சிம்ம லக்னத்தில் சனி பகவான் தன் எதிரி யான சூரியனின் சிம்ம ராசியில் இருந்தால் உடலில் சில குறைகள் இருக்கும். நோய்கள் வரும். சோம்பேறித் தனம் இருக்கும். எனினும் ஜாதகர் தன் பகைவர்களை வெல்வார். தந்தையாலும் வெளித் தொடர்புகளாலும் பணத்தை சம்பாதிப் பார். பெயர், புகழ் இருக்கும்.

2-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் சனி இருந்தால் ஜாதகருக்கு லாபம்- நஷ்டம் இரண்டுமே வரும். மனைவியால் பிரச்சினை இருக்கும். வியாபாரத்தில் தடைகள் ஏற்படும். சுமாரான வாழ்க்கை இருக்கும்.

3-ஆம் பாவத்தில் சனி பகவான் தன் நண்ப ரான சுக்கிரனின் துலா ராசியில் உச்சமடைகி றார். அதனால் ஜாதகர் தைரியசாலியாகவும் பல சாலியாகவும் இருப்பார். உடன்பிறப்புகளால் சந்தோஷம் கிடைக்கும். ஜாதகர் எதிரிகளை வெல்வார். நன்கு பணம் சம்பாதிப்பார். மனைவியிடம் தன் அதிகாரத்தைக் காட்டுவார்.

Advertisment

ss

4-ஆம் பாவத்தில் சனி பகவான் செவ்வாயின் விருச்சிக ராசியில் இருந்தால் அன்னை யால் சுமாரான சந்தோஷமே இருக்கும். பூமி வாங்குவதில் சிக்கல் இருக்கும். வீட்டிலும் பிரச்சினைகள் இருக்கும். செலவுகள் அதிகமாக ஏற்படும். ஜாதகர் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். அவ்வப்போது நோய்கள் வரும். ஜாதகர் சுமாரான தோற்றத் தைக் கொண்டிருப்பார்.

5-ஆம் பாவத்தில் சனி பகவான் குருவின் தனுசு ராசியில் இருந்தால் படிப்பில் பிரச் சினை இருக்கும். வாரிசு உண்டாவதில் சிறிய தடைகள் ஏற்படும்.பெண் மீது அதிக மோகமிருக்கும். சிலர் இருக்குமிடத்தை விட்டு வெளியேறிச் சென்று படிப்பார்கள். செலவுகள் அதிகமாக உண்டாகும்.

6-ஆம் பாவத்தில் சனி பகவான் தன் சுய ராசியான மகர ராசியில் இருந்தால் ஜாதகர் எதிரிகளை வெல்வார். தாய்மாமாவால் நன்மைகள் இருக்கும். செலவுகள் அதிகமாக ஏற்படும். ஜாதகருக்கு மனைவியுடன் கருத்து வேறுபாடு இருக்கும். கடுமையாக உழைத்து வெற்றிபெறுவார். பெயர், புகழுடன் வாழ்வார்.

7-ஆம் பாவத்தில் சனி பகவான் தன் கும்ப ராசியில் இருந்தால் ஜாதகருக்கு மனைவியுடன் சிறிய கருத்து வேறுபாடிருக்கும். வியாபாரத்தில் சில தடைகள் உண்டாகும்.

அன்னையால் கிடைக்கும் சந்தோஷத்தில் சில தடங்கல்கள் ஏற்படும். பூமி, வீடு, வாகனம் வாங்குவதில் பிரச்சினைகள் இருக்கும். ஜாதகர் தன் காரியங்களை மிகுந்த தைரியத்துடன் முடித்து பணம் சம்பாதிப்பார்.

8-ஆம் பாவத்தில் சனி பகவான் குருவின் மீன ராசியில் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். மனைவியால் குறைந்த சந்தோஷமே கிடைக்கும். பகைவர்களால் தொல்லைகள் இருக்கும். வியாபாரத்தில் தடைகள் உண்டாகும். சிலருக்கு படிப்பதில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு பிள்ளைகளால் மனக்கவலை உண்டாகும்.

9-ஆம் பாவத்தில் சனி பகவான் செவ்வாயின் மேஷ ராசியில் இருந்தால் ஜாதகர் கடுமையாக உழைக்கவேண்டியதிருக்கும். தர்மச் செயல்கள் செய்வதில் தடைகள் உண்டாகும். ஜாதகருக்கு மனைவியால் சிறிய பிரச்சினை இருக்கும். வியாபாரத்தில் சிறிய சிக்கல்கள் ஏற்படலாம்.

10-ஆம் பாவத்தில் சனி பகவான் தன் நண்பர் சுக்கிரனின் ரிஷப ராசியில் இருந்தால், ஜாதகர் கடுமையாக உழைத்துப் பணம் சம்பாதிப்பார். தந்தையால் சந்தோஷம் சிடைக்கும்.

ஜாதகரைப் பார்த்து எதிரிகள் பயப்படுவார்கள். சனி 6-ஆம் பாவத்திற்கு அதிபதியாக இருப்பதால், உடல்நலத்தில் பிரச்சினை ஏற்படும். சிலருக்கு கடன் இருக்கும்.

11-ஆம் பாவத்தில் சனி பகவான் தன் நண்பரான புதனின் மிதுன ராசியில் இருந்தால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஜாதகர் பகைவர்களை வென்று பணம் சம்பாதிப்பார். மனைவி யால் சந்தோஷம் கிடைக் கும். படிப்பு விஷயத்தில் குறை யிருக்கும். வியாபாரத்தில் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். மனைவி யின் உடல்நலத்தில் கவனம் செலுத்தவேண்டும்.

12-ஆம் பாவத்தில் சனி பகவான் சந்திரனின் கடக ராசியில் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் தன் வெளித் தொடர்புகளைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப் பார். எதிரிகளால் பிரச் சினை கள் உண்டாகும். அவ்வப் போது சிறிய அளவில் நோய் களின் பாதிப்பிருக்கும். மனைவியின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். சிலர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார்கள்.