Advertisment

சூரிய பலம் பெருக்கும் பரிகாரம்! -சூரியஜெயவேல்

/idhalgal/balajothidam/sun-power-remedy-suriyajayavel

ங்களுடைய ஜாதகத்தில் சூரியன் எந்த நிலையில் உள்ளார் என்பதை ஆராய்ந்து, அதற்கேற்றவாறு பரிகாரத்தை நாமே செய்து கொள்ளலாம்.

Advertisment

எல்லா கிரகங்களுக்கும் முதன்மையானவர் சூரியன். சூரியனிடமிருந்துதான் எல்லா கிரகங்களும் தோன்றின. எல்லா கிரகங்களும் உருவாக மூலகாரணமானவர் என்பதால், இவரே தகப்பனாகி றார். சூரியனின் ஈர்ப்பில்தான் மற்ற அனைத்து கிரகங்களும் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப் பாதையில் சுற்றிவருகின்றன. ஜீவாத்மாக்களின் தலைவர் இவர். எல்லா ஆத்மாக்களும் சூரியனில் அடக்கம். சூரியனிலிருந்தே உயிர்கள் உருவாகின.

ஒருவர் கௌரவமாய் வாழ்கிறாரென் றால், அதை அவர் இழக்கப்போகும் காலம் எது? ஒருவர் நேர்மையை தொலைக்கப் போகிறாரென்றால், அது எப்போது? ஒருவர் கம்பீரத்தை இழக்கப்போகிறாரென்றால் அது எப்போது? அதை நிவர்த்திசெய்வது எப்படியென்பதை ஆராய்வோம்.

sun

Advertisment

ஒருவரது ஜாதகத்தில் சூரியனானது தந்தை, தந்தை வர்க்கம், மூத்த ஆண்மகன், நம்மையாளும் அரசியல் தலைவர்கள், நாட்டுத் தலைவர்கள், கட்சித் தலைவர்கள், மனோதிடம், நேர்மை, ஆளுமைத் திறம், தனித்தன்மை, பதவி, அந்தஸ்து, கம்பீரமான தோற்றம், சுயகௌரவம், தான் என்ற கர்வம், அரசியல், அரசாங்கம், அதிகாரம், குறிக்கோள் ஆகிய காரகங்களைத் தரும். ஆளுமை மிக்க- திறமையானவராக இருக்கவேண்டுமென்றால், ஜாதகத்தில் சூரியன் நலமுடனும் இருக்கவேண்டும். ஆளுமையென்பது ஊர் உலகத்தை ஆள்வதுமட்டுமல்ல. வீட்டையும், வீட்டில் உள்ளவர்களையும் அதிகாரம் செய்வதை யும் குறிக்கிறது. குடும்பத்தலைவன் சொல்வதை யாரும் கேட்கவில்லையென் றால், அதிகாரம் செல்லுபடியாகாத நிலையை ஏற்படுத்தும்.

சமூகத்தில் யாரோ ஒருவர் சொல்வதை மற்றவர்கள் எல்லாரும் கேட்பார்கள்.

அவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்தால் சூரியன் பலமாக இருக்கும். ஒருசிலர் நல்லதையே சொல்வார்கள். அதை யாரும் காது கொடுத்தும் கேட்கமாட்டார்கள்.

அவரின் ஜாதகத்தை ஆராய்ந்தால், ஆளுமைத் திறன் குறைவாக இருக்கும். இந்த குறைபாட்டை முன்கூட்டியே ஆராய்ந்தறிந்து, அதை நிவர்த்தி செய்து கொள்ளும் வழிமுறைகளை முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

இளமையில் கண்பார்வையில் கோளாறு ஏற்படுகிறதென்றால், அதற்கு சூரியனும் ஒரு காரணம்தான். லக்னத்துக்கு ஒன்று, இரண்டாம் இடங்களில் சூரியன் இருந்தால் கண்பார்வையில் கோளாறு ஏற்படுகிறது. அடிக்கடி எலும்புமுறிவு, இளம்வயதில் எலும்புத் தேய்மானம் ஏற்படும். அடிக்கடி பதவியிறக்கம் செய்யப்படுபவர் களுக்கும், நேர்மை இழப்பவர்களுக்கும், கௌரவம் பங்கம், கம்பீரத் தோற்றத்தை இழந்து வாடுபவர்களுக்கும் வெளி வட்டார மதிப்பே இருக்காது. சூரியபலம் குறைவ

ங்களுடைய ஜாதகத்தில் சூரியன் எந்த நிலையில் உள்ளார் என்பதை ஆராய்ந்து, அதற்கேற்றவாறு பரிகாரத்தை நாமே செய்து கொள்ளலாம்.

