ஒருவருடைய ஜாதகத்தில் தோஷம் ஏற்படக் காரணம் பிறருடைய கோபமும், சாபமுமே. தோஷங்களே மனிதப் பிறப்பிற்குக் காரணமாக அமைகின்றன. தோஷங்கள் இல்லை என்றால் பிறப்பு இல்லை. பல ஜென்மங்களில் ஒருவர் செய்த பாவம், புண்ணியம் ஆகியவற்றின் ஆடிட்டிங் தீர்ப்புதான் இந்தப் பிறப்பு. அந்தத் தீர்ப்பை உலகிற்கு வழங்கும் நீதிபதியே சனி பகவான்.
மனிதன் இப்பிறவியில் அனுபவிப்பதெல்லாம் அவனுடைய கர்மப் பலன்களேயாகும். இந்த கர்மப் பலன்களைக் கொடுக்கும் கிரகம் கர்மகாரகன் சனி. சனியின் பிரதிநிதிகளே ராகு, கேது எனும் வினையூக்கிகள்.
மகா சக்தி படைத்த கர்மகாரகன் சனி மிகப்பெரிய கிரகம். தன் நிலையிலிருந்து வழுவாமல் பாரபட்சமின்றி தீர்ப்பை வழங்கு கிறது என்பதால்தான், துலாபாரத்தை ராசிச் சின்னமாகக்கொண்ட துலா ராசியில், சுவாதி நட்சத்திரத்தில் சனி பகவான் உச்சம் பெறுகிறார். சனி அசுபகிரகம் என்பதால், சனி உச்சம்பெறுவது வரமா? சாபமா என்னும் சந்தேகம் பலருக்கும் இருந்துகொண்டே இருக்கிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
பொதுவாக, ஜோதிடரீதியாக ஒரு ஜாதகத்தைப் பார்த்தவுடன் ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்கள் வலிமை பெற்றவை என்னும் கருத்து பலரிடம் நிலவிவருகிறது. அந்தவகையில், உச்சம்பெற்ற சனி மனித வாழ்வில் பலவிதமான தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. பலருக்கு திருமணத்தை நடத்தி கர்மவினை பாடத்தைப் புகட்டு கிறார். ஏன்? சிலருக்கு திருமணத்தையே நடத்தித் தராமல் சந்நியாச நிலைக்குத் தள்ளுகிறது. மிகக்குறிப்ப
ஒருவருடைய ஜாதகத்தில் தோஷம் ஏற்படக் காரணம் பிறருடைய கோபமும், சாபமுமே. தோஷங்களே மனிதப் பிறப்பிற்குக் காரணமாக அமைகின்றன. தோஷங்கள் இல்லை என்றால் பிறப்பு இல்லை. பல ஜென்மங்களில் ஒருவர் செய்த பாவம், புண்ணியம் ஆகியவற்றின் ஆடிட்டிங் தீர்ப்புதான் இந்தப் பிறப்பு. அந்தத் தீர்ப்பை உலகிற்கு வழங்கும் நீதிபதியே சனி பகவான்.
மனிதன் இப்பிறவியில் அனுபவிப்பதெல்லாம் அவனுடைய கர்மப் பலன்களேயாகும். இந்த கர்மப் பலன்களைக் கொடுக்கும் கிரகம் கர்மகாரகன் சனி. சனியின் பிரதிநிதிகளே ராகு, கேது எனும் வினையூக்கிகள்.
மகா சக்தி படைத்த கர்மகாரகன் சனி மிகப்பெரிய கிரகம். தன் நிலையிலிருந்து வழுவாமல் பாரபட்சமின்றி தீர்ப்பை வழங்கு கிறது என்பதால்தான், துலாபாரத்தை ராசிச் சின்னமாகக்கொண்ட துலா ராசியில், சுவாதி நட்சத்திரத்தில் சனி பகவான் உச்சம் பெறுகிறார். சனி அசுபகிரகம் என்பதால், சனி உச்சம்பெறுவது வரமா? சாபமா என்னும் சந்தேகம் பலருக்கும் இருந்துகொண்டே இருக்கிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
பொதுவாக, ஜோதிடரீதியாக ஒரு ஜாதகத்தைப் பார்த்தவுடன் ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்கள் வலிமை பெற்றவை என்னும் கருத்து பலரிடம் நிலவிவருகிறது. அந்தவகையில், உச்சம்பெற்ற சனி மனித வாழ்வில் பலவிதமான தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. பலருக்கு திருமணத்தை நடத்தி கர்மவினை பாடத்தைப் புகட்டு கிறார். ஏன்? சிலருக்கு திருமணத்தையே நடத்தித் தராமல் சந்நியாச நிலைக்குத் தள்ளுகிறது. மிகக்குறிப்பாக, 1982 அக்டோபர் முதல் 1985 செப்டம்பர் வரை ஏறத்தாழ மூன்றாண்டுக்காலம் சனி உச்சம் பெற்ற காலகட்டத்தில் பிறந்தவர்களில் பலர் திருமணத்தடையால் பாதிப் படைந்துள்ளனர். ஜோதிட ஆலோச னைக்காக என்னை அணுகியவர்களின் ஜாதக ஆய்வே இந்தக் கட்டுரை.
