மகர லக்னத்திற்கு 12 பாவங்களில் சூரியன்! -மகேஷ் வர்மா

/idhalgal/balajothidam/sun-12-bhavas-makara-lagna-mahesh-verma

க்ன கேந்திரத்தில், சனியின் மகர ராசியில் சூரிய பகவான் இருந்தால்- 8-ஆம் பாவத்திற்கு அதிபதியான சூரியன் லக்னத்தில் இருந்தால் உடல்நலத்தில் பிரச்சினை ஏற்படும். ஜாதகர் சுமாரான தோற்றத்தைக் கொண்டிருப்பார். சிலருக்கு பித்தநோய் இருக்கும். நீண்ட ஆயுள் உண்டு.

பிறரை ஈர்ப்பவர்களாக இருப்பார்கள்.

2-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் சூரியன் இருந்தால் பணத்தை சேமிப்பதில் பிரச்சினை இருக்கும். நீண்ட ஆயுள் உண்டு. முன்னோரின் சொத்து கிடைக்கும். ஜாதகர் எப்போதும் தன்னைப் பணக்காரரைப்போல காட்டிக்கொள்வார். சந்தோஷ மாக இருப்பார்.

3-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் சூரியன் இருந்தால் ஜா

க்ன கேந்திரத்தில், சனியின் மகர ராசியில் சூரிய பகவான் இருந்தால்- 8-ஆம் பாவத்திற்கு அதிபதியான சூரியன் லக்னத்தில் இருந்தால் உடல்நலத்தில் பிரச்சினை ஏற்படும். ஜாதகர் சுமாரான தோற்றத்தைக் கொண்டிருப்பார். சிலருக்கு பித்தநோய் இருக்கும். நீண்ட ஆயுள் உண்டு.

பிறரை ஈர்ப்பவர்களாக இருப்பார்கள்.

2-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் சூரியன் இருந்தால் பணத்தை சேமிப்பதில் பிரச்சினை இருக்கும். நீண்ட ஆயுள் உண்டு. முன்னோரின் சொத்து கிடைக்கும். ஜாதகர் எப்போதும் தன்னைப் பணக்காரரைப்போல காட்டிக்கொள்வார். சந்தோஷ மாக இருப்பார்.

3-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் சூரியன் இருந்தால் ஜாதகர் கடுமையாக உழைப்பார். பணம் சம்பாதிப்பார். உடன்பிறந்தோருடனான உறவில் குறையிருக்கும். அவர்களால் பிரச்சினை ஏற்படும். நீண்ட ஆயுளுண்டு. உடல்நலத்தில் அவ்வப்போது பாதிப்பிருக்கும். எனினும் ஜாதகர் தைரியமாக வாழ்க்கையை நடத்துவார்.

s

4-ஆம் பாவத்தில் செவ்வா யின் மேஷ ராசியில் சூரியன் உச்ச மடைகிறது. எனவே அன்னையின் உடல்நலம் நன்றாக இருக்கும். பூமி, வாகன யோகமுண்டு. வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். தந்தையின் உடல்நலத்தில் சில பிரச்சினைகள் ஏற்படும்.

5-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் சூரியன் இருந்தால் வாரிசு உண்டாவதில் பிரச்சினை ஏற்படும். பிள்ளைகள் இருக்கும்பட்சம், அவர்களால் சிக்கல்கள் இருக்கும். ஜாதகர் கோபகுணம் கொண்டவராக இருப்பார். எப்போதும் சிந்தனையிலேயே ஆழ்ந்திருப்பார். கடுமையான உழைப்பாளி. செயல்களில் வெற்றிபெறுவார். பணம் சம்பாதிப்பார்.

6-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சூரியன் இருந்தால் ஜாதகர் பகைவர்களை வெல்வார். நீண்ட ஆயுளுண்டு.

7-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் சூரியன் இருந்தால் ஜாதகருக்கு மனைவியால் சில பிரச்சினைகள் ஏற்படும். வர்த்தகத்தில் சில சிக்கல்கள் இருக்கும். உடல்நலம் பாதிக்கப்படும். ஜாதகர் கடுமையாக உழைப்பார்.

8-ஆம் பாவத்தில், சிம்ம ராசியில் சூரியன் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. பூர்வீக சொத்து கிடைக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். புகழை அடைவார். பிறரை ஈர்க்கும்வகையில் பேசுவார். நன்கு பணம் சம்பாதிப்பார்.சந்தோஷமாக வாழ்வார்.

9-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் சூரியன் இருந்தால் அதிர்ஷ்டத்தில் தடையிருக்கும். தர்மச் செயல்களில் தடையிருக்கும். பெயர், புகழ் பெறுவதில் தடங்கல்கள் ஏற்படும். உடன்பிறந்தோருடனான உறவில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் துணிச்சல் குணம் கொண்டவராக இருப்பார். செயல்படுவதில் பல தடைகள் உண்டாகும்.

10-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் சூரியன் நீசமடைகிறது. அதனால் தந்தையுடனான உறவில் பிரச்சினை இருக்கும். ஜாதகருக்கு சுமாரான சந்தோஷமே கிடைக்கும். சிறிய அளவில் பூமி, வாகன பாக்கியம் உண்டு.

11-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் சூரியன் இருந்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம். ஜாதகர் தைரிய குணம் கொண்டவராக இருப்பார். வெற்றிகரமாக வாழ்க்கையை நடத்துவார். எனினும், அவ்வப்போது சில சிக்கல்கள் ஏற்படும். மூளை பலமாக செயல்படும். கோப குணமுண்டு. முன்னோரின் சொத்து கிடைக்கும்.

12-ஆம் பாவத்தில் தனுசு ராசியில் சூரிய பகவான் இருந்தால் செலவுகள் அதிகமாக ஏற்படும். அதனால் சில சிக்கல்கள் உண்டாகும். வெளித் தொடர்புகளில் சில பிரச்சினைகள் ஏற்படும். வயிற்றில் நோய் வரும். பூர்வீக சொத்து கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கும்.

செல்: 98401 11534

bala200123
இதையும் படியுங்கள்
Subscribe