'பிரகத் சம்ஹிதா' என்னும் நூல் கூறும் சில ஜோதிட விதிகளைக் காண்போம்.
மேஷ லக்னத்தில் சூரியன் தன் நண்பரான செவ்வாயின் ராசியில் இருந்தால், அந்த ஜாதகர் நல்ல உடல் நலத்துடன் இருப்பார். சராசரியான உயரத்தைக் கொண்டிருப்பார்.
தைரியசாலி. படித்தவராக இருப்பார். அவரின் பிள்ளைகள் நல்லநிலையில் இருப்பார் கள். சாதனைகள் படைப்பார்கள்.
ஆனால், சூரியன் லக்னத் தில் இருக்கும்போது, வியாபாரம், விவசாயம் ஆகியவற்றில் தடைகள் உண்டாகி, பின்னர் சரியாகும். மனைவியின் உடல்நலத்தில் பாதிப்பு உண்டாகும். சூரியன் 7-ஆம் பாவத்தை- தன் நீச ஸ்தானத்தைப் பார்க்கிறார். அதனால், இல்வாழ்க்கையில் சந்தோஷமற்ற நிலை இருக்கும். சிலரின் மனைவி அழகானவர்களாக இருக்கமாட்டார்கள்.
சூரியன் மேஷ லக்னத்திற்கு 2-ஆம் பாவத்தில் ரிஷப ராசியில் இருந்தால், அதன் அதிபதி சுக்கிரன் சூரியனுக்கு விரோதி. அதனால்,பல நேரங்களில் பணக் கஷ்டத்தை உண்டாக்குவார். குழந்தை பிறப்பதில் பிரச்சினை இருக்கும். படிக்கும்போது தடைகள் உண்டாகும். சூரியன் தன் 7-ஆவது பார்வையால் 8-ஆம் பாவத்தைப் பார்ப்பதால், நீண்ட ஆயுள் இருக்கும். திடீரென பணம் வரும். குடும்பத்தில் அவர் கூறுவதை எல்லாரும் கேட்பார்கள்.
சூரியன் மேஷ லக்னத்திற்கு 3-ஆம் பாவத்தில் மிதுனத்தில் இருந்தால், அந்த ஜாதகர் அறிவாளியாக இருப்பார். சூரியன் தன் 7-வது பார்வையால் 9-ஆவது பாவத்தைப் பார்ப்பார்.
அந்த வீடு குருவின் வீடாக இருப்பதால், அதிர்ஷ்டம் உண்டாகும். தர்மத்தை வாழ்வில் கடைப்பிடிப்பார். பலசாலியாக இருப்பார். தன் பிள்ளைகளால் பெயர்,புகழ் கிடைக்கும்.
மேஷ லக்னத்திற்கு 4-ஆம் பாவத்தில் சூரியன் கடகத்தில் இருந்தால், சொந்தத்தில் வீடு இருக்கும். தாயின் உடல்நலம் நன்றாக இருக்கும். நல்ல பணவசதி இருக்கும். சூரிய ஒளியால் மூளை அருமையாக வேலை செய்யும். சூரிய னின் 7-ஆவது பார்வை 10-ஆவது பாவத்தில் இருக்கும். அதன் அதிபதி யாக சனி இருப்பதால், தந்தை- மகன் உறவில் பிரச்சினை இருக்கும். எனினும், ஜாதகர் புகழுடன் இருப்பார்.
5 ஆம் பாவமான சிம்மத்தில் சூரியன் இருந்தால், அந்த ஜாதகர் படிப்பாளியாக- பிறரை ஈர்க்கக் கூடியவராக இருப்பார். நல்ல பேச்சாற்றல் கொண்டவர். பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள். அவர் களால் பெற்றோருக்கு புகழ் கிடைக்கும். 5-ல் இருக்கும் சூரியன் 7-ஆவது பார்வையால். சனியின் ராசியான கும்பத்தைப் பார்க்கிறார். அதனால், சில நேரங்களில் பணம் தாமதமாக வரும். அந்த ஜாதகர் கடுமையாகப் பேசக்கூடியவராக இருப்பார். பிறரை மதிக்கமாட்டார். அதனால் முதுகிற்குப் பின்னால் அவரை தாழ்த்திப் பேசுவார்கள்.
6 ஆம் பாவமான கன்னி ராசியில் சூரியன் இருந்தால், படிப்பில் பிரச்சினை இருக்கும். 6-ஆவது பாவத்தில் உஷ்ண கிரகமான சூரியன் பலம்பெற்று, ஜாதகரை நல்ல படிப்பாளியாக்குவார். பகைவரை வெல்பவராக இருப்பார். சில நேரங்களில் ஆடம் பரமாக செலவு செய்வார். சிலர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வார்கள்.
பிள்ளைகளின்மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்.
சூரியன் 7-ஆம் பாவமான துலாமில் இருந்தால், மெலிந்த சரீரத்தைக் கொண்டிருப்பார்கள்.சுயநலம் உள்ளவர்கள். பல பித்தலாட்டங்களைச் செய்பவர்களாக இருப்பார்கள்.
8-ஆம் பாவமான விருச்சிக ராசியில் சூரியன் இருந்தால், அவர் 7ஆவது பார்வையால் 2-ஆம் பாவத்தைப் பார்ப்பார். அந்த ஜாதகர் பணத்தை சம்பாதிப்பதற்காக கடுமையாக உழைப்பார். எனினும், மனதில் ஒரு குறை இருக்கும்.பிள்ளைகளால் ஏதாவது பிரச்சினைகள் உண்டாகும். எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பார். திடீரென பண வரவு இருக்கும்.
9-ஆவது பாவமான தனுசு ராசியில் சூரியன் இருந்தால், அவர் 7-ஆவது பார்வையால் 3-ஆவது பாவத்தைப் பார்க்கிறார். அவருக்கு நல்ல உடன்பிறப்புகள் இருப்பார்கள். கடுமையாக உழைப்பவர்கள். நேர்மை குணம் கொண்டவர்கள். தானம் செய்பவராக இருப்பார்கள். வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நிறைய நடக்கும்.
10-ஆவது பாவமான மகர ராசியில் சூரியன் இருந்தால்,வர்த்தகம் செய்பவர்களுக்கு சிறிய பிரச்சினைகள் உண்டாகும். ஜாதகர் பல மொழிகள் அறிந்தவராக இருப்பார். கோபகுணம் கொண்டவராகவும், ஆணவம் உள்ளவராகவும் இருப்பார். தைரியசாலி.
11-ஆவது பாவமான கும்ப ராசியில் சூரியன் இருந்தால், அந்த ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார்.
பெரும்பாலானவர்கள் ஒரேயொரு குழந்தை உள்ளவர்களாக இருப்பார்கள். கடுமையாகப் பேசக் கூடியவர்கள். செயல்களில் மிகுந்த கவனம் உள்ளவர்கள். உழைத்து, பணக்காரராக வருவார்கள்.
12-ஆவது பாவமான மீன ராசியில் சூரியன் இருந்தால், அவர் 7-ஆவது பார்வையால் புதனின் கன்னி ராசியைப் பார்க்கிறார். அதனால், அந்த ஜாதகர் பகைவரை வெல்வார். எனினும், மனதில் எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டேயிருப்பார். சிரமப்பட்டு படித்து, பட்டம் பெறுவார். அதிகமாக செலவுகள் செய்யக்கூடியவராக இருப்பார். பிள்ளை களின்மீது அளவற்ற ஈடுபாடு உள்ளவர்கள்.
செல்: 98410 11534