தினசரி ஹோரை என்பது, அந்தக் கிழமைக்கு யார் அதிபதியோ அதனைக் கொண்டு ஆரம்பிக்கும். ஞாயிற்றுக்கிழமை சூரிய ஹோரை, திங்கட்கிழமை சந்திர ஹோரை, செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரை, புதன்கிழமை புதன் ஹோரை, வியாழக்கிழமை குரு ஹோரை, வெள்ளிக் கிழமை சுக்கிர ஹோரை, சனிக்கிழமை சனி ஹோரை என தினசரி சூரிய உதய நேரத் திலிருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு ஹோரை மாறிமாறி வரும். ஒவ்வொருவரும் ஹோரையைப் பார்த்து வேலையை ஆரம்பிப்பது மிகவும் நலம். முயற்சிக்கும் காரியம் திருப்திகரமாக முடியும்.
சூரிய ஹோரையில் செய்யவேண்டியவை
உத்தியோகம் கிடை
தினசரி ஹோரை என்பது, அந்தக் கிழமைக்கு யார் அதிபதியோ அதனைக் கொண்டு ஆரம்பிக்கும். ஞாயிற்றுக்கிழமை சூரிய ஹோரை, திங்கட்கிழமை சந்திர ஹோரை, செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரை, புதன்கிழமை புதன் ஹோரை, வியாழக்கிழமை குரு ஹோரை, வெள்ளிக் கிழமை சுக்கிர ஹோரை, சனிக்கிழமை சனி ஹோரை என தினசரி சூரிய உதய நேரத் திலிருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு ஹோரை மாறிமாறி வரும். ஒவ்வொருவரும் ஹோரையைப் பார்த்து வேலையை ஆரம்பிப்பது மிகவும் நலம். முயற்சிக்கும் காரியம் திருப்திகரமாக முடியும்.
சூரிய ஹோரையில் செய்யவேண்டியவை
உத்தியோகம் கிடைக்க, வியாபாரம் செய்ய, ஒருவருடைய உதவிபெற, பெரிய உத்தியோகஸ்தரைக் காண, உயில் சாசனம் எழுத உகந்தது.
சந்திர ஹோரையில் செய்யவேண்டியவை
வியாபாரம், பெண் பார்க்கும் படலம், கேள்விகள் கேட்பது, பயணம், கப்பல் யாத்திரை, ஒருவரைக் (மற்ற வர்க்கத்தாரை) காண்பது உசிதம். தேய்பிறைச் சந்திரன் என்றால் கஷ்ட காலம்.
செவ்வாய் ஹோரையில் செய்யவேண்டியவை
இந்த நேரத்தில் உள்ளக் கருத்துகளை மறை முகமாக வைப்பது நலம். யோசிக்காமல் வெளி யிடுவது துன்பம் தரும். எனவே செவ்வாய் ஹோரையில் ஏதும் செய்யாமலிப்பது நலம்.
புதன் ஹோரையில் செய்யவேண்டியவை
தகவல்களை அனுப்பவும், வழக்கறிஞரைப் பார்க்கவும், எல்லாவித எழுத்து வேலைகளுக்கும், தேர்வெழுதவும், ஜோதிட- விஞ்ஞான ஆராய்ச்சி செய்யவும், அம்மான் வர்க்கத்தினரைப் பற்றிப் பேசவும் நலம்.
குரு ஹோரையில் செய்யவேண்டியவை
எல்லாவற்றுக்கும் நலம். பணக்காரர்கள் தயவை நாடுவது, பொருட்கள் வாங்குவது, பணி விவரங்களைத் தொடங்குவது, ஆடை, ஆபரணங்கள் சேர்ப்பது போன்றவற்றைச் செய்யலாம். காரியங்கள் தடையில்லாமல் நடக்கும். விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை ஏற்றது.
சுக்கிர ஹோரையில் செய்யவேண்டியவை
எல்லா சுப வேலைகளும் நடத்த, பெண்களைப் பற்றிப் பேச, கால நிகழ்ச்சிகளுக்குப் பிறர் தயவைப்பெற, விருந்துண்ண, கடன் வசூல் செய்ய, மருந்துண்ண, வாகனங்கள் வாங்க, களத்திர வர்க்கத்தினரோடு பேச சிறந் தது. சுக்கிர ஹோரையில் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றிபெறலாம்.
சனி ஹோரையில் செய்யவேண்டியவை
இவ்வோரை மிகவும் கொடியது.
இருந்தபோதிலும் நிலம் சார்ந்த சொத்துகளைப் பற்றி நடவடிக்கை எடுக்கவும், தோப்பு துரவுகள் பற்றிப் பேசவும் நல்லது.
ஒவ்வொரு வியாபாரியும், சகல தொழில்களிலும் ஹோரை பார்த்து நடந்துகொண்டால் எவ்விதக் கஷ்டங் களும் நேரிடாது. புதன், குரு, சுக்கிர ஹோரையில் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியடையலாம்.
மற்ற ஹோரைகளில், குறிப்பிட்டுள்ள தொழில்களை மட்டும் செய்தால் நல்லது.
பரிகாரம்
"ஓம் ஹ்ரீம் ஆதித்யாச, சோமாய, மங்களாய, புதாய, குரு, சுக்கிர, சனிப்ரயச்ச, ராகுவே கேதவே நமஹ' என்று தினசரி ஒரே நேரத்தில் 16 முறை சொல்லிலிவர வாழ்வில் பிணி, பகை, வறுமை நீங்கி மேன்மையுறலாம்.
மேற்கண்ட சுலோகத்தை வட மொழியில் சொல்ல இயலாதவர்கள் "ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது நவகிரக சகாய நமஹ' என்று தினசரி ஒரே நேரத்தில் சொல்லிலி வழிபட்டுவர மேன்மையுறலாம்.
செல்: 94871 68174