க்ன கேந்திரத்தில், சூரிய பகவான் தன் எதிரியான சனியின் கும்ப ராசியில் இருந் தால் ஜாதகர் சுமாரான தோற்றத்தைக் கொண்டிருப்பார். உடல்நலத்தில் சிறிய சிறிய பிரச்சினைகள் இருக்கும். எனினும் ஜாதகர் பிறரை ஈர்ப்பார். கடுமையான உழைப்பாளி யாக இருப்பார். கோபத்துடன் பேசுவார்.மனைவிக்கு உடல்நல பாதிப்பிருக்கும்.

2-ஆம் பாவத்தில் குருவின் மீன் ராசியில் சூரியன் இருந்தால் நல்ல பண வரவிருக்கும். குடும்பத்தில் அனைவரும் ஆதரவாக இருப்பார்கள். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். நல்ல பேச்சாற்றல் இருக்கும். மனைவியால் சில கஷ்டங்கள் உண்டாகும். பெயர், புகழ் கிடைக்கும்.

3-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் சூரியன் உச்சமடைகிறது. அதனால், தைரியம் அதிகமாக இருக்கும். உடன்பிறந் தோரால் சந்தோஷம் கிடைக்கும். ஜாதகர் பெரிய செயல்களைச் செய்வார். பல வியாபாரங்களைச் செய்து வெற்றிபெறுவார். சிலர் அரசியலில் முக்கிய மனிதர்களாக இருப்பார்கள்.

dd

Advertisment

4-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் சூரியன் இருந்தால் தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பிருக்கும். வீடு, மனை வாங்குவதில் பிரச்சினை ஏற்படும். வியாபாரத்தில் கடுமையான போட்டிக்குப் பிறகே வெற்றி கிடைக்கும்.

5-ஆம் பாவத்தில், மூலத் திரிகோணத்தில், புதனின் மிதுன ராசியில் சூரியன் இருந்தால் படிப்பு நன்றாக வரும். பேச்சுத் திறமையும் நன்றாக இருக்கும். பிள்ளைகளின் ஆதரவு கிடைக்கும். மனைவியால் சந்தோஷம் உண்டு. வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். நல்ல பணவரவிருக்கும்.

6-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் சூரியன் இருந்தால் பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். ஜாதகர் சண்டை, சச்சரவில் ஈடுபட்டு ஆதாயமடைவார். வியாபாரத்தில் கடுமையான போட்டி இருக்கும். இறுதியில் ஜாதகருக்கு வெற்றி கிடைக்கும். மனைவியுடன் கருத்து வேறுபாடு உண்டாகும்.

Advertisment

7-ஆம் பாவத்தில் சுய ராசியான சிம்ம ராசியில் சூரியன் இருந்தால் மனைவியால் சந்தோஷம் கிட்டும். இல்வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். நிறைய பணம் சம்பாதிப்பார்.

8-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சூரியன் இருந்தால் பூர்வீக சொத்து கிடைக்கலாம். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. மனைவியால் சில பிரச்சினைகள் இருக்கும். வியாபாரத்தில் எதிரிகள் அதிகமாக இருப்பார்கள். அதனால், சில பிரச்சினைகள் உண்டாகும். வெளித் தொடர்புகளின்மூலம் நல்ல பண வரவிருக்கும்.

9-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் சூரியன் நீசமடைகி றது. அதனால், ஜாதகருக்கு அதிர்ஷ்டத்தில் குறையிருக்கும். தர்மச் செயல்களைச் செய்வதில் பிரச்சினை ஏற்படும். மனைவி யால் தொல்லைகள் உண்டாகும். ஜாதகர் நல்லது- கெட்டது எதை யும் பார்க்காமல் மனம்போனபடி வாழ்க்கையை நடத்துவார்.

10-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் சூரியன் இருந்தால் ஜாதகருக்கு தந்தையால் உதவி கிடைக்கும். அரசாங்க விஷயத்தில் பெயர், புகழ் கிடைக்கும். மனைவியால் சந்தோஷம் இருக்கும். வியாபாரத் தில் வெற்றி கிடைக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார்.

11-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் சூரியன் இருந்தால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பிள்ளைகளால் பெயர், புகழ் உண்டு. மனைவியால் சந்தோஷம் இருக்கும்.

12-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் சூரியன் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். அதனால் கஷ்டம் இருக்கும். வெளித் தொடர்புகளில் நல்ல ஆதாயம் கிடைக்கும். மனைவி யால் ஏற்படும் சந்தோஷத்தில் குறையிருக்கும்.

ஜாதகர் தன் சொந்த ஊரைவிட்டு வெளியே சென்று, தொழில் செய்து‌ பணம் சம்பாதிப்பார்.

செல்: 98401 11534