ஜோதிடப் பலன்களை சிறப்பாகக் கூறும் சூட்சுமங்கள்
ஜோதிடத்தில் கிரக கார கங்கள் மற்றும் பாவ காரகங்களை இணைத்துப் பலன் கூறுவது சிறந்த அணுகு முறையாகும். கிரகங்களை மட்டும் எடுத்துக்கொண்டு பாவங்களைப் புறக்கணித்துப் பலன் கூறுவது எப்படியிருக்கு மென்றால், அது நாம் உப்பில் லாமல் சாப்பிடுவதற்கு ஒப்பான தாகும். இதை ஒரு உதாரணம்மூலம் காணலாம்.
ஜோதிடர்கள், சுக்கிரனை ஆண்களுக்கு களத்திரகாரகன் என்று கூறுவர். சுக்கிரன் ஒரு அழகான இளம்பெண்ணைக் குறிக்கிறது. சுக்கிரன் ஆண்களுக்குரிய களத்திரகாரகன் என்றால், உலகத்திலுள்ள அனைத்து ஆண்களுக்கும் அழகான மனைவி அமையவேண்டும். நடை முறையில் அவ்வாறு உள்ளதா? இல்லையே. ஏனெனில், சுக்கிரன் என்ற கிரக கார கத்தை மட்டும் பயன்படுத்துவதால் வருகின்ற வினை இது. அப்பொழுது கிரக காரகத்துடன் பாவ காரகத்தையும் பயன் படுத்துவது அவசியமாகிறது.
ஒருவருடைய ஜாதகத்தில் களத்திர ஸ்தானமாகிய ஏழாம் இடத்து புக்தி நாதன் எந்த கிரகமோ அந்த கிரகத்தின் குணமுடைய மனைவி அமைவாள். அந்த கிரகம் சூரியனாக இருந்தால் எதிலும் விட்டுக்கொடுக்காத, அதிக பாசமுடைய, அடக்கி ஆளுபவளாக மனைவி அமைவாள். அந்த கிரகம் சனியானால் தன்னைவிட அழகு குறைந்தவளாக, வயதான தோற்றம் உடையவளாக, சோம்பலுடைய, கருத்த நிறத்தவளாக மனைவி அமைவாள். ஆகவே ஏழாம்பாவ புக்திநாதன் எந்த கிரகமோ அத்தகைய குணத்தையுடைய மனைவியமைவாள்.
சுக்கிரன் இளமையான- திருமண மாகாத பெண் என்ற கிரக காரக குணத்தை ஒவ்வொரு பாவத்திற்கும் பகுத்துப் பார்ப் போம்.
உதாரண ஜாதகத்தில் சுக்கிரன் என்ற கிரகத்தை 12 பாவத்திற்கும் லக்னத்திலிருந்து பகுத்துப் பார்க்கப்படுகிறது.
1. சுக்கிரன் திருமணமாகாத பெண் என்ற காரகத்தை லக்னத்திற்கு எடுத்தோ மானால், எந்தப் பெண் ஒரு கேள்வி யைக் கேட்கிறாளோ அந்தப் பெண்ணாகும். அதாவது இந்த ஜாத கத்திற்கு சம்பந்தப்பட்ட மணமாகாத பெண்ணாகும்.
2. திருமணமாகாத பெண்ணானவள் அந்த ஜாதகர் குடும்பத்திலுள்ள நபராக இருப்பது இரண்டாம் பாவகாரகமாகும்.
3. திருமணமாகாத இளைய சகோதரியை மூன்றாம் பாவம் குறிக்கும்.
4. திருமணமாகாத சித்தியையும் அல்லது உறவுப் பெண்ணையும் நான்காம் பாவம் குறிக்கும்.
5. திருமணமாகாத காதலியை ஐந்தாம் பாவம் உணர்த்தும்.
6. திருமணமாகாத வீட்டு வேலைக்காரியை ஆறாம் பாவம் உணர்த்தும்.
7. திருமணமாகாத- தோழியாகப் பழகும் பெண் மனைவியாக மாறும் நிலையை ஏழாம் பாவம் குறிக்கிறது. இங்கு தான் சுக்கிரன் களத்திரகாரகனாக- "அழகான மனைவி' என்னும் பொருள்பட மனைவி அமையும் நிலையுண்டு.
8. திருமணமாகாத பெண் எதிரியாக இருப்பதை எட்டாம் பாவம் உணர்த்தும்.
9. திருமணமாகாத பெண், தகாத உறவுடன் திருமணமான ஆணுடன் பழகு வதை ஒன்பதாம் பாவம் குறிக்கும்.
10. திருமணமாகாத பெண் தொழில் கூட்டாளியாக இருப்பதை பத்தாம் பாவம் உணர்த்தும்.
11. திருமணமாகாத பெண் நண்பராக இருப்பதையும், மூத்த சகோதரியையும் பதினொன்றாம் பாவம் உணர்த்தும்.
12. திருமணமாகாத பெண்ணுடன் ரகசிய உறவு வைத்துப் பழகுவதை பன்னிரண்டாம் பாவம் குறிக்கும்.
மேலேகூறிய கிரகம் சுக்கிரன் ஒன்று தான். ஆனால் ஒரே கிரகத்தினுடைய 12 வகையான குணங்களுடைய கிரக காரகத்தை, ஒரு ஜாதகத்திலுள்ள 12 பாவங்களுக்கும் பகுத்துப் பார்க்க வேண்டும். சுக்கிரன் என்பது திருமண மாகாத பெண் என்ற ஒரே கருத்தை இவ்வாறு பகுத்துப் பார்க்கும்பொழுது, எப்படி 12 வகையான திருமணமாகாத பெண்ணாக உருமாறுகிறாள் என்பதை வாசகர்கள் கவனிக்கவேண்டும்.
பாவகாரகத்தின் முக்கி யத்தை மேலும் ஒரு உதாரணம்மூலம் காண் போம்.
இரண்டு நபர்கள் சந்திப்பதை எந்த கிரகக் காரகத்தைக்கொண்டு கூறமுடியும்? இங்கு பாவ காரகம் மட்டும்தான் செயல்படும். இரண்டு நபர்கள் என்று கூறும் பொழுது 1-ஆம் பாவம், 7-ஆம் பாவம் சம்பந்தப்பட்டவை. 1-ஆம் பாவம் ஜாதகர். (நங்ப்ச்). 7-ஆம் பாவம் அடுத்தவர். (எதிரில் இருப்பவர்).
அதேபோல் எங்கு சந்திப் பார் என்பதை 4-ஆம் பாவம் காட்டும். 4-ஆம் பாவம் 1-க்கு 4 என்பதால் தன்னுடைய வீட்டில் என்பதாகும். 10-ஆம் பாவம் என்பது 7-க்கு 4-ஆம் பாவமாகையால் சந்திப்பவரின் வீட்டிலாகும். ஆகவே இங்கு கிரகங் களுக்கு வேலை இல்லை.
பாவ காரகங்களே முக்கி யத்துவம் பெறும். இங்கு யாரை சந்திப்பார் என்ற கேள்வி வரும்பொழுது, 7-ஆம் பாவம் புதன் என் றால் தன்னுடைய மாமனை சந்திப்பார். 7-ஆம் பாவம் குரு என்றால் ஆசிரிய ரையோ, குருவாகப் போற்று தலுக்குரியவரையோ சந்திப்ப தாக உணர்த்தும். இங்கு தான் கிரக காரகம் பயன் படுகிறது.
பாவ காரகங்கள் பாஸ்கரா ஜோதிட முறையில் மிகவும் எளிமையாகப் புரியும் படியாக விளக்கிக் கூறப் பட்டுள்ளது.
செல்: 91767 71533