சூரியன் தரும் உலகப்புகழ் யோகம்!

/idhalgal/balajothidam/sunset-yoga-world

"பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்கும் கயிறு.' (482)

இது வள்ளுவரின் குறள். தனக்குப் பொருந்தும் செயலையும், அதற்காக அறியவேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றுமில்லை. எனவே கிரகங்கள் நமக்கு எவ்வாறெல்லாம் வழிவகுக்கின்றன என்று அறிந்து செயல்படல் நன்று. வள்ளுவர் மற்றொன்றையும் கூறுகிறார்.

"நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்

உண்மை அறிவே மிகும்.' (373)

ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும், ஊழிற்கு ஏற்றவாறே அவனுக்கு உள்ளதாகும் அறிவே மேற்பட்டுத் தோன்றும்.

கிரகங்கள் எந்தெந்த ராசியில் இருந்தால் என்னென்ன பலன் கிடைக்கப்பெறும் என்பதற்கு விரிவான பட்டியலே உண்டு. குறிப்பிட்ட ராசியில் குறிப்பிட்ட கிரகம் பலமாக இருந்தால் என்ன பலன் கிடைக்கப்பெறும் என்பதை சுருக்கமாகப் பார்ப்போம். "கற்றது கையளவு; கல்லாதது உலகளவு' என்பது ஜோதிடத்திற்கு மிகப்பொருந்தும். இந்த ஆய்வு இன்ஸ்டன்ட் காப்பிபோல் உடனடி பார்வைக்கும், அடிப்படையைப் புரிந்துகொள்வதற்கும் உதவும் என நம்புவோம்.

sun

"கொடுத்ததெல்லாம் கொடுத்தான்; அவன் யாருக்காகக் கொடுத்தான்; ஒருத்தருக்கா கொடுத்தான்- இல்லை ஊருக்காகக் கொடுத்தான்' என்ற திரைப்படப் பாடல்போல் கிரகநாதர்கள் ஒவ்வொருவருக்கும் நன்மை- தீமைகளை உணர்த்துவதில் வல்லவர்கள். அந்த வரிசையில் சூரியன் எவ்வாறெல்லாம் மேஷத்தில் இருந்துகொண்டால் உயர்வடையச்செய்வார் என்பதையும், பிற நுட்பங்களையும் ஆய்வு செய்வோம்.

பலம் என்றால் என்னவென்று அறிந்துகொள்ள வேண்டும். ஒரு கிரகம் இருக்குமிடம் சொந்த வீடாகவோ, உச்சவீடாகவோ, நட்பு வீடாகவோ இருந்தால் அந்த கிரகத்திற்கு அந்த இடம் பலமுடையதாகும்.

ஒரு குறிப்பிட்ட ராசியில் ஒரு குறிப்பிட்ட கிரகம் சுபகிரகத்தோடு கூடியோ, சுபகிரகத்தால் பார்க்கப்பட்டோ இருந்தால் அப்படிப்பட்ட கிரகத்திற்கு பலம் உண்டு. லக்னாதிபதி யாரானாலும் லக்னத்தில் இருந்தால் பலம் உண்டு.

அவ்வாறே அந்தந்த பாவாதிபதிகள் தங்கள் சொந்த வீட்டில், பாவத்தில் பல

"பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்கும் கயிறு.' (482)

இது வள்ளுவரின் குறள். தனக்குப் பொருந்தும் செயலையும், அதற்காக அறியவேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றுமில்லை. எனவே கிரகங்கள் நமக்கு எவ்வாறெல்லாம் வழிவகுக்கின்றன என்று அறிந்து செயல்படல் நன்று. வள்ளுவர் மற்றொன்றையும் கூறுகிறார்.

"நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்

உண்மை அறிவே மிகும்.' (373)

ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும், ஊழிற்கு ஏற்றவாறே அவனுக்கு உள்ளதாகும் அறிவே மேற்பட்டுத் தோன்றும்.

கிரகங்கள் எந்தெந்த ராசியில் இருந்தால் என்னென்ன பலன் கிடைக்கப்பெறும் என்பதற்கு விரிவான பட்டியலே உண்டு. குறிப்பிட்ட ராசியில் குறிப்பிட்ட கிரகம் பலமாக இருந்தால் என்ன பலன் கிடைக்கப்பெறும் என்பதை சுருக்கமாகப் பார்ப்போம். "கற்றது கையளவு; கல்லாதது உலகளவு' என்பது ஜோதிடத்திற்கு மிகப்பொருந்தும். இந்த ஆய்வு இன்ஸ்டன்ட் காப்பிபோல் உடனடி பார்வைக்கும், அடிப்படையைப் புரிந்துகொள்வதற்கும் உதவும் என நம்புவோம்.

sun

"கொடுத்ததெல்லாம் கொடுத்தான்; அவன் யாருக்காகக் கொடுத்தான்; ஒருத்தருக்கா கொடுத்தான்- இல்லை ஊருக்காகக் கொடுத்தான்' என்ற திரைப்படப் பாடல்போல் கிரகநாதர்கள் ஒவ்வொருவருக்கும் நன்மை- தீமைகளை உணர்த்துவதில் வல்லவர்கள். அந்த வரிசையில் சூரியன் எவ்வாறெல்லாம் மேஷத்தில் இருந்துகொண்டால் உயர்வடையச்செய்வார் என்பதையும், பிற நுட்பங்களையும் ஆய்வு செய்வோம்.

பலம் என்றால் என்னவென்று அறிந்துகொள்ள வேண்டும். ஒரு கிரகம் இருக்குமிடம் சொந்த வீடாகவோ, உச்சவீடாகவோ, நட்பு வீடாகவோ இருந்தால் அந்த கிரகத்திற்கு அந்த இடம் பலமுடையதாகும்.

ஒரு குறிப்பிட்ட ராசியில் ஒரு குறிப்பிட்ட கிரகம் சுபகிரகத்தோடு கூடியோ, சுபகிரகத்தால் பார்க்கப்பட்டோ இருந்தால் அப்படிப்பட்ட கிரகத்திற்கு பலம் உண்டு. லக்னாதிபதி யாரானாலும் லக்னத்தில் இருந்தால் பலம் உண்டு.

அவ்வாறே அந்தந்த பாவாதிபதிகள் தங்கள் சொந்த வீட்டில், பாவத்தில் பலம் உடையவர்கள். கேந்திரங்களிலும் திரிகோணங்களிலும் இருக்கும் கிரகங்களுக்கும் மிகுந்த பலம் உண்டு.

முதலில் ஒரு கிரகம் ஒரு ராசியில் பலமாக இருந்தால் என்ன பலன் என்பதை ஆய்வு செய்வோம்.

சூரியன் மேஷத்தில் இருந்தால் புகழ், பதவி, ஆத்ம பலம், சரீர பலம், நிர்வாகத்திறன் யாவும் சுலபமாகக் கிடைக்கப்பெறும். உதாரணம் இல்லையேல் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும். எனவே சில பிரமுகர்களைக் காண்போம்.

அரவிந்த் கெஜ்ரிவால், ரோகித் சர்மா (கிரிக்கெட்), ஸ்ரீஸ்ரீரவிசங்கர் (ஆன்மிகம்), பால் தாக்ரே (சிவசேனா), மாயாவதி, பர்வேஸ் முஷாரப் (பாகிஸ்தான்) சாயிப் அக்தர் (கிரிக்கெட் பௌலர்), கௌதம புத்தர், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீவித்யாரண்யர், ஸ்ரீஆதிசங்கராச்சாரியார், ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் (சங்கீத மேதை) இவர்கள் யாவரும் சித்திரை மாதத்தில் சூரியன் மேஷத்தில் அமர்ந்திருக்கும் காலத்தில் பிறந்தவர்கள். எனவே கிரகநாதர்கள் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் சுலபமாகப் புகழ் பெறலாம்.

சூரியன் ரிஷபத்தில் இருந்தால் வாசனைப்பொருட்கள் மற்றும் பொருட்கள் வாங்கி விற்பது போன்ற இனங்களில் பொருளீட்ட வாய்ப்பு ஏற்படும்.

சூரியன் மிதுனத்தில் இருந்தால் ஜாதகருக்கு நல்ல உயர்கல்வியையும், அறிவாற்றலையும், திறமையையும், செல்வத்தையும், பிறரிடம் பழகும் பக்குவத்தையும், ஞாபக சக்தியையும் ஏற்படுத்துவார். 26-9-1932-ல் பிறந்த மன்மோகன் சிங்கிற்கு மிதுனத்தில் சூரியன், செவ்வாய். 25-12-1924-ல் குவாலியரில் பிறந்த அடல் பிகாரி வாஜ்பாய் ஜாதகத்தில் மிதுனத்தில் சூரியன், புதன், சந்திரன். 4-6-1959-ல் பிறந்த அனில் அம்பானிக்கு மிதுனத்தில் சூரியன், புதன். ராம்நாத் கோவிந்த் (பிரசிடென்ட்) ஜாதகத்தில் மிதுனத்தில் குரு, சூரியன், புதன். இந்தி நடிகர் ஷாருக்கானுக்கும் மிதுனத்தில் சூரியன். எனவே ஜாதகம் அதன் புகழை நிலைநாட்டத் தவறுவதேயில்லை. உழைப்பு மட்டும் இன்றியமையாதது.

கடகத்தில் சூரியன் இருந்தால் நல்ல தோற்றப் பொலிவு, சுறுசுறுப்பு, வேகமான செயல்திறன், சீரான குடும்ப வாழ்க்கை சுலபமாகும்.

sun

உதாரணம், 5-2-1976-ல் மும்பையில் பிறந்த அபிஷேக் பச்சனுக்கு (ஐஸ்வர்யாராயின் கணவர்) கடகத்தில் சூரியன், புதன். உலகப்புகழ் பெற்ற மனைவி அமைந்தார். இது போதாதா! 27-12-1975-ல் பிறந்த சல்மான்கானுக்கும் கடகத்தில் சூரியன். 16-ஆவது லோக்சபா ஸ்பீக்கர் சுமித்ரா மகாஜனுக்கும் கடகத்தில் சூரியன். பொதுவாக இவர்கள் ஆடி மாதத்தில் பிறந்தவர்கள். ஆனால் சூரியன் கடகத்தில் (வாட்டர் பிளானட்) வந்தவுடனே ஆடிக்கழிவு என்று வியாபாரப் பெருக்கம் செய்வதுண்டு. 1939-ல் பிறந்த முலாயம்சிங் ஜாதகத்தில் கடகத்தில் சூரியனுடன் ராகு. எனவே ராகு சில பின்னடைவைத் தந்துள்ளார். சூரியனின் அருளை ஜாதகரீதியாக அறிந்து பெருமைகொள்ளலாம். உங்கள் ஜாதகத்தைப் பாருங்கள்.

சூரியன் சிம்மத்திலிருந்தால் தைரியம், புகழ், தலைமை தாங்கும் உணர்வு, பதவி, உடலுரம், தன்னம்பிக்கை ஆகியவை பெறலாம்.

இதுமட்டுமல்ல; இப்படிப்பட்ட ஜாதக நிலையுடைய குழந்தை பிறந்தாலே அந்த குடும்பம் கடைநிலையில் இருந்தாலும் உயர்நிலை பெறலாம். குடும்பநலம் கருதி பல ஊர்களுக்கும் செல்ல வேண்டிய கட்டாயமும் ஏற்படும். இவர்களுடைய ஜாதகத்தில் 10-ல் குரு காணப்பட்டால் இருதார அமைப்பாகிவிடுமாம். சிவப்பு நிற முகங்கொண்ட அனுமனை வணங்குவது சிறப்பானது. 19-4-1957-ல் பிறந்த முகúஷ் அம்பானி ஜாதகத்தில் சிம்மத்தில் சூரியன், கேது, புதன், சுக்கிரன் இருக்கிறார்கள். திருமதி சோனியா காந்தி ஜாதகத்திலும் கேது, புதன், சூரியன் சிம்மத்தில் காணப்படுவார்கள். லக்னத்திற்கு எட்டாமிடம் இதுதான். எனவே மறைந்திருந்து ஆட்சியைத் தன்வசப்படுத்த சூரியன் பக்கபலமாக இருந்துள்ளார்.

