வீட்டு எல்லைக்குள் வளர்க்கக் கூடாதவைபருத்திச்செடி, பனை மரம், நெல்லி மரம், இலவ மரம், பஞ்சு மரம், அத்தி மரம், நாவல் மரம், புளிய மரம், அருக்கு மரம் ஆகியவை இருந்தால் லட்சுமி கடாட்சம் அற்றுப்போகும்.
மரம் வெட்டும் விதி
நல்ல நாள், யோகம், கரணம் அறிந்து, மரம் வெட்டும் தச்சருக்கு தாம்பூலம், மலர், தட்சணை கொடுத்து மரம் வெட்டச்செய்ய வேண்டும்.
மரம் வெட்டும் நாள்
பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய ஐந்து திதிகளில் வெட்டுவது மிகச்சிறந்தது. அதிலும் ரோகிணி நட்சத்திரம் இணைந்த நாளாயின் மிக நல்லது.
மரம் வெட்ட ஆகாத நாட்கள்
கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் இருக்கும் நாள் மற்றும் திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி.
மரம், செடி, கொடிகளை நினைத்தவுடனேயே வெட்டி வேரோடு சாய்ப்பது நல்ல செயலல்ல. அதற்குரிய மந்திரங்களை உச்சரித்தபின் செயல்படல் நற்பலன் தரும்.
சாப நிவர்த்தி மந்திரம்
ஓம் சக்தி சாபம் நசி நசி
சகல சாபம் நசி நசி
சித்தர்கள் சாபம் நசி நசி
தேவர்கள் சாபம் நசி நசி
முத்தர்கள் சாபம் நசி நசி
மூலிகை சாபம் நசி நசி
பக்தர்கள் சாபம் நசி நசி
ஓம் காளி ஓடிவா ஓம் நமசிவாயா
என்று ஜெபித்து மரத்தை வெட்டுதல் நன்று.
வேப்ப மரம்
முன்னாட்களில் வழிபாடுகளில் மர வழிபாடும் ஒன்றாக இணைந்திருந்தது. இப்போதும் கேரள மாநிலத்தில் மரம் வழிபாடு உண்டு. கோவில்களில் ஸ்தல விருட்சம் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆதிபராசக்தி என்ற பெண்தெய்வம் தோன்றியவுடன், அதன் ஸ்தூல ரூபமாக வேப்ப மரம் தோன்றியது. சாக்த மதம் பெண் தெய்வ வழிபாட்டிற்குரியது. ஆதிசங்கரர் ஒரு நம்பூதிரி பிராமணர். அவர்மூலம் சாக்த மத வழிபாடு புகழ்பெற்றது. வனப்பேச்சி, காளி, மாரி ஆகிய தெய்வ வழிபாடுகள் ஆதிபராசக்தி வழிபாடுகளுடன் இணைந்தவை.
செவ்வாய்க்கிழமையில்தான் சாக்தம் என்னும் சக்தி வழிபாடு சித்தியாகும். குறிப்பாக மிருகசீரிடம், சித்திரை, அவிட்ட நட்சத்திரத்திற்குரியவர்களுக்கு ஆதிபராசக்தி அருள் விரைவில் கிடைக்கும்.
வேப்பமரப் புல்லுருவி அஞ்சனம் சக்தி வாய்ந்தது. அவிட்ட நட்சத்திரத்தன்று வேப்ப மரத்துப் புல்லுருவியை முறைப்படி எடுத்துவந்து அதனுடன் ஆடுதின்னா பாளை இலையை நிழலில் உலர்த்தி, மண்பானையில் கருகச்செய்து, பசுநெய் விட்டு அரைத்து அஞ்சனம் செய்து திலகமிட, எண்ணங்கள் நிறைவேறத் தடைகள் இருந்தால் அகலச் செய்யும்.
எல்லா மூலிகைகளையும் சாபநிவர்த்தி செய்தே பிடுங்கி உபயோகிக்க வேண்டும்.
மூலிகை இருக்கும் இடத்தை சுத்தம் செய்து, அதன்பின் மஞ்சள் நூலால் காப்புக்கட்டி, பொங்கலிட்டு சாப நிவர்த்தி செய்துதான் பிடுங்க வேண்டும். "ஓம் மூலி சர்வ மூலி சர்வசாபம் நசி மசி' என்று பதினாறுமுறை உரு ஜெபித்து எடுத்துவந்து, எவ்வித வேலைகளுக்கும் பிரயோகிக்க நற்பலன் தரும்.
மூலிகைக்கு உயிர் கொடுக்கும் விதம்
தீபதூபமிட்டு தேங்காயை உடைத்து, "ஓம் மூலி... உன்னுடைய உயிர் உன்னுடலில் நிற்க சுவாஹா' என்று முப்பத்திரண்டுமுறை ஜெபித்து பிடுங்கிக்கொள்ள வேண்டும்.
தங்களுடைய ராசி, நட்சத்திரம், கிரகங்களுக்குரிய மரங்களை மனதாரப் பராமரிக்கும்போது நாட்பட்ட கஷ்டங்கள், துயரங்கள் மறைந்துவிடும்.
நட்சத்திரங்களுக்கு ஏற்ற மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்தால் அதிகப் பலன் கிட்டும்.
