்புறுப்பு- விருச்சிகம், முழங்கால்- மகரம், முழங்காலுக்குக்கீழே- கும்பம

கொரோனா என்னும் தீநுண்மி இன்று உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக் கிறது. இதற்கு காரணங்கள் பல இருந்தாலும், கிரகங்களும் காரணமா உள்ளனவா?

ஆமாம். 26-12-2019-ஆம் நாளன்று சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இந்த சூரிய கிரகணம் முக்கிய காரணம் உள்ளது. சூரிய பகவான் 5-க்குரிய கிரகத்துடன் சேர்ந்தார். சூரியன், குரு, சனி, சந்திரன், கேது, புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை அன்று உண்டானது. சூரியன், குரு, கேது சேர்ந்தால், நோயுண்டாகும். அதே நேரத்தில் குரு, சனி, கேது சேர்ந்தால், பெரிய அளவில் பிரச்சினைகள் உண்டாகும்.

ss

குருவும் சனியும் கேது அல்லது ராகுவுடன் சேர்ந்தால், அந்த சமயத்தில் அவை எந்த ராசியில் சேர்கின்றனவோ, எந்த ராசியைப் பார்க்கின்றனவோ, அந்த ராசியைச் சேர்ந்த வர்களுக்குப் பிரச்சினைகள் அதிகமாக உண்டாகும்.

உடலில் இருக்கும் ஒவ்வோர் உறுப்பும் ஒரு ராசியைக் குறிக்கும்.

தலை- மேஷம், முகம்- ரிஷபம், இதயத் திற்குமேலே இருக்கும் ரத்தக் குழாய்கள்- மிதுனம், இதயம்- கடகம், வயிற்றின் மேற்பகுதி- சிம்மம், தொப்புள்- கன்னி, பிறப்புறுப்பிற்கு மேலே இருக்கும் பகுதி- துலாம், பிறப்புறுப்பு- விருச்சிகம், முழங்கால்- மகரம், முழங்காலுக்குக்கீழே- கும்பம், பாதம்- மீனம். இதுதான் மனித உடல்.

ராகு இருக்கும் இடத்தை இன்னொரு கிரகம் பார்த்தால், அந்த இடத்தில் அப்போது பிரச்சினை உண்டாகும். இப்போது ராகு பகவான் மிதுனத்தில் உள்ளார். இந்த ராகுவை சனி, கேது, சூரியன் பார்க்கும்போது உலகிலுள்ள மக்களுக்கு நோய்க் கிருமியின் தாக்கம் உண்டாகும். ராகுவை பாவகிரகம் பார்க்கும்போது, நோயுண்டாகும்.

இந்தப் பாதிப்பு ஜனவரி 24-ஆம் தேதிக்குப் பிறகு அதிகரித்துவிட்டது.

அதற்குக் காரணம், அந்த சமயத்தில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குச் சென்றார். அந்த இடத்தில் அவருடன் சூரியனும் இருந்தார். அதனால் அப்போது பெரிய அளவில் பாதிப்புகள் உண்டாகின. அதே நேரத்தில் சனியுடன் செவ்வாய் மகர ராசியில் சேரும்போது, ராகுவிலிருந்து 8-ல் சனி, செவ்வாய் சேரும்போது, மார்ச் மாதத் திலிருந்து நோய்க் கிருமியின் தாக்கம் மிகவும் அதிகமாகிவிட்டது. அது மேலும் அதிகரிக்கும் போது, மகரத்தில் குரு பகவான் இருந்தார்.

29-6-2020 அன்று குரு பகவான் மீண்டும் தனுசு ராசிக்குத் திரும்பி வந்தார். நவம்பர் 2020-ல் மகரத்தில் குரு பகவான் இருப்பார். கொரோனா என்னும் இந்த தீநுண்மியின் தாக்கம் அதிகமாக இருப்பதற்குக் காரணம். குரு, கேது, சூரியன், சனி ஆகிய பாவகிரகங்கள் தான்.

அனைத்து கிரகங்களும் காலசர்ப்ப யோகத்தில் மாட்டிக்கொண்டன. ஜனவரி மாதத்திலிருந்து இந்நிலை இருந்தது. அதிலிருந்து ஜூலை 14-க்குப் பிறகுதான் வெளியே வரமுடிந்தது. சூரியன் காலசர்ப்பத்திலிருந்து

வெளியே வந்துவிட்டது. இப்போது கொரோனா தீநுண்மியின் தாக்கம் குறைய வாய்ப்பு இருக்கிறது. சூரியன் ஆத்மகாரக கிரகம். சூரியன் வெளியே வந்துவிட்டதால், மக்களுக்கு நிம்மதி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்த நோய்க் கிருமியின் பாதிப்பு செப்டம்பர் 10-ஆம் தேதிக்குப் பிறகு குறையும்.

மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விடலாம். மீண்டும் அவர்கள் வழக்கமான தங்களின் பணிகளில் ஈடுபடக்கூடிய சூழல் உண்டாகும்.

செப்டம்பர் மாதத்தில் உலகில் நல்லது நடக்கும். நோய்க் கிருமிக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிடும். ராகுவால் மனதில் பயம் இருந்தாலும், நோய்க் கிருமியின் பாதிப்பு குறைந்துவிடும். பல பாவ கிரகங்களின் சேர்க்கை உலக அளவில் பயத்தை உண்டாக்கி விட்டன. ராகுவால் உண்டான பயத்தால்தான் மக்கள் ஒருவரோ டொருவர் பழகுவதற்கே பயந் தார்கள்.

இந்த நோய்த் தொற்றுப் பரவலைத் தொடர்ந்து, அமெரிக் காவும் சீனாவும் வர்த்தக விஷயத் தில் ஒன்றோடொன்று மோதும். அதை நாம் பார்க்கலாம்.

இந்த நோய்த் தொற்றால் அதிகமாக பாதிப்புக்கு ஆளான ராசி மிதுனம். ஏனென்றால், ராகு பகவான் பாவகிரகத்தால் பார்க்கப் பட்டால், அந்த ராகு இருக்கக் கூடிய ராசி பாதிப்பிற்குள்ளாகும்.

இப்போது ராகு மிதுன ராசியில் இருக்கிறார். அதனால், மிதுன ராசியில் இருப்பவர்களுக்கு பாதிப்பு உண்டாகும்.

அதற்கடுத்து, தனுசு ராசி. குரு, கேது சேர்க்கை தனுசு ராசியில் இருக்கிறது. அதற்கு முன்பு 5 கிரகங்கள் சேர்ந்தன. அதனால் தனுசு ராசியில் இருப்பவர்களுக்கு பாதிப்புண்டானது.

இதையடுத்து பாதிப்புக் குள்ளானவர்கள் கன்னி, மகரம், ரிஷப ராசிகளைச் சேர்ந்தவர்கள்.

கும்பம், கடகம், துலா ராசிகளைச் சேர்ந்தவர்களுக்கு சிறியளவில் பாதிப்பு இருக்கும்.

துளசிதாசர் எழுதிய "இராம சரித மானஸ' என்ற இராமாயணம் பற்றிய நூலில் இப்போதைய நிலைமை கூறப்பட்டிருக்கிறது. மனிதர்கள் மிகவும் கோப குணம் கொண்டவர்களாக இருப்பது பற்றியும், அதிகமான பிரச்சினைகள் அவர்களுக்கு உண்டாவதைப் பற்றியும் அதில் எழுதப்பட்டிருக்கிறது.

"மனிதர்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் புகார் கூறுவர். அப்போது பூமியில் வவ்வால்கள் அதிகமாகத் தோன்றும். அந்த சமயத்தில் பூமியில் இருப்பவர்களுக்கு சுவாச நோய், மார்பு எரிச்சல், மார்பில் சளி கட்டுதல் ஆகிய பிரச்சினைகள் உண்டாகும்' என்று அந்த நூலில் கூறப்பட்டிருக்கிறது.

நோய்த் தொற்றிலிருந்து விடுதலையாவதற்குச் செய்யவேண்டிய பரிகாரங்கள்...

குருவை வணங்கவேண்டும்.

கடவுளிடம் தன்னை முற்றிலுமாக சமர்ப்பித்து விடவேண்டும்.

பகவான் சிவனையும் விஷ்ணுவையும் வழிபட வேண்டும். சிவனின் மகாமிருத்யஞ்ஜய மந்திரத்தைக் கூறவேண்டும்.

விஷ்ணுவின் ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே வாசுதேவாய ஆகிய மந்திரங்களைக் கூறவேண்டும்.

அதிகாலையில் எழுந்து, குளித்துமுடித்து, சூரிய பகவானை வழிபடவேண்டும். ஆதித்திய ஹிருதய ஸ்தோத்திரத்தை உச்சரிக்கவேண்டும். அதன்மூலம் மன தைரியம் கிடைக்கும். அந்த தைரியத்தின்மூலமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

தினமும் அரச மரத்திற்கு நீர் விடவேண்டும்.

வாரத்திற்கு நான்கு நாட்கள் வேப்பிலையைச் சாப்பிடவேண்டும். மிளகை மெல்லவேண்டும்.

வீட்டின் வாசலில் வேப்பிலையைத் தொங்கவிட வேண்டும்.

நீரில் வேப்பிலையைப் போட்டு அந்த நீரில் குளிக்கவேண்டும்.

வீட்டின் வடகிழக்கைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

இரவில் சாப்பிட்ட பிறகு, பாத்திரங்களைக் கழுவிவைக்கவேண்டும்.

செல்: 98401 11534

bala070820
இதையும் படியுங்கள்
Subscribe