சூரியன் ஆட்சி, உச்சம்பெற்று தசை நடந்தால், அறிவாற்றல் தீர்க்கம், அந்தஸ்து, உயர்வான ஆணவம், அபூர்வப் புகழ், செல்வம், மகிழ்ச்சி யாவும் கிடைக்கப்பெறும்.

Advertisment

சூரியன் கோணாதிபதியாய் கோணத்தில் நின்றால் தனஸ்தான, காரக ஆதிபத்தியப் பலன்களைக் கெடுத்துக் கொடுப்பார்.

சூரியன் கேந்திராதிபதியாகி கேந்திரத்தில் நின்றால்- 6, 8, 12-ஆம் இடம் தவிர்த்து மற்ற இடங்களில் நின்று தசை நடந்தால் சுபப்பலனைக் கூடுதலாய்த் தருவார்.

சூரியன் 6, 8, 12-ஆம் அதிபதியாகி வலுத்தால் கெடுபலனும், பலமிழந்தால் நோய்களின் தாக்கமும், உடலுறுப்புகளில் சோர்வும் வரும்.

6-ல் சூரியன்

Advertisment

சட்டப்பிரச்சினையால் நீதிமன்றம், வழக்கு என அல்லல்கள் வரும். நண்பர் கள் விரோதியாவர்; பின்பு சரணடைவார் கள். நல்ல உயர்பதவியிருந்தும், கீழ்மட்டப் பணியாளர்கள் மதியாது செயல்படல் போன்றவை நிகழும். சுக்கிரன், சனி, ராகு- கேது லக்னத்தில் இருந்தால் அதுவும் கூடுதல் வேதனைக்கு வழிவகுக்கும்.

சூரியன் 6-ல், புதன் 12-ல் இருந்தால் ரத்த அழுத்தம் அதிகமாகும்.

சூரியன் 6-ல், செவ்வாய் 10-ல் அமையப் பெற்ற 18 வயது கடந்த மகனை கடுஞ் சொல்லால் கண்டிப்பது கூடாது. விபரீத முடிவெடுக்க கிரகநாதர்கள் தூண்டுவார்கள். ஞாயிற்றுக்கிழமை அரை கிலோ கோதுமை அல்வா, ஐந்து செந்நிறப் பழங்களை தானம் செய்வது நன்று. ஆற்றுநீர் அல்லது ஊற்று நீரை பாட்டிலில் அடைத்து வீட்டினில் இருக்கச்செய்தல் நல்லது. நவதானியத்துடன் சூரியகாந்திச் செடி விதையையும் கலந்து, தெற்கிலிருந்து வடதிசை நோக்கி ஓடும் நீரில் இடுவது நல்லது.

8-ல் சூரியன்

இவர்கள் சகோதரிகள் வீட்டில் தஞ்சம் புகுந்து வாழ்நாளைச் செலுத்துவது அல்லது மாமனார் வீட்டில் நெடுங்காலம் தங்குவது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

கறுப்பு, பிரவுன் வண்ணம் கலந்த பசுவுக்கு உணவூட்டல் நன்று.

Advertisment

வீட்டில் வயோதிகர் எவராவது உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தால், இவர்கள் அங்கிருப்பது கூடாது. இவர்கள் வெளியேறியபின்தான் அவர்கள் உயிர் பிரியும்.

800 கிராம் கோதுமை, 800 கிராம் சர்க்கரை கோவிலுக்கு ஞாயிறன்று தருதல் நற்பலன் தரும்.

sun

12-ல் சூரியன்

மனோரீதியாக பல கவலைகள் தொடராக அணிவகுக்கும். பிறரைச் சார்ந்த கவலைகள், பிறரின் சொத்து, பத்திரத்தில் ஏற்படும் குளறுபடியால் பறிபோதல், திருட்டு, தெரியாமல் செய்யும் தவறுகள், வங்கியில் எவர் பணத்தையாவது பிறர் கணக்கில் இணைப்பது போன்றவற்றுக்கு பன்னிரடண்டாமிட சூரியன் வழி வகுப்பார்.

நேர்மைக்கு அதிக கௌரவம் தருபவர் சூரியன்.

வீட்டின் வடகிழக்கு மூலை இருட்டறையாக இருந்தால் வம்சவிருத்தி தடைப்படும்.

புதனுக்குரிய வியாபாரப் பொருட்களை வணிகம் செய்தால் அதிக லாபம், அதிக மகசூல் பெறலாம்.

சூரியன் 12-ல், சனி 6-ல் இருந்தால் பெண்களை பாதிக்காது.

எந்த தீங்கான நெறிமுறையில்லா செயல்களுக்கும் துணைபோதல் கூடாது.

மாமன், மைத்துனர்களுடன் கூட்டு வியாபாரம் தவிர்க்கவும்.

சூரியன் தன் தசையில்...

சர லக்னத்தாருக்கு கெடுபலனும், ஸ்திர லக்னத்தாருக்கு சுபப்பலனும், உபய லக்னத்தாருக்கு பிரச்சினைகளையும் தருவார்.

