Advertisment

வீட்டில் மகாலட்சுமி வாசம் புரிய வைக்கும் ததாஸ்து! -பண்டிட் எம்.ஜி.பி

/idhalgal/balajothidam/tadaastu-will-make-mahalakshmi-feel-home-pandit-mgp

வீட்டிலும், விழாக்கüலும் எந்த சுபகாரியங்கள் நடந்தாலும் ஆசீர்வாத மந்திரங்கள், இறைவனிடம் கோரிக்கை வேண்டுகோள்கள் வைத்து மந்திரங்களை உச்சரிக்கும்போது ஆசிரியர்கள் மற்றும் சில பெரியவர்கள், அந்தந்த மந்திரங்களை நாம் உச்சரித்த பிறகு அடிக்கடி "ததாஸ்து ததாஸ்து' என்று சொல்லி அட்சதையை நம் தலையில் தெளிப்பார்கள். "ததாஸ்து' என்றால் என்ன? "ததாஸ்து'வைப் பற்றி சில விவரங்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.

நமது வாயிலிருந்து வரும் வார்த்தைகள் அமங்கல சொற்களாக இருக்கக்கூடாது, யாருக்கும் சாபம் இடக்கூடாது, நல்லபயன் தரும் சொற்களையே சொல்லவேண்டும். ஏனென்றால் எங்கும் தேவதைகள் நம் கண்ணுக்கு தெரியாமல் நம்மிடையே உலவுகிறார்கள். தேவதைகளின் அதிர்வலைகள் எங்கும் நிறைந் திருக்கிறது. ஆகவே தான் நம் சொற்களை அப்படியே நடக்கட்டும் என்று அவர்கள் ஆசிர்வதிப்பார்கள். எப்போதும் அவர்கள் நாம் விரும்பியது ப

வீட்டிலும், விழாக்கüலும் எந்த சுபகாரியங்கள் நடந்தாலும் ஆசீர்வாத மந்திரங்கள், இறைவனிடம் கோரிக்கை வேண்டுகோள்கள் வைத்து மந்திரங்களை உச்சரிக்கும்போது ஆசிரியர்கள் மற்றும் சில பெரியவர்கள், அந்தந்த மந்திரங்களை நாம் உச்சரித்த பிறகு அடிக்கடி "ததாஸ்து ததாஸ்து' என்று சொல்லி அட்சதையை நம் தலையில் தெளிப்பார்கள். "ததாஸ்து' என்றால் என்ன? "ததாஸ்து'வைப் பற்றி சில விவரங்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.

நமது வாயிலிருந்து வரும் வார்த்தைகள் அமங்கல சொற்களாக இருக்கக்கூடாது, யாருக்கும் சாபம் இடக்கூடாது, நல்லபயன் தரும் சொற்களையே சொல்லவேண்டும். ஏனென்றால் எங்கும் தேவதைகள் நம் கண்ணுக்கு தெரியாமல் நம்மிடையே உலவுகிறார்கள். தேவதைகளின் அதிர்வலைகள் எங்கும் நிறைந் திருக்கிறது. ஆகவே தான் நம் சொற்களை அப்படியே நடக்கட்டும் என்று அவர்கள் ஆசிர்வதிப்பார்கள். எப்போதும் அவர்கள் நாம் விரும்பியது போலவே நடக்கட்டும், நம் வார்த்தை பலிக்கட்டும், வேண்டுவது கிடைக்கட்டும் என்று வாழ்த்திக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் சொல்லும் வார்த்தை தான் "ததாஸ்து''.

Advertisment

ss

ஆகவே நாம் விரும்பியது போலவே ஆகிவிடும், நடந்து விடும். துர் வார்த்தைகள், அமங்கல வார்த்தைகளை நாம் உச்சரித்தால் அதுபோலவே நடந்துவிடும். சொன்னால் பலித்துவிடும். மனிதன் வாயிலிருந்து புறப்படும் வார்த்தைகள் நல்லதும் செய்யும் கெட்டதும் செய்யும். ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும். "வாயிலே சனி' என்று அதனால் தான் சொல்கிறோம்.