27 நட்சத்திர மலர்கள்
அஸ்வினி: அல்லி மலரைக் கொண்டு சரஸ்வதியை வணங்கி, குருவை வணங்கலாம்.
பரணி: நாகலிங்கப்பூவைக் கொண்டு துர்க்கையை வணங்கிவிட்டு குருவுக்கு அர்ச்சனை செய்யவும்.
கிருத்திகை: பூவரசம்பூ கொண்டு அக்னி பகவானை- சூரியனை வணங்கி, குருவுக்கு அர்ச்சனை செய்ய நற்பலன் தரும்.
ரோகிணி: வாடாமல்லி மலரால் பிரம்மனை வணங்கி பின் குருவுக்கு அர்ச்சனை செய்யலாம்.
மிருகசீரிடம்: கொய்யாப்பூவைக் கொண்டு சந்திரனை வணங்கிவிட்டு குருவுக்கு அர்ச்சனை செய்தல் நன்று.
திருவாதிரை: சாமந்திப் பூவைக்கொண்டு பரமசிவனை வணங்கியபின் குருவுக்கு அர்ச்சனை செய்க.
புனர்பூசம்: நித்திய கல்யாணி மலரால் அதிதி தேவதையை வணங்கி குருவுக்கு அர்ச்சனை செய்க.
பூசம்: காட்டுமல்லி மலர்கொண்டு பிரஹஸ்பதியை வணங்கிவிட்டு குருவுக்கு அர்ச்சனை செய்யவும்.
ஆயில்யம்: மயில்கொன்றை மலரினைக் கொண்டு ஆதிகேசவனை வணங்கியபின் குருவுக்கு அர்ச்சனை செய்தல் நன்று.
மகம்: ரோஜா மலர் கொண்டு சுக்கிரனை வணங்கிவிட்டு குருவுக்கு அர்ச்சனை செய்தல் நல்லது.
பூரம்: அரளி மலர்கொண்டு சரஸ்வதியை வணங்கியபின் குருவுக்கு அர்ச்சனை செய்யவும்.
உத்திரம்: கனகாம்பரம் மலர் கொண்டு சூரிய பகவான் அருளைப்பெற்று குருவுக்கு அர்ச்சனை செய்யவும்.
ஹஸ்தம்: மனோரஞ்சித மலர் கொண்டு பைரவரை வணங்கிவிட்டு குருவுக்கு அர்ச்சனை செய்யவும்.
சித்திரை: நந்தியாவட்டை மலர்கொண்டு விஸ்வகர்மாவை வணங்கியபின் குருவுக்கு அர்ச்சனை செய்க.
சுவாதி: ஏதாவது வெள்ளை மலரால் வாயு பகவானை வணங்கியபின் குருவுக்கு அர்ச்சனை செய்க.
விசாகம்: ஏதாவது சிவப்பு மலர் கொண்டு குமரனை வணங்கிவிட்டு குருவுக்கு அர்ச்சனை செய்க.
அனுஷம்: ஏதாவது மஞ்சள் நிற மலரால் லட்சுமியை வணங்கிவிட்டு குருவுக்கு அர்ச்சனை செய்க.
கேட்டை: புகையிலைப் பூவைக்கொண்டு இந்திரனை வணங்கிவிட்டு குருவுக்கு அர்ச்சனை செய்க.
மூலம்: மகிழம்பூவைக் கொண்டு வருண பகவானை வணங்கி அதன்பின் குருவுக்கு அர்ச்சனை செய்தல் நன்று.
பூராடம்: செம்பருத்திப்பூ கொண்டு வருணனை வணங்கி அதன்பின் குருவுக்கு அர்ச்சனை செய்தல் நன்று.
உத்திராடம்: செந்தாமரை மலர்கொண்டு கணபதியை வணங்கி விட்டு குருவுக்கு அர்ச்சனை செய்க.
திருவோணம்: வேப்பம்பூவைக் கொண்டு விஷ்ணுவை வணங்கிவிட்டு குருவுக்கு அர்ச்சனை செய்க.
அவிட்டம்: எருக்கமரப்பூவைக் கொண்டு விநாயகரை வணங்கி வரவும்.
சதயம்: விருட்சிப்பூவைக் கொண்டு சனி பகவானை வணங்கிவிட்டு குருவுக்கு அர்ச்சனை செய்க.
பூரட்டாதி: மாதுளம் பூவைக் கொண்டு குபேரனை வணங்கிவிட்டு குருவுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
உத்திரட்டாதி: தென்னம்பூவைக் கொண்டு காமதேனுவை வணங்கி அதன்பின் குருவுக்கு அர்ச்சனை செய்வது மிக நல்லது.
ரேவதி: அசோகமரப்பூவை வைத்து ஆஞ்சனேயரை வணங்கி குருவுக்கு அர்ச்சனை செய்தல் நன்று.
குறிப்பிட்ட பூக்கள் கிடைப்பது அரிது. எனவே அதற்குரிய வண்ண மலரைக்கொண்டு வணங்குவதும் போதுமானது.
குரு விருச்சிகத்தை அடையப்போகிறார்; அருள்புரிவார்.
செல்: 93801 73464