ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கைக்கு அடிப்படையாக இருப்பது வருமானம் மட்டும்தான்! அதிலும் இக்காலத்தில் வருவாய் இல்லையென்றால் வாழ்க்கையே கேள்விக்குறிதான்!
இதை அனுபவப் பூர்வமாகத் தெரிந்தவர்கள்தான், "பணம் பந்தியிலே குணம் குப்பையிலே' என்று பாடியும் வைத்தனர். இதற்கும் ஒருபடி மேலே சென்று, "காசில்லாதவன் கடவுளே ஆனாலும் கதவை சாத்து' என்று ஒரு குலத்தின் வாக்கியமாக வெளிப்பட்டது.
ஒரு குடும்பம் என்றால் அக் குடும்பத் தலைவனின் பொறுப்பு, அவன் குடும்பத்தை முழுமையாகப் பாதுகாப்பதாகத்தான் இருக்கும். அதற்கு அவனிடம் பணம் இருந்தால்தான் முடியும். வருமானம் இல்லாதவரை மனைவி மட்டுமல்ல; குழந்தைகள்கூட மதிப்பதில்லை.
அதன் காரணமாகத்தான் ஒவ்வொரு வரும் வருமானத்திற்காக ஓடிக் கொண்டுள்ளனர்.
ஒருசிலருக்கு அரசு வேலைக் கிடைக்கிறது. ஒருசிலர் தனியார் நிறுவனங்களில் ஐக்கியமாகி விடுகின்றனர்.
இந்த இரண்டு தரப்பினருக்கும் அப்பாற்பட்டு இருப்பவர்கள் சுயமாகத் தொழில்செய்து அதன்வழியாக சம்பாதிக்க வேண்டும். வசதி வாய்ப்புகளை அதிகரித்துக்கொண்டு செல்வம், செல்வாக்கோடு வாழவேண்டுமென்று நினைக்கின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் தொழில் துறை நன்றாகவே வளர்ச்சியடைந்து வருகிறது.
தங்கள் அறிவாற்றலால், புதுப்புது யுக்திகளால் ஒருசிலர் சாதாரண நிலையி-ருந்து தொழிலதிபர்களாக உச்சம் தொட்டும் வருகிறார்கள். ஒற்றை மனிதராக இருந்து மிகப்பெரிய அளவில் ஒரு நிறுவனத்தை நடத்திக்கொண்டு வருபவர் களும் இருக்கின்றனர்.
ஒருசிலர், சிறிய அளவில் தொழிற்கூடங்கள் வைத்து, குறைந்த நபர்களைக் கொண்டு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆரம்ப கால கட்டத்தில் இருந்து கடைசி வரை வேலைக்கு மட்டுமே செல்லக்கூடியவர்களாக இருக்கின்றனர்.
நம்முடைய மண்ணில் தொழில்கள் என்று பார்க்கும்போது நிறையவே இருக்கின்றன. ஆனால் தொழில் யோகம் என்பது எல்லாருக்கும் இருக்குமா என்றால் கேள்விக்குறிதான். ஆர்வத்துடன் தொழில் துறையில் கால் பதித்த பலர் தொழிலுக்கு மூடுவிழா செய்துவிட்டு இடையிலேயே காணாமலும் போய்விடுகின்றனர்.
சிலர் தொழிலை மிகவும் கஷ்டப்பட்டு செய்யவேண்டியதாக இருக்கும். கடுமையாகப் போராடவேண்டியதாக இருக்கும். அப்படியும் சில நேரங்களில் மட்டுமே லாபத்தைப் பெறமுடியும்.
நம் ஜாதகத்தில் எந்தவிதமான அமைப்புகள் இருந்தால் எந்தவிதமான பலன்கள் கிடைக்கும்? நம்மால் வெற்றியடைய முடியும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்...
சொந்தத் தொழில் செய்யும் ஜாதக அமைப்பு
ஒருவருடைய ஜாதகத்தில் சனி+சந்திரன் தொடர்பு உண்டாகும்போது சுயதொழில் செய்யும் எண்ணம் ஏற்படும். அடுத்து, பத்தாம் இடம் அல்லது பத்தாம் அதிபதிக்கு சனிபகவான் தொடர்பு உண்டானவர்களும் சொந்தத் தொழில் செய்யலாம். லக்னம் அல்லது பலம்பெற்ற லக்னாதிபதியுடன் சனி அல்லது பத்தாம் அதிபதி தொடர்பு பெறும்பொழுதும் சொந்தத் தொழில் செய்யும் நிலை உருவாகும்.
பத்தாம் அதிபதி ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் பெற்று சுப கிரகங்களின் பார்வைகள் கொண்ட ராசிக்காரர்களுக்கும் சுயதொழில் என்பது சிறப்பானதாக இருக்கும்.
சொந்தத் தொழில் சிறப்பாக இருக்கும் அமைப்பு
ஒவ்வொரு தொழிலும் வாடிக்கை யாளர்களையே மையமாகக் கொண்டுள்ளது. அத்தகைய வாடிக்கையாளர்களைக் குறிக்கக் கூடியது ஏழாம் பாவமாகும். அந்த ஏழாம் பாவம் அவருடைய ஜாதகத்தில் கெடாமல் இருக்கவேண்டும்.
