லக்னத்தில்... செவ்வாயின் விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகரின் உடல்நலத்தில் சில குறைகள் இருக்கும். எனினும் சாதுரிய குணத்துடன் தன் செயல்களைச் செய்வார். செலவுகள் அதிகமாக இருக்கும். பல சிரமங்களைத் கடந்து வாழ்க்கையின் இரண்டாவது பகுதியில் ஜாதகர் சுமாரான வெற்றியைப் பெறுவார்.
2-ஆம் பாவத்தில் தன் எதிரியான குருவின் தனுசு ராசியில் சுக்கிரன் இருந்தால் குடும்ப சுகத்தில் குறையிருக்கும். ஆனால் பணவரவிருக்கும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. பூர்வீக சொத்து கிடைப்பதில் பிரச்சினை ஏற்படும். ஜாதகர் சாதுரியமாக செயல்பட்டு பணத்தை சம்பாதிப்பார்.
3-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகருக்கு தைரியம் குறைவாக இருக்கும். உடன்பிறந்தோருடனான உறவில் பிரச்சினை ஏற்படும். செலவ
லக்னத்தில்... செவ்வாயின் விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகரின் உடல்நலத்தில் சில குறைகள் இருக்கும். எனினும் சாதுரிய குணத்துடன் தன் செயல்களைச் செய்வார். செலவுகள் அதிகமாக இருக்கும். பல சிரமங்களைத் கடந்து வாழ்க்கையின் இரண்டாவது பகுதியில் ஜாதகர் சுமாரான வெற்றியைப் பெறுவார்.
2-ஆம் பாவத்தில் தன் எதிரியான குருவின் தனுசு ராசியில் சுக்கிரன் இருந்தால் குடும்ப சுகத்தில் குறையிருக்கும். ஆனால் பணவரவிருக்கும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. பூர்வீக சொத்து கிடைப்பதில் பிரச்சினை ஏற்படும். ஜாதகர் சாதுரியமாக செயல்பட்டு பணத்தை சம்பாதிப்பார்.
3-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகருக்கு தைரியம் குறைவாக இருக்கும். உடன்பிறந்தோருடனான உறவில் பிரச்சினை ஏற்படும். செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் தன் வெளித் தொடர்புகளை வைத்து பணத்தை சம்பாதிப்பார். மிகவும் சாதுரியமாக செயல்பட்டு தன் செலவுகளை சமாளித்துக் கொள்வார். பெண்கள் விஷயத்தில் ஜாதகர் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.
4-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் சுக்கிரன் இருந்தால், ஜாதகரின் தாயார் உடல்நலத்தில் சிறிய குறையிருக்கும். பூமி, வாகனம் வாங்குவதில் பிரச்சினை ஏற்படும். தந்தையால் சந்தோஷம் கிட்டும். பல ரகசிய வழிகளைக் கையாண்டு, கடுமையாக உழைத்து எல்லா வற்றையும் அடையவேண்டுமென்ற வெறியுடன் ஜாதகர் செயல்படுவார்.
5-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் சுக்கிரன் உச்சமடைகிறார். அதனால் குழந்தை பாக்கியம் உண்டு.
ஜாதகருக்கு நல்ல அறிவுக்கூர்மை இருக்கும். பல தடைகளைக் கடந்து பணத்தைச் சம்பாதிப்பார். சிலர் கலைத்துறையில் முத்திரை பதிப்பார்கள். நல்ல பேச்சாற்றல் இருக்கும். பெண் களிடம் இவர்கள் கவனமாக இருக்கவேண்டும். இல்லா விடில் பெண்கள் இவர்களை அடக்கியாளப் பார்ப்பார்கள்.
6-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகர் எதையும் அமைதியாகச் செய்யவேண்டும். இல்வாழ்க்கையில் பல பிரச்சினைகள் இருக்கும். வெளித் தொடர்புகளில் பல பிரச்சினைகள் உண்டாகும். வயிற்றில் நோய் இருக்கும்.
7-ஆம் பாவத்தில் தன் சுய வீடான ரிஷப ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகர் தைரியமுள்ளவராகவும் சாதுரிய குணம் கொண்டவராகவும் புத்திசாலியாகவும் இருப்பார். மெலிந்த தோற்றத்தைக் கொண்டிருப்பார். பெயர், புகழ் இருக்கும். ஜாதகர் தன் செயல்களை மிகுந்த கவனத்துடன் முடிப்பார். சிலருக்கு திருமண விஷயத்தில் தடைகள் ஏற்படும்.
8-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சுக்கிரன் இருந்தால் முன்னோர் களின் சொத்து கிடைப்பதில் பிரச்சினை ஏற்படும். மனைவியால் சிறிது மனக் கவலை உண்டாகும். வியாபாரத்தில் தடங்கல்கள் இருக்கும். பல ரகசிய வேலைகளைச் செய்து ஜாதகர்
பணத்தை சம்பாதிப்பார். வாழ்க்கை யில் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவார்.
9-ஆம் பாவத்தில், மூலத் திரிகோணத்தில், சந்திரனின் கடக ராசியில் சுக்கிரன் விரய ஸ்தானாதிபதியாக இருப்பதால், தர்ம காரியங்களைச் செய்வதில் கடுமையான போட்டி நிலவும்.
ஜாதகருக்கு மனைவியுடன் பிரச்சினை இருக்கும். எனினும் சாதுரியமாக அவர் தன் காரியங் களை முடிப்பார். வெளித் தொடர்பு களின்மூலம் பணத்தை சம்பாதிப்பார்.
10-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகருக்குத் தன் தந்தையுடன் சிறிது பிரச்சினை இருக்கும்.
அரசாங்க விஷயத்தில் தொல்லைகள் உண்டாகும். ஆனாலும் கடுமையான போட்டிகளைக் கடந்து ஜாதகர் வெற்றிபெறுவார். மனைவியுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். சிலர் தந்தையின் சொத்தை அழித்து விடுவார்கள்.
11-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் சுக்கிரன் நீசமடைகிறார். அதனால் வருமானத் தில் குறையிருக்கும். வெளித் தொடர்புகளில் பெரிய பிரச்சினை உண்டாகும். ஜாதகர் மிகவும் கவனமாகப் பேசி அதை சரிசெய்ய வேண்டும். குறைந்த அளவில் பணத்தை சம்பாதிப்பார்.
12-ஆம் பாவத்தில் தன் சுய ராசியான துலாம் ராசியில் சுக்கிரன் இருந்தால் செலவுகள் அதிகமாக உண்டாகும். வெளித் தொடர்புகளின்மூலம் லாபம் கிடைக்கும். சிலருக்குப் பெண்களால் பிரச்சினை உண்டாகும். சிலர் வெளியூர் சென்று பணம் சம்பாதிப்பார்கள்.
செல்: 98401 11534