Advertisment

எல்லா கிரகங்களுக்கும் முதன்மையானவர் சூரியன். சூரியனிடமிருந்துதான் எல்லா கிரகங்களும் தோன்றின. எல்லா கிரகங்களும் உருவாக மூலகாரணமானவர் என்பதால், இவரே தகப்பனாகி றார். சூரியனின் ஈர்ப்பில்தான் மற்ற அனைத்து கிரகங்களும் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப் பாதையில் சுற்றிவருகின்றன. ஜீவாத்மாக்களின் தலைவர் இவர். எல்லா ஆத்மாக்களும் சூரியனில் அடக்கம். சூரியனிலிருந்தே உயிர்கள் உருவாகின.

ஒருவர் கௌரவமாய் வாழ்கிறாரென் றால், அதை அவர் இழக்கப்போகும் காலம் எது? ஒருவர் நேர்மையை தொலைக்கப் போகிறாரென்றால், அது எப்போது? ஒருவர் கம்பீரத்தை இழக்கப்போகிறாரென்றால் அது எப்போது? அதை நிவர்த்திசெய்வது எப்படியென்பதை ஆராய்வோம்.

sun

Advertisment

ஒருவரது ஜாதகத்தில் சூரியனானது தந்தை, தந்தை வர்க்கம், மூத்த ஆண்மகன், நம்மையாளும் அரசியல் தலைவர்கள், நாட்டுத் தலைவர்கள், கட்சித் தலைவர்கள், மனோதிடம், நேர்மை, ஆளுமைத் திறம், தனித்தன்மை, பதவி, அந்தஸ்து, கம்பீரமான தோற்றம், சுயகௌரவம், தான் என்ற கர்வம், அரசியல், அரசாங்கம், அதிகாரம், குறிக்கோள் ஆகிய காரகங்களைத் தரும். ஆளுமை மிக்க- திறமையானவராக இருக்கவேண்டுமென்றால், ஜாதகத்தில் சூரியன் நலமுடனும் இருக்கவேண்டும். ஆளுமையென்பது ஊர் உலகத்தை ஆள்வதுமட்டுமல்ல. வீட்டையும், வீட்டில் உள்ளவர்களையும் அதிகாரம் செய்வதை யும் குறிக்கிறது. குடும்பத்தலைவன் சொல்வதை யாரும் கேட்கவில்லையென் றால், அதிகாரம் செல்லுபடியாகாத நிலையை ஏற்படுத்தும்.

சமூகத்தில் யாரோ ஒருவர் சொல்வதை மற்றவர்கள் எல்லாரும் கேட்பார்கள்.

அவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்தால் சூரியன் பலமாக இருக்கும். ஒருசிலர் நல்லதையே சொல்வார்கள். அதை யாரும் காது கொடுத்தும் கேட்கமாட்டார்கள்.

அவரின் ஜாதகத்தை ஆராய்ந்தால், ஆளுமைத் திறன் குறைவாக இருக்கும். இந்த குறைபாட்டை முன்கூட்டியே ஆராய்ந்தறிந்து, அதை நிவர்த்தி செய்து கொள்ளும் வழிமுறைகளை முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

இளமையில் கண்பார்வையில் கோளாறு ஏற்படுகிறதென்றால், அதற்கு சூரியனும் ஒரு காரணம்தான். லக்னத்துக்கு ஒன்று, இரண்டாம் இடங்களில் சூரியன் இருந்தால் கண்பார்வையில் கோளாறு ஏற்படுகிறது. அடிக்கடி எலும்புமுறிவு, இளம்வயதில் எலும்புத் தேய்மானம் ஏற்படும். அடிக்கடி பதவியிறக்கம் செய்யப்படுபவர் களுக்கும், நேர்மை இழப்பவர்களுக்கும், கௌரவம் பங்கம், கம்பீரத் தோற்றத்தை இழந்து வாடுபவர்களுக்கும் வெளி வட்டார மதிப்பே இருக்காது. சூரியபலம் குறைவாய் உள்ளவர்கள் சூரியனுக்குப் பரிகாரம் செய்துகொண்டால் வாழ்வில் வளமை பெறமுடியும்.

