பிரசன்ன கிரியா எனும் பிரசன்னம் பற்றிய தெளிவான விளக்கங்களுடன்கூடிய பல நூல்கள் நமது நாட்டில் உள்ளன. அவற்றுள் சில- கிருஷ்ணீயம், பிரசன்ன மார்க்கம், பிரசன்ன நீதி, பிரசன்ன அனுஷ்டான பத்ததி, பிரசன்ன தந்த்ரா ஆகியவையாகும். பிரசன்னம் என்றால் "கேள்வி' என்று பொருள். வருபவர் ஜோதிடரிடம் கேட்கும் கேள்வி பிரசன்னமாக மாறுகிறது.
பிரசன்னமானது நமது நாட்டின் பல பகுதிகளிலும் பல்வேறுவிதமாகப் பார்க்கப் படுகிறது. அதில் முக்கியமாக கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஆரூடப் பிரசன்னம், தாம்பூலப் பிரசன்னம், குடும்பப் பிரசன்னம் மற்றும் கிராமப் பிரசன்னம் ஆகியவை பார்க்கப் படுகின்றன.
பிரசன்னமானது ஒரு கோவிலைப் பற்றியோ, கிராமம், நகரம் மற்றும் நாட்டைப் பற்றியோ இருக்கலாம். பிரசன்னத்திற்கான நல்ல நாளையும், நேரத்தையும் ஜோதிடரே பஞ்சாங்கத்தைப் பார்த்து நிச்சயம் செய்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/baba_17.jpg)
இப்போதும் கேரளாவில் பார்க்கப்படும் பிரசன்னங்களாவன-
1. தாம்பூலப் பிரசன்னம்- பிரசன்னம் பார்க்க வரும் நபர் கொண்டுவரும் தாம்பூலம் எனும் வெற்றிலை, அதன் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு பார்க்கும் பிரசன்னமாகும். அவர்கள் கொண்டுவரும் வெற்றிலையின் எண்ணிக்கை 12-க்குக் குறையாமல் இருக்கவேண்டும்.
2. சாமான்யப் பிரசன்னம்- லக்னத்திற்கும், ஆரூட லக்னத்திற்குமுள்ள தொடர்பினை வைத்து பிரசன்னப் பலன் கூறுதலாகும்.
3. அஷ்டமங்கலப் பிரசன்னம்- கேள்வி கேட்கவந்தவர் அந்தநேரத்தில் தங்க நாணயத்தை ராசிக்கட்டத்தில், எந்த ராசியில் வைக்கிறாரோ அதை ஆரூட லக்னமாக வைத்து பலன்கூறும் பிரசன்ன முறையாகும்.
4. தெய்வப் பிரசன்னம்- கோவில்கள், தெய்வத்தை வைத்து வணங்கும் இடங்கள் மற்றும் புனிதத் தலங்களில் வைத்துப் பார்க்கப்படும் பிரசன்ன முறையாகும்.
5. குடும்பப் பிரசன்னம்- குடும்பத் தலை வரின் ஜென்ம நட்சத்திரத்தை வைத்துப் பிரசன் னம் பார்ப்பதாகும்.
பிரசன்னம் பார்ப்பதற்காக வந்தவர் கேட்கும் முதல் கேள்விக்கான பதிலை ஆரூட லக்னத் தைக்கொண்டும், இரண்டாவது கேள்விக்கான பதிலை உதய லக்னத்தைக் கொண்டும், மூன்றா வது கேள்விக்கான பதிலை சந்திரா லக்னத் தைக்கொண்டும், நான்காவது கேள்விக்கான பதிலை சூரிய லக்னத்தைக்கொண்டும், 5, 6 மற்றும் 7-ஆவது கேள்விக்கான பதில்களை நல்ல நிலையிலுள்ள குரு, சுக்கிரன் அல்லது புதனின் பாகைகளைக்கொண்டும் பதிலுரைக்க வேண்டும்.
அதற்குமேல் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் வருட ஆரூட லக்னம் கண்டு, மேற்சொன்ன கிரகங்களின் பாகை களைக்கொண்டும் பதில் தரவேண்டும். இந்தப் பாகையே பிரசன்ன ஸ்புடம் என அழைக்கப் படுகிறது.
ஒரு ஜோதிடர் லக்னத்தையும், கேள்வி யோடு முக்கிய காரக கிரகத்தையும் வழிகாட்டி யாகக்கொண்டு அவர்களின் தொடர்பால் ஏற்படும் பல ஸ்புடங்களின்மூலமாக கேள்வி களுக்கான பதில்களைக் காண முற்படுகிறார்.
1. விவாகப் பிரசன்னம்- சிறந்த திருமணப் பொருத்தத்தைப் பார்க்கவும், திருமணம் செய்வதற்கான சிறப்பான முகூர்த்தத்தைத் தேர்ந்தெடுக்கவும் வேண்டும். திருமண தாமதத்திற்கான காரணத்தையும் இந்த பிரசன்னம்மூலமாக ஆராய்ந்து அறியலாம். இவையே விவாகப் பிரசன்னமாகும்.