ஜாதகத்தில் சூரியன் சிம்மத்தில் இருந்தால் பொய் சொல்வது, புறங்கூறுவது கூடாது. சொன்ன சொல் காப்பாற்றப்பட வேண்டும். பழமை விரும்பியாக இருத்தல் நன்று. தங்கை மருமகள், மாமனார், பேரன், பேத்தி இவர்களுக்கு இயன்ற உதவி புரிதலை சூரியன் வரவேற்பார்; அருள்புரிவார். ரூபி மோதிரம் அணிதல் நன்று. அரசுப்பணியாளர்களை அவமதிப்பது கூடாது. கிழக்கு நோக்கிய வீட்டில் வாசம் செய்தல் நன்று.

சூரியன் கன்னியில் இருந்தால் எழுத்துத்துறையில் திறமை, கவிதை புனையும் திறன், ஓவியம், ஞாபக சக்தி, பேச்சுத்திறன் சார்ந்தவை துணைவரும்.

11-10-1902-ல் பிறந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் கன்னியில் சூரியன், சுக்கிரன் இருக்கப் பிறந்தவர். 14-10-1890-ல் பிறந்த டி.டி. ஐசன்ஹோவர் ஜாதகத்தில் கன்னியில் சூரியன், செவ்வாய். பாரத ரத்னா எஸ் விஸ்வேஸ்வரய்யா (இஞ்சினியர்) மைசூரில் பிறந்தவர். அவர் ஜாதகத்தில் கன்னியில் சூரியன், புதன். 2-10-1969-ல் போர்பந்தரில் காலை 8.50-க்குப் பிறந்த தேசப்பிதா அண்ணல் காந்தி புரட்டாசியில் பிறந்தவர். கன்னியில் சூரியன் தன்னந்தனியாக இருப்பார். 22-8-1955-ல் பிறந்த தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கன்னி லக்னம். அதில் சூரியன், செவ்வாய். எனவே திடீர் அரசியல் மோகம். கிரகநாதர்கள் வாழ்வின் தன்மையை புதிது புதிதாக மாற்றும் திறன்படைத்தவர்கள்.

சூரியன் துலாமில் இருந்தால் கனிமச்சுரங்கம்மூலமாகவும், மதுவகைமூலமாகவும், போதைப்பொருள் உற்பத்திமூலமாகவும், பணக்காரர்களாக்க உதவும் என்கிறது சாஸ்திரம்.

சூரியன் விருச்சிகத்தில் இருந்தால் கல்வியில் ஆற்றல், ஆசைகள் அப்படியே விரும்பியவிதமாக நிறைவேறல், தைரியமுடன் எதையும் எதிர்கொள்ளல் இவையாவும் துணைவரும். சிலருக்கு தந்தையின் கௌரவம் இவர்களால் பாதிக்கப்படும் சூழ்நிலை வரலாம். எனவே வீட்டின் தலைவாசல் தெற்கு நோக்கி இருப்பது கூடாது. கிராமத்துவாசிகள் வெண்மை நிற பசு வளர்க்கலாம். மாமனாருடன் கூட்டுக்குடும்பம் ஒத்துவராது. மூத்த சகோதரர்களுக்கு இயன்ற உதவி புரிதல் நல்லது. கண்ணியமாக நடத்தல் அவசியம்.

