Advertisment

விருப்பஙகளையெல்லாம் ஈடேற்றும் ஸ்வப்ன வாராஹி வழிபாட்டு ரகசியம்! - கே. குமார சிவாச்சாரியார்

/idhalgal/balajothidam/swapna-warahi-worship-secret-k-kumara-sivacharya

திகாலை பிரம்ம முகூர்த்த காலத்தில் அனைவரது வீட்டு வாசற்படியிலும் விளக்கேற்றுகி றோமோ இல்லையோ- நாட்டில் நிகழ்கிற பணம் ஏமாற்றுதல், துரோகம் செய்தல், வஞ்சிப்போர்களுக்குள் ஏற்படும் வழக்குகளின் போக்கு என்ற அமங்கலச் செய்திகளைத் தாங்கும் தினசரிகள் வந்துவிடுகின்றன. சுபச்செய்திகள் ஒன்று அல்லது இரண்டுதான் வருகின்றன.

Advertisment

24 மணி நேரத்திற்குள் நிகழும் இடர்களை அகற்ற வழி என்னவென்று தேடுகிறார்கள் மக்கள். தேவி மகாத்மியம் என்ற சக்தி காவியத்தில் கண்ணுக்குத் தெரிகிறது- ஓர் உன்னதமான வழிபாட்டு முறையான அன்னை வாராஹி பூஜாக் கிரமம்.

வாராஹியை வணங்கலாமா?

varagi

குடும்பப் பெண்களும் இல்லற தர்மத்தில் இருப்பவர்களும் "வாராஹியைப் பூஜை செய்யலாமா? அவள் உக்ர தெய்வமாயிற்றே' என்று பயந்து ஒதுங்குகின்றனர். உண்மையில் வாராஹி தேவி உக்ர தேவதையல்ல. சாந்த குணமுள்ள குதிரை முகத்துடன் காட்சி தருபவள். ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் முதல் இருப்பிடமான பூபுரம் என்னும் மேருச்சக்கர பீடத்தில், நூறு தூண்கள் கொண்ட மரகதக் கோட்டையில், பொன்மய பீடமருகே வீற்றிருப்பதாக ஸ்ரீலலிதா உபாக்யானம் கூறுகிறது.

Advertisment

உலக உயிர்களைப் பற்றி சங்கேத மொழியில் ஸ்ரீலலிதா பரமேஸ்வரிக்கு எடுத்துக்கூறி புரியவைப்பவள் என்பதால், வாராஹி தேவி "சமய சங்கேதா' என்று பெயர் பெற்றாள். சண்ட முண்டர்களை அழிக்க காளிதேவி சாமுண்டி என்னும் பெயர் கொண்ட சமயத்தில் வாராஹி துணைக்குச் சென்றாள். இக்கருத்தை-

"யக்ஞ வராஹம் துலம் ரூபம் யாபிப்ரதோ ஹர:' என்று தேவி மகாத்மியம் தெளிவுறுத்துகிறது. அவள் வரும் காட்சியை-

"எங்கும் எரியக் கிரிகள்

பொடிபட எம்பகைஞர்

அங்கம் பிளந்திட விண்மண்

கிழிந்திட ஆர்த்தெழுந்து

பொங்கும் கடல்கள் சுவறிடச்

சூலத்தைப் போகவிட்டுச்

சிங்கத்தின்மீது வருவாள்

வாராஹி என் சிவசக்தியே!'

என்று, பகைவர், துரோகம் செய்வோர், ஏமாற்றுக்காரர்களை குலைநடுங்கச் செய்யுமென வர்ணிக்கிறது புகழ்ப் பாமாலை.

வரம் தரும் வாராஹி சக்திகள்

குதிரைப்படைகளின் தலைவியே அன்னை வாராஹி. இந்த சக்த

திகாலை பிரம்ம முகூர்த்த காலத்தில் அனைவரது வீட்டு வாசற்படியிலும் விளக்கேற்றுகி றோமோ இல்லையோ- நாட்டில் நிகழ்கிற பணம் ஏமாற்றுதல், துரோகம் செய்தல், வஞ்சிப்போர்களுக்குள் ஏற்படும் வழக்குகளின் போக்கு என்ற அமங்கலச் செய்திகளைத் தாங்கும் தினசரிகள் வந்துவிடுகின்றன. சுபச்செய்திகள் ஒன்று அல்லது இரண்டுதான் வருகின்றன.