2. சந்த்யா ஸ்புடம்- இந்த நிலைகளை அறிய பார்க்கப்படுவது சந்த்யா ஸ்புடமாகும்.
3. விக்ன ஸ்புடம்- திருமணத்தில் ஏற்படும் தடை மற்றும் தாமதங்களைக் காண்பது விக்ன ஸ்புடமாகும்.
4. நிவர்த்தி ஸ்புடம்- லக்னப் பாகை, சுக்கிரன் மற்றும் ஆரூட லக்னத்திற்கு 12-ஆமதிபதி பாகை ஆகியவற்றைக் கூட்டவருவது நிவர்த்தி ஸ்புடமாகும். இது பரிகாரங்களை அறிய உதவக் கூடியதாகும். இதுபோன்று திருமணத்திற்கான பல்வேறு ஸ்புடங்கள் மற்றும் பல கேள்விகளுக்கான பதில்களை அறிய ஜோதிடர்களால் ஆராயப்படுகின்றன.
5. அனுகூல்ய ஸ்புடம்- ஒருவருக்கோ அல்லது ஒரு நிறுவனத்துக்கோ அல்லது ஜாதகர் தனது இலக்கினை அடைய உதவும் உறவுகளுக்கோ பார்க்கப்படும் ஸ்புடமே அனுகூல்ய ஸ்புடமாகும்.
6. வேதை ஸ்புடம்- தடைகள் ஏற்படு வதற்கான காரணங்களை அறிய உதவும் ஸ்புடமாகும்.
7. தோஷ ஸ்புடம்- ப்ராணர்த்த நிலை, மந்திரம், யந்திரம், அவ்ஷத நிலை, அஸ்த்ர நிலை சாஸ்திரம், சல்ய, சூன்ய நிலை, திரிதோஷ நிலை மற்றும் பல நிலைகளை அறிய உதவும்.
பொதுவாக தினமும் ஜோதிடர்கள் பல்வேறு வகையான பிரசன்ன ஜாதகங் களைக் கையாள்கிறார்கள். அவற்றில் சில வற்றை இங்கே காண்போம்.
சந்தான ஸ்புடம்- புத்திர பாக்கியத்தை அறிய உதவும் பிரசன்னம். இதற்கு சந்தான சூர்யா, சந்தான சந்திரா, சந்தான லக்னா, சந்தான குரு, சந்தான சுக்கிர, தத்துப் புத்திர ஸ்புடம் மற்றும் சந்தான தோஷம் ஆகியவற்றையும் காணவும் உதவுகிறது.
ரோஹப் பிரசன்னம்- நோயைக் காண உதவுவது இது. நோய்க்கான காரணம், அதனால் ஏற்படும் விளைவுகள், தகுந்த சிகிச்சை முறை மற்றும் தீருமா? தீராதா அல்லது மரணத்தில் முடியுமா என அறிய உதவுவதாகும்.
உத்யோகப் பிரசன்னம்- வேலை, பயிற்சி கள், பதவியிழப்பு, பதவி உயர்வு பற்றி அறிய உதவும்.
வியாபார- விவகாரப் பிரசன்னம்- வியாபார- விவகாரங்களைப் பற்றியது. வியாபாரத்தில் வெற்றி, தோல்வி, விரிவாக்கம் செய்தல், பொருளாதார முன்னேற்றம், லாபம், மறு சீரமைத்தல், தொழில், வணிகம் மற்றும் விவசாயம் பற்றிய பிரசன்னமாகும்.
சோரப் பிரசன்னம் அல்லது திரவியப் பிரசன்னம்- திருட்டு, காணாமல்போதல், தொலைந்த நேரம், எத்தனைப் பேர் தொடர்புள்ளது, தொலைந்த பொருள் எது? மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? மறைத்து வைக்கப்பட்டுள்ள இடம் எது?
அது விற்கப்பட்டுவிட்டதா மற்றும் திருடிய வரின் அங்க அடையாளங்கள், உருவம் ஆகியவற்றை அறியலாம்.
அபவாத பிரஸன்னம்- காணாமல் போனவர்கள் மற்றும் காணாமல்போன கால்நடைகள் பற்றி அறிய போடப்படும் பிரசன்னம்.
யாத்திரைப் பிரஸன்னம்- பயணங்கள் பற்றி அறிவதற்கான பிரசன்னம்.
ராஜ்கீய பிரசன்னம்- அரசியல் விவகாரங் கள், தேர்தல் வெற்றி, தோல்வி, பாராளுமன்ற நிலை, சட்டமன்ற நிலை, மந்திரி சபையின் ஆயுட்காலம் போன்றவற்றை அறிவதற்கான பிரசன்னம்.
பல பழம்பெரும் நூல்களில் குறிப்பிடப் பட்ட பிரசன்ன வகைகள் மற்றும் அதனா லான பலன்கள் பற்றிய விவரங்கள் பயனுள்ள தாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.
செல்: 97891 01742
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-07/baba-t.jpg)