sun

உடல்நிலையில் குறைந்த ஆற்றல், வெளிறிய ரத்த சோகை, பலவீனமான செரிமானம், மோசமான பசியின்மை, பலவீனமான அல்லது மெதுவான துடிப்பு, பலவீனமான இதயம் மற்றும் மோசமான சுழற்சி ஆகியவற்றால் பாதிக்கப் படலாம். நீர்ப் பற்றாக்குறை, கண்பார்வை பலவீனமாக இருக்கலாம். கீல்வாதம் மற்றும் எலும்பு பலவீனம் இருக்கலாம். எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும், குறிப்பாக குளிர் தொடர்பான பாதிப்பையும் ஏற்படுத்தும்.

லக்னத்தில் சூரியனுடன் ராகு சேர்ந்திருந்தால், வாழ்கைத் துணைக்கு தோஷமாகும். கும்ப லக்னமாக இருந்து, ஏழாமதிபதி, சூரியன் 6, 8, 12-ஆம் வீடுகளில் ஒன்றிலிருந்தால் கணவனுக்குத் துன்பத்தைத் தரும் மனைவி அமைவாள். இதே அமைப்பு பெண்களின் ஜாதகத்திலிருந்தால், கணவனால் துன்பத்தை அனுபவிப்பாள்.

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 1, 2, 4, 5, 7, 8, 9, 12-ஆம் வீடுகளில் ஒன்றில் சூரியனுடன் ராகு- கேது, சுக்கிரன், சனி சேர்ந்திருந்தால் சூரியனால் பாதிப்படையக்கூடியவர்களாக இருப்பார்கள்.

ஜாதகத்தில் சூரியன், சுக்கிரனுடன் சேர்ந்து 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 12 முதலிய இடங்களில் ஒன்றிலிருந்தால் தீயபலன்களே நடக்கும்.

ஜாதகத்தில் சூரியன், சனியுடன் சேர்ந்து 1, 2, 4, 7, 8, 12-ஆம் இடங்களில் ஒன்றிலிருந்தால் தீயபலன்களே நடக்கும்.

ஜாதகத்தில் ராகு- கேதுக்களுடன் சூரியன் சேர்ந்திருக்கும் ஜாதகர்-

ஜாதகியர் அவசியம் பரிகாரம் செய்துகொண்டால் வாழ்வில் வளமையை அடைய முடியும்.

sun

மேஷ ராசியில் சூரியன் உச்சம்பெற்றால், ஜாதகரின் வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆனால் காலப்போக்கில் ஜாதகரின் தந்தை நலிவடைந்துவிடுவார்.

சூரியனின் சுற்றுப்பாதையைவிட்டு பூமி விலகும் ஐப்பசி மாதம் மழை பொழியும் காலம். சூரியனின் கிரணங்கள் பூமியைத் தொடமுடியாமல் போவதைப்போல், துலா ராசியில் பிறந்தவர்களுக்கு தந்தையின் ஆதரவு கிடைக்காது. தந்தையின் ஆயுள் பாதிக்கப்படும்.

ராகு- கேது இருவரும் ஜாதகத்தில் எந்த ராசியில் உள்ளார்களோ, அந்த வீட்டின் அதிபதிகளும் சூரியனுடன் பகையுணர்வு ஏற்படுத்தும். அந்தந்த கிரக தசாபுக்திகள் வரும் காலங்களில் இதை அறிந்துகொள்ள லாம்.