ஒருவருடைய ஜாதகத்தில் சனி + குரு தொடர்பு உண்டாகும்போது தொழி-ல் சிறப்பான பலனை அடையலாம்.
ஒன்பதாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் தொடர்பு பெறும் ஜாதகர்களுக்கும் சுயதொழில் சிறப்பாகும்.
பொதுவாக ஜாதகத்தில் லக்னாதி பதி வலுவாக இருக்கவேண்டும் அப்பொழுதுதான் தொழி-ல் எந்தவிதமான பிரச்சினைகள் வந்தாலும்- போட்டிகள் ஏற்பட்டாலும் அவற்றையெல்லாம் சமாளித்திடக்கூடிய சாமர்த்தியம் இருக்கும்.
ஜாதகத்தில் 2, 6, 11-ஆம் அதிபதிகளின் தொடர்பு உண்டானவர்களுக்கு தொழில் விருத்தியாகும். லாபம் அதிகரிக்கும். நன்மைகள் உண்டாகும்.
சொந்தத் தொழில் செய்வதில் பாதிப்பு
ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12-ல் சந்திரன் இருப்பவர்களுக்கும், லக்னத்திற்கு 6, 8, 12-ஆம் பாவகங்களில் சனி பகவான் மறைவு பெற்றவர்களுக்கும், லக்னாதிபதி நீசம் அடைந்திருப்பவர் களுக்கும், பத்தாம் அதிபதி நீசம், அஸ்தங் கம் அடைந்தவர்களுக்கும், பத்தாம் அதிபதி யுடன் ராகு அல்லது கேது சேர்க்கைப் பெற்றவர்களுக்கும் சுயதொழில் என்பது போராட்டமாக இருக்கும்.
பத்தாம் அதிபதியுடனும், சனியுடனும் ராகு- கேது தொடர்பு பெறும்பொழுது ராகு, கேதுவின் காரகத்துவமுள்ள தொழில்களைச் செய்யும்பொழுது பெரிய அளவில் பாதிப்பைத் தருவதில்லை.
அதிக பாகை பெற்றுள்ள கிரகத்தின் காரகத்துவமுள்ள தொழிலைச் செய்யும்பொழுது உழைப்பு குறைவாக, லாபம் அதிகமாக இருக்கும். குறைந்த பாகை பெற்றுள்ள கிரகத்தின் காரகத்துவமுள்ள தொழிலைச் செய்யும்பொழுது அதில் அதிக அளவு உழைப்பும் குறைந்த லாபத்தையும்தான் பெறமுடியும்.
புதன் வக்ரம் பெற்றால் தொழி-ல் சரியான திட்டமிடல் இருக்காது. அதனால், சரியான திட்டமிடுபவருடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்யவேண்டும். சனிபகவான் வக்ரம் பெற்றால் அவர் பல தொழில்களைச் செய்து அனுபவம் பெற்றிருப்பார்.
ஆனால் அதற்குரிய அங்கீகாரம் அவருக்குக் கிடைக்காது.
வேலைக்குச் செல்லும் அமைப்பு யாருக்கெல்லாம்?
2, 6, 10-ஆம் அதிபதிகளுடன் தொடர்பு பெற்றவர்கள் வேலைக்குச் சென்று வருமானம் காண்பார்கள்.
லக்னாதிபதியும், ஆறாம் அதிபதியும், பத்தாம் அதிபதியும் தொடர்புகொள்ளும் ஜாதகர்களும் வேலைக்குச் செல்லவே விரும்புவார்கள். ஆறாம் இடம், பத்தாம் இடத்துடன் தொடர்பு கொள்ளும் பொழுது சர்வீஸ் தொடர்பான வேலைகளைச் செய்வார்கள். பத்தாம் அதிபதி, மூன்றாம் அதிபதியுடன் தொடர்பு கொள்ளும்பொழுது தொலைதொடர்பு, தகவல் தொடர்பு போன்ற வேலைகளைச் செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள்.
எந்த வேலையும் சரியாக அமையாத அமைப்பு
ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12-ல் சந்திரன் மறையும்பொழுது அவருக்கு எந்தவொரு தொழிலுமே திருப்தியாக இருக்காது.
பத்தாம் அதிபதியும் சனிபகவானும் நீசமடைவது, அஸ்தமனம் அடைவது, பாவ கிரகங்களினால் பார்க்கப்படுவது போன்ற அமைப்புள்ள ஜாதகர் ஒரு தொழி-ல் நிரந்தரமாக இருக்கமுடியாமல் போகும்.
பத்தாம் அதிபதியும், சனிபகவானும் வக்ரம் அடையும்போது அவர் எந்தவொரு தொழிலையும் நிலையாகச் செய்யாமல் பல்வேறு தொழில்களைச் செய்யக்கூடிய நிலை ஏற்படும். அவர்கள் எந்தவொரு இடத்திலும் நிரந்தரமாக வேலை செய்பவர் களாக இருக்கமாட்டார்கள்.
இத்தகைய நிலைகளை நாம் அறிந்துகொண்டாலே சுயதொழில் செய்யலாமா? எந்தவிதமான தொழில் செய்யலாம் அல்லது சம்பளத்திற்கு வேலைக்குச் செல்லலாமா என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள முடியும்.
செல்: 9080273877