தனுசு லக்னத்திற்கு 12 பாவங்களில் கேது!

/idhalgal/balajothidam/tanaucau-lakanatatairakau-12-paavanakalaila-kaetau

க்ன கேந்திரத்தில், தனுசு ராசியில் கேது இருந்தால் ஜாதகர் பிடிவாத குணமுள்ள வராக இருப்பார். அதிகமாக சாப்பிடுவார். தைரியசாலியாக இருப்பார். தன் மனக் கஷ்டங்களை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார். சாதுரியமாக செயல்படுவார்.

2-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் கேது இருந்தால் குடும்ப சந்தோஷத்தில் குறையிருக்கும். ஏதாவது சண்டை, சச்சரவு நடக்கும். பணத்தை சம்பாதிப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார்.

3-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் கேது இருந்தால் ஜாதகர் தைரிய குணம் கொண்டவராகவும் திறமைசாலியாகவும் இருப்பார். உடன்பிறந்தோருடன் சுமாரான உறவே இருக்கும். தான்

க்ன கேந்திரத்தில், தனுசு ராசியில் கேது இருந்தால் ஜாதகர் பிடிவாத குணமுள்ள வராக இருப்பார். அதிகமாக சாப்பிடுவார். தைரியசாலியாக இருப்பார். தன் மனக் கஷ்டங்களை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார். சாதுரியமாக செயல்படுவார்.

2-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் கேது இருந்தால் குடும்ப சந்தோஷத்தில் குறையிருக்கும். ஏதாவது சண்டை, சச்சரவு நடக்கும். பணத்தை சம்பாதிப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார்.

3-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் கேது இருந்தால் ஜாதகர் தைரிய குணம் கொண்டவராகவும் திறமைசாலியாகவும் இருப்பார். உடன்பிறந்தோருடன் சுமாரான உறவே இருக்கும். தான் முன்னேறுவதற்காக ஜாதகர் கடுமையாக உழைப்பார். பணக்காரராக வேண்டுமென்ற சிந்தனையுடனே எப்போதும் இருப்பார்.

4-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் கேது இருந்தால் அன்னையின் உடல்நலத்தில் குறையிருக்கும். பூர்வீக சொத்தில் பிரச்சினை ஏற்படும். சிலர் வெளியூர்களுக்குச் சென்று பணிசெய்வார்கள் அல்லது தொழில் நடத்துவார்கள்.

5-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் கேது இருந்தால் வாரிசு விஷயத்தில் பிரச்சினை இருக்கும். பிள்ளைகளால் மனக் கசப்பு உண்டாகும். படிப்பு விஷயத்தில் சிக்கல்கள் இருக்கும். பல கஷ்டங்களைக் கடந்து வெற்றி கிடைக்கும். ஜாதகர் தன் மனதிலுள்ள குறைகளை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்.

dd

6-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் கேது இருந்தால் ஜாதகர் பகைவர்களை வெல்வார். சண்டை, சச்சரவுகளில் அவருக்கே வெற்றிகிடைக்கும். எதிரிகள் அவரை பல சிக்கல்களில் மாட்டிவிடுவார்கள். ஆனால் தைரியமாக செயல்பட்டு அதிலிருந்து அவர் வெளிவருவார்.

7-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் கேது நீசமடைகிறார். அதனால் திருமண வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்படும். வியாபாரத்தில் பல சிக்கல்கள் இருக்கும்.

ஜாதகர் கடுமையாக உழைப்பார். சாதுரியமாக செயல்படுவார். வாழ்க்கையை மகிழ்ச்சி நிறைந்ததாக ஆக்குவதற்காக கடுமையாக முயற்சிப்பார்.

8-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் கேது இருந்தால் பல கஷ்டங்கள் உண்டாகும். உடல்நல பாதிப்பு ஏற்படும். வயிற்றில் பிரச்சினை இருக்கும். மன நிம்மதி குறையும்.

9-ஆம் பாவத்தில், திரி கோணத்தில், சூரியனின் சிம்ம ராசியில் கேது இருந்தால் முயற்சிகளில் தடை உண்டாகும். அதிர்ஷ்டத்தில் குறையிருக்கும். ஜாதகர் கடுமையாக உழைப்பார். குறுக்குவழிகளில் பயணித்து தன் காரியங்களை முடிப்பார். வாழ்க்கை முழுவதும் போட்டி கள் இருக்கும். உடன்பிறப்புகளு டன் சுமாரான உறவே இருக்கும்..

10-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் கேது இருந் தால் ஜாதகர் சுமாரான தோற்றத்துடன் இருப்பார். தந்தையுடன் அவருக்கு சுமாரான உறவே இருக்கும். வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்படும். ஜாதகர் கடுமையாக உழைப்பார். புத்திசாலித் தனமாக செயல்பட்டு தன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பார். எனினும் பெரிய அளவில் எதையும் செய்ய முடியாது.

11-ஆம் பாவத்தில் சுக்கிர னின் துலா ராசியில் கேது இருந்தால் பணம் சம்பாதிப்ப தற்காக கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். எனினும் தான் நினைத்த அளவுக்கு பணத்தை சம்பாதிக்க முடிய வில்லையே என்ற குறை எப்போதும் ஜாதகரின் மனதிலிருக்கும்.

12-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் கேது இருந்தால் செலவு கள் அதிகமாக இருக்கும்.

அவருக்கு பல சிக்கல்கள் ஏற்படும். பல குறுக்குவழி களைக் கையாண்டு ஜாதகர் தன் செயல்களில் வெற்றி பெறுவார். சிலர் துறவியாகி விடலாமென நினைப்பார் கள்.

செல்: 98401 11534

bala130123
இதையும் படியுங்கள்
Subscribe