இந்த பாரத தேசத்தில் பல இனமக்கள் வாழ்ந்துவருகிறார்கள். ஒவ்வொருவரும், தங்களுக்கென்று ஒரு மொழி, தனிப்பட்ட நாகரிகம், பண்பாடு, வழிபாடு, சடங்கு, வாழ்வியல் வழிமுறைகளைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.
இந்த தேசத்தின் தென்பகுதி மக்கள் பேசும்மொழி தமிழ் என்பதால், இங்குள்ள மக்களை தமிழர்கள், சைவர்கள் எனவும்; தமிழ்மக்கள் வாழும் பகுதி தென்பாண்டி மண்டலம், சைவர்பூமி, தமிழர்தேசம் எனவும் அழைக்கப்பட்டது. அகத்தியர் பெருமான் வகுத்துத்தந்த மொழி, நாகரிகம், பண்பாடு, முன்னோர் வழிபாடு, சம்பிரதாயங்களைத் தங்கள் வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்தார் கள். இவர்களின் வாழ்வியல்முறை சைவ சித்தாந்தக் கொள்கை என அழைக்கப்பட்டது.
நமது முன்னோர்கள் ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்யும்போது கடைப்பிடித்துவந்த திருமணச் சடங்கு, சம்பிரதாயங்களை அறிவோம்.
திருமணம் செய்யத்தொடங்கும்போது, முதன்முதலில் தங்கள் வீட்டில் முறையாக முன்னோர் பூஜையைச் செய்து வணங்கி, அவர்களின் ஆசிர்வாதம் பெற்று திருமண காரியங்களை செய்யத் தொடங்குவார்கள். (இன்றையநாளில் செய்யப்படும் திதி கொடுத்தல் அல்ல).
இப்போது செய்வதுபோல் ஜாதகம், பத்துப் பொருத்தம், நட்சத்திரப் பொருத்தம் என எதையும் பார்த்துச் செய்ததில்லை. முன்னோர் வழிபாடு செய்து தொடங்கு வார்கள்.
ஒரு ஆணோ பெண்ணோ- தாயுடன் பிறந்த சகோதரர்களின்- அதாவது தாய்மாமன் மகனையோ, மகளையோ திருமணம் செய்து கொள்ள பொருத்தம் பார்க்கத் தேவையில்லை.
இது ரத்த சம்பந்தமான உறவுத் திருமணமாகும்.
ஒரு குழந்தை கர்ப்பத்தில் இருக்கும்போதே, பெண்ணாகப் பிறந்தால் இன்னார் மகனுக்குத் திருமணம் செய்துவைப்பேன் என்றும், ஆண் குழந்தையாகப் பிறந்தால், இன்னார் மகளைத் திருமணம் செய்துவைப்பேன் என்றும் இரண்டு குடும்பத்தாரும் வாக்குதந்து நிச்சயம் செய்து கொள்வார்கள். அவர்களுக்குத் திருமணம் செய்யும் காலத்தில் ஜாதகம் பார்க்கத் தேவை யில்லை. இது கர்ப்ப நிச்சயத் திருமணம்.
ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரையொரு வர் விரும்பி அவர்களுக்குள் மணப்பொருத்தம் ஏற்பட்டுவிட்டால், அவர்களுக்கு குடும்பப் பெரியவர்கள் பேசி திருமணம் செய்துவைத்தா லும் அல்லது அவர்களே திருமணம் செய்து கொண்டாலும், இந்த திருமணத்திற்கு எந்த பொருத்தமும் பார்க்கத் தேவையில்லை. இன்றையநாளில் இதனை காதல் திருமணம் என்று கூறுகின்றார்கள். முற்காலத்தில் இது சமூகத்தில் ஏற்கப்பட்டதாகவே இருந்தது.
காளையை அடக்குதல், மல்லன் கல்லைத் தூக்குதல், வாள்போர் செய்து வெற்றிபெறுதல் போன்ற வீரவிளையாட்டுப் போட்டிகள் வைத்து, அதில் வெற்றிபெறுபவருக்குப் பரிசாகத் தன் பெண்ணைத் திருமணம்செய்து தருவர். இதனை மறவர் (வீரர்) திருமண முறை என்று கூறுவார்கள். இதுபோன்ற திருமணத்தை அந்தப் பெண்ணே நிர்ணயம் செய்து, ஒரு வீரனைக் கணவனாக வரிப்பாள்.
