ருவர் சொந்த முயற்சியால் பெரிய மனிதராக வர வேண்டுமெனில், அவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருக்கவேண்டும். அப்படியிருந்தால், அவர் ஆழமாக சிந்திப்பார். இனிமேல் அடிமையாக வேலை செய்யக்கூடாது; சொந்தத் தொழிலின்மூலம் வளரவேண்டுமென உறுதி கொள்வார்.

மனதில் நினைப்பதை செயல்வடிவில் கொண்டுவர 2, 5, 7, 9, 10-ஆம் பாவங்கள் நன்றாக இருக்கவேண்டும்.

r

ஒரு ஜாதகத்தில் 10-ஆம் அதிபதி உச்சம்பெற்றால் அல்லது லக்னத்திலோ கேந்திர ஸ்தானத்திலோ (1, 4, 7, 10) இருந்தால், அந்த ஜாதகர் யாருக்கும் அடிமையாக இல்லாமல், உழைத்துப் பெரிய மனிதராக வேண்டுமென நினைப்பார். தன் எண்ணத்தில் வெற்றியும் பெறுவார்.

Advertisment

லக்னாதிபதி லக்னத்திலேயே இருந்து, 9-க்கு அதிபதி 2-ல் இருந்தால், அவர் சுயமுயற்சியுடன் தைரியமாகத் தொழிலில் ஈடுபடுவார். நிறைய பணத்தையும் சம்பாதிப்பார்.

10-க்கு அதிபதி உச்சமாக இருந்து, 9-க்கு அதிபதி சுயவீட்டிலிருந்தால், அவர் சுயமுயற்சியால் தன் குடும்பத்துக்கு சம்பந்தமே இல்லாத தொழிலைச் செய்து அதில் வெற்றி காண்பார்.

ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் லக்னாதிபதி, 2-ல் 2-ஆம் பாவாதிபதி, 6-ல் சனி இருந்தால், அந்த ஜாதகர் சுயமுயற்சியால் 27 வயதுக்குப்பிறகு பெரிய தொழிலைச் சொந்தமாகச் செய்து வெற்றி காண்பார்.

Advertisment

லக்னத்தில் செவ்வாய், குரு, 10-ல் சந்திரன் இருந்தால், அவர் சுயமாகத் தொழில் செய்து நிறைய சம்பாதிப்பார்.

லக்னத்தில் சூரியன், சுக்கிரன், புதன், 9-ல் குரு இருந்தால், 31 வயதுக்குப் பிறகு அந்த ஜாதகர் சுயமுயற்சியால் தொழில்செய்து பணம் சம்பாதிப்பார்.

லக்னத்தில் சூரியன், புதன், செவ்வாய், 4-ல் சந்திரன் இருந்தால், அவர் கைவினைப் பொருட்கள் செய்யும் தொழிலில் பெரிய அளவில் ஈடுபடுவார். அதில் வெற்றிபெற்ற வர்த்தகராக பவனி வருவார்.

லக்னத்தில் சூரியன், புதன், 2-ல் சந்திரன், 10-ல் செவ்வாய் இருந்தால், 32 வயதுக்குப் பிறகு அந்த ஜாதகர் சுயமாகத் தொழில்செய்து வெற்றி காண்பார்.

லக்னத்தில் சந்திரன், 6-ல் சுக்கிரன், 9-ல் செவ்வாய், சனி, ராகு இருந்தால், 32 வயதுக்குப் பிறகு பெரிய தொழிலதிபராக ஒளி வீசுவார்.

லக்னத்தில் உச்ச குரு, உச்ச சந்திரன் இருந்தால், அந்த ஜாதகர் பலமான முயற்சிகளில் ஈடுபட்டு பெரிய தொழிலதிபராவார்.

11-ல் சந்திரன், சனி, 5-ல் குரு, 7-ல் சூரியன் இருந்தால், அவர் சுயமுயற்சியால் கடுமையாக உழைத்து, 38 வயதுக்குப் பிறகு பெரிய தொழிலதிபராக முத்திரை பதிப்பார்.

லக்னத்தில் சந்திரன், செவ்வாய், 5-ல் குரு, 10-ல் சனி இருந்தால், அவர் இளம்வயதிலிருந்தே கடுமையாக உழைப்பார். 36 வயதுக்குப் பிறகு பெரிய தொழிலதிபராவார்.

லக்னாதிபதி அஸ்தமனமாக இருந்து, 10-க்கு அதிபதி பலவீனமாக இருந்தால், அந்த ஜாதகர் தொழிலில் ஈடுபடும்போது நிறைய தடைகள் உண்டாகும்.

9-ல் ராகு, லக்னத்தில் சூரியன் இருந்தால், அவரது வாழ்க்கையின் முற்பகுதியில் ஏராளமான பிரச்சினைகள் ஏற்படும்.

சூரியனுடன் லக்னாதிபதி 4-ல் இருந்து, அந்த சூரியனை சனி பார்த்தால், அந்த ஜாதகர் சுயமாகத் தொழில் செய்யும்போது பல சிக்கல்களை சந்திப்பார்.

6-ல் செவ்வாய், 10ல் சனி இருந்தால், அவர் சுயமாகத் தொழில் செய்யும்போது அவரின் பகைவர்கள் சூனியம் செய்வார்கள்.

லக்னத்தில் செவ்வாய், 4-ல் சனி, 8-ல் ராகு இருந்து, சந்திரன் பலவீனமாக இருந்தால், அந்த ஜாதகருக்கு சுயமாக எதையும் செய்யத் துணிச்சல் இருக்காது.

அப்படியே அவர் எதையாவது ஆரம்பித்தாலும், அவரது விரோதிகள் பல சூழ்ச்சிகளைச் செய்து கெடுதலை உண்டாக்குவர்.

ஒரு வீட்டின் தென்மேற்கு திசை அதிகமாக காலியாக இருந்தாலும், அந்த வீட்டின் வடகிழக்கு சுத்தமாக இல்லை யென்றாலும் அந்த ஜாதகர் எவ்வளவு முயற்சிசெய்தாலும் சுயமாகத் தொழில் செய்யமுடியாது. அப்படிச் செய்தால் நிறைய நஷ்டங்களைச் சந்திப்பார்.

பரிகாரங்கள்

வீட்டில் உணவுப் பொருட்கள் வைக்குமிடத்தில் மிளகாயையும் எலுமிச்சம்பழத்தையும் ஒரே பாத்திரத்தில் வைக்கக்கூடாது.

தினமும் காலையில் குளித்து முடித்து, விநாயகரையும் குலதெய்வத்தையும் சூரியனையும் வணங்கவேண்டும்.

வெள்ளிக்கிழமை துர்க்கையை வழிபடவேண்டும். துர்க்கா சப்தசதி படிக்கலாம்.

ஆஞ்சனேயரின் நாமத்தை உச்சரிக்கவேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை கோதுமை, வெல்லம், சிவப்புத் துணி ஆகியவற்றை தானம் தருதல் நன்று.

செல்: 98401 11534