மேஷம், ரிஷபம், மிதுனம் (சித்திரை, வைகாசி, ஆனி) ஆகிய மூன்று ராசிகளில் (மாதங்களில்) சூரியன் வலம்வரும்போது, வெப்பமாய்த் தகித்த பூமியை காற்றால் குளிர்விக்க, காற்று வெப்பத்தை ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்கு நகர்த்திசென்று, வெப்பசலனத்தை உருவாக்குகிறது. காற்றடிக்கும் காலமான ஆடிமாதம் (கடகம்) சூரியனின் ஆற்றல் குறைவதால், ஆடி மாதம் குழந்தைப் பிறப்பு தந்தைக்கு ஆகாத மாதமாகிறது.

சூரியனுடன் சுபகிரகங்கள் சேர்ந்திருந்தால் நல்லதே நடக்கும். ஆனால் தீயகிரகங்களான ராகு- கேது, சுக்கிரன், சனி சேர்ந்திருந்தால் தீமையே நடக்கும். ஆட்சிவீடான சிம்மத்திற்கு பன்னிரண்டாமிடமான விரயத்தில், அதாவது கடகத்தில் சூரியன் தனித்திருந்தால் சூரியனின் காரகங்கள் அனைத்தும் பாதிக்கப்படும்.

ராகு- கேதுவுடன் இணையும் சூரியன் தன்னுடைய செயல்பாடுகள், காரகங்களையெல்லாம் இழந்து பலமிழக்கிறார். தான் வழங்கவேண்டிய பலன்களை வழங்கமுடியாமல் போகிறது. நிழல்கிரகங்கள் என்ன பலன் தரவேண்டுமோ அந்த பலன்களை அந்த இடத்திற்குத் தகுந்தாற்போல் வழங்குகின்றன.

ஆனால் சூரியன் மற்ற கிரகங்களுடன் இணையும்போது, அந்த கிரகங்களின் காரகங்களையெல்லாம் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, தானே பலன்களை நிர்ணயம் செய்கிறது. எந்த பாவகத்தில் கிரகங்கள் உள்ளனரோ, அந்த பாவகப் பலன்களைத் தரச்செய்கிறது.

கிரகணம் என்பது மறைப்பு. ராகு, சூரியன், சந்திரன் ஆகியவை ஏறத்தாழ ஒரு நேர்க்கோட்டில், ஒரே நட்சத்திரப் பாதத்தில் வரும்பொழுது ஏழாம் ராசியில் கேது இருக்கும். அவ்வேளையில் பூமி இவர்களுக்கிடையே வரும் நிகழ்வே சூரிய கிரகணமாகும்.

சூரியன் பலம் குறைந்தவனாய் தன் தசாவையோ, புக்தியையோ, அந்தரத்தையோ நடத்தும் காலத்தில் கெடுபலன்கள் நடக்கத் துவங்கும். மேலும், சூரியனுடன் இணைந்த கிரகங்களின் தசாபுக்தியிலும் இந்த பலன்களைச் செய்யும். அதனால், சூரியன் தொடர்புடைய தசாபுக்தி நடப்பில் உள்ளவர்களும் இந்த எளிய பரிகாரத்தைச் செய்வது நல்லது.

ஜாதகத்தில் சூரியன் கெட்டிருப்பவர்கள் மட்டுமல்ல; சூரியன் வலுவாகவுள்ள ஜாதகர்களும் இந்தப் பரிகாரத்தைச் செய்யலாம். சூரியபலம் உள்ளவர்களுக்கு இன்னும் பலம்கூடும் என்பது திண்ணம்.

வீடு வாசலை சுத்தம் செய்தபின், குளித்து முடித்து ஞாயிற்றுக்கிழமை காலையில் 6.00 மணிமுதல் 7.00 மணிவரை சூரியனுக்குரிய சூரிய ஓரையில் இந்த பரிகாரத்தை செய்யத் துவங்கவேண்டும். யாருடைய ஜாதகத்தில் வலுக்குறைந்த சூரியன் உள்ளாரோ அவர் மட்டும், பூஜைநேரத்தில் சிவப்புநிற வேட்டியோ, சேலையோ அணிந்துகொண்டு, ஆமணக்கு எண்ணெய் (விளக்கெண்ணெய்), தூய நல்லெண்ணெய், பசும்நெய் இந்த மூன்றையும் சரிசமமாகக் கலந்து ஒன்றாக்கி, பஞ்சமுக விளக்கில் நிறைவாய் இட்டு, தாமரைத் தண்டைத் திரியாக்கி, பஞ்சமுக குத்துவிளக்கை எரியவிடவேண்டும்.