இதுபோன்ற வழிமுறைகளைக் கடைப் பிடித்துதான் தமிழ்மக்கள் தங்கள் பிள்ளை களுக்குச் சைவத்திருமணம் செய்துவைத்தனர்.
ஜாதகம், பொருத்தம் பார்த்து திருமணம் செய்யவில்லை.
இன்றையநாளில் மணமகன் வீட்டார் சொத்து, பணம், நகைகள், வீடு, வாகனம் என இதுபோன்று பலவகையான பொருட்களை வரதட்சணையாகப் பெண் வீட்டாரிடமிருந்து வாங்கிக்கொண்டு, அந்தப் பெண்ணை மருமகளாக ஏற்கிறார்கள்.
இதுபோன்று வரதட்சணை வாங்கிக் கொண்டு திருமணம் செய்துகொள்வது, வட புலத்து ஆரிய இனத்தவரின் வழக்கமாகும். பெண்வீட்டாரிடம் வரதட்சணை வாங்கிக் கொண்டு திருமணம் செய்யும் பழக்கம் இன்று தமிழ்மக்களிடையே அதிகமாகிக்கொண்டு வருகிறது. இந்த வரதட்சணைக் கொடுமையால் நிறைய பெண்கள் திருமணமாகாமலும், பல பெண்கள் மரணத்தை அடையும் நிலையும், கணவன் இருந்தும் வாழவெட்டியாக வாழும் நிலையும் அதிகமாகிக் கொண்டுவருகின்றது.
இதுபோன்று குடும்பத்தில் வாழவரும் பெண்ணிடம் வரதட்சணை வாங்கிக்கொண்டு திருமணம் செய்தால், மணமகன் வீட்டில் பிற் காலத்தில் அந்த குடும்ப வம்ச வாரிசுகளுக்கு பலவித பாவ- சாபங்களும், சிரமங்களும் உண்டாகும். இந்த குடும்பத்தில் வாழவந்த பெண் களுக்கும், பிறந்த வீட்டுப் பெண்களுக்கும் நிம்மதியான நல்ல வாழ்க்கை அமையாது என்று அகத்தியர் பெருமான் கூறுகிறார்.
ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை நிச்சயிக்கும் போது, அந்தப் பெண்ணின் பெற்றோர் களுக்கு ஒரு பசுவையும் கன்றையும் மற்றும் பணம், பொருள், நகைகளைத் தந்து, பெண்ணைப் பெற்றவர்களை மகிழ்ச்சியடையச் செய்து பெண்ணைத் திருமணம் செய்தால், அந்தப் பெண்ணுக்குப் பிறக்கும் புத்திரனின் யோகத்தால், அந்தப் பெண் வாழப் போகும் கணவன் வீட்டில் முன், பின் எட்டு தலைமுறையில் உண்டான பித்ரு, புத்திரதோஷம், களத்திர தோஷம், சர்ப்பதோஷம், பெண் சாபம், சகோதர சாபம் என அனைத்து சாபதோஷங்களும் நீங்கிவிடும் என்கின்றார் அகத்தியர். அதே போல அந்தப் பெண் வாழும் வீட்டில் ஏழு தலைமுறைக்கு உண்டான பாவ- சாப தோஷங்கள் நீங்கும்.
பெண் வீட்டாரிடமிருந்து பணம், நகை, சொத்து என எந்தப் பொருளையும் வாங்காமல், திருமணச் செலவுகள் அனைத்தையும் மணமகன் வீட்டாரே ஏற்றுச்செய்து, அந்தப் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைகளின் யோகத்தால், அந்தப் பெண் வாழவந்த வீட்டில் முன், பின் பத்து தலைமுறையில் உண்டான- உண்டாகும் பாவ-சாப தோஷங்கள் நீங்கும்; அந்தக் குடும்பம் தழைத்து செழித்து வளரும் என்கிறார் அகத்தியர்.
இந்த சைவத் திருமண முறைகளைக் கடைப்பிடித்தே நமது முன்னோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து, நிறைய குழந்தைகள், செல்வம், குடும்ப ஒற்றுமை என வாழ்ந்தனர். இந்தத் திருமண முறையைக் கடைப்பிடித்து வாழ்வில் நன்மைகளை அடைவோம்.
செல்: 99441 13267