Advertisment

24 மணி நேரத்திற்குள் நிகழும் இடர்களை அகற்ற வழி என்னவென்று தேடுகிறார்கள் மக்கள். தேவி மகாத்மியம் என்ற சக்தி காவியத்தில் கண்ணுக்குத் தெரிகிறது- ஓர் உன்னதமான வழிபாட்டு முறையான அன்னை வாராஹி பூஜாக் கிரமம்.

வாராஹியை வணங்கலாமா?

varagi

குடும்பப் பெண்களும் இல்லற தர்மத்தில் இருப்பவர்களும் "வாராஹியைப் பூஜை செய்யலாமா? அவள் உக்ர தெய்வமாயிற்றே' என்று பயந்து ஒதுங்குகின்றனர். உண்மையில் வாராஹி தேவி உக்ர தேவதையல்ல. சாந்த குணமுள்ள குதிரை முகத்துடன் காட்சி தருபவள். ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் முதல் இருப்பிடமான பூபுரம் என்னும் மேருச்சக்கர பீடத்தில், நூறு தூண்கள் கொண்ட மரகதக் கோட்டையில், பொன்மய பீடமருகே வீற்றிருப்பதாக ஸ்ரீலலிதா உபாக்யானம் கூறுகிறது.

Advertisment

உலக உயிர்களைப் பற்றி சங்கேத மொழியில் ஸ்ரீலலிதா பரமேஸ்வரிக்கு எடுத்துக்கூறி புரியவைப்பவள் என்பதால், வாராஹி தேவி "சமய சங்கேதா' என்று பெயர் பெற்றாள். சண்ட முண்டர்களை அழிக்க காளிதேவி சாமுண்டி என்னும் பெயர் கொண்ட சமயத்தில் வாராஹி துணைக்குச் சென்றாள். இக்கருத்தை-

"யக்ஞ வராஹம் துலம் ரூபம் யாபிப்ரதோ ஹர:' என்று தேவி மகாத்மியம் தெளிவுறுத்துகிறது. அவள் வரும் காட்சியை-

"எங்கும் எரியக் கிரிகள்

பொடிபட எம்பகைஞர்

அங்கம் பிளந்திட விண்மண்

கிழிந்திட ஆர்த்தெழுந்து

பொங்கும் கடல்கள் சுவறிடச்

சூலத்தைப் போகவிட்டுச்

சிங்கத்தின்மீது வருவாள்

வாராஹி என் சிவசக்தியே!'

என்று, பகைவர், துரோகம் செய்வோர், ஏமாற்றுக்காரர்களை குலைநடுங்கச் செய்யுமென வர்ணிக்கிறது புகழ்ப் பாமாலை.

வரம் தரும் வாராஹி சக்திகள்

குதிரைப்படைகளின் தலைவியே அன்னை வாராஹி. இந்த சக்தி எட்டு வகைகளில் உருவெடுத்து வருகிறாள்.

ஸ்வப்ன வாராஹி: கருமேகத்தின் நிறத்தோடு, மூன்று கண்கள், பன்றிமுகம், தலையில் சந்திர னைத் தாங்கியபடி, கைகளில் கத்தி, கேடயம், பாசம், அங்குசம் ஏந்தியவளாய், முகத்தில் புன்னகையோடு, மார்பில் அழகான ஆபரணங்கள் தவழ்ந்திட குதிரைமேல் ஆரோகணித்து வருகிறாள். நமது கனவில் வந்து தேவைகளையும் சந்தேகங்களையும் முன்னின்று தீர்க்கக்கூடியவள்.

தண்டநாத வாராஹி: எதிரிகளை அடக்கிட சாம, தான, பேத, தண்டம் என்னும் நான்கு வழிகளைக் கையாள்பவள். இவளைப் பணிந்து போற்றிவந்தால் எதிரிகளுக்கும், துஷ்ட ராய்த் திரிவோருக்கும் தண்டனை தந்து சரண டையச் செய்பவள்.

