சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் லக்னத்தில் இருந்தால், ஜாதகர்மற்றவர்கள் என்னசெய்கிறார்கள் என்பதை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருப்பவராக இருப்பார். ஆனால், அவர் என்ன செய்கிறார் என்பதை யாராலும் தெரிந்துகொள்ள முடியாது. சிலர் எழுத்தாளராக இருப்பார்கள். தோற்றம் சுமாராக இருக்கும். ஜாதகர் பல மொழிகள் தெரிந்தவராகஇருப்பார்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் கோப குணம் கொண்டவராக இருப்பார். குடும்பத்தில் பல பிரச்சினைகள் இருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். 31 வயதிற்குப் பிறகு, நல்ல பணவரவு இருக்கும். இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும். சிலர் நிறைய படித்தவர்களாக இருப்பார்கள். நல்ல பேச்சாற்றல் இருக்கும். குடும்பத்தை நன்கு காப்பாற்றுவார்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும்.
ஜ

ஜாதகர் தன்னம்பிக்கையுடன் பணத்தைச் சம்பாதிப்பார். சகோதரர்களுடன் உறவு நன்றாக இருக்கும். இளம்வயதில் கஷ்டங்கள் இருக்கும். வாரிசுகள் நன்றாகஇருப்பார்கள். சொந்த வீடு இருக்கும். பிறந்த ஊரிலிருந்து வெளியே சென்று வாழவேண்டியதிருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் 4-ஆம் பாவத்தில் இருந்தால், குடும்பத்தில் பிரச்சினை இருக்கும். திருமணத்தில் சிக்கல்கள் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். ஜாதகர் கோபக்காரராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். சிலர் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் இருப்பார்கள். சிலர் விவசாயம் செய்வார்கள். ஜாதகருக்கு தந்தையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். முன்னோரின் சொத்து கிடைக்காது.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். அரசாங்கத்தில் அவருக்கு பெயர், புகழ் இருக்கும். சிலர் ஐ.ஏ.எஸ். அல்லது ஐ.பி.எஸ். பதவிகளில் இருப்பார்கள். ஜாதகர் அறிவாளியாக இருப்பார். தைரிய குணம் இருக்கும். பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள். சகோதரர்களுடன் நல்ல உறவு இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு கோப குணம் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு உடலில் தழும்பு இருக்கும். சிலருக்கு விபத்து நடக்கும். சிலரின்மீது சூனியம் வைக்கலாம். வயிற்றில் நோய் இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். நன்கு பணத்தைச் சம்பாதிப்பார். அழகான மனைவி அமைவாள். கோப குணம் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். சிலர் தேவையற்றதைப் பேசி, பகைவர்களை உருவாக்கிக் கொள்வார்கள்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். ஜாதகர்தைரியமே இல்லாதவராக இருப்பார். மற்றவர்களுடன் எப்போதும் சண்டை போடுவார். யாரிடமும் அன்புடன்பேசமாட்டார். வீட்டில் ஏதாவது பிரச்சினை இருந்து கொண்டே யிருக்கும். மனைவியுடன் பிரச்சினை இருக்கும். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். தோல் நோய் இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். தைரியசாலியாகவும் பலசாலியாகவும் இருப்பார். தனக்குமேல் யாருமில்லை என்ற நினைப்புடனே எப்போதும் இருப்பார். தந்தையுடன் விவாதம் செய்வார். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சிலர் அரசியல்வாதிகளாக இருப்பார்கள். சிலர் பெரிய பதவிகளில் இருப்பார்கள். சிலர் டாக்டர்களாக இருப்பார்கள். கோப குணம் இருக்கும். தான் கூறுவதை மற்றவர்கள் கேட்கவேண்டும் என்ற நினைப்பு எப்போதும் இருக்கும். ஜாதகருக்கு தன் அன்னையுடன் நல்ல உறவு இருக்காது.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர்நிறைந்த பண வசதியுடன் இருப்பார். பெயர், புகழ் இருக்கும். ஒரு காலில் பிரச்சினை இருக்கும். சிலர் அரசியல்வாதிகளாக இருப்பார்கள். சிலர் அரசியல்வாதிகளின் தொடர்பில் இருப்பார்கள்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு மறுமணம்நடக்கும். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். கோப குணம் இருக்கும். அடிக்கடி ஜுரம் வரும். சொந்த ஊரிலிருந்து வெளியே சென்று சம்பாதிக்க வேண்டிய நிலை இருக்கும். சிலர் தேவையற்ற விஷயங்களில் மூக்கைநுழைப்பார்கள். வீணான செயல்களில் ஈடுபட்டு, மாட்டிக் கொள்வார்கள். அதன்மூலம் வீண்செலவுகள் உண்டாகும்.
செல்: 98401 11534