கடக லக்னத்தில் சூரியன் இருந்தால் ஜாதகர் பலசாலியாக இருப்பார். நல்ல தோற்றத்தைக் கொண்டிருப்பார். குடும்பத் தினரின் ஆதரவிருக்கும். அவரை அனைவரும் மதிப்பார்கள். மரியாதைக்குரிய பல செயல்களைச் செய்வார். வயிற்றில் பித்த நோய் இருக்கும்.
2-ஆம் பாவத்தில் சுய வீட்டில், குடும்ப ஸ்தானத் தில் சூரியன் இருந்தால் பண வரவிருக்கும். குடும்பசுகம் இருக்கும். பெயர், புகழ் கிடைக்கும். சிலர் வெளியே சென்று பெரிய அளவில் வர்த்தகம் செய்வார்கள்.
3-ஆம் பாவத்தில் கன்னி ராசியில் சூரியன் இருந்தால் ஜாதகர் பலசாலியாக இருப்பார். எப்போதும் தைரியமாக இருப்பார். உடன்பிறப்பு களுடனான உறவில் குறை இருக்கும். ஜாதகர் ருசித்து சாப்பிடுவார். நிறைய பணம் சம்பாதிப்பார்.
4-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் சூரிய பகவான் நீசமடைகிறார். அதனால் அன்னை யின் உடல்நலத்தில் பாதிப்பிருக்கும். பூமி, மனை வாங்குவதில் பிரச்சினை இருக்கும். வாகனம் வாங்குவதில் தடை உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து கிடைக்காது. சிலர் புகழுக்காக கடுமையாக உழைப்பார்கள். பணத்தை நிறைய செலவழிப்பார்கள்.
5-ஆம் பாவமான திரிகோணத்தில், செவ்வாயின் விருச்சிக ராசியில் சூரியன் இருந்தால் குழந்தை பிறப் பதில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு பிள்ளைகளால் தொல்லைகள் உண்டாகும். ஆனால் பிள்ளைகள் புகழுடன் வாழ்வார்கள். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். நிறைய பணம் சம்பாதிப்பார். வாழ்க்கையில் பல வெற்றிகளைக் காண்பார். அரசியலில் சிலருக்கு பெரிய பதவிகள் கிடைக்கும்.
6-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் சூரியன் இருந்தால் ஜாதகரைப் பார்த்து பகைவர்கள் பயப்படுவார்கள். ஜாதகர் விரோதிகளை வெல்வார். ஆனால் 2-ஆம் பாவாதிபதியான சூரியன் 6-ஆம் பாவத்தில் இருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஜாதகருக்கு கருத்து வேறுபாடு உண்டாகும். பணத்தைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் செலவழிப்பார்.
7-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் சூரியன் இருந்தால் ஜாதகருக்கு மனைவியுடன் கருத்து வேறுபாடு இருக்கும். அவர்கள் ஒருவரையொருவர் பகைவரைப்போல நினைப்பார்கள். வர்த்தகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பிறப்புறுப்பில் பிரச்சினை இருக்கும். இல்வாழ்க்கையில் கடுமையான போராட்டம் இருக்கும்.
8-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் சூரியன் இருந்தால் சில நேரங்களில் உடல்நலத்தில் பாதிப்புண்டாகும். பூர்வீக சொத்து வந்துசேர்வதில் பல தடைகள் ஏற்படும். ஜாதகர் நல்ல தோற்றத்தைக் கொண்டிருப்பார்.
9-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் சூரியன் இருந்தால் ஜாதகர் பாக்கியசாலியாகவும் பலசாலியாகவும் இருப்பார். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். ஜாதகர் தர்ம காரியங்களில் ஈடுபடுவார். பெயர், புகழுடன் வாழ்வார். அதேசமயம் சுயநலவாதியாக இருப்பார். கடவுள் நம்பிக்கை உள்ளவர்.
10-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் சூரியன் உச்சமடைகி றார். அதனால் தந்தையால் மகிழ்ச்சி கிடைக்கும். வர்த்தகத்தில் பெயர், புகழ் கிடைக்கும். அரசாங்க விஷயங்களில் ஆதாயம் கிடைக்கும். ஜாதகர் பெரிய பதவியில் இருப்பார். அவரை எல்லாரும் மதிப்பார்கள்.
11-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் சூரியன் இருந்தால் ஜாதகருக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். குடும்ப சந்தோஷத்தில் குறையிருக்கும். ஜாதகர் பணவசதி யுடன் வாழ்வார். புகழ் கிடைக்கும்.
12-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சூரியன் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித் தொடர்புகளால் ஜாதகர் பணம் சம்பாதிப்பார். ஆனால் பணத்தை சேமித்துவைக்க மாட்டார்.
செல்: 98401 11534