சென்ற இதழ் தொடர்ச்சி...
10-ஆமிடத்தில் சூரியன், சந்திரன் நின்ற பலன்களைக் கடந்த இதழில் பார்த்தோம். மற்ற கிரகங்களின் பலன்களை இங்கு காணலாம்.
செவ்வாய்
செவ்வாய் ரத்தத்தைக் குறிக்கும் கிரகம். ரத்தம் சார்ந்த தொழில் அமையும். சூரியன், கேதுவுடன் சம்பந்தப்படும்போது மருத்துவத் துறையில் தொழில் ஏற்படுகிறது.
செவ்வாய் நிலத்தைக் குறிக்கும் என்பதால் நிலம் சார்ந்த வீடு, இடம் வாங்கி விற்பர். விவசாயம் செய்வர். உணவு உற்பத்தி போன்று மின்சாரம் சார்புடைய தொழில், இரும்பு,நெருப்பு, ஆயுதம், வாகனத் தொழில் அமையும். செவ்வாயுடன் புதன் சேர்ந்தால் உடற்பயிற்சி, இராணுவம், காவல்துறை, பொறியியல் துறை, அரசாங் கத் துறையில் மக்கள் பாதுகாப்பிற்குச் செல்வர். புதன் என்றாலே பத்திரிகை, அச்சகத் தொழில் மற்றும் கணக்காளர், எழுத்துத் துறையில் பணியாற்றுவர்.
செவ்வாயுடன் குரு சேர்க்கை குருமங்கள யோகத்தைத் தரும். அரசாங்கப் பணி, அரசியல், அரசு சார்ந்த தொழிலைத் தரும். சுப பலம்பெற்றால் பெரிய பதவி, பெயர், புகழ், அந்தஸ்தை நினைத்துப் பாராத அளவு தந்துவிடுவார். அறிவியல், கணிதம், நீதித்துறை, மருத்துவத் துறையில் உபதேசம் செய்யக்கூடியவராக, பல்துறை மக்கள்பணி செய்யவைப்பார். நாற்பது வயதிற்குமேல் செவ்வாய் அல்லது குரு தசை வந்தால் புகழ்மிக்கவராக மாற்றும். சுக்கிரன், செவ்வாய் இணைந்தால் இசை, தையல், உடல் அழகு பராமரிக்கும் கலை யைச் சார்ந்து தொழில் வரும். வாகனம், மின்துறை இணைந்த அரசு சார்புத் துறை யில் பணி கிடைக்கும்.
உலோகத் தொடர்புதரும் சனி, செவ்வாயுடன் தொடர்புகொள்ளும் போது இரும்பு, நெருப்பு தொடர்பு டைய மருத்துவ ரசாயனத் தொழிலில்கருவி தயாரிக்கும் பொறியியல் துறையாகவும் அமையும். பாவகிரக பலம் பெற்றால் முறையற்ற வகையில் தொழில் அமையும். சுபபலம் அறிவியல் நுணுக்கப் பிரிவில் தொழிலைத் தரும். சினிமாத் துறை கிரகமான ராகுவுடன் செவ்வாய் இணைந்தால் அதில் எடுபிடி வேலை முதல் அரசாங்கப் பதவிவரை அடைய முடியும். திரைபடத் தயாரிப்பு, விற்பனை செய்வர். செவ்வாய், கேது மருத்துவத்துறை, ஆன்மிகத் துறையில் சாதனை புரிய வைப்பர்.
புதன்
பத்தில் புதன் அமர்ந் தால் பத்திரிகையாளர், எழுத்தாளர், கவிஞர் போன்ற அவதாரங் களைப் பெறுவார். கணக்கர், வங்கி, வட்டிக் கடை வைப்பவராகவோ அல்லது அதில் பணி செய்பவராகவோ இருப்பார். மேலும் வியாபாரத்தில் சில்லரை வர்த்தகம், மளிகைக்கடை நடத்து வார். கிரக வலுவைப் பொருத்து பள்ளிக்கூடம், கல்லூரி நடத்து பவராகவோ, ஆசிரியராகவோ பணி செய்வார். புதன் பெறும் வலுவைப் பொருத்து மிகச்சிறந்த ஜோதிடராக இருப்பார். மக்கள்பணி செய்யும் வழக்கறி ஞர், பிறருக்கு வழிகாட்டும் சுற்றுலாத்துறை, அரசியல் ஈடுபாடு கிடைக்கும்.
புதன் சுக்கிரனுடன் சேர்ந்தால் கலைத் துறையில் சாதனை பல புரிவார். நடிப்பு, பாடல், இசை, கவிதை, இலக்கியம், ஓவியம் என ஏதாவதொரு கலை இயற்கையிலேயே அமையப் பெற்றவராக இருப்பார். எழுத்து, இயக்கம் கொண்ட சினிமா இயக் குனராக ஜொலிப்பார்.புதன் குருவுடன் தொடர்புகொண்டால்- அதாவது இணைவு, பார்வைபெற்றால் வங்கி, பொறியியல், நீதி, அறிவுரை, ஆலோசனை, எழுத்துத்துறை, நாட்டியத்தில் ஈடுபாடு, இசைக் கச்சேரி நடத்தும் தொழிலைத் தரும். உழைப்பைத் தரும் சனி பல்துறை வித்தகரான புதனுடன் சேர்ந்தால், கொஞ்சம் கொஞ்சமாக உழைத்து பெரிய நிறுவனங்களை உருவாக்கும் ஆற்றலைத் தரும். பள்ளி, கல்லூரி, பொறியியல் துறையில் முன்னேற்றம் பெறுவார். புதன், ராகு சேர்க்கை பெற்றால் கலைத்துறையில் சிறந்த வசனகர்த்தாவாகவும், கணக்கு வழக்கு பார்க்கும் புரடக்ஷன் மேனேஜராகவும் இருப்பார். புதன், கேது இணைந்தால் ஆன்மிக- மருத்துவநூல் எழுதி வெளியிடுவார்.
குரு
குரு என்றாலே உபதேசம் செய்யும் ஆசிரியர். பலமிக்க குரு பள்ளி, கல்லூரி, கல்வி நிறுவன ஸ்தாபகராக மாற்றும். தனகாரகன் குரு என்பதால் வங்கிப்பணி, பணத்தை வட்டிக்குக் கொடுக்கும் பான் புரோக் கர், இன்ஷூரன்ஸ், நிதி நிறுவனத்தில் பணி செய்தல், கோவில் நிர்வாகி, வேதம் ஓதுதல், மத போதகர், யாகசாலைப் பணி.அறக் கட்டளை நிறுவி மக்களுக்கு சேவைசெய்தல் போன் றவை அமையும். குருபலம் குறைவதைப் பொருத்து தொழிலில் பதவிமாற்றம் உண்டா கும். பத்தில் குரு பலமாக அமையப்பெற்றவர் முதன்மை அமைச்சராவார். சிலர் அரசாங்கத்தில் பெரிய பதவியை அடைவர். உபதேச குரு, கலை கிரகமான சுக்கிரனுடன் இணைந்தால், அதில் ஆசிரியராகப் பணியாற்ற வைப்பார்.
பலமிக்க குரு, பலமிக்க சனியுடன் இருந்தால் மக்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பர்.
அரசியல் செல்வாக்குமிக்க அமைச்சராவார். பலமின்றி இருந்தால் அவர்களின் அடிமையாக இருப்பார். முடி திருத்துபவர், சமையல் எடுபிடி, வாகன ஓட்டுனர், நில புரோக்கராக இருப்பர்.
ராகுவுடன் குரு நல்ல நிலையில் இருந்தால் சினிமா தயாரிப்பாளர். பலமின்றிப் போனால் மேனேஜர், காசாளர் அல்லது எடுபிடியாகப் பணிசெய்வர். ஞான காரகரான கேது குருவுடன் இணைந்து பலம்பெற்றால் கோடீஸ்வர யோகத்தைத் தந்துவிடுவார்.
சுக்கிரன்
பத்திலுள்ள சுக்கிரன் கலைத்தொழிலில் ஆர்வம், வெற்றி, பணம், பெயர், புகழைத் தந்துவிடும். மேலும் ஆடம்பரப் பொருட்கள் வாங்கி விற்பது, இன்டீரியர் டெக்கரேஷன் செய்வது, பெண்களை வைத்துபெண்கள் விரும்பும் பொருட்களை விற்பனை செய்யும் தொழில் அமையும்.நவரத்தினம், வைர வியாபாரம் செய்வர். ஆடையில் பருத்தி, காகிதம் மற்றும் ஸ்டேஷனரி பொருட்கள் மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனை செய்வர். பால்,நீர் வியாபாரம், வெளி நாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்வர். கலை மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை போன்ற தொழிலில் ஈடுபடுவர்.
தொழில்காரகனான சனி, கலை காரகரான சுக்கிரனுடன் இணைந்தால் கலைத் துறையில் உடல் உழைப்பால் பொருளீட்டும் தொழில் அமையும். நடிப்பு, இசை, செட்டிங் துறையில் ஈடுபடுவர். பல்கலை வித்தகராக இருப்பர். சுப பலம்பெற்றால் அரசாங்கப் பணி கிட்டும். அரசால் பாராட்டப்படுவார். சுக்கிரன், ராகு இணைவு கலைத்துறையில் படிப்படியாக முன்னேறி பல சாதனை செய்யவைக்கும். சுக்கிரன், கேது இணைவு பெற்றவர் கலையை ஆன்மிகத்துடன் செயல் படுத்தி, பாடல் எழுதி, பாடி, இசைத்துறை யில் சாதனை பல படைப்பார். பலம் குறைந் தால் தெய்வ வழிபாட்டுத் தலங்களில் பணி செய்வார்.
சனி
தொழில் காரகரான சனி பத்தில் இருந் தால், ஜாதகர் கடினமாக உழைக்கக்கூடிய தொழில் செய்வார்.வாகனம் ஓட்டுதல், இறைச்சிக் கடை, ஆடு, மாடு வளர்ப்பு, கருவாடு, தோல் கடை, சமையல் பணி, மதுபான விற்பனை, இரும்பு, சுரங்கத் தொழில், நேர்முக உதவியாளர் பணி, பிற அடிமைத் தொழில்கள் அனைத்தும் செய்வார். சனி ராகுவுடன் சேர்ந்தால் கலைத்துறையில் சம்பாதிப்பார். சனி கேதுவுடன் இணையும் போது ஆன்மிக- மருத்துவ ஈடுபாடு தரும்; போராட்டமான வாழ்க்கையாக இருக்கும். சுபகிரக சம்பந்தம் பெறும்போது புகழைத் தரும். பலம் குறைந்தால் கீழ்நிலைத் தொழில் செய்யும் நிலை வரும்.
ராகு
பத்தில் ராகு இருந்தால் கலைத்துறைக்குச் செல்லும் யோகம் கிட்டும். ராகு சுபகிரக சம்பந்தம் பெற்றால் எத்துறையிலும் புகழ், பணம், அந்தஸ்தைத் தரும். பலம் குறைந்த ராகு, சுபகிரகப் பார்வை பெறாமலிருந்தால் மாந்ரீகத் தொழில், விஷ வைத்தியம் செய்வர். வாகன மெக்கானிக், ரேடியோ, கடிகாரம் பழுதுநீக்கம், இயற்கைமருத்துவத் தொழில், தொலைதொடர்புத்துறை, கூரை வேய்தல், பஞ்சு, கண்ணாடி தயாரித்தல், விற்பனை, எலெக்டிரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், பின்னல் தொழில்களில் ஈடுபடுவர்.
கேது
பத்தில் கேது அமையப்பெற்றவர் மருத்துவத் துறையில் ஈடுபடுவர். சுப பலம் பெற்றால் அறுவை சிகிச்சை நிபுணராகவும், பலம் குறைவதைப் பொருத்து மருத்துவத் துறையில் பதவி வகிப்பர். மேலும் ஆன்மிகத் தொழில், வேதம் கற்பித்தல், வெட்கமற்ற பாவத்தொழில், சினிமா துறையில் போதனை செய்தல், விழிப்புணர்வு பிரச்சாரம், பழைய இரும்பு வாங்கி விற்றல், கான்ட்ராக்ட் தொழில், கொலைக் கருவிகள், வட்டிக்கு விடுதல், ஏமாற்றிப் பிழைப்பு நடத்துதல், பணம் கிடைப்பதாக இருந்தால் துணிந்து எந்தத் தொழிலும் செய்வார்கள்.
பரிகாரம்
தொழில் ஸ்தானம் நன்றாக இருந்தால் தான் வாழ்க்கை சுமுகமாக இருக்கும். ஆண்களுக்கு புருஷ லட்சணம் என்பது செய்யும் தொழில்தான். பத்தாமிடம் தொழில் மட்டுமல்ல; மாமியாரைக் குறிக்கும் இடமும் கூட! அதனால்தான் பத்தாமிடம் கெட்டு தொழில் இல்லாதவனை மாமியார்கூட மதிக்க மாட்டார். கர்ம ஸ்தானமான பத்தாமிடம், முன்ஜென்ம கர்மவினைகளுக்கேற்பவே தொழில் விருத்தியை உண்டாக்கும். தொழில் ஸ்தானம் விருத்தியடைய, பத்தில் நின்ற கிரகங் களின் வலுத்தன்மையை அறிந்து அதற் கேற்ப கிரகங்களுக்குப் பரிகாரம் செய்தல் வேண்டும்.
செல்: 96003 53748