இந்த காலகட்டத்தில் ஜூன் 1985 முதல், செப்டம்பர் 1985-ல் கேதுவும் சனியுடன் இணைந்தது வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்களில் பலர் திருமணமே நடக் காமல் இருக்கிறார்கள். ஒரு ஜாதகத்தின் பலனை நிர்ணயம் செய்யும்போது, கால புருஷ தத்துவ அமைப்புப்படி, கிரகங்கள் நின்ற வீட்டின் பலனையும் சேர்த்தறியும் போது மட்டுமே கிரகத்தின் பலம், பலவீனத்தைத் துல்லியமாக அறியமுடியும். காலபுருஷனுக்கு 7-ஆம் வீட்டில் உச்சம்பெறும் சனி பகவான் காலபுருஷ 11-ஆம் அதிபதி என்பதால் இருதார யோக அமைப்பைத் தந்துவிடுவார். ஒருசிலருக்கு சொந்த ஊருக்கு வெளியே சொல்லமுடியாத குடும்பத்தைத் தந்து சந்நியாசிபோல் நடிக்கவைக்கிறார்.
காலபுருஷ 7-ஆம் வீடான துலாத்தில் சனி இருப்பதே தோஷம் எனும்போது, கேதுவும் இணையும்போது ஒரு தாரம்கூட இல்லாமல் செய்துவிடுகிறது. பொதுவாக, சனி- கேது இணைவு எந்த பாவகத்தில் இருக்கிறதோ அந்த பாவகப் பலனைச் சுருக்கிவிடும். இது கர்மதோஷம் இருப்பதை சுட்டிக்காட்டும் கிரகச் சேர்க்கை. உச்சம்பெற்ற சனியுடன் இணையும் கேது திருமணத்தையே நடக்க விடுவதில்லை. அத்துடன் எதைச் செய்தாலும் தவறாகவே முடியும்.
கடுமையான தொழில் தடையை ஏற்படுத்தும். வாழ்வில் எவ்வளவு உயரமாகச் சென்றாலும் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். ஆயுள் தோஷத்தைக்கூட ஏற்படுத்தும். பூர்வீ கத்தைவிட்டு வெளியேற்றும். சொந்த ஊரில், பூர்வீக ஊரில், பூர்வீக சொத்தில் குடியிருக்க விடாது. குலதெய்வ அனுக்கிரகம் இருக்காது.
சம்பளமில்லாமல் வேலைசெய்யும் நிலை அல்லது மிகவும் அடிமைத்தனமான வேலை செய்யும் நிலை, குறைந்த ஊதியத்தைப் பெறுதல் என்ற நிலையை ஏற்படுத்தும். நன்கு படித்திருந் தாலும் தன் தகுதிக்கு சம்பந்தமில்லாத, தகுதிக் குறைவான இடத்தில், குறைவான சம்பளத்தில் வேலை செய்யும் சூழ்நிலை ஏற்படும். சட்டத் திற்குப் புறம்பான அல்லது சட்டத்திற்கு உட்படாத வேலை, தொழில் செய்பவர்களுக்கு இந்த கிரகச்சேர்க்கை இருக்கும். இந்த கிரகச் சேர்க்கை உள்ளவர்கள் அதிக முதலீடுசெய்து தொழில் செய்யாமலிருப்பது நல்லது. முதலீடு செய்யும்போது தொழிலில் எட்டமுடியாத பிரம் மாண்ட வளர்ச்சியைக் கொடுத்து மீளமுடியாத திடீர் வீழ்ச்சி, இழப்பையும் தரும்.
ஒருசிலருக்கு 40 வயதாகியும்கூட சொல்லிக் கொள்ளும்படியான வேலையில்லாமலும், சூதாட்டம், திருட்டு என வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையையும் ஏற்படுத்தும். நல்ல திறமை இருந்தும் சரியாக சம்பாதிக்காமல், வருமானம் இல்லாமல் இருப்பார்கள்.
இத்தகைய ஜாதக அமைப்புள்ளவர்களுக்கு அடிமைத்தொழிலே சிறப்பு. பூர்வீக சொத்தில் இருக்கக்கூடாது. பூர்வீக சொத்து இல்லாமல் இருப்பது நல்லது. யாரையும் மதிக்காமல் சுதந் திரமாக செயல்படக்கூடியவராக இருப்பார்.
விதிக்கு கட்டுப்பட்டு இந்த கிரகச்சேர்க்கை செயல்படுவதால், இவர்கள் வாழ்வில் எந்த விதத்திலும் சிறப்படைவதில்லை.
சனி, கேதுவினால் ஏற்படும் பலன்களைக் காண்போம்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
சச மகாயோகம்
சனிபகவான் லக்னம் அல்லது சந்திரனுக்கு கேந்திரத்தில் ஆட்சி, உச்சம் பெற்றால் இந்த யோகம் உண்டாகும். இந்த யோகம் உள்ளவர்கள் நல்ல செல்வாக்கு மிக்கவராகவும், பூரண ஆயுள் கொண்டவராகவும், சமுதாயத்தில் நல்ல பேரும் புகழும் கொண்டவராகவும் இருப்பர். இவரால் மற்றவர்களுக்கு நற்பலனும் கிடைக்கும். அரசியலில் உச்ச நிலைக்குச் செல்வதற்கு இந்த யோகம் அடிப்படையாக இருக்கவேண்டும். அதேபோல் ஒரு நாட்டிற்கே தலைவனாக வேண்டுமென்றால், இந்த யோகம் அடிப்படையில் பலமாக இருக்கவேண்டும். இந்த யோகம் உள்ளவர்களுக்கு அரசாங்கத்தில் உயர்பதவி மற்றும் அரசாங்கத்தால் அனுகூலப் பலன் உண்டு. இந்த யோகம் வளர்பிறைச் சந்திரனுக்கு கேந்திரத்தில் அமைந்தால், சனிதசையில் இந்த யோகம் சிறப்பான பலனை ஏற்படுத்தித் தரும்; சனியால் நிச்சயம் சிறப்பான பலன் உண்டு. இந்த யோகம் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய லக்னங்களுக்கு முழுப்பலனையும்; தனுசு, மீனம் ஆகிய லக்னங்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு பலனும்; மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம் ஆகிய லக்னங் களுக்கு சனி, சந்திரனின் யோகத்தின் பலம் மற்றும் தன்மைக்கேற்ப பலனையும் செய்யும். சுய ஆதாய நோக்கத்தோடு இல்லாதவரை மட்டுமே புகழின் உச்சிக்குக் கொண்டு செல்லும்.
பரதேசி யோகம்
சனியுடன் கேது இணைவால் உருவாகும் இந்த யோகம், பற்றற்ற நிலையை ஏற்படுத்தும். இல்லறவாசியாக இருந்தாலும், இல்லற சுகவாசியாக இருந்தாலும் பற்றற்ற ஞானியாக, இல்லற சந்நியாசியாக வாழ்ந்து வருவார்கள். இல்லாவிட்டால் இல்லற வாழ்வை வெறுத்து ஆன்மிக வாழ்வில் ஈடுபடுவார்கள். ஆன்மிகத்தில் உச்சநிலைக்குச் சென்று ஞானம் பெற்று ஞானியாக வலம்வருவார்கள். இவர்கள் எளிமையை விரும்புவார்கள். பல சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும், தடைகளுக்கும் ஆளாகி இறுதியில் வெற்றி களைப் பெறுவர். இவர்களின் அனுபவத்தால் பலரின் தீர்க்கமுடியாத பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க யோசனை கூறும் ஞானியாவார்கள். இவர்கள்மூலம் விடையும் முடிவும் கிடைக்கும். இவர்களின் அனுபவம் பாவத்தைச் செய்யத் தூண்டாது. புண்ணியத்தைத் தேடிச்செல்வர். பல அனுபவங்களைக் கண்டபிறகு, தர்மப் பாதையில் கால்பதித்து, பல தடைகளை உடைத்து வெற்றிபெறுவார்கள். மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ் வார்கள்.
ஆயுள் தோஷம், பித்ரு தோஷம் சனியுடன் கேது இணைந்தால் இந்த தோஷம் உண்டாகும். இந்த தோஷம் உள்ளவர்கள் பல சோகங்களைக் காண்பார்கள். அதேபோல் மரணபயம், எமபயம், காலபயம், எதிர்காலத்தை நினைத்து பயப்படுதல் மற்றும் அற்ப கண்டங்கள் ஏற்படும். இதனால் கர்மாவை சரியாகப் புரியவோ, அனுபவிக்கவோ முடியாமல் பல தடைகளை ஏற்படுத்தும். இந்த தோஷம் உள்ளவர்களை சிவன் அல்லது பெருமாள் கோவிலில் தத்துக்கொடுத்து, திரும்பப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
இதனால் ஆயுள்தோஷம் யோகமாக மாறிவிடும். ஆனால் இரவில் பிறந்தவர்களுக்கு பித்ரு தோஷத்தை உண்டாக்கும். ஏனென்றால் இரவில் பிறக்கும் உயிர்களுக்கு சனிபகவான் பித்ருகாரகனாகப் பொறுப்பேற்கிறார். பித்ருகாரகத்துவத்திற்கு பகலில் சூரியனும், இரவில் சனியும் பொறுப்பேற்கிறார்கள். ஆகவே பகலில் பிறந்தவர்களுக்கு சூரியனுடன் ராகு- கேது இணைவும், இரவில் பிறந்தவர் களுக்கு சனியுடன் ராகு- கேது இணைவும் பித்ருதோஷத்தை ஏற்படுத்தும். அதேபோல் சூரியனுடன் சனி இணைந்தால் தந்தைவழியில் பித்ருதோஷத்தை ஏற்படுத்தும்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 98652 20406