இதனால் தண்டநாதா எனப் பெயர் பெற்றாள். நம் செயல்களுக்கு உயிரூட்டம் தருபவள்.

தூம்ர வாராஹி: படைப்புக் காலத்திற்கும் பிரளய காலத்திற்கும் இடைப்பட்ட வெற்றிடத் திற்குரிய சக்தியே தூம்ர வாராஹி. கையில் முறம் ஏந்தி, காக்கைக் கொடி யோடு புகைவடிவாக வருபவள். காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம் ஆகிய துர்குணங்களை அகற்றி னால் காட்சி தருவாள்.

பிருஹத் வாராஹி: இந்த சக்தியின் மறுபெயர் வார்த்தாளி. "வார்த்த' என்ற பதத்திற்கு உடல் ஆரோக் கியம், நல்வாழ்க்கை என்று பொருள். பன்றி முகம், சிவந்த ஆடை, மூன்று கண்கள், நீலநிற தேகம் கொண்டு உலக்கை, கலப்பை தாங்கியவாறு அபய, வரதக் கைகளுடன் காட்சி தருபவள். கபால மாலையை அணிந்து பகைவரை அடக்க வருபவள். பூமியைக் காத்து, பயிர்களுக்குப் பசுமை நிறத்தை உண்டாக்கி அரவணைக்கும் தாயாவாள்.

அஸ்வாரூடா வாராஹி: ஸ்ரீலலிதாம் பிகையின் பாசக்கயிற்றிலிருந்து தோன்றி, வெற்றிக்குதிரையான "அபராஜிதா' என்னும் செங்குதிரையில் வருபவள். ஆயிரக்கணக்கான குதிரைகள் இவளைச் சுற்றி இருக்கும். மனிதர்களது ஐம்புலன்களை அடக்கி நெறிப் படுத்துபவளே அஸ்வாரூடா.

பஞ்சமி வாராஹி: சதாசிவம் என்ற பெயரில் பஞ்சப் பிரம்மாக்களில் ஐந்தாவதாகத் திகழும் சிவனின் தர்மபத்தினியே பஞ்சமி தேவி. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைச் செய்வதோடு, சாலோக்யம், சாமீப்யம், சாருப்யம், சாயுஜ்யம், கைவல்யம் ஆகிய ஐந்துவிதமான மோட்ச நிலைகளின் முடிவான கைவவ்ய நிலையை அருள்பவள். இந்த சக்தியை "ஜனகாத்மிகா' என்றும் கூறுவர்.

லகு வாராஹி: மகாபத்ம பீடத்தில் மகாவாராஹியுடன் சக்கர பாகத்தில் ஸ்வப்ன வாராஹி, பஞ்சமி, திரஸ்கரணி ஆகியோருடன் சேர்ந்திருப்பவள். ஏழு கடல்களையும் வசிப்பிடமாகக் கொண்ட இந்த சக்தி, எட்டுக் கைகளோடு, கேடயம், பாசம், கத்தி, அரிவாள், சங்கு, சக்கரம், அபய, வரதக்கைகளுடன் காட்சி தருபவள். மிகப்பெரிய கொம்புகளுடன், வராக முகத்துடன் விளங்கும் இவள் உன்மத்த பைரவி என்ற பெயரோடு, வணங்குபவர்களது செயல்களை எளிதில் முடித்துத் தந்து அருள்செய்பவள்.

ஆதி வாராஹி: ஒருகாலத்தில் ஹிரண்யாட்சன் என்ற அரக்கன் பூமியைப் பாய் போன்று சுருட்டி கடலுக்கடியில் மறைத்துவைத்தான். இதைக் கண்ணுற்ற மகாவிஷ்ணு வராஹ வடிவம் எடுத்து பூமியை மீட்டுவந்தார். அந்த நேரத்தில் ஸ்ரீமகாவாராஹி அவருக்குத் துணைநின்றாள். மகாவிஷ்ணுவின் வராக அவதாரத்திற்கு உந்துசக்தியாக விளங்கி பூவுலகத்தைத் தன்னுடைய மூக்கின் நுனியில் சுமந்தபடி மேலே கொண்டுவந்த சக்திதான் வாராஹி தேவி. இவளே ஆதிவாராஹி என்று அழைக்கப்படுகிறாள்.

வீடுகளில் அஷ்டமங்கலங்களை வைத்துப் பூஜை செய்தால் நம் கஷ்டங்கள் விலகும் என்பது சாஸ்திரம். அதேபோல் வாராஹியின் எட்டு வகை வடிவங்களை மனதில் எண்ணி தியானித்து வழிபடுவதால் இடர்கள் தரும் எதிரிகள் விலகிப்போய், சுபிட்சம் கூடும். தஞ்சையை ஆட்சி புரிந்த ராஜராஜசோழன் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியபோது மேற்கு மூலையில் வாராஹி தேவியை பிரதிட்டை செய்து, போருக்குச் செல்லும்முன் "வெற்றி தருக' என்று வழிபட்டுச் சென்றுள்ளான் என்பது கல்வெட்டு கூறும் செய்தி. இந்த சக்தியை சில துன்மார்க்கர்கள் பயன்படுத்த எண்ணி, உக்ர தெய்வப் பூஜைக்கான பிரயோக விதிகளையும் சேர்த்து வெளியிட்டு, முடிவில் வெற்றியடைய முடியாமல் சிதறிப் போனார்கள் என்பது கடந்த முப்பது ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள்.

மதியும் நிதியும் நிறைக்கும் மகா வாராஹி பூஜை

அமைதியான சக்தியான இவளை இடைவிடாமல் வழிபடுபவர்களுக்கு நுட்பமான அறிவைக் கொடுப்பாள். கனவில் வந்து நல்ல செய்திகளைக் கூறுவாள். தண்ணீர் மூலம் பத்மநிதியும், பூமியின் வழியாக சங்க நிதியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தோஷங்கள், சங்கடங்கள் விலகும்.

எட்டுவகை வாராஹி சக்திகளில், ஸ்வப்ன வாராஹி பூஜையால் நமக்கு வருகிற யோக வாழ்க்கையைக் கனவில் கண்டு மகிழலாம். அதன்பிறகு ஆறு மாதங்களில் பலனும் வந்துசேரும். "ஸ்வப்னம்' என்பது- நாம் விழித்திருப்பதற்கும் (ஜாக்ரதா), உறங்குவதற்கும் (நித்ரா) இடைப்பட்ட நிலையைக் குறிக்கும். இதை ஒரு அரைத்தூக்கம் என்றும் சொல்லலாம். கனவுகளில் நாம் சிலசமயம் எதிர்காலத்தில் நடப்பதை அப்படியே காண்போம். சில கனவுகள் பகலில் குறிப்புகளை உணர்த்தும்.

தந்திர நூல்களிலும் கனவுகளுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளன. கனவில் ஒரு மந்திரம் கிடைத்தால் அது பலன் தரவேண்டுமென சிவனை பிரார்த்தனை செய்வது வழக்கமாக இருந்தது.

மனோதத்துவ மருத்துவரான ப்ராய்டு (எழ்ர்ண்க்) கனவுகளை ஆராய்ச்சி செய்து, ஒரு மனிதனின் கனவை ஆராய்ந்தால் அவன் மனநலம் எந்த நினைவில் கெடுகிறது என்றும், அதற்குத் தீர்வு தரமுடியும் என்றும் விளக்கினார்.

வழிபடும் விதி

பஞ்சமி, அஷ்டமி, நவமி, பௌர்ணமி தினங்களில் பஞ்சாங்கப்படி தோஷங்களற்ற நாளாகத் தேர்ந்தெடுத்து, சுப ஹோரையில் 3 ஷ் 3 அளவில் தாமிரத்தகட்டில் கோணங்கள் மாறாமல், தரப்பட்டுள்ள எந்திர வடிவத்தை ஓட்டை விழாமல் வரைந்துகொண்டு, பதினாறு வகை உபசார பூஜைகளை நடத்தவேண்டும். நெய் தீபங்களை இருபுறமும் ஏற்றிவைத்து, வாசனை மலர்களாலும் குங்குமத்தாலும் அம்பிகையின் 108 அஷ்டோத்திர அர்ச்சனையைச் செய்யவேண்டும். செந்தாமரை அன்னைக்கு மிகப்பிடித்தமான மலர்களுள் ஒன்று. நாள், நட்சத்திரம் தொடர்பாக குழப்பமடையாமல், ஒரு வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்குத் தொடங்கி, அடுத்துவரும் ஒன்பது வெள்ளிக்கிழமைகளில் செய்தும் பலன் பெறலாம். சர்க்கரை அன்னம், செவ்வாழை, இளநீர், பசுவின் பால், தேங்காய், பழம் நிவேதனம் செய்து, ஆத்மப்பிரதட்சணம், நமஸ்காரம் செய்து பிரார்த்திக்கலாம்.