ஒவ்வொரு ஜாதகருக்கும் சுக்கிரனின் காலமான 11 முதல் 18 வயதிற்குள் சூரிய தசை வருமென்றால் அது காலபகையாகி கெடுபலனையே தரும். ஆனால் உள்ளங்கை யில் கட்டை விரலை அடுத்துக் காணப் படும் சுக்கிர மேடு உச்சம்பெற்று தீயகுறி யின்றிக் காணப்பட்டால் நன்மையே தொடரும்.

சூரிய தசையில் பாசகனான சனி 9-ஆம் இடத்தில் இருந்தால் கெடுபலன் விளையும்.

சூரிய தசையில் போதகனான செவ்வாய் 7-ஆம் இடத்தில் நின்றால் சுபப்பலன் கிடைக்கும்.

சூரிய தசையில் காரகனான குரு 9-ல் இருந்தால் சுபப்பலன்.

சூரிய தசையில் வேதகன் புதன் 11-ஆம் இடத்தில் நின்றால் சுபப்பலன் நிகழும்.

கீழுள்ள காயத்ரி மந்திரங்களைச் சொல்லி வந்தால் சகல நன்மைகளும் பெறலாம்.

சூரியனின் ப்ரான தேவதை ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் காயத்ரி மந்திரம்:

ஓம் பைரவாய வித்மஹே

ஹரிஹர ப்ரம்ஹாத்மகாய தீமஹி

தந்நோ ஸ்வர்ணாகர்ஷண பைரவ ப்ரசோதயாத்.

ஸ்ரீபைரவி காயத்ரி மந்திரம்:

ஓம் த்ரிபுரையை ச வித்மஹே

பைரவ்யை ச தீமஹி

தந்நோ பைரவி ப்ரசோதயாத்.

_______________________________

தீட்டும் பரிகாரமும்

parigaram

றப்புக்காரியம் தீட்டு கிடையாது. வீட்டில் 15 நாட்கள் முழுமனதாய் இறந்தவர் களுக்கு ஆத்மசாந்திப் பூஜை செய்தல் நன்று. ஆலயம் செல்வது கூடாது. 15 நாட்களுக்குப் பின் செல்லலாம்.

குழந்தை பிறந்தாலும், பூப்படைந்தாலும் (வயதுக்கு வருவது) 48 நாட்கள் வீட்டில் புண்யாதானம் செய்து கோவிலுக்குச் செல்லலாம்.

தகப்பனார் இறந்துபோனால் ஒரு வருட காலம் சுபகாரியம் கூடாது. (சுபகாரியம் என்பது திருமணம், புதுமனைப் புகுவிழா போன்றவை.) 15 நாள் கிரியை முடிந்தபின் ஆலயம், பூஜைகளில் கலந்துகொள்ளலாம்.

தாய்க்கு ஆறு மாதம், சகோதரி, உடன்பிறந் தோர், உறவினர், கணவன்- மனைவி, பேரப்பிள்ளைகளுக்கு ஒரு மாதம் தவிர்த்தல் நன்று.

எத்தனை வருடம் திதி கொடுக்க வேண்டும்?

தாய்- தந்தை இறந்து மூன்று வருடத்திற்கு புரோகிதர் வைத்து திவசம் செய்யவேண்டும். அடுத்துவரும் வருடங்களில் ஆற்றோரம் தர்ப்பணம் செய்து பைரவருக்கு மோட்ச தீபம் ஏற்றவேண்டும்.

இறந்தவர்களுக்கு அவரவர் பெயரில் கோவிலில் அர்ச்சனை செய்யக்கூடாது.

தாயோ தந்தையோ இறந்தால் மகன் அவர்களுக்கு கண்டிப்பாக இறுதிக் காரியத்தைச் செய்யவேண்டும். கர்ப்பமாக இருக்கும் மனைவி இதில் கலந்துகொள்ளக் கூடாது.

சொந்தபந்தம் இல்லாதோருக்கு வெட்டியான் கொள்ளி வைக்கலாம். பந்தமே இல்லாத ஒருவருக்கு கொள்ளி வைத்தால் கோடி புண்ணியம் கிட்டும்.

அசைவ வழிபாட்டால் ஏற்படும் பாதிப்புகள்

குழந்தைகள் ஜாதகத்தில் கர்ம தோஷம் ஏற்படுமாம். கர்ம தோஷத்தால் குழந்தைகள் கல்விக்கு பாதிப்பு, தடை, உடல்நிலை பாதிப்பு, அற்ப ஆயுள், முன்னேற்றத் தடைகள் போன்றவை ஏற்படக்கூடும்.

இது நீண்டகால இடைவெளிக்குப் பின்பே தெரியவரும். எனவே உணர காலதாமதம் ஆகும்.

புத்திர பாக்கியம் கிடைக்காது; கிடைத்தா லும் தாய்- தந்தையருக்கு உதவாத சூழ்நிலை ஏற்படும்.

ஒரு குரு தவறான உபதேசம் செய்வது கூடாது. அப்பாவம் அவரையே சாரும்.

செய்யும் பாவங்கள், புண்ணியங்கள் மூன்று தலைமுறையைச் சென்று சேரும்.