Advertisment

தொழிலில் வெற்றி தரும் கண்ணன்? -மகேஷ் வர்மா

/idhalgal/balajothidam/success-industry-makesh-verma

ரு மனிதரிடம் இருக்கும் குறைகளை நீக்கி, அவரைச் சொந்தக்காலில் நின்று கடுமையாக உழைக்கவைத்து, பெரிய மனிதராகும் வாய்ப்புகளை உருவாக்கி, தன் திறமைகளை உணரச் செய்பவர் கிருஷ்ண பகவான். பகவத் கீதையில், "என்னிடம் சரணாகதி அடையுங்கள்; உங்களை நான் காப்பாற்று வேன்' என்று கூறுகிறார் கண்ண பரமாத்மா. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் பலவீன மாக இருந்தால், அவர் பய உணர் வுடன் இருப்பார். மனநோயாலும் பாதிக்கப்படலாம். பலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரும். சரியாகத் தூக்கம் வராது