சூரியன் தனுசில் இருந்தால் அறிவாற்றலும், உடல் உரமும், தெய்வீகத் தொண்டில் நாட்டமும், சிலருக்கு நன்னெறி புகட்டும் நற்குணமும் மேலோங்கும். அரசு அனுகூலம் உண்டு. 12-1-1863-ல் காலை 6.05 மணிக்கு கொல்கத்தாவுக்கு அருகே பிறந்த சுவாமி விவேகானந்தர் ஜாதகமே இதை நிரூபணமாக்கும். அவருக்கு தனுசு லக்னம். அங்கேயே சூரியன். திருபாய் அம்பானி (தொழிலதிபர்) 28-12-1932-ல் பிறந்தவர். தனுசு லக்னம். அதில் சூரியன், சந்திரன். மாசே துங் (Mao Tse Tung of china) 26-12-1893-ல் சீன நேரப்படி 9.16-க்குப் பிறந்தவர். அவருக்கு தனுசுவில் சூரியன். முன்னாள் இலங்கைப் பிரதமர் பண்டார நாயக் 8-1-1899-ல் கொழும்பில் காலை 9.00 மணிக்குப் பிறந்தவர். தனுசுவில் புதன், ராகு, சனி. மார்ச் 1959 வரை புகழ்பட வாழ்ந்தவர். முன்னாள் ரஷ்யப் பிரதமர் மார்ஷல் ஜோசப் ஸ்டாலின் 18-12-1878-ல் பிறந்தவர். அவருக்கு தனுசுவில் சூரியன், சுக்கிரன், புதன். இத்தனை ஆதாரங்களுடன் உங்கள் ஜாதகத்தையும் ஒப்பிடுங்கள். சூரிய பகவான் எவ்வாறெல்லாம் உலகிலுள்ளோர் வியக்கும் விதமாகத் துணைபுரிந்துள்ளார் என புலப்படும்.

சூரியன் மகரத்தில் இருந்தால் ஓரளவு சரீரபலம், ஜீரண சக்தி, பயணத்தால் ஆதாயம், விவசாயத்தால் மேன்மை, எரிபொருள் ஆதாயம் கிடைக்கப்பெறும். எனினும் பூர்வீக சொத்து (தந்தையைச் சார்ந்தது) வில்லங்கத்தைத் தரும். அரசால் எந்த பெரிய ஆதாயத்தையும் எதிர்பார்க்க இயலாது. நீக்ரோ இனத்தாருக்காகப் பாடுபட்ட மார்ட்டின் லூதர் கிங் 15-1-1929-ல் அமெரிக்க நேரப்படி மாலை 3.00 மணிக்குப் பிறந்தவர். இவருக்கு மகரத்தில் புதன், சூரியன். 1968-ல் புகழோடு மறைந்தார்.

சூரியன் கும்பத்தில் இருந்தால் அளவோடு சந்தோஷமும், சீரான செல்வமும், கெடுதலில்லா ஆரோக்கியமும் கிடைக்கப்பெறும்.

சூரியன் மீனத்தில் இருந்தால் நல்ல நண்பர்கள், திறமை, தேவைக்கேற்ற செல்வம், பிறரால் பாராட்டப்படல் என நலம் பெறலாம்.

விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்ணான கல்பனா சாவ்லா 17-3-1962-ல் கர்னலில் காலை 10.00 மணிக்குப் பிறந்தவர். இவர் ஜாதகத்தில் மீனத்தில் சூரியன், சுக்கிரன். நிலையான புகழ் பெற்றார். சுஷ்மா 4-4-1948-ல் காலை 5.46 மணிக்கு ஜோத்பூரில் பிறந்தவர். மீன லக்னம்.

அதில் சூரியன். (பங்குனியில் பிறந்தவர்). எட்டாமிட கேது தொல்லை தந்தாலும், புகழ் நிலையானது.

இவ்வாறு எல்லா கிரகமும் தனித்தன்மை வாய்ந்தவை.

செல்: 93801 73464

bala310818
இதையும் படியுங்கள்
Subscribe