நம் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்யவேண்டும் என்றால், இப்படிப்பட்ட அபசகுன, அமங்கல வார்த்தைகளை நாம் உச்சரிக்கக்கூடாது. மனதில் நினைக்கக் கூடாது. மனதில் நினைப்பது தான் வார்த்தையாக வெளிவரும். அதற்குத் தான் எப்போதும் இறைவன் நாமத்தை விடாமல் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும். உச்சரிக்க வேண்டும். அப்போதுதான் அவன் அருள்பெற முடியும் நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம் நல்லதே சொல்வோம் என்று அடிக்கடி பெரியவர்கள் சொல்வது இதற்காகத்தான். இதன் மூலம் மனதில் மட்டுமல்ல நம் வீட்டிலும், நம்மைச் சுற்றிலும் எங்கும் சுபிட்சம், சந்தோ'ம் என்றும் குடிகொள்ளும்.

நூறாண்டு வாழ்க என்று வாழ்த்தும் போது "ததாஸ்து'' சொன்னால் அப்படியே நடக்கும் என்ற நம்பிக்கை வீண் போனதில்லை.

விவாகம் நடக்கவேண்டும், குழந்தை பிறக்கவேண்டும் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழவேண்டும் என்ற பிரார்த்தனை யில் "ததாஸ்து'' சொல்லி, அப்படியே நடக்கட்டும் என்று ஆசீர்வாதம் அளிப்பது வழக்கம்.

நம்மைச் சுற்றி தேவதைகள் இருக்கிறார் கள் என்கிறது சாஸ்திரம். அதேபோல் முனிவர்களும் யோகிகளும் குறிப்பாக நம்முடைய முன்னோர்களும், நம்மைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் நம் வார்த்தைகளை கேட்டுக்கொண்டே இருப்பதால் அதற்கெல்லாம் "ததாஸ்து ததாஸ்து' என்று சொல்கிறார்கள். நாம் சொல்லும் நல்ல வார்த்தைக்கும் சாபத்துக் கும் "ததாஸ்து' தான்.

ராமாயணத்தில் இராவணனும் கும்பகர்ணனும் பல்லாயிரம் வருடங்கள் கடும் தவம் இருந்து கேட்ட வரத்தை பெற்றார் கள். இராவணன் எந்த தேவனாலும் ராட்சஸனாலும், மும்மூர்த்திகளாலும், தேவர்களாலும் மிருகத்தாலும், எனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்று வேண்டிய வன், "மனிதனால்' என்ற வார்த்தையை மட்டும் சொல்லவில்லை, "ததாஸ்து'' என்று வரம் அருளினார் ப்ரம்மா. ஆகவே, தான் விஷ்ணு மனித குலத்தில் இராமனாக பிறந்து ராவணனை வதம் செய்தார்.

கும்பகர்ணன் வரம் கேட்கும்போது "தேவர்களே இருக்கக்கூடாது' "நிர்தேவஸ்ய' என்று கேட்பதற்கு பதிலாக, தவறுதலாக "நித்ரேவஸ்ய'' என்று கேட்டுவிட்டான். அதனால் வாழ்க்கை முழுக்க நித்திரையில் கழித்து, இறுதியில் மீளாத நித்திரையில் மறைந்ததும் "ததாஸ்து'' வால் தான்.

நமது உடம்பு ஒரு கோவில். மனம் இறைவன் வாழும் இல்லம். கோவிலுக்கு செல்லும்போது எப்படி குளித்துவிட்டு, தோய்த்து உலர்ந்த சுத்தமான ஆடைகளை உடுத்திக்கொண்டு, உடலில் விபூதி, சந்தனம், குங்குமம் அணிந்து இறைவனை வணங்க செல்கிறோமோ அப்படி மனதிலும் தூய்மையோடு, இருக்க நல்ல எண்ணங்கள், சிந்தனைகள்தான் "ததாஸ்து'வை நல்லதாக நமக்கு பெற்று தரும். குழந்தைகளுக்கு நாராயணன், சிவன், லட்சுமி, சரஸ்வதி, கோவிந்தன் என்று பெயர் வைக்கும் காரணம் அவர்களைப் பற்றி பேசும் போது, கூப்பிடும்போது, நல்ல வார்த்தைகள் நமது நாக்கில் இருந்து எப்போதும் வெளிப் படவேண்டும் என்பதற்குத்தான்.

குழந்தைகளை, உறவுகளை, மற்றவர்களை நோக்கி, "நீ செத்துத் தொலை, நாசமாகப்போ, அழிந்துபோ, ஒழிந்துபோ' போன்ற கொடிய அமங்கல வார்த்தைகளை உபயோகப்படுத்தவே கூடாது.

இனிமேலாவது "ததாஸ்து' தேவதைகள் பற்றிய நினைப்பு நமக்குள் இருக்கட்டும்.

Advertisment
bala270625
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe