கன்னி லக்னத்தில் சூரிய பகவான் தன் நண்பரான புதனின் வீட்டில் இருந் தால் ஜாதகர் மெ-ந்த தோற்றத்தைக் கொண்டிருப்பார். செலவுகள் அதிகமாக ஏற்படும். பல வேளைகளில் கஷ்டங்கள் இருக்கும். வாங்கிய பணத்தைக்கூட திரும்பத் தர முடியாத நிலை இருக்கும். ஆனால் ஜாதகர் தனது தைரிய குணத்தால் தன் காரியங்களை முடிப்பார்.
2-ஆம் பாவத்தில் சூரியன் தன் எதிரி யான சுக்கிரனின் துலா ராசியில் நீசமடைகி றார். அதனால் ஜாதகருக்கு குடும்ப சுகம் குறைவாகவே இருக்கும். குடும்பத்தில் பல கஷ்டங்கள் ஏற்படும். பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். பணம் சேமிப்பது சிரமமான விஷயமாக இருக்கும்.
3-ஆம் பாவத்தில் சூரியன் விருச்சிக ராசியில் இருந்தால் ஜாதகர
கன்னி லக்னத்தில் சூரிய பகவான் தன் நண்பரான புதனின் வீட்டில் இருந் தால் ஜாதகர் மெ-ந்த தோற்றத்தைக் கொண்டிருப்பார். செலவுகள் அதிகமாக ஏற்படும். பல வேளைகளில் கஷ்டங்கள் இருக்கும். வாங்கிய பணத்தைக்கூட திரும்பத் தர முடியாத நிலை இருக்கும். ஆனால் ஜாதகர் தனது தைரிய குணத்தால் தன் காரியங்களை முடிப்பார்.
2-ஆம் பாவத்தில் சூரியன் தன் எதிரி யான சுக்கிரனின் துலா ராசியில் நீசமடைகி றார். அதனால் ஜாதகருக்கு குடும்ப சுகம் குறைவாகவே இருக்கும். குடும்பத்தில் பல கஷ்டங்கள் ஏற்படும். பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். பணம் சேமிப்பது சிரமமான விஷயமாக இருக்கும்.
3-ஆம் பாவத்தில் சூரியன் விருச்சிக ராசியில் இருந்தால் ஜாதகர் தைரிய குணம் கொண்டவராக இருப்பார். உடன்பிறப்புகளுடன் சுமா ரான உறவே இருக்கும். ஜாதகர் பணம் சம்பாதிப்பதற்காக பல இடங்களுக்கும் பயணிப்பார்.
4-ஆம் பாவத்தில் சூரிய பகவான் குருவின் தனுசு ராசியில் இருந்தால் தாயின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும். பூமி, வாகனம் வாங்குவதில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் வெளித் தொடர்புகளைக்கொண்டு பணம் சம்பாதிப்பார். செலவுகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களே அவரை ஏமாற்றுவார்கள்.
5-ஆம் பாவத்தில் சூரிய பகவான் தன் எதிரியான சனியின் மகர ராசியில் இருந்தால் பிள்ளைகளால் தொல்லைகள் உண்டாகும். ஜாத கருக்கு படிப்பில் பிரச்சினை ஏற்படும். அதிக செலவுகளால் மனக்கஷ்டம் இருக்கும். ஜாதகர் தன் வெளித் தொடர்புகளைக்கொண்டு பணம் சம்பாதிப்பார்.
6-ஆம் பாவத்தில் சூரிய பகவான் சனியின் கும்ப ராசியில் இருந்தால் ஜாதகருக்கு செலவுகள் அதிகமாக உண்டாகும். பல சிரமங்களை சந்தித்து கடுமையாக உழைத்து தன் குடும்பத்தைக் காப்பாற்று வார். சில விஷயங்களில் ஜாதகருக்கு வெற்றி கிடைக்கும். ஆனால் அதற்கான முழுமையான பலன் அவரை வந்துசேராது.
7-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் சூரிய பகவான் இருந்தால் ஜாதகருக்கு சந்தோஷத்தில் குறையிருக்கும். வியாபாரம் செய்து தன் குடும்பத்தைக் காப்பாற்றுவார். வெளித் தொடர்பு களால் ஆதாயம் கிட்டும். சூரியன் 7-ல் இருப்ப தால், சில நேரங்களில் வியாபாரத் தில் நஷ்டம் ஏற்படும்.
8-ஆம் பாவத்தில் சூரிய பகவான் செவ்வாயின் மேஷ ராசியில் உச்சமடைகிறார். அதனால் பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். ஜாதகருக்கு அதிக செலவுகள் உண்டாகும். அவ்வப்போது நோய்கள் வரும். வெளித் தொடர்புகளை வைத்து ஜாதகர் பணம் சம்பாதிப்பார்.
9-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் சூரியன் இருந்தால் அதிர்ஷ்டத் தில் தடைகள் ஏற்படும். ஜாத கருக்கு தர்மச் செயல்கள் செய்வதில் அதிக ஈடுபாடு இருக்காது. வாழ்க்கையில் பல பிரச்சினைகள் ஏற்படும். வெளித் தொடர்பைக்கொண்டு மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும். பலருக்கு கடவு ளின்மீது வெறுப்புண்டாகும்.
10-ஆம் பாவத்தில் சூரியன் தன் நண்பரான புதனின் மிதுன ராசியில் இருந்தால் வியாபாரத்தில் தடைகள் ஏற்படும். தந்தையுடனான உறவு சரியாக இருக்காது. செலவுகள் அதிகமாக இருக் கும். ஜாதகர் பணம் சம் பாதிக்க கடுமையாக உழைக்க வேண்டும்.
11-ஆம் பாவத்தில் கடக ராசியில் சூரியன் இருந்தால் ஜாதகருக்கு நல்ல பண வருமானம் இருக்கும். அதற் கேற்ப அதிக செலவுகளும் இருக்கும். வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படும். வெளித் தொடர்பால் சந்தோஷம் கிடைக்கும்.
12-ஆம் பாவத்தில் சுய வீட்டில், சிம்ம ராசியில் சூரிய பகவான் இருந்தால் செலவுகள் அதிகமாக ஏற்படும். வெளித் தொடர்புகளால் ஜாதகருக்குப் பெயரும் புகழும் கிடைக்கும். அதன்மூலம் அவர் பணம் சம்பாதிப்பார். அதனால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
செல்: 98401 11534