பூஜை முடிந்ததும் மேற்குமுகமாக மனைப் பலகையில் அமர்ந்து-

"ஓம் ஐம் க்லௌம் லம் ஐம்

நமோ பகவதி வார்த்தானி வராஹி

தேவதே வராஹ முகீ ஐம்

க்லௌம் டட ஸ்வாஹா'

என்னும் மூலமந்திரத்தை உபதேசக்ரமம் பெற்று ஜெபிக்க வேண்டும். அட்சர பேதம் வருமென்று நினைப்பவர்கள்-

"ஓம் ஹ்ரீம் நமோ வராஹி அகோரே

ஸ்வப்னம் தர்சய டட ஸ்வாஹா'

என்று எளிமையான மூலமந்திரத்தை ஜெபிக்கலாம். இரவு நேரத்தில் இந்த ஜெபத்தைச் செய்து 48 தினங்கள் விரதமிருந்தால் கனவுகளில் பலன் கிட்டுவது தெரியும் என்றும்; அம்பிகை காட்சி தருவாள் என்றும் தேவியை உபாசனை செய்து வெற்றிபெற்ற சாதகர்கள் தெரிவித்தனர்.

வரங்களைத் தரும் வாராஹி மாலை

மாந்த்ரீக முறையைக் கையிலெடுத்து ஸ்ரீவாராஹி தேவியை வழிபடுவதால் பட்டம், பதவி, வாழ்வில் உயர்ந்த அந்தஸ்து, பணப்புழக்கம், எதிரிகள் அகலுதல் ஆகிய எல்லா சுபப்பலன்களும் முதலில் கனவில் வந்து, பின் நிஜ வாழ்க்கையிலும் வரும். ஆனால் குறுகிய காலங்களில் கைவிட்டுப் போய்விடும். அதேசமயம் குரு மூலமாக எந்திர உத்தாரணம் செய்து, வேத மந்திர விதிப்படி வணங்கி உபாசனா கிரமம் ஏற்றால், வந்த வசதிகளும் வாய்ப்புகளும் வாழ்நாள் முழுவதும் நீடித்து நிற்கும். ராமநாதபுரம் சமஸ்தான வித்வான் ஸ்ரீகவிராஜ பண்டிதர் தான் அனுபவித்துப் பாடிய வாராஹி மாலை, தேவியைப் பற்றிய சக்தி வாய்ந்த 32 தமிழ்ப்பாடலாக விளங்கு கிறது. பாராயணம் செய்தால் அன்னையை தரிசிக்கலாம். அதிலிருந்து இரண்டு துதிகள் இங்கே- படித்துப் பிரார்த்திப்பதற்காக.

"சிந்தை தெளிந்துனை

வாழ்த்திப் பணிந்து தினம் துதித்தே

அந்தி பகல் உன்னை அர்ச்சித்த

பேரை அசங்கியமாய்

நிந்தனை பண்ணி மதியாத

உலுத்தர் நிணம் அருந்திப்

புந்தி மகிழ்ந்து வருவாய்

வராஹி நற் பொற்கொடியே.

தாமக்குழலும் குழையும் பொன்

ஓலையும் தாமரைப் பூஞ்

சேமக்குழலும் துதிக்க

வந்தோர்க்கு ஜெகம் அதனில்

வாமக்கரளக் களத்தம்மை

ஆதிவாராஹி வந்து

தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு

கொள்வாள் சிவசக்தியே!'

செல்: 91765 39026

bala100120
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe