மிதுன லக்னத்தில் சூரிய பகவான் லக்னத்தில், தன் நண்பர் புதனின் வீட்டில் இருந்தால் ஜாதகர் பார்ப்பதற்கு பிரகாசமாகத் தெரிவார். தைரியசாலியாகவும் பலசாலியாகவும் இருப்பார். கடுமையாக உழைப்பார். நன்கு தன் தொழிலைச் செய்வார். இல்வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். பிறரை ஈர்க்கக்கூடிய சக்தி கொண்டவர். கோப குணம் உள்ளவராக இருப்பார்.
மிதுன லக்னத்திற்கு 2-ஆம் பாவத்தில், குடும்ப ஸ்தானத்தில் சூரிய பகவான் தன் நண்பர் சந்திரனின் கடக ராசியில் இருந்தால், ஜாதகர் கடுமையாக உழைத்து தன் குடும்பத்தைக் காப்பாற்றுவார். நன்கு பணம் சம்பாதித்து சந்தோஷமாக வாழ்வார். உடன்பிறந்தோரால் சில பிரச்சினைகள் ஏற்படும். அதனால் மன அமைதி கெடும். முன்னோரின் சொத்தில் பிரச்சினை ஏற்
மிதுன லக்னத்தில் சூரிய பகவான் லக்னத்தில், தன் நண்பர் புதனின் வீட்டில் இருந்தால் ஜாதகர் பார்ப்பதற்கு பிரகாசமாகத் தெரிவார். தைரியசாலியாகவும் பலசாலியாகவும் இருப்பார். கடுமையாக உழைப்பார். நன்கு தன் தொழிலைச் செய்வார். இல்வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். பிறரை ஈர்க்கக்கூடிய சக்தி கொண்டவர். கோப குணம் உள்ளவராக இருப்பார்.
மிதுன லக்னத்திற்கு 2-ஆம் பாவத்தில், குடும்ப ஸ்தானத்தில் சூரிய பகவான் தன் நண்பர் சந்திரனின் கடக ராசியில் இருந்தால், ஜாதகர் கடுமையாக உழைத்து தன் குடும்பத்தைக் காப்பாற்றுவார். நன்கு பணம் சம்பாதித்து சந்தோஷமாக வாழ்வார். உடன்பிறந்தோரால் சில பிரச்சினைகள் ஏற்படும். அதனால் மன அமைதி கெடும். முன்னோரின் சொத்தில் பிரச்சினை ஏற்படும்.
3-ஆம் பாவத்தில் சூரியன் சுயவீட்டில் இருந்தால், தம்பி- தங்கை நன்றாக இருப்பார்கள். ஜாதகர் தைரிய சாலியாக இருப்பார். ஆனால், சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்தைப் பார்ப்பதால், சற்று மன அமைதியில்லாமல் இருப்பார். தர்மகாரியங்களில் ஈடுபாடு குறைவாக இருக்கும். வாழ்க்கையில் போராடி, வெற்றிபெறுவார்.
4-ஆம் பாவத்தில் சூரியன் இருந்தால் பூமி, வாகனம் வந்துசேரும். புதனின் கன்னி ராசியில் சூரியன் இருப்பதால் ஜாதகருக்கு தாயாரால் சந்தோஷம் கிடைக்கும். புகழுடன் வாழ்வார். கடுமையாக உழைப்பார். சிலருக்கு தந்தையின் சொத்தில் பிரச்சினை இருக்கும்.
5-ஆம் பாவத்தில் மூலத் திரிகோணத்தில் சூரிய பகவான் நீசமடைகிறார். அதனால் குழந்தை பாக்கியத்தில் பிரச்சினை இருக்கும். குழந்தைகளால் கஷ்டம் இருக்கும். ஜாதகரின் மேற்படிப்பில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் பல தகிடுதத்தங்களைச் செய்து வாழ்வார். தைரியம் குறைவாக இருக்கும்.
6-ஆம் பாவத்தில் சூரிய பகவான் ரோக, ருண ஸ்தானத்தில், தன் நண்பர் செவ்வாயின் ராசியில் இருந்தால், ஜாதகர் பகைவர்களை வெல்வார். தைரியசாலியாக இருப்பார். சகோதரர்களுடன் உறவு சரியாக இருக்காது. கடுமையாக உழைத்து வாழ்க்கையை நடத்துவார்.
7-ஆம் பாவத்தில் சூரியன், குருவின் தனுசு ராசியில் இருந்தால், வர்த்தகத்தில் வெற்றிகிடைக்கும். ஜாதகர் மனைவியுடன் சந்தோஷமாக வாழ்வார். தைரியசாலியாக இருப்பார். கடுமையாக உழைத்துப் பணத்தை சம்பாதிப்பார். உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகர் நல்ல தோற்றத்தைக் கொண்டிருப்பார்.
8-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் சூரிய பகவான் இருந்தால், உடல்நலத்தில் சிறிய பிரச்சினைகள் இருக்கும். உடன்பிறந்தோரிடம் சீரான உறவிருக்காது. தைரியம் குறையும். மன அமைதி கெடும். பல நேரங்களில் எதிர்மறை சிந்தனை வரும்.
9-ஆம் பாவத்தில் சூரிய பகவான் சனியின் கும்ப ராசியில் இருந்தால், ஜாதகர் பல கஷ்டங்களைக் வெற்றி கடந்து பெறுவார். சிலர் அலட்சிய குணத்து டன் இருப்பார்கள். சிலர் கடவுளை வணங்க மாட்டார்கள். ஜாதகர் நல்ல தோற்றத்தைக் கொண்டிருப்பார்.
10-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் சூரியன் இருந்தால் ஜாதகருக்கு தந்தையின் ஆதரவிருக்கும்.
அரசாங்கத்தால் பயனிருக்கும். பெயர், புகழ் கிடைக்கும்.
ஜாதகர் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவார். பூமி, வாகனம் வந்துசேரும். பிள்ளைகளால் சந்தோ ஷம் கிடைக்கும்.
ஜாதகர் மகிழ்ச்சியாக வாழ்வார்.
11-ஆம் பாவத்தில் மேஷ ராசியில் சூரிய பகவான் உச்சமடைகி றார். அதனால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். நன்கு பணம் சம்பாதித்து சந்தோஷமாக வாழ் வார். உடல்நலம் நன் றாக இருக்கும். யாரை யும் விட்டெறிந்து பேசுவார்.
12-ஆம் பாவத்தில் விரய ஸ்தானத்தில் சூரிய பகவான், தன் எதிரியான சுக்கிரனின் வீட்டில் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் வெளித்தொடர்புகளைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பார். உடன்பிறப்பு களுடன் உறவு சரியாக இருக்காது. மன தைரியம் குறையும். ஆனால் ஜாதகர் வெளியே தைரியசாலியைப்போல காட்டிக்கொள்வார். கடுமையாக உழைப்பார்.
செல்: 98401 11534