ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் வசீகரமான தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள். அழகான ஆடைகளை அணிவார்கள். உடல்நலம் நன்றாக இருக்கும். அறிவாளியாகவும் தைரியசாலியாகவும் இருப்பார்கள். நல்ல பணவசதி உள்ளவர்கள்.
ரிஷப லக்னத்தில் சூரியன் இருந்தால் தாயாரின் உடல்நலம் நன்றாக இருக்கும். பூமி, வாகனம் இருக்கும். சூரியனின் பார்வை 7-ஆம் பாவத்திற்கு இருப்பதால், வர்த்தகம் நன்கு நடக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். மனைவியால் மகிழ்ச்சி கிடைக்கும்.
ரிஷபத்துக்கு 2-ஆம் பாவத்தில் சூரியபகவான் தன் நண்பரான புதன் வீட்டில் இருந்தால், நல்ல பணவரவு, சொத்து இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆனால் அன்னைக்கு உடல்நல பாதிப்பு உண்டாகும். சூரியன் 8-ஆம்
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் வசீகரமான தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள். அழகான ஆடைகளை அணிவார்கள். உடல்நலம் நன்றாக இருக்கும். அறிவாளியாகவும் தைரியசாலியாகவும் இருப்பார்கள். நல்ல பணவசதி உள்ளவர்கள்.
ரிஷப லக்னத்தில் சூரியன் இருந்தால் தாயாரின் உடல்நலம் நன்றாக இருக்கும். பூமி, வாகனம் இருக்கும். சூரியனின் பார்வை 7-ஆம் பாவத்திற்கு இருப்பதால், வர்த்தகம் நன்கு நடக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். மனைவியால் மகிழ்ச்சி கிடைக்கும்.
ரிஷபத்துக்கு 2-ஆம் பாவத்தில் சூரியபகவான் தன் நண்பரான புதன் வீட்டில் இருந்தால், நல்ல பணவரவு, சொத்து இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆனால் அன்னைக்கு உடல்நல பாதிப்பு உண்டாகும். சூரியன் 8-ஆம் பாவத்தைப் பார்ப்பதால், பூர்வீக சொத்து கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. வர்த்தகம் நன்றாக நடக்கும்.
3-ஆம் பாவத்தில் சூரியன், சந்திரனின் கடக ராசியில் இருந்தால், பூமி பாக்கியம் கிடைக்கும். சொந்தமாக வீடு இருக்கும். தாயாரின் உடல்நலம் நன்றாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். ஜாதகர் கோபகுணம் கொண்டவராக இருப்பார். பல செயல்களிலும் வெற்றி கிடைக்கும். உடன்பிறப்புகளால் சந்தோஷம் கிடைக்கும்.
4-ஆம் பாவத்தில், சுய வீட்டில் சூரியன் இருந் தால், பூமி வாங்கும் அதிர்ஷ்டம் உண்டு. நல்ல பண வரவு இருக்கும். உல்லாசமான வாழ்க்கை அமையும்.
ஜாதகர் வசீகரமான தோற்றத்தைக் கொண்டி ருப்பார். பிறரிடம் தன்னை கம்பீரமாகக் காட்டிக் கொள்வார். ஆனால், மனதிற்குள் அமைதியற்ற நிலை இருக்கும்.
5-ஆம் பாவத்தில், திரிகோணத்தில் சூரியன் இருந்தால், படிப்பு விஷயம் நன்றாக இருக்கும். பிள்ளைகளால் நல்ல பெயர் கிடைக்கும். ஜாதகர் ஈர்க்கக்கூடிய தோற்றத் தைக் கொண்டிருப்பார். அறிவாளியாக இருப்பார். எதையும் தொலைநோக்குடன் பார்ப்பார். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கும். பூமி பாக்கியம் கிடைக்கும். தாயால் சந்தோஷம் உண்டாகும்.
6-ஆம் பாவத்தில் சூரியன் தன் எதிரியான சுக்கிரனின் ராசியில் இருந்தால், பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். ஆனால், சூரியன் எரிக்கக்கூடிய கிரகம் என்பதால் பகைவர்கள் குறைவார்கள். அன்னைக்கு உடல்நல பாதிப்பு உண்டாகும். பூமி, வீடு வாங்கும் போது பிரச்சினை ஏற்படும்.
7-ஆம் பாவத்தில் சூரியன் இருந்தால், மனைவி அழகாக இருப் பாள். பணவரவு நன்றாக இருக்கும். வர்த்தகத்தில் வெற்றி கிடைக்கும். பூமி வாங்கும் பாக்கியம் உண்டு. சொந்தத்தில் வீடு இருக்கும்.
8-ஆம் பாவத்தில் சூரியன், தன் நண்பர் குருவின் ராசியில் இருந் தால், சிலர் வெளியே சென்று வாழ் வார்கள். பூமி, வீடு வாங்கும்போது பிரச்சினை இருக்கும். 2-ஆம் பாவத்தை சூரியன் பார்ப்பதால், குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் தோன்றும்.
9-ஆம் பாவத்தில் சனியின் வீட்டில் சூரியன் இருந்தால், அன் னைக்கு உடல்நல பாதிப்பிருக்கும். பூமி, சொந்தவீடு ஆகியவற்றில் பிரச்சினை இருக்கும். ஆனால் கடுமை யான உழைப்பிற்குப் பிறகு சந்தோ ஷச் சூழல் உண்டாகும். பணவரவு இருக்கும். அதிர்ஷ்டம் தேடிவரும்.
10-ஆம் பாவத்தில் கும்ப ராசியில் சூரியன் இருந்தால், ஜாதகரின் தந்தைக்கு சில பிரச்சினைகள் உண்டாகும். அரசாங்க விஷயங் களில் சில தடைகள் ஏற்படும். சிலருக்கு வெற்றியில் தடை இருக்கும்.
சுமாரான வெற்றி கிடைக்கும்.
11-ஆம் பாவத்தில் (லாப ஸ்தானத் தில்) குருவின் மீன ராசியில் சூரியன் இருந்தால் பணவசதி நன்றாக இருக்கும். தாயாரால் சந்தோஷம் கிடைக்கும். பூமி, வாகனம் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.
12-ஆம் பாவத்தில் சூரியன் தன் நண்பரான செவ்வாயின் வீட்டில் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். அன்னைக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும். சிலர் வெளியே சென்று வாழ்வார்கள். அதன்மூலம் பெரிய அளவில் லாபம் கிடைக்கும்.
செல்: 98401 11534