துலா லக்னத்தில், சுக்கிரனின் ராசியில் சூரிய பகவான் நீசமடைகிறார். ஜாதகர் மெலிந்த தோற்றத்தைக் கொண்டிருப்பார். அடிக்கடி தலைவலி வரும். தைரியம் குறைவாக இருக்கும். பித்தம் அதிகமாக இருக்கும்.

2-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் சூரியன் இருந்தால் ஜாதகருக்கு பண வரவு இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். ஜாதகர் பணத்தை சேமிப்பார். மற்றவர்களை ஈர்க்குமளவுக்கு தோற்றத்தைக் கொண்டிருப்பார். திறமையாகப் பேசுவார். பணக்காரராக இருப்பார்.

3-ஆம் பாவத்தில் சூரியன் குருவின் தனுசு ராசியில் இருந்தால் ஜாதகருக்கு உடன்பிறப்புகளால் சந்தோஷம் இருக்கும். அவர் தன்னம்பிக்கையுடன் வாழ்வார். நன்கு பணம் சம்பாதிப்பார்.

Advertisment

ss

4-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் சூரியன் இருந்தால் ஜாதகருக்கு பூமி, வீடு வாங்குவதில் பிரச்சினை ஏற்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். வீட்டில் உள்ளவர்கள் அவரை ஏமாற்ற முயற்சிப்பார் கள். வர்த்தகத்தில் கடுமையான போட்டி யிருக்கும். ஜாதகர் கடுமையாக உழைத்துப் பணத்தை சம்பாதிப்பார். பூர்வீக சொத்து கிடைப்பதில் பிரச்சினை இருக்கும்.

5-ஆம் பாவத்தில் திரிகோணத்தில் சனியின் கும்ப ராசியில் சூரியன் இருந்தால் ஜாதகருக்கு அவருடைய பிள்ளைகளால் மன அமைதி கெடும். வர்த்தகத்தில் சுமாரான லாபமிருக்கும். படிப்பு விஷயத்தில் பல சிக்கல்கள் ஏற்படும்.

6-ஆம் பாவத்தில் குரு பகவானின் மீன ராசியில் சூரிய பகவான் இருந்தால் ஜாதகர் பல பகைவர்களை சந்திக்க வேண்டிய திருக்கும். ஆனால், அவர்களுடன் மோதி ஜாதகர் வெற்றிபெறுவார். நன்கு பணம் சம்பாதிப்பார். தைரியமாக செயல்படுவார். பிறரிடம் மிரட்டுகிற பாணியில் பேசுவார்.

7-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் சூரிய பகவான் உச்சமடைகிறார். ஜாதகரின் மனைவி அழகாக இருப்பார். ஜாதகருக்கு வர்த்தகத்தில் நல்ல லாபம் கிட்டும். வீட்டில் சந்தோஷம் நிலவும்.

ஜாதகர் பிறரை ஈர்க்கும்வகையில் பேசுவார். வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

8-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் சூரிய பகவான் இருந்தால் பூர்வீக சொத்து விஷயத்தில் சில பிரச்சினைகள் இருக்கும். ஜாதகர் தன் சொந்த ஊரைவிட்டு வெளியே சென்று கடுமையாக உழைத்து நிறைய பணத்தை சம்பாதிப்பார்.

9-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சூரியன் இருந்தால் ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். தர்மச் செயல்களில் ஈடுபடுவார். பக்தியுணர்வு கொண்டவராக இருப்பார். நல்ல வசதியான வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வார்.

10-ஆம் பாவத்தில் சந்திர னின் கடக ராசியில் சூரியன் இருந்தால் வியாபாரத்தில் பெயர், புகழ் கிடைக்கும்.

அரசாங்க விஷயத்தில் ஆதாயம் கிடைக்கும். ஜாதகர் மற்றவர் களை ஈர்க்கும்வகையில் இருப் பார். நன்கு பணம் சம்பாதிப் பார்.

11-ஆம் பாவத்தில் சுய வீட்டில், சிம்ம ராசியில் சூரியன் இருந்தால் ஜாதகருக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். அவர் மற்றவர்களை ஈர்க்கக்கூடிய வகையில் இருப்பார். பிறரிடம் அதிகாரத் தோரணையில் பேசுவார். பயணத்தை மேற் கொண்டு பணம் சம்பாதிப் பார். சூரியன் 5-ஆம் பாவத் தைப் பார்ப்பதால் சிலருக்கு ஒரேயொரு குழந்தை மட்டுமே இருக்கும்.

12-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் சூரியன் இருந்தால் செலவுகள் அதிக மாக இருக்கும். ஜாதகருக்கு வெளித் தொடர்புகளின் மூலம் லாபம் இருக்கும். ஆனால் சம்பாதிப்பதில் பெரும் பகுதியை அவர் செலவழித்து விடுவார். அதனால் கட்டுப்பாட்டுடன், ஊதரித்தனம் இல்லாமல் சிக்கனமாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

செல்: 98401 11534