சார்ட் அட்டையில் சூரியனுக்காக வரைந்து வைத்துள்ள கிரக கோலத்தின்மேல் கோதுமை மாவினால் பூஜையறையிலோ, வழிபாட்டுத் தலத்திலோ கால்மிதிபடாத இடத்தில் இந்த மந்திரக்கோலத்தை வைத்து வரையவேண்டும். மேலும், தாமிரத் தகட்டில் மயிலையோ, தேர்வடிவத்தையோ வரைந்து மந்திரக்கோலத்திற்கு அருகில் வைக்கவேண்டும். தூபக்கரண்டியில் தீக்கங்குகளை வைத்து, அதில் இடுவதற்காக காய்ந்த சந்தனத்தையும் எடுத்துவைத்துக் கொள்ளவும்.

பின்னர் சூடு ஆறாத சர்க்கரைப் பொங்கலை, பயன்படுத்தாத புதிய தட்டில் நிவேதனப்படையலாக வைக்கவும். சூரியனின் அதிதேவதையான- சாந்த ரூபமான பரமசிவனின் படத்தையும், அதனருகில் எருக்கம்பூவையும் மந்திரக்கோலமருகில் வைக்கவும்.

சூரியன்

"வாழி பகல்செய்வோன் வாழி ஒளியுருவன்

வாழியோர் ஆழித்தேர் மன்னுசுடர்- வாழியரோ

ஞாலம் விழிதிறப்ப நல்லோர் புகழுரைப்பக்

காலம் விளக்கும் கதிர்.'

சூரியன் துதி

"காசினில் இருளை நீக்கும் கதிரொளிவீசி எங்கும்

பூசனை உலகோர் போற்றப் புசிப்போடு சுகத்தைநல்கும்

வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த

தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி!'

அபிராமி அந்தாதி

"உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம் மாதுலம்போது மலர்க்கமலை

துதிக்கின்ற மின்கொடிமென் கடிக் குங்கும தோயம் என்ன

விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.'

மனமுருகி மந்திரக் கோலத்தை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டே, "எத்தனையோ பிறவிகளாய்த் தொடுத்துவரும் கர்மப்பலனை இப்பிறவியில் தீர்த்து பேரருள் புரிவாய் சூரியபகவானே!' என சூரியனின் துதிப்பாடலை ஒன்பதுமுறை மனதுக்குள் துதிக்க, பனிபோல் பிறவித் துன்பம் விலகும். சூரியனால் அதிகார பலமிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் நன்மையே கிட்டும்.

ஞாயிற்றுக்கிழமையன்று ஒருவேளை சற்று காரத்துடன் சமைக்கப்பட்ட உணவை யும், மறுவேளை கோதுமை உணவையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

உங்களின் ஜென்ம நட்சத்திரம் சூரிய சாரம் பெற்றிருந்தால், அதாவது கார்த்திகை, உத்திரம், உத்திராடம் என இந்த மூன்றில் ஒன்று ஜென்ம நட்சத்திரமாக இருந்தால், அவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது ஒரு மரத்தை நட்டுவிடவேண்டும். கார்த்திகையில் பிறந்திருந்தால் அத்தி மரத்தையும், உத்திரத்தில் பிறந்திருந் தால் அலரி மரத்தையும், உத்திராடத்தில் பிறந்திருந்தால் பலா மரத்தையும் நட்டு பராமரித்துவந்தால், சூரியனால் நிகழ்ந்த பலக்குறைவு நிவர்த்தியாகி பலம்பெற்று வாழ்வில் வளமையும் செழுமையும் அடைவீர்கள்.

நிறங்கள்: இதயத்தில் தங்கியிருக்கும் சிவப்பு அல்லது தங்க சூரிய உருண்டையை ஒருவர் தியானிக்கவேண்டும். ஒளி பிரகாசமான, தெளிவான, வெளிப்படை யான, சூடான வண்ணங்களைப் பயன்படுத்த வேண்டும். பொதுவாக சிவப்பு, மஞ்சள், தங்கம் மற்றும் ஆரஞ்சு அடர் நிறங்களைப் பயன்படுத்தவும்.

தவிர்க்கவேண்டிய நிறங்கள்: மேகமூட்டமான நிறங்கள், சாம்பல் மற்றும் கருப்பு.

dd

மூலிகைகள்: கருப்பு மிளகு, உலர் இஞ்சி (சுக்கு), வால் மிளகு, ஏலக்காய், குங்குமப்பூ மற்றும் இலவங்கப்பட்டை (குறிப்பாக ஆயுர்வேத சூத்திரம் திரிகடுகம்) போன்ற காரமான மற்றும் உமிழ்நீர் மூலிகைகளை உட்கொள்வதன்மூலம் சூரிய ஆற்றல் அதிகரிக்கும்.

சூரியனுக்கான நறுமண எண்ணெய்கள் மற்றும் வாசனை திரவியங்கள் கற்பூரம், இலவங்கப்பட்டை, யூகலிப்டஸ், குங்குமப்பூ, மிகவும் சூடான மற்றும் வாசனையைத் தூண்டும் எண்ணெய்களைப் பயன்படுத்தவும்.

தாமரையின்மீது நின்று, சிவந்த தாமரையின் பொலிவுடன், இரு கரங்களை உடையவன்; கையில் தாமரையுடன் நாளைப் படைத்தவன்; உலகையே ஆள்பவன்; ஏழு தலைகளையுடைய குதிரையை உடையவன்; அவரது தலையில் மணிக்கம், நகை, வரம் கொடுக்கும் சைகை செய்யும் தெய்வீக சூரியன்; எப்போதும் அவரது அருளை நமக்கு வழங்கட்டும்.'

ஒன்பது கிரகங் களிலும் சூரியன் புகழ், சமூக அந்தஸ்து, அரசியல் அதிகாரம் போன்றவற்றை வழங்குபவராகக் கருதப்படுகிறார். ஜாதகத்தில் அதன் நிலைப்பாட்டின்படி தீங்கான பலன் களை அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் தீய வீட்டிலிருக்கும் போது சில நோய் களையும் ஏற்படுத் தும். அதன்விளை வைக் குறைக்க, ஆரோக்கியமாக இருக்க சூரிய யந்திரம் ஜாதகனுக்கு உதவுகிறது.

மஞ்சள் காமாலைக்கான யந்திரம்: ஒரு நபர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டால் சூரிய யந்திரம் பயன்படுத்தினால், இந்த யந்திரம் போஜ்பத்ரா (bhojpatra)மரத்தின் பட்டையில், ரவி- புஷ்ய யோகம் அமையும் நாளில் அஸ்தகந்தத்தின் (asthgandh) மையால் யந்திரம் எழுதப்பட வேண்டும். தினமும் காலையில் கூர்ந்து பார்த்துவந்தால் நோயிலிருந்து நிவர்த்தியடையலாம். இந்த யந்திரம் முன்பு கூறியதுபோல் வரைந்தால், மஞ்சள் காமாலையிலிருந்து மீண்டு வருவதற்கு நிச்சயமாக உதவும்.

சூரியன் "ஈகோ' பிரச்சினைகளைத் தீர்க்கிறார். நாம் உண்மையில் யாரென் பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆன்மாவின் உண்மையான தன்மை யைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆன்மா அல்லது உங்களைப் பற்றி தியானியுங்கள். உங்களுக்குள் அமைதி மற்றும் ஒளியைக் கண்டறியவும். பலவீன மான சூரியன் சுயமரியாதையில்லாத நிலையை உருவாக்கும். மிகவும் வலுவான சூரியன் மோசமாக இருந்தால் "ஈகோ' மற்றும் சுயநல ஆளுமையை ஏற்படுத்தும். அதிகாரம், பதவி மற்றும் அதிகாரத்தை தர்மவழியில் பயன்படுத்துவது மற்றும் தொடர்புபடுத்துவது எப்படியென் பதைக் கற்றுக்கொள்ளவேண்டும். தந்தை மற்றும் பெரியவர்களை மதிக்கவும்.

அவர்களுடனான உறவை மரியாதையுடன் வளர்த்துக்கொண்டால் வாழ்வில் வளமையை அடையலாம்.

செல்: 96006 07603

bala160922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe