வெற்றியை வசமாக்கும் சுப ஹோரை சூட்சுமங்கள்! -கோவிலாம்பூண்டி பொ. பாலாஜிகணேஷ்

/idhalgal/balajothidam/summon-auspiciousness-brings-success-kovilampoondi-bo-balajiganesh

காலத்தை சார்ந்தே மனிதனது ஒவ்வொரு நொடிப்பொழுதும் கழிகிறது! அவனது ஒவ்வொரு இயக்கங்களும், நிகழ்வுகளும் ஹோரா கிரகத்தின் தன்மையைப் பிரதிப-ப் பதாக இருக்கிறது. ஹோரா கிரகத்தின் குணங்கள், செயல்பாடுகள் என்னவோ?

அதுவே அந்த ஒரு மணிநேர ஹோரையில் வெளிப்பட்டு விளங்குகிறது!

மனிதனது மனநிலைக்கும், சூழ்நிலை களின் தன்மைகளுக்கும், ஹோரா கிரகங்களுக் கும் தொடர்பிருக் கிறது. ஹோரா கிரகமும், வார கிரகமும் இணைந் தே நிகழ்வுகளை, சம்பவங்களை (Events) தோற்று விக்கின்றன. ஹோரா கிரகத் தின் காரக நிகழ்வு களைத் தவிர்த்து பிறிதொன்றும் அந்த ஹோரை முடி யும்வரை நிகழவே நிகழாது!

கோள்களின் கதிரலைகள் காற்றி னில் கலந்து, மனி தனது மூச்சுக் காற்றின்மூலம் மனிதனைத் தொடர்பு கொள்கிறது. மனிதனை இயக்குவது சுவாசிக்கும் காற்று. காற்றினை சுவாசிக்கும் எந்தவொரு மனிதனும் கோள்களின் இயக்கத் திற்கு ஈடுகொடுத்தே ஆகவேண்டும்!

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்றுவேளை உணவுண்கிறான். ஆறு லிட்டர் தண்ணீர் குடிக்கிறான்.

ஆனால், ஒரு நாளைக்கு 21,600-க்கும் மேலான எண்ணிக்கையில் சுவாசிக்கிறான். எனவே, மனிதன் கோள்களின் கதிரலைகள் (Ray's)நிரம்பியுள்ள காற்றினை சதா சுவாசித்தவண்ணம் இருக்கின்றான்.

மனிதனை இயக்குவது மனம். மனதினை இயக்குவது சுவாசிக்கும் காற்று. காற்றினை இயக்குவது காலம். காலத்தினை இயக்குவது காலகிரகங்கள். கிரகங்களை இயக்குவது பரம்பொருள்!

பரம்பொருளுக் கும், மனிதனுக்குமிடை யில் எத்தனைவிதமான பாலங்கள் பார்த்தீர்களா?

ww

ஹோரா கிரகத்தின் வலிமை நிர்ணயம்

காலமானது வருடம், மாதம், வாரம், ஹோரை என்று நான்கு பெரும்பிரிவு களாகப் பகுக்கப் பட்டுள்ளது. இதில் வருடாதிபதியின் பலம் 25 சதவிகித மாகும். மாத அதிபதியின் பலம் 50 சதவிகிதம். வார அதிபதியின் பலம் 75 சதவிகிதம். ஹோரா அதிபதி யின் பலம் 100 சதவி

கிதம். எனவே வருடாதிபதி, மாதாதிபதி, வாராதிபதி, ஹோராதிபதி ஆகிய நால்வரில் ஹோராதிபதியே அதிபலம் பெற்று விளங்குகிறார். இதிலிருந்து ஹோரைதான் அதிக வலிமை பொருந்தியதென்று நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

ஹோரையின் குணங்கள்- செயல்கள்

சூரிய ஹோரை (உத்தியோக ஹோரை): அரசு தொடர்பான காரியங் களில் ஈடுபடுத

காலத்தை சார்ந்தே மனிதனது ஒவ்வொரு நொடிப்பொழுதும் கழிகிறது! அவனது ஒவ்வொரு இயக்கங்களும், நிகழ்வுகளும் ஹோரா கிரகத்தின் தன்மையைப் பிரதிப-ப் பதாக இருக்கிறது. ஹோரா கிரகத்தின் குணங்கள், செயல்பாடுகள் என்னவோ?

அதுவே அந்த ஒரு மணிநேர ஹோரையில் வெளிப்பட்டு விளங்குகிறது!

மனிதனது மனநிலைக்கும், சூழ்நிலை களின் தன்மைகளுக்கும், ஹோரா கிரகங்களுக் கும் தொடர்பிருக் கிறது. ஹோரா கிரகமும், வார கிரகமும் இணைந் தே நிகழ்வுகளை, சம்பவங்களை (Events) தோற்று விக்கின்றன. ஹோரா கிரகத் தின் காரக நிகழ்வு களைத் தவிர்த்து பிறிதொன்றும் அந்த ஹோரை முடி யும்வரை நிகழவே நிகழாது!

கோள்களின் கதிரலைகள் காற்றி னில் கலந்து, மனி தனது மூச்சுக் காற்றின்மூலம் மனிதனைத் தொடர்பு கொள்கிறது. மனிதனை இயக்குவது சுவாசிக்கும் காற்று. காற்றினை சுவாசிக்கும் எந்தவொரு மனிதனும் கோள்களின் இயக்கத் திற்கு ஈடுகொடுத்தே ஆகவேண்டும்!

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்றுவேளை உணவுண்கிறான். ஆறு லிட்டர் தண்ணீர் குடிக்கிறான்.

ஆனால், ஒரு நாளைக்கு 21,600-க்கும் மேலான எண்ணிக்கையில் சுவாசிக்கிறான். எனவே, மனிதன் கோள்களின் கதிரலைகள் (Ray's)நிரம்பியுள்ள காற்றினை சதா சுவாசித்தவண்ணம் இருக்கின்றான்.

மனிதனை இயக்குவது மனம். மனதினை இயக்குவது சுவாசிக்கும் காற்று. காற்றினை இயக்குவது காலம். காலத்தினை இயக்குவது காலகிரகங்கள். கிரகங்களை இயக்குவது பரம்பொருள்!

பரம்பொருளுக் கும், மனிதனுக்குமிடை யில் எத்தனைவிதமான பாலங்கள் பார்த்தீர்களா?

ww

ஹோரா கிரகத்தின் வலிமை நிர்ணயம்

காலமானது வருடம், மாதம், வாரம், ஹோரை என்று நான்கு பெரும்பிரிவு களாகப் பகுக்கப் பட்டுள்ளது. இதில் வருடாதிபதியின் பலம் 25 சதவிகித மாகும். மாத அதிபதியின் பலம் 50 சதவிகிதம். வார அதிபதியின் பலம் 75 சதவிகிதம். ஹோரா அதிபதி யின் பலம் 100 சதவி

கிதம். எனவே வருடாதிபதி, மாதாதிபதி, வாராதிபதி, ஹோராதிபதி ஆகிய நால்வரில் ஹோராதிபதியே அதிபலம் பெற்று விளங்குகிறார். இதிலிருந்து ஹோரைதான் அதிக வலிமை பொருந்தியதென்று நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

ஹோரையின் குணங்கள்- செயல்கள்

சூரிய ஹோரை (உத்தியோக ஹோரை): அரசு தொடர்பான காரியங் களில் ஈடுபடுதல், அரசியல் தலைவர்களை சந்தித்தல், அரசு உதவியைத் தேடல், தந்தை தொடர்பான அனைத்து விஷயங்களும், பெரியோர்களின் ஆதரவைப் பெறுதல், சிவ வழிபாடு, அரசு பதவியேற்றல், பிரபலங்களின் தொடர்பு கிடைத்தல். பொதுவாக சூரிய ஹோரையில் அரசு, தந்தை வகையிலான செயல்களைச் செவ்வனே செய்யலாம்.

சந்திர ஹோரை (அமுத ஹோரை): சந்திரன் துரித கிரகமாகையால் பயணங்களில் விரைவும், வெற்றியும் உண்டாக்கும் ஹோரை யாகும். உணவுப் பொருட்கள் சம்பந்தமான செயல்கள் செய்தல், திருமண விஷயம் பேசுதல், அம்பாள் வழிபாடு செய்தல், மனம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடலாம். கற்பனையை மூலதனமாகக்கொண்ட எந்த வொரு செயலிலும் ஈடுபடலாம். எல்லா சுப காரியங்களுக்கும் சந்திர ஹோரையைத் தேர்ந்தெடுக்கலாம். அமாவசையன்றும், மறு நாள் பிரதமையன்றும் சந்திர ஹோரையைத் தவிர்க்கவும். தேய்பிறை சந்திர ஹோரையைத் தவிர்ப்பது நலம். செவ்வாய் ஹோரை (ரோகம் தரும் ஹோரை): கடன் வாங்குதல் கூடாது. கடனைத் திருப்பிக் கொடுக்கலாம். எந்த வொரு காரியமும் செய்யக்கூடாது. தடை, தாமதம், விபத்து, ரணகாயங்கள் உண்டாக் கும் ஹோரையாகும். இதுவொரு காரசார மான சண்டை, கலகமூட்டும் கிரக ஹோரை யாகும். அனைவரும் அனைத்திலும் உஷார்! செவ்வாய் போர் கிரகம். புதிய முயற்சிகளைக் கட்டாயம் தவிர்க்கவும்.

புதன் ஹோரை (லாபம் தரும் ஹோரை):

எழுத்து, பேச்சு, வித்தை ஆரம்பம், படிப்பு, கல்வி தொடர்பான அனைத்து காரியங்களும் இந்த ஹோரையில் செய்யலாம். கதை, கட்டுரை, காவியம், கவி இயற்றுதல், நூலாராய்ச்சி போன்ற யாவும் புதன் ஹோரை யில் வெற்றிகரமாக செய்யலாம். வியாபாரம், தொழில், உத்தியோகம் தொடர்பான காரியங் களில் ஈடுபடலாம். திருமணம் சம்பந்தமான காரியத்தில் துணிந்து செயல்படலாம். எல்லா சுயகாரியங்களையும் புதன் ஹோரையில் புஷ்டியாக வெற்றியாகச் செய்யலாம். பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல் வெற்றிதரும் ஹோரை இது!

குரு ஹோரை (தன ஹோரை): இது 100 சதவிகித சுப ஹோரையாகும். குரு ஹோரையில் எல்லாவகையான சுப காரியங்களையும் செய்யலாம். கல்வி, வித்யாரம்பம், ஆலயம் வழிபடுதல், திருமணம் செய்தல், ஆடையாபரணம் வாங்குதல், அணிய சிறந்த ஹோரை. எல்லாவிதங்களிலும் சுபத்தையும் லாபத் தையும் அளிப்பது குரு ஹோரையாகும்!

சுக்கிர ஹோரை (சுகம் தரும் ஹோரை): சங்கீதம், ஆடல், பாடல் கற்றல், கவி, கட்டுரை, கதை இயற்றுதல், காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபடல், பணம் வாங்குதல், கொடுத்த கடனை வசூல்செய்ய உகந்த ஹோரை. பணம் கொடுக்கக்கூடாது! ஆடை, ஆபரணங்கள் வாங்குதல், அணிதல், அலங்கார- ஆடம்பரப் பொருட்கள் வாங்கு தல், உல்லாசப் பொழுதுபோக்கு அம்சங் களில் ஈடுபடுதல், படப்பிடிப்புத் தொடக்க விழா (பட பூஜை) செய்தல், கலை அரங்கேற் றம், வங்கிகளில் புதிய கணக்கு ஏற்படுத்துதல், வீடு, வாகனம் கிரயம் செய்யலாம். விருந்தினராகச் செல்லலாம். பெண்பார்க்கச் சென்றால் வெற்றி உறுதி. சகல சுபகாரியங்களுக்கு 100 சதவிகிதம் உகந்த ஹோரை சுக்கிர ஹோரையாகும்!

சனி ஹோரை (சோரம் தரும் ஹோரை): சனி ஹோரையில் எந்த ஒரு சுபகாரியத்திலும் ஈடுபடக்கூடாது. மீறிச்செய்தால் அக்காரியத் தில் தடை, தாமதம், தோல்விகளே ஏற்படும். 100 சதவிகிதம் அசுபம் உண்டாக்கும்! கண்டங்கள், விபத்துகள், பிடிபடுதல், தீயவிளைவுகளை வாரிவழங்குவது சனி ஹோரையாகும்! பெரும்பாலான வாகன விபத்துகள் சனி ஹோரையில்தான் நிகழும். இந்த ஹோரையில் ஒரு மூலையில் ஒதுங்கி உட்காருவதே சாலச்சிறந்தது.

சுப ஹோரைகள் (நைசர்க சுபர்கள்): குரு, சுக்கிரன், புதன், சந்திரன்.

அசுப ஹோரைகள் (நைசர்க பாபிகள்): செவ்வாய், சனி.

சூரியன் அசுப ஹோரை யல்ல.

கிழமைகளுக்கும் ஹோரா கிரகத்திற்கும் என்ன உறவுமுறை என்பதனைப் பொருத்தே ஹோரையின் செயல்பாடுகள் அமைகின் றன.

ஹோரையின் நுட்பங்கள் கிரகங்களின் நட்புகள்

சூரியன்- குரு, செவ்வாய், சந்திரன்.

சந்திரன்- குரு, செவ்வாய், சனி.

செவ்வாய்- குரு, சூரியன், சந்திரன்.

புதன்- சுக்கிரன், சனி.

குரு- சூரியன், சந்திரன், செவ்வாய்.

சுக்கிரன்- சனி, புதன்.

சனி- சுக்கிரன், புதன்.

கிரக சமம்

சூரியன்- புதன்.

சந்திரன்- செவ்வாய்.

செவ்வாய்- சுக்கிரன்.

புதன்- சூரியன்.

குரு- சனி.

சுக்கிரன்- செவ்வாய்.

சனி- குரு.

கிரக பகை விவரம்

சூரியன்- சுக்கிரன், சனி.

சந்திரன்- சுக்கிரன், சனி, புதன்.

செவ்வாய்- புதன், சனி.

புதன்- குரு, சந்திரன், செவ்வாய்.

குரு- சுக்கிரன், புதன்.

சுக்கிரன்- சூரியன், சந்திரன்.

சனி- செவ்வாய், சூரியன், சந்திரன்.

குறிப்பு: வாராதிபனும், ஹோராதிபனும் ஒருவருக்கொருவர் பகை யாக இருந்திடில் அந்த ஹோரை சரியாக செயல் படாது.

உதாரணம்: ஞாயிற்றுக் கிழமை சுக்கிர ஹோரை தவறைச் செய்யும். காரணம் சூரியனும் சுக்கிரனும் ஒரு வருக்கொருவர் பகைவர்கள்.

ஞாயிற்றுக்கிழமை சுக்கிர ஹோரை தோல்வி யைத் தரும்.

திங்கட்கிழமை சுக்கிரன், புதன் ஹோரைகள் சரியாக செயல்படாது.

செவ்வாய்க்கிழமை புதன் ஹோரை தோல்வி தரும்.

புதன்கிழமை குரு, சந்திர ஹோரைகள் சரியாக செயல்படாது.

குரு (வியாழக்கிழமை) சுக்கிரன், புதன் ஹோரைகள் சரியாக செயல்படாது.

வெள்ளிக்கிழமை குரு, சந்திர ஹோரைகள் தோல்வி தரும்.

சனிக்கிழமை சந்திர ஹோரை தவறைச் செய்யும்!

கிழமைகள்- ஆகாத ஹோரைகள்

ஞாயிறு: சுக்கிரன், சனி.

திங்கள்: சுக்கிரன், புதன், சனி.

செவ்வாய்: புதன், சனி.

புதன்: குரு, சந்திரன், செவ்வாய்.

வியாழன்: சுக்கிரன், புதன், சந்திரன்.

வெள்ளி: குரு, சந்திரன், சூரியன்.

சனி: சந்திரன், செவ்வாய், சூரியன்.

புதன்கிழமை குரு ஹோரை நடக்கும் போது, குரு சுப ஹோரையென்று எதையும் செய்யலாகாது. இவ்வாறு ஹோரா சாஸ்திரத் தில் இன்னும் பலவித நுணுக்கங்கள், நுட்பங்கள் உள்ளன.

கடுமையான பாதிப்பைத் தரும் கிரக ஹோரைகள்

பாவகிரகங்களின் கிழமைகளில் (ஞாயிறு, செவ்வாய், சனி) பகைவர், பாவிகளின் ஹோரைகள் பயங்கரமான பாதிப்புகளைத் தந்துவிடுகிறது.

கிழமை- ஹோரை.

ஞாயிறு ஷ் சனி.

செவ்வாய் ஷ் சனி.

சனி x செவ்வாய், சூரியன்.

ஞாயிற்றுக்கிழமையில் வரும் சனி ஹோரையும், செவ்வாய்க்கிழமை வரும் சனி ஹோரையும் பொல்லாத ஹோரையாகும். இதன் கொடுமையை அனுபவித்தவர்களிடம்தான் கேட்டறிய வேண்டும்.

சனிக்கிழமையில் சூரிய, செவ்வாய் ஹோரைகள் கடுமையான பாதிப்புகளைத் தந்துவிடுகின்றன. அதிலும் சனிக்கிழமையில் செவ்வாய் ஹோரை மிகக்கடுமையாக இருக்கும்.

கண்டிப்பாக வெற்றியைத் தரும் ஹோரைகள் கிழமைகள்- ஹோரைகள்.

ஞாயிறு: சூரியன், புதன், குரு, சந்திரன்.

திங்கள்: சந்திரன், குரு, சூரியன்.

செவ்வாய்: குரு, சந்திரன், சுக்கிரன், சூரியன்.

புதன்: சுக்கிரன், புதன், சூரியன்.

வியாழன்: குரு, சனி, சந்திரன், சூரியன்.

வெள்ளி: சுக்கிரன், புதன்.

சனி: குரு, சுக்கிரன், புதன்.

பிறந்த ஹோரைப் பலன்

ஒருவர் எந்த ஹோரை நடக்கும்போது பிறந்தாரோ அதுவே அவரின் ஜென்ம ஹோரையாகும். பிறந்த ஹோரை கிரகம் அவருக்கு எப்போதும் நன்மையே செய்யும். பிறப்பு ஹோரை கிரகத்தின் நட்பு கிரக ஹோரைகளும் நன்மை செய்யும். பகை ஹோரை கிரகங்கள் தீமை செய்யும். பிறந்த ஹோரை கிரக சுபாவகுணம் அந்த ஜாதகரிடத் தில் காணப்படும்.

ஒருவர் வெள்ளிக்கிழமை பகல் 2.30 மணிக்குப் பிறந்தால் அப்போது நடக்கும் புதன் ஹோரையே அவரது பிறப்பு ஹோரையாகும். எனவே, புதன் அவருக்கு சுபத்தையே செய்யும்.

சிறப்பு விதிகள்

யாவருக்கும் ஜென்ம லக்னாதிபதியான கிரகத்தின் ஹோரை எப்போதும் நன்மையே செய்யும். மேலும் இந்த லக்னாதிபதியின் ஹோரையில் எந்த செயலில் ஈடுபட்டாலும் வெற்றி உறுதி!

யோகி, இந்து லக்னாதிபதியாக வருகின்ற கிரக ஹோரைகளும் சுபத்தையே செய்யும். ஜாதகத்தில் சுபபலம், சுபசாரம் பெற்று நல்ல நிலையில் இருக்கின்ற கிரக ஹோரையும் எப்போதும் சுபத்தையே செய்யும்.

லக்னத்தின் 6, 8, 12 ஆகிய பாதகாதிபதிகள் ஹோரை நன்மை செய்யாது. நீசம், அஸ்தமனம், பகை, வக்ரம்பெற்ற கிரக ஹோரைகள் சுபத்தைச் செய்யாது. தசாபுக்தியை எந்த கிரகம் நடத்துகிறதோ- அந்த கிரகங்களின் ஹோரையில், அந்த தசாபுக்திப் பலன் நடைமுறைக்கு வருவதை அனுபவத்தில் காணலாம்!

உதாரணமாக சூரிய தசை, புதன் புக்தி எனில், சூரியன் மற்றும் புதன் ஹோரைகளில் பலன்களை எதிர்பார்க்கலாம். இது நன்மை செய்யும் தசாபுக்தி எனில் நன்மை; தீமை தரும் தசாபுக்தி எனில் அந்தக் கிழமை, ஹோரைகளில் எச்சரிக்கையாக இருந்திடலாம்.

சூரிய தசாபுக்தி நடப்பவர்களுக்கு, சூரிய ஹோரைகளில்தான் நன்மை- தீமை என பலன்கள் நடக்கும். சந்திரன் தசாபுக்தி நடப்பில் உள்ளவர்களுக்கு சந்திர ஹோரையில்தான் பலன்கள் நடக்கும். இதேபோல மற்ற கிரக தசாபுக்திகளில் அந்த கிரக ஹோரைகளின் பலன்கள் நடைமுறைக்கு வரும்.

ராகு தசாபுக்தியில், ராகு நின்ற ராசியாதிபதி கிரக ஹோரையிலும் பலன்தரும். கேது தசாபுக்தியில் கேது நின்ற ராசியாதிபதியின் கிரக ஹோரையிலும் பலன்தரும்.

பிறப்பு ஜாதகத்தில் சூரியன், சந்திரன், ராகு- கேது சேர்க்கைபெற்றிருப்பின் சூரியன், சந்திர ஹோரைகள் சரியாகப் பலன்தராது.

செல்: 98425 50844

bala290722
இதையும் படியுங்கள்
Subscribe