தனுசு லக்னத்தில் சூரிய பகவான் இருந்தால் ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டவர். பல சாலியாகவும், தைரியசாலியாகவும், அதிர்ஷ்டசாலியாகவும் இருப்பார். தர்மத்தைக் கடைப்பிடிப்பார். கடவுள்பக்தி உள்ளவராக இருப்பார்.
2-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் சூரிய பகவான் இருந்தால் பணத்தை சேமிப்பதில் பல பிரச்சினைகள் இருக்கும். கடுமையான போட்டிகளுக்குப்பிறகு, ஜாதகர் வெற்றிபெறுவார். குடும்பத்தில் கருத்து வேறுபாடு இருக்கும். அனைவருமே நன்றாக இருக்கவேண்டுமென ஜாதகர் நினைப்பார். தர்மத்தைக் கடைப்பிடிப்பார்.
3-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் சூரிய பகவான் இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். உடன்பி
தனுசு லக்னத்தில் சூரிய பகவான் இருந்தால் ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டவர். பல சாலியாகவும், தைரியசாலியாகவும், அதிர்ஷ்டசாலியாகவும் இருப்பார். தர்மத்தைக் கடைப்பிடிப்பார். கடவுள்பக்தி உள்ளவராக இருப்பார்.
2-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் சூரிய பகவான் இருந்தால் பணத்தை சேமிப்பதில் பல பிரச்சினைகள் இருக்கும். கடுமையான போட்டிகளுக்குப்பிறகு, ஜாதகர் வெற்றிபெறுவார். குடும்பத்தில் கருத்து வேறுபாடு இருக்கும். அனைவருமே நன்றாக இருக்கவேண்டுமென ஜாதகர் நினைப்பார். தர்மத்தைக் கடைப்பிடிப்பார்.
3-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் சூரிய பகவான் இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். உடன்பிறப்புகளுடனான உறவில் அவருக்கு மனக் கஷ்டம் இருக்கும். கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருப்பார்.கடுமையாக உழைத்து வெற்றிபெறுவார். பெயர், புகழுடன் விளங்குவார். பலசாலியாக இருப்பார்.
4-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் சூரிய பகவான் இருந்தால் அன்னையின் உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகருக்கு வீடு, மனை இருக்கும். அதிர்ஷ்டசாலியாக இருப்பார். தர்ம காரியங்களில் ஈடுபடுவார். பணக்காரராக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். தைரிய குணம் கொண்டவராகத் திகழ்வார். சந்தோஷமாக வாழ்வார்.
5-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் சூரியன் உச்சமடைகிறார். குழந்தை பாக்கியம் இருக்கும். பிள்ளைகளால் பெயர், புகழ் கிடைக்கும். ஜாதகர் நிறைய படித்தவராகவும் அறிவாளியாகவும் இருப்பார். தர்ம சிந்தனை கொண்டவர். அனைவரிடமும் ஆவேசத்துடன் பேசுவார். பணம் வருவதில் தடையிருக்கும்.
6-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் சூரிய பகவான் இருந்தால் பகைவர்கள் குறைவார்கள். ஜாதகர் எதிரிகளின்மீது தன் பலத்தைக் காட்டுவார். பல சிக்கல்களையும் தைரியமாக சந்திப்பார். அதிர்ஷ்டசாலியாக இருப்பார். நன்கு பணம் சம்பாதிப் பார்.
7-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சூரிய பகவான் இருந்தால் ஜாதகருக்கு மனைவியால் சந்தோஷம் கிடைக்கும். இல்வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். ஜாதகர் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை உள்ளவராக இருப்பார். கடவுள்பக்தி கொண்டவராக இருப்பார்.
8-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் சூரிய பகவான் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். முன்னோரின் சொத்து கிடைக்கும்.
அதேசமயம் வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படலாம். வாழ்க்கையின் பிற்பகுதி நன்றாக இருக்கும்.
9-ஆம் பாவத்தில் சுய வீட்டில், சிம்ம ராசியில் சூரிய பகவான் இருந்தால் ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். தர்மத்தைக் கடைப் பிடிப்பார். பெயர், புகழுடன் சந்தோஷமாக வாழ்வார்.
10-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் சூரிய பகவான் இருந்தால் ஜாதகருக்கு தந்தையின் ஆதரவு எப்போதுமிருக்கும். அரசாங்க விஷயத்தில் பெயர், புகழ் கிடைக்கும். ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். தர்ம காரியங்களைச் செய்வார்.
11-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் சூரிய பகவான் நீசமடைகிறார்.
பணவரவு சுமாராக இருக் கும். பல சிக்கல்களை ஜாதகர் சந்திப்பார். ஜாதகர் படிப் பாளியாகவும் புத்திசாலியாகவும் இருப்பார். நல்ல குணமுள்ளவராக இருப்பார். தர்ம சிந்தனையுடன் வாழ்வார். பேச்சாற்றல் உள்ளவராக இருப்பார்.
12-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் சூரிய பகவான் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் வெளித் தொடர்பு களின்மூலம் பணத்தை சம்பாதிப்பார். தர்ம காரியங் களில் ஈடுபடு வார். இல்வாழ்க் கை சுமாராக இருக்கும்.
செல்: 98401 11534