ஒருவர் என்ன தொழில் செய்தால் மேன்மையடைவார் என்பதை உணர்த்தும் இடமே பத்தாமிடம். மேலும் 10-ஆம் இடத்திலுள்ள கிரகம், 10-ஆம் இடத்தைப் பார்க்கும் கிரகம், தசாபுக்திப் பலனறிந்து நாம் தொழிலைத் தேர்ந்தெடுக்கவேண்டும். பணம் சம்பாதிக்கும் முறையையும் எந்தத் துறைமூலம் வருமானம் வரும் என்பதையும் நிர்ணயிக்கும் இடமாக 10-ஆம் இடம் உள்ளது. எனவே உங்கள் ஜாதகப்படி முத்தான இடமான 10-ஆம் இடத்தை முறையாக அறிந்து செயல்படுவது நல்லது.
படிப்பில்கூட 10-ஆம் வகுப்பு படிக்கும் பொழுதுதான் அதற்கடுத்து என்ன படிக்கப்போகிறோமென்று முடிவெடுத்து மேற்படிப்பைத் தொடர நினைக்கிறோம். விஷ்ணுவின் அவதாரத்தில்கூட பத்து அவதாரங்கள் உள்ளன. எனவே 10 என்பதை முடிவெடுக்கும் எண்ணாகக் கருதுகி
ஒருவர் என்ன தொழில் செய்தால் மேன்மையடைவார் என்பதை உணர்த்தும் இடமே பத்தாமிடம். மேலும் 10-ஆம் இடத்திலுள்ள கிரகம், 10-ஆம் இடத்தைப் பார்க்கும் கிரகம், தசாபுக்திப் பலனறிந்து நாம் தொழிலைத் தேர்ந்தெடுக்கவேண்டும். பணம் சம்பாதிக்கும் முறையையும் எந்தத் துறைமூலம் வருமானம் வரும் என்பதையும் நிர்ணயிக்கும் இடமாக 10-ஆம் இடம் உள்ளது. எனவே உங்கள் ஜாதகப்படி முத்தான இடமான 10-ஆம் இடத்தை முறையாக அறிந்து செயல்படுவது நல்லது.
படிப்பில்கூட 10-ஆம் வகுப்பு படிக்கும் பொழுதுதான் அதற்கடுத்து என்ன படிக்கப்போகிறோமென்று முடிவெடுத்து மேற்படிப்பைத் தொடர நினைக்கிறோம். விஷ்ணுவின் அவதாரத்தில்கூட பத்து அவதாரங்கள் உள்ளன. எனவே 10 என்பதை முடிவெடுக்கும் எண்ணாகக் கருதுகிறோம்.
10-ஆம் இடம் ஒருவருக்கு மேஷ ராசியாக அமைந்து, அதில் சூரியன் இருந்தால் பொருள் உற்பத்தித்துறையில் ஈடுபட்டு வருமானம் ஈட்டுவார். மின்சாதன உற்பத்தி, ஏஜென்சீஸ், உணவு சம்பந்தப்பட்ட தொழில்கள் லாப மேன்மை தரும்.
10-ஆம் இடம் ரிஷபமாக அமைந்து அதில் ராஜகிரகமான சூரியன் இருந்தால் கடுமையாக உழைத்து முன்னேறுவார். பெரும்பாலும் ஆடை, ஆபரண அணிகலன்களையும், வாசனை திரவியங்களையும் விற்பனைசெய்து வருமானத்தைப் பெருக்கிக்கொள்வார்.
10-ஆம் இடம் மிதுனமாகி அதில் சூரியன் இருந்தால் அவர்களுக்கு உழைத்துப்பிழைக்க மனம் வராது. விரைவில் களைத்துப் போய்விடுவார்கள். மனவேகம் இருக்கும் அளவுக்கு உடல்வேகம் இராது. அவர்கள் ஆலோசனை கூறும் அமைப்பை உருவாக்கினால் பலன் உண்டு.
10-ஆம் இடம் கடகமாக அமைந்து அதில் சூரியன் இருந்தால் அந்த நபர்கள் பொதுவாழ்வில் ஈடுபட்டுப் புகழ்குவிப்பார்கள். மேற்பார்வையாளராக இருந்து மற்றவர்கள் வேலைசெய்வதைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
10-ஆம் இடம் சிம்ம ராசியாய் அமைந்து அதில் சூரியன் இருந்தால் ஒரு நிறுவனத்தின் தலைமைப் பதவி வகிப்பார். தனக்குக்கீழ் ஏராளமான பேர் பணியாற்றும் யோகமுள்ளவர்.
10-ஆம் இடம் கன்னி ராசியாய் அமைந்து அதில் சூரியன் இருந்தால் எழுத்துத்துறை, கணிதத்துறை, கலைத்துறையில் நிபுணர்களாக விளங்குவார்கள்.
10-ஆம் இடம் துலா ராசியாகி அதில் சூரியன் இருந்தால், மற்றவர்களுக்கு விருப்பமில்லாத தொழிலிலில் இவர்களுக்கு விருப்பம் இருக்கும். தன வணிகத்துறையில், ஆடை, ஆபரணத்துறையில் நிகரில்லா லாபம் ஈட்டுவார்கள்.
10-ஆம் இடம் விருச்சிக ராசியாகி அதில் சூரியன் இருந்தால் தொழிலதிபராகும் வாய்ப்பு கிட்டும். அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடன் அதிநவீன தொழில்கள் பல செய்து தனம் ஈட்டுவார்.
10-ஆம் இடம் தனுசு ராசியாய் அமைந்து அதில் சூரியன் இருந்தால் கூட்டுறவுத்துறையில் பங்குபெறலாம். கலைத்துறையிலும் வெற்றிவாய்ப்பு கிட்டும். பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவை விற்பனை செய்வதன் மூலம் லாபம் காணலாம்.
10-ஆம் இடம் மகர ராசியாய் அமைந்து அதில் சூரியன் இருந்தால் கமிஷன் ஏஜென்சி, ஏற்றுமதி- இறக்குமதி போன்றவைமூலம் எண்ணற்ற லாபம் வந்துசேரும்.
10-ஆம் இடம் கும்ப ராசியாய் அமைந்து அதில் சூரியன் இருந்தால் மின்சாரப் பொருள் விற்பனை, மருத்துவத்துறை, கெமிக்கல் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தி பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள முடியும்.
10-ஆம் இடம் மீன ராசியாய் அமைந்து அதில் சூரியன் இருந்தால் அழகு சாதனப்பொருட்கள் விற்பனை நிலையம் வைத்துப் பயன்பெறலாம்.
உடற்பயிற்சி செய்வதற்கான நவீன உபகரணங்கள் மற்றும் ஆரோக்கியத்தை சீராக்கும் கருவிகள் விற்பனை நிலையங்கள் அமைப்பதன்மூலம் லாபம் அடையலாம்.
பரிகாரம் -1
"ஓம் ஹ்ரீம் ஆதித்யாயச
சோமாய மங்களாய புதயாச
குரு சுக்ர சனிப்யச்ச
ராஹவே கேதவே நமஹ'
என்று தினமும் 16 முறை ஜெபித்து தொழில் மேன்மை பெறலாம்.
பரிகாரம் -2
"ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு- கேது நவகிரக சகாய நமஹ" என்று தினமும் 16 முறை சொல்லி வந்தால் தொழில் வளம் பெறலாம்.
செல்: 94871 68174