Advertisment

கடன் தொல்லையிலிருந்து விடுபட தாந்த்ரீக பரிகாரம்!-பொ. பாலாஜிகணேஷ்

/idhalgal/balajothidam/tantric-remedy-get-rid-debt-p-balajiganesh

ன்றைய காலக்கட்டத்தில் திரும்பும் திசை எல்லாம் ஒலிக்கும் இரண்டு வார்த்தைகள் பணம் கடன் இவைகள்தான். எல்லாரும் ஓடி ஓடி உழைப்பது என்னவோ பணம் சம்பாதிக் கத்தான். ஆனால் சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதி கடனை அடைக்கவே போய்விடுகிறது. கடன் என்றால் ஒருவரிடம் பணமாக வாங்கிய கடன் மட்டும் கிடையாது. பொருளாக வாங்கிய கடன், வீட்டுக்கடன், வாகனங்கள் வாங்கிய கடன் இவையெல்லாம்கூட கடன்தான். இப்படி எந்தவகையான கடன்களை அடைக்க நீங்கள் முயற்சி எடுத்தாலும் அது தோல்வியில் முடிகிறது என்றால், இந்த ஒரு சின்ன தாந்த்ரீக பரிகாரம் செய்யலாம் என்று ஆன்மிகம் சொல்கிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்யவேண்டும் என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.

Advertisment

கடன் அடைய வேண்டுமென்றால் அதற்கு ம

ன்றைய காலக்கட்டத்தில் திரும்பும் திசை எல்லாம் ஒலிக்கும் இரண்டு வார்த்தைகள் பணம் கடன் இவைகள்தான். எல்லாரும் ஓடி ஓடி உழைப்பது என்னவோ பணம் சம்பாதிக் கத்தான். ஆனால் சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதி கடனை அடைக்கவே போய்விடுகிறது. கடன் என்றால் ஒருவரிடம் பணமாக வாங்கிய கடன் மட்டும் கிடையாது. பொருளாக வாங்கிய கடன், வீட்டுக்கடன், வாகனங்கள் வாங்கிய கடன் இவையெல்லாம்கூட கடன்தான். இப்படி எந்தவகையான கடன்களை அடைக்க நீங்கள் முயற்சி எடுத்தாலும் அது தோல்வியில் முடிகிறது என்றால், இந்த ஒரு சின்ன தாந்த்ரீக பரிகாரம் செய்யலாம் என்று ஆன்மிகம் சொல்கிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்யவேண்டும் என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.

Advertisment

கடன் அடைய வேண்டுமென்றால் அதற்கு முதலில் பணவரவு அதிகரிக்க வேண்டும். பணவரவு அதிகரித்தால் கடன் அடைந்துவிடுமா என்றால் அதுவும் முடியாது. அது எப்படி என்று கேட்கிறீர்களா? சில பேரிடம் வாங்கிய கடனை உங்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் அதை திருப்பிக் கொடுப்பதற்கான நேரம் காலம் அமையாது. இந்த பரிகாரத்தை செய்யும்போது உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். அப்படி வரும் பணம் உங்கள் கடனை அடைக்க பயன்படும். இதுதான் இந்த பரிகாரத்திலேயே முக்கியமானது.

Advertisment

ss

இந்த பரிகாரத்தை செய்ய நாள், கிழமை என்று எதையும் பார்க்க வேண்டியதில்லை. நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யவேண்டும் என்று எப்போது நினைக்கிறீர்களோ அன்றே உங்கள் கடனை தீரவழி பிறந்து விட்டது என்று அர்த்தம். இந்த பரிகாரத்திற்கு ஒரு அல்லிப்பூ அடுத்து கரும்பு சாறு வேண்டும். இந்த கரும்பு சாறில் இஞ்சி, எலுமிச்சை, எதுவும் கலக்காமல் வெறும் கரும்பு சாறு மட்டும் கடையில் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள். இப்போது இந்த பரிகாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்துகொள்ளலாம்.

முதலில் சாம்பிராணி தூபம் போடும் தூபக்காலை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தேங்காய் சிரட்டையை பற்றவைத்து நெருப்பு கங்குகளை தயார்செய்து கொள்ளுங்கள். அதில் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் சுத்தமான கரும்பு சாரை ஊற்றவேண்டும். (கரும்பு சாறு கிடைக்காதபட்சத்தில் சுத்தமான தேனையும் இதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்). கரும்பு சாறு ஊற்றும்போது அதிலிருந்து வரும் புகையில் இந்த அல்லி பூவை காட்டவேண்டும். இப்படி செய்யும்போது அல்லி பூ வாடிவிடும்.

அடுத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் வாடிய அல்லி பூவை போட்டு மூடாமல், உங்கள் பூஜையறையில் அல்லது பணம் வைக்கும் இடத்தில் வைத்துவிடுங்கள். பாட்டிலில் இருக்கும் இந்த பூவுக்கு தினமும் தீபாராதனை காட்டவேண்டும். இதைத் தொடர்ந்து 48 நாட்கள் செய்யவேண்டும். பெண்கள் மாதவிலக்கான நாட்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அந்த ஐந்து நாட்களை தவிர்த்துவிட்டு மறுபடியும் தொடர்ந்து செய்யலாம். 48 நாட்கள் இந்த மலரைவைத்து பூஜைசெய்த பிறகு 48-ஆவது நாள் இந்த அல்லி மலரை ஓடும் நீரில் விட்டுவிடுங்கள்.

இந்த பரிகாரம் மிகவும் எளிமையான பரிகாரம்தான். ஆனால் 48 நாட்கள் கொஞ்சம் சிரத்தையாக செய்யவேண்டும். இதை காலையில் எழுந்தவுடன் செய்துவிடவேண்டும். இந்த பூவை வீட்டின் பூஜையறையில் வைத்தாலும் சரி, பணம் வைக்கும் இடத்தில் வைத்தாலும் சரி. இந்த மலரை வைத்து பூஜை செய்யும்போது பணவரவு ஆனது அதிகரிக்கும். பண வரவு இருந்தால்தானே நம்மால் கடனை அடைக்கமுடியும்.

அது மட்டுமின்றி இந்த பரிகாரத்தின்மூலம் உங்களுக்கு பண வரவிற்கான யோகமும் கிடைக்கும். பணம் மேலும் மேலும் பெருகுவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். இதுவரை நீங்கள் அடைக்க முடியாமல் திணறிய கடனைகூட அடைக் கும் வழியை தேடித்தரகூடிய அற்புதமான சக்திவாய்ந்த பரிகாரம்தான் இந்த அல்லிப்பூ பரிகாரம்.

கடனை அடைக்க எத்தனையோ பாடுபட்டு முடியாதவர்கள் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்தால் கடன் அடைவதற்கான வழி நிச்சயம் பிறக்கும் என்று சொல்லப்படு கிறது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

செல்: 9842550844

bala151223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe