Advertisment

விருச்சிக லக்னத்திற்கு 12 பாவங்களில் சூரியன்!

/idhalgal/balajothidam/sun-12-bhavas-scorpio-lagna

விருச்சிக லக்னத்தில் சூரியன் 10-க்கு அதிபதியாக, லக்னத்தில், விருச்சிக ராசியில் இருந்தால் ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். கோபகுணம் கொண்டவராக இருப்பார். பார்ப்பதற்கு மிடுக்காக இருப்பார். தந்தையுடன் கருத்து வேறுபாடிருக்கும். பெயர், புகழுடன் சந்தோஷமாக வாழ்வார்.

Advertisment

2-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் சூரியன் இருந்தால் தந்தையின் சொத்து கிடைக்கும். ஜாதகர் பெயர், புகழுடன் இருப்பார். குடும்பம் சந்தோஷமாக இருக்கும். ஜாதகருக்கு தந்தையுடன் சுமாரான உறவே இருக்கும்.

vv

3-ஆம் பாவத்தில் எதிரி சனியின் மகர ராசியில் சூரியன் இருந்தால் ஜாதகருக்கு உடன்பிறப்பு களுடன் உறவு சுமாராகவே இருக்கும். வியாபாரத் தில் சுமாரான லாபம் கிடைக்கும். ஜாதகர் புகழுடனும் தைரியசாலியாகவும் இரு

விருச்சிக லக்னத்தில் சூரியன் 10-க்கு அதிபதியாக, லக்னத்தில், விருச்சிக ராசியில் இருந்தால் ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். கோபகுணம் கொண்டவராக இருப்பார். பார்ப்பதற்கு மிடுக்காக இருப்பார். தந்தையுடன் கருத்து வேறுபாடிருக்கும். பெயர், புகழுடன் சந்தோஷமாக வாழ்வார்.

Advertisment

2-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் சூரியன் இருந்தால் தந்தையின் சொத்து கிடைக்கும். ஜாதகர் பெயர், புகழுடன் இருப்பார். குடும்பம் சந்தோஷமாக இருக்கும். ஜாதகருக்கு தந்தையுடன் சுமாரான உறவே இருக்கும்.

vv

3-ஆம் பாவத்தில் எதிரி சனியின் மகர ராசியில் சூரியன் இருந்தால் ஜாதகருக்கு உடன்பிறப்பு களுடன் உறவு சுமாராகவே இருக்கும். வியாபாரத் தில் சுமாரான லாபம் கிடைக்கும். ஜாதகர் புகழுடனும் தைரியசாலியாகவும் இருப்பார். எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார். கடுமையாக உழைப்பார். நல்ல தோற்றத்தைக் கொண்டிருப்பார்.

4-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் சூரியபகவான் இருந்தால் அன்னையின் உடல் நலத்தில் பிரச்சினை இருக்கும். தாயாருடன் ஜாதகருக்கு கருத்து வேறுபாடிருக்கும். பூமி, வீடு வாங்குவதில் தடைகள் ஏற்படும். வீட்டில் சந்தோஷம் இருக்காது. ஜாதகர் சுயமாக உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றுவார்.

5-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் சூரியபகவான் இருந்தால், ஜாதகர் கூர்மையான அறிவு படைத்தவராக நன்கு படித்தவராக இருப்பார். பெயர், புகழுடன் இருப்பார். பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சிலர் அரசியல் உலகில் பதவியில் இருப்பார்கள்.

6-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் சூரியபகவான் உச்சமடைகிறார். ஜாதகர் தன் பகைவர்களை வெல்வார். அவருக்கு தன் பெற்றோருடன் சுமாரான உறவே இருக்கும்.

அவர்களுடன் அவருக்கு கருத்து வேறுபாடிருக்கும். வியாபாரத்தில் பெயர், புகழ் கிடைக்கும். அரசாங்க விருது கிடைக்கலாம். ஜாதகர் கம்பீரமான தோற்றத்தைக் கொண்டிருப்பார்.

7-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் சூரியபகவான் இருந்தால், ஜாதகருக்கு மனைவியுடன் சுமாரான உறவே இருக்கும். ஜாதகர் பலசாலியாக இருப்பார். வியாபாரத்தில் அவர் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். அப்படி உழைத்தால்தான் வெற்றி கிடைக்கும். ஜாதகர் நல்ல தோற்றத்துடன் இருப்பார். இரக்க குணமுள்ளவராக இருப்பார். மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருக்கும்.

8-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சூரிய பகவான் இருந்தால், ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைப்பதற்கு வாய்ப் பிருக்கிறது. ஜாதகருக்கு தந்தையுடன் கருத்து வேறுபாடிருக்கும். வியா பாரத்தில் கடுமையான போட்டியைக் கடந்து வெற்றி கிடைக்கும்.

9-ஆம் பாவத்தில்... திரிகோணத் தில்... சந்திரனின் கடக ராசியில் சூரியபகவான் இருந்தால், ஜாதகர் படிப்படியாக உயர்வார். அவருக்கு தர்ம காரியங்களில் ஈடுபாடிருக்கும். தந்தை யுடன் அவருக்கு நல்ல உறவிருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

10-ஆம் பாவத்தில் சுய வீட்டில்... சுய ராசியான சிம்ம ராசியில் சூரிய பகவான் இருந்தால், ஜாதகருக்கு தந்தை யின் ஆசீர்வாதம் இருக்கும். அரசாங்க விஷயத்தில் பெயர், புகழ் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். சிலர் அரசியல் உலகில் பெரிய பதவியில் இருப்பார்கள். சிலர் அதிக கோபகுணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

11-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் சூரியபகவான் இருந் தால் ஜாதகருக்கு பெற்றோரின் ஆசீர் வாதம் இருக்கும். அவர்களால் ஜாத கருக்கு லாபம் இருக்கும். அர சாங்க விஷயத்தில் ஜாதகருக்கு நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வரு மானம் இருக்கும். ஜாதகர் மற்றவர் களை ஆட்சி செய்யக்கூடிய வகையில் இருப்பார். பிறர் ஆச்சரியப்படும் விதத் தில் கம்பீரமான மனிதராக இருப்பார்.

12-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலாம் ராசியில் சூரிய பகவான் நீசமடைகிறார். அதனால், செலவுகள் அதிகமாக இருக்கும். அன்றாடச் செலவு களுக்கே அவர் போராட வேண்டிய திருக்கும். வெளித் தொடர்புகளால் அவருக்கு பிரச்சினை இருக்கும். ஜாதகர் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்துவார்.

bala160922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe