ஷ்டப்பட்டு- உழைத்தும்- பணம் சேர்க்கையில்லை; லட்சுமி கடாட்சம் இல்லை யென வருந்துபவர்களுக்கு வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக என்ன செய்யலாம்? இதோ, கீழ்க்கண்ட எளிமையான குறிப்புகளைப் படியுங்கள்; பயனடையுங்கள்.

வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண்ட் கல்கண்டு போட்டு தீபமேற்ற லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

வீட்டில் வெள்ளைப் புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும்.

வீட்டில் பலவித ஊறுகாய் வைத்திருக்க வும், ஏனெனில் குபேரன் ஊறுகாய்ப் பிரியர். எனவே பலவித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.

Advertisment

நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு நீர் அருந்தத் தரவும். பின் மஞ்சள், குங்குமம் தரவும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பணவரவு ஏற்படும்.

அமாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது. பூஜைக்காலப்பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களை மட்டும் வழிபட பணம் வரும்.

dd

Advertisment

வீட்டில் விளக்கேற்றியவுடன் பால், தயிர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் ஆகியவை வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது. பணம் ஓடிவிடும்.

பொதுவாக இறைபக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவதால் புண்ணிய பலம் கூடும். பணவரவு அதிகரிக்கும்.

வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலட்சுமிக்கு நைவேத்தியம் செய்து, குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்துவர குடும்பத்தில் பணபுழக்கம் அதிகரிக்கும்.

அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12.00 மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து, அவள் கையால் பணம்பெற பணம் நிலைத்திருக்கும்.

யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்கிரன் நீசம், பகையின்றி இருக்கிறாரோ, அவர் கையால் சுக்கிர ஓரையில் பணம்பெற, அன்றிலிருந்து நமக்கு சுக்கிர தசைதான்.

பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும்; வீட்டில் தெளிக்கவும்.

முழு பாசிப்பருப்பை வெல்லம் கலந்த நீரில் ஊறவைத்துப் பின் அதனை மறுநாள் பறவைக்கு, பசுவுக்கு அளித்திடவும். இதனைத் தொடர்ந்து செய்துவர பணத்தடை நீங்கும்.

வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்குப் பசும்பால் வழங்கிட பணம் வரும்.

பச்சை வளையலைத் தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.

பெண்கள் இடக்கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும்.

பசும்பாலை சுக்கிர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். வெள்ளிக்கிழமை செய்திட நிச்சயமாக பணம் வரும்.

பாசிப்பருப்பை ஒரு பச்சைப் பையில் மூட்டை யாகக் கட்டி தலையடியில் வைத்துறங்கி, மறுநாள் அதனை ஒரு துணிப்பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும். பணப்பிரச்சனை தீரும்.

தினசரி குளிக்கும்முன் பசுந்தயிரை உடல் முழுவதும் தடவி சிறிதுநேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.

குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும். தரித்திரம் விலகும்.

தமிழ் மாதத்தில் முதல் திங்கட் கிழமை என தொடர்ந்து 12 மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும். நீங்கள் உறுதியாக பணக்காரர் ஆகலாம்.

பூர்வபுண்ணியம் இல்லாதவர்கூட லட்சாதிபதியாகலாம்.

குடியிருக்கும் வீட்டில் வட கிழக்குப் பகுதியில் கிணறு, நெல்லி மரம், வில்வ மரம் இருக்க, அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

தினமும் காலையில் வேங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லட்சுமி நித்தமும் வாசம்செய்வாள்.

மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபட வசிய முண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.

அவரவர் நட்சத்திர தனதாரை ஓரை, வெள்ளிக்கிழமைவரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11 தீபமும், 11 முறை வலம்வந்து வழிபட்டால் பணவரவு நிரந்தரமாகும்.

வீட்டில் தலைவாசல் படியில் கஜலட்சுமி உருவத்தை வெள்ளித் தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.

ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமியன்று சத்திய நாராயண பூஜைசெய்ய செல்வங் களைப் பெறலாம்.

ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபட செல்வம் பெருகும்.

தொடர்ந்து 11 பௌர்ணமியன்று இரவு 8.30 மணிக்கு சொர்ணாகர்ஷண பைரவருக்கு தாமரை மாலையணிவித்து, பிரசாதமாக அவல், பாயசம் படைத்து வழிபட சொர்ணம் ஆகர்ஷணமாகும்.

மகாலட்சுமிக்கும், தன பண்டார குபேரருக்கும் திரிதள வில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை அணிவித்திட பணம் சேரும்.

ஐஸ்வர்ய தூபப் பொடியை, துளசிப் பொடியுடன் சேர்த்து அவரவர் தன ஓரையில் தூபம்போட செல்வம் குவியும்.

சுக்கிர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும்.

வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவுக்கு உணவளிக்க செல்வம் சேரும்.

மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதள வில்வத்தால் அர்சித்திட செல்வம் ஆகர்ஷணமாகும்.

சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லட்சுமி மந்திரம் கூறியபடி தெளித்திட செல்வம் சேரும்.

சுக்கிர ஓரையில் மொச்சைப் பயறு வாங்கிட செல்வம் சேரும்.

சொர்ணாகர்ஷண பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர் பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் சேரும்.

பசுவுடன்கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகல செல்வங்களும் வசமாகும்.

வயதான சுமங்கலிக்கு மங்கலப் பொருட் களுடன் வளையல், மருதாணி சேர்த்து தானமளித்திட லட்சுமி அருள் பரிபூரணமாகக் கிட்டும்.

மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும், தொழில் ஸ்தாபனத் திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.

ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்துவர பணம் ஆகர்ஷணமாகும்.

தங்க நகை அணிந்த திருப்பதி வேங்கடா சலபதி படத்தில் காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம் கிடைக்கும்.

தனாகர்ஷண தைலத்தால் விளக்கேற்றிட செல்வம் நிலையாகத் தங்கும்.

சொர்ணாகர்ஷன பைரவருக்கு ஒன்பது நெய்விளக்கு ஏற்றி, தொடர்ந்து ஒன்பது வாரம் செய்துவர குடும்பத்தில் முன்னேற் றம் ஏற்படும்.

குபேரனுக்கு தாமரைத் திரிபோட்டு விளக்கேற்றி வழிபட்டால் பணம் வரும்.

குலதெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும் இடைவிடாமல் செய்துவர குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.

திருமலை வேங்கடாசலபதிக்கு வெண்பட்டு அணிவித்து வழிபட செல்வம் சேரும்.

துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனைப் பூஜை செய்துவர தீமைகள் நீங்கி நன்மையுண்டாகும்.

சொர்ண பைரவருக்கு பன்னீர்கொண்டு அபிஷேகம் செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண லாபம் கிட்டும்.

செவ்வாய்க்கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர் முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம்பெருகும்.

ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபட பூமி லாபமும், செல்வ வளமும் கிட்டும்.

கோவிலில் லட்சுமிமீது வைத்த தாமரை மலரைக்கொண்டு வந்து, பச்சைப் பட்டில் வைத்து மடித்து பணப்பெட்டியில் வைக்க பணம் சேரும்.

சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனை அன்னதானத்திற்கு செலவிட அதனைப்போல் ஐந்து மடங்கு நம்மிடம் வந்து சேரும்.

ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு அணிவித்த சந்தனத்தைப் பெற்று அதனை தினமும் அணிந்துவர பணம் வரும்.

வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டு அர்சிக்க தனலாபம் கிட்டும்.

இத்துடன் உழைப்பும் சேர்ந்திருந்தால் மட்டும் மேற்சொன்ன பலன்கள் நடக்கும்.

செல்: 98425 50844