இயற்கையில் அமைந்த புவியீர்ப்பு சக்தி, காந்த சக்தி மற்றும் மின்சக்தியைப் போலவே மனித மூளையின் சக்தியும் அபாரமானது. இந்த மூளையின் முழுசக்தி யையும் பெரும்பாலான மனிதர்கள் பயன்படுத்துவதில்லை என்றே கூறலாம். அப்படி மூளையின் முழுசக்தியையும் ஒரு முகப்படுத்தி, திறம்படப் பயன்படுத்தும் வெகுசிலரே விஞ்ஞான ஆராய்ச் சியாளர்கள் என்று பெருமை பெறு கிறார்கள்.
சமீபகால விஞ்ஞானப் படைப்புகளான ரேடியோ, டெலிவிஷன், செல் போன் ஆகியவற்றை எடுத்துக்கொள் வோம். ஆயிரக்கணக்கான மைல் தூரத்தினை நொடியில் கடக்கக்கூடிய ஒலி, ஒளி அலைக்கற்றைகளை அடிப்படையாகக் கொண்டவை இந்த கருவிகள் எனலாம். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற தொலைதூரங்களில் இருந்துவரும் பேச்சை, காட்சியினை அதேநேரத்தில் நாம் இங்கேயே கேட்க, பார்க்க முடிகிறது. பல்வேறு நிகழ்ச்சிகள் ஒரே சமயத்தில் நிகழ்ந்தாலும் அவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு நமக்கு வேண்டிய பேச்சினைக் கேட்க, காட்சி யினைப் பார்க்க கருவிகள் உருவாகி யுள்ளன. இத்தகைய உபகரணங்களை உருவாக்கும் விஞ்ஞான ஆராய்ச்சி யாளர்கள
இயற்கையில் அமைந்த புவியீர்ப்பு சக்தி, காந்த சக்தி மற்றும் மின்சக்தியைப் போலவே மனித மூளையின் சக்தியும் அபாரமானது. இந்த மூளையின் முழுசக்தி யையும் பெரும்பாலான மனிதர்கள் பயன்படுத்துவதில்லை என்றே கூறலாம். அப்படி மூளையின் முழுசக்தியையும் ஒரு முகப்படுத்தி, திறம்படப் பயன்படுத்தும் வெகுசிலரே விஞ்ஞான ஆராய்ச் சியாளர்கள் என்று பெருமை பெறு கிறார்கள்.
சமீபகால விஞ்ஞானப் படைப்புகளான ரேடியோ, டெலிவிஷன், செல் போன் ஆகியவற்றை எடுத்துக்கொள் வோம். ஆயிரக்கணக்கான மைல் தூரத்தினை நொடியில் கடக்கக்கூடிய ஒலி, ஒளி அலைக்கற்றைகளை அடிப்படையாகக் கொண்டவை இந்த கருவிகள் எனலாம். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற தொலைதூரங்களில் இருந்துவரும் பேச்சை, காட்சியினை அதேநேரத்தில் நாம் இங்கேயே கேட்க, பார்க்க முடிகிறது. பல்வேறு நிகழ்ச்சிகள் ஒரே சமயத்தில் நிகழ்ந்தாலும் அவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு நமக்கு வேண்டிய பேச்சினைக் கேட்க, காட்சி யினைப் பார்க்க கருவிகள் உருவாகி யுள்ளன. இத்தகைய உபகரணங்களை உருவாக்கும் விஞ்ஞான ஆராய்ச்சி யாளர்கள் தங்கள் மூளைத்திறனை முழுமையாக, அபாரமாகப் பயன்படுத்தி பலன் கண்டுள்ளார்கள்; மனித சமுதா யத்திற்கு உதவிபுரிந்துள்ளார்கள்.
அதேசமயம் நாம் மற்றொன்றையும் நினைவில்கொள்ள வேண்டும். மேற்கூறிய ஒலி, ஒளிக்கதிர்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் பரவி, கடந்து செல்ல வாயு மண்டலத்தில் இயற்கை அமைப்பு துணையும் உதவியும் புரிகிறது.
இதனையே எதர் என்றும் (ஊற்ட்ங்ழ்) கூறுவர்.
இந்த இயற்கையமைப்பு என்றென்றும் அமைந்த ஒன்று. இத்துடன் மனிதன் உருவாக்கிய ஒலி, ஒளிக்கதிர்களைப்போலவே வேறுவிதமான ஒளிக்கதிர்களும் இப்புவியிலே வலம்வருவதை நாம் மறுத்துவிட முடியாது. மேலும் நியூட்டன், எடிசன் போன்ற பிரபல விஞ்ஞானிகள் புவியீர்ப்பு சக்தி மற்றும் மின்காந்த சக்தி ஆகிய சக்திகளை உலகிற்கு வெளிப்படுத்தினார்கள். அதனால் இந்த புவியீர்ப்பு மின்சக்திகள் முன்பு கிடையாது என்று அர்த்தமல்ல. இந்த இயற்கை சக்திகள் உலகம் தோன்றியபோதிலிருந்து அமைந்தவை என்பதை உண்மை.
இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டால் பாரம் பரியம் மிக்க நம் முன்னோர், ரிஷி பெருமக்கள், மகான்கள், சித்தர்கள், ஞானிகள் ஆகியோரை அக்கால விஞ்ஞானிகள் என்று கூறலாம். தங்களது மூளையின் முழு சக்தியையும் பயன்படுத்தி பல உண்மை களைக் கண்டறிந்தார்கள். அதற்கு தங்கள் தவவலிமை, தியானப் பயிற்சி, யோக முறைகள், தெய்வீக சிந்தனை ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத் தினர். ஞானதிருஷ்டி எனப்படும் மதிநுட்பத்தால், இயற்கை யாகவே கிரகங்களிலிருந்து மின்காந்த ஒளிக்கதிர்கள் (நேர்மறை மற்றும் எதிர்மறை) வெளிவந்து பூமியை வலம் வருவதை அறிந்தனர். இந்த ஒளிக்கதிர்களால் மனித சமுதா யத்திற்கு உண்டாகும் தாக் கங்கள், பாதிப்புகளை அறிந் தார்கள். பாதிப்புகளைப் போக்க நவரத்தினக்கற்கள், உயர் உலோ கங்கள், மூலிகைத் தாவரங் களிலிருந்து வெளிவரும் ஒளிய லைகள் பயன்படும் என்றும் கண்டறிந்தார்கள். தாங்கள் கண்ட அனுபவ உண்மைகளை "ஜோதிட சாஸ்திரம்' என்று பெயரிட்டு அதன்மூலம் வெளிப்படுத்தினார்கள்.
இனி, நவகிரகங்களில் சுக்கிர பகவான் பற்றி ஜோதிட சாஸ்திர கூறும் விளக்கங்களைக் காணலாம். சுபகிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுவதால் பலவித நற்பலன்களை அளிக் கக்கூடியவர். இதன்படி சுக்கிர பகவான் மனித வாழ்க்கை தொடர்பான கீழ்க்காணும் நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைகிறார்.
● உலக சுகபோகங்களை அனுபவிக்கும் இனிமையான, சந்தோஷ வாழ்க்கை.
● கணவன்- மனைவி உறவு முறை; காதல், காமம், உணர்ச்சிகள்.
● காந்தக் கவர்ச்சித் தோற்றம், கலைகளில் ஈடுபாடு (சினிமா, டி.வி.), பெருமை, புகழ்.
● வாகன வசதிகள் கொண்ட சொகுசான வாழ்வு.
மேலும், ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலிருந்து அமையும் நான்காம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்குக் காரகர் என்றும் அழைக்கப்படுகிறார்.
முற்பிறவியின் கர்மவினைகளுக்கேற்ப, ஒரு குழந்தை இந்த புவியில் குறிப்பிட்ட நாளில், நேரத்தில் பிறவியெடுக்கிறது. அந்த தருணத்தில் அமையும் கிரக நிலைப்பாடுகளை ஒட்டியே குழந்தையின் ஜாதகம் அமைகிறது. அந்த ஜாதகம் குழந்தை வாழ்க்கையின் அடிப்படை அஸ்திவாரம் என்று கருதலாம். அதன்படி ஒருவரது ஜாதகத்தில் சுக்கிர பகவான் நன்றாக அமைந்துவிட்டால், முன்னர் கூறப்பட்டுள்ள நன்மைகள் முழுமையாக பெறப்படும் என்று அறியலாம். எனினும் துரதிருஷ்டவசமாக ஜாதகத்தில் சுக்கிர பகவான் பாதிப்புடன் தென்பட்டால் அதற்கும் உரிய நிவாரணப் பரிகார முறைகள் ஜோதிட சாஸ்திரத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
● சுக்கிர பகவான் திருத்தலங்களுக்குச் சென்று மனதார வழிபடுதல். வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானை அர்ச்சனை, பூஜை செய்து வழிபடுதல். (சிவன் கோவில்).
● பெருமாள் கோவிலில் எழுந்தருளும் மகாலக்ஷ்மி தாயார் சந்நிதியில் வெள்ளிக்கிழமைகளில் அர்ச்சனை, பூஜை செய்தல்.
● வெண்மை நிற மலர்களால் அலங்கரித்தல், அர்ச்சனை செய்தல்.
● வெள்ளியில் மோதிரம் செய்து வைரமோ, ஜிர்கான் கல்லையோ பதித்து அணிந்து கொள்ளுதல்.
● சுக்கிர பகவான் எந்திர வடிவம் தூய வெள்ளியில் செய்து மார்பில் அணிந்துகொள்ளுதல்.
மேலும் கீழ்க்காணும் சுக்கிர பகவான் துதியையும் மனதாரப் பாராயணம் செய்து வரலாம்.
சுக்கிர ஸ்துதி
ஹிமகுந்த ம்ருணாலாபம்
தைத்யாநாம் பரமம் குரும்/
ஸர்வஸாஸ்த்ர ப்ரவக்தாரம்
பார்கவம், ப்ரணமாம்யஹம்//
மேற்கூறியவற்றை முறையாகத் தொடர்ந்து பின்பற்றி வந்தால் வாழ்வில் சங்கடங்கள் நாளாவட்டத்தில் விலகி, சந்தோஷமான, சுகபோக வாழ்க்கை அமையப்பெறும் என்பதே உண்மை.
செல்: 74485 89113