கௌலவம்
கௌலவ கரணத்தில் பிறந்த வர்கள் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இயல்பிலேயே ஒழுக்கம் நிறைந்த வர்களாகவும் இருப் பார்கள்.
அதி தேவதை- சூரியன்
மிருகம்- பன்றி
கிரகம்- சனி
மலர்- மகிழம்பூ
தெய்வம்- வராகர்- வராகி
கிழமை- செவ்வாய்
பூமியைக் குறிக்கும் தெய்வம்
செவ்வாயின் தெய்வமான முருகன், பூமியோடு தொடர்புடைய ஸ்ரீ பூவராக மூர்த்தி, ஸ்ரீ பூவராகப் பெருமாள், ஸ்ரீ வாராஹி அம்மன் போன்ற தெய்வங்களை குறிக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/surya_63.jpg)
இவர்களுக்கு அரசு ஒப்பந்தவகையில் நல்ல வருமானங்கள் இருக்கும். இந்தக் கரணத்தில் பிறந்தவர்கள் சிந்தனைகள் குறைவு, செயல்பாடுகள் அதிகமாகும். பூமிக்கு அடியில் செயல்படக்கூடிய வேலைகள் இவர்களுக்கு சிறப்பாக இருக்கும். நிலக்கரி சுரங்கம், தங்கச் சுரங்கம், பூமியில் போர் போடுதல், கிணறு வெட்டுதல், மண் தோண்டுதல், இயந்திரங்களை இயக்கும் வாகனப் பணியாளர்கள், நிலத்தடியில் பணிபுரியும் தன்மைகளைக் கொண்டவர்களாகவும் அதன்மூலம் சிறந்த வாழ்வையும் பெறுகிறார்கள்.
ஜாதகத்தில் ஒருவருக்கு தோஷம் இருந்தாலும் தோஷம் பெற்ற வீட்டை கரணநாதன் சுபநிலையில் இருந்து பார்த்தால் அந்த ஜாதகருக்கு கர்மாவினால் ஏற்படும் தோஷம் குறையும் என்பது விதி. அதுவே அசுப நிலையில் இருந்தால் பலன் பெறுவது கொஞ்சம் கடினம்தான். கரணத்தைக்கொண்டு திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டும். சுபகரணத்தில் திருமண வாழ்க்கை துவங்குவது நன்று. இதனால் தம்பதிகள் இடையே ஒற்றுமைகள் பெருகும். அசுபகரணத்தில் வாழ்க்கை யைத் துவங்கக்கூடாது. ஒருவருக்கு குழந்தை பாக்கியம் இல்லையென்றா லும் சுப நிலையில் உள்ள கரணநாதரின் பார்வை பெற்றால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
இக்கரணத்தில் பிறந்தவர்கள் ஒருசிலர் தங்களின் சுயநலம் காரணமாக இரக்கமற்றவர்களாகவும், பிறருக்கு துன்பம் விளைவிப்பவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களிடம் அவப்பெயரை சம்பாதிப்பார்கள். இதன்காரணமாக தங்கள் வாழ்வில் இவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.
இந்தக் கரணத்தில் பிறந்தவர்கள் நல்ல வேலை வாங்க கூடியவர்களாகவும் இவர்களும் நன்கு வேலை செய்பவர்களாகவும் இருப்பார்கள். எந்த ஒரு காரியத்தையும் இந்தக் கரணத்தினர் துணிந்து செய்யலாம்.
அரசு சம்பந்தப்பட்ட துறையில் வெற்றிபெற்று பலன்கள் அடைய ஸ்ரீ முஷ்ணம் என்ற ஊரில் இருக்கும் பூவராகப் பெருமாளை வழிபட்டுவர அரசாங்கத்தினால், அரசியலில் நன்மைகள் அடையலாம். மன அமைதி கிடைக்கும். அரசாங்க பணியாளர்களாக இருப்பவர்கள் வழிபட்டுவந்தால் மேலும் உயர்பதவிகளையும் பாராட்டுகளையும் பெருமையும் அடைவார்கள்.
இவர்கள் நல்ல ஆச்சாரமுடையவர்கள். தாய்- தந்தைமீது பற்றுதல் உள்ளவர்கள். பெற்றோர் களைவிட அதிகமாக நிலபுலன்கள் சொத்துக்கள் சம்பாதிப்பார்கள். நல்ல அற்புதமான வாகன வசதிகளை உடையவர்கள்.
இவர்கள் வழிபடும் தெய்வத்தை குங்குமம் இட்டு வில்வப் பொடியை செம்பு பாத்திரத்தில் கலந்து, அவ்வில்வ பொடியினால் அபிஷேகம் செய்து, கண்டாங்கி துணிகொண்டு அலங்கரித்து, வெள்ளி மாலை அணிவித்து பணியார படையல் வைத்து மகிழப் பூக்களால் அர்ச்சித்து வழிபட்டுவர தெய்வம் மனம் குளிர்ந்து கரணநாதன் பூரண பலம் அடைகிறது. கரணநாதருக்கு பணியார படையல் வைத்து வழிபாடு செய்துவிட்டு அதை நீங்களும் சாப்பிட்டு விட்டு ஒரு காரியத்திற்காக வெளியே சென்றால் அதில் நீங்கள் வெற்றியடையலாம். கரணநாதனின் உணவு, மூலிகைகள், வாசனை திரவியங்கள் போன்றவற்றை நாம் பயன்படுத்தி வரும்பொழுது காரிய சித்தி உண்டாகும். உங்களுக்கு நீண்டகாலமாக தடைபட்டுக் கொண்டிருந்த காரியங்கள் கரணநாதனின் அனுக்கிரகத்தினால் சிறப்பாக- சாதாரணமாக நடக்கிறது.
உங்களுடைய கரணநாதனின் மிருகத்திற்கு எந்தவித தீங்கும் விளைவிக்ககூடாது. உங்களால் முடிந்தால் அதற்கு உணவு கொடுப்பது நல்லது. தினமும் உங்களுடைய அதிதேவதையான சூரிய பகவானை காலையில் சூரிய நமஸ்காரம் செய்வதும் சிறப்பான பலனைத் தரும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-04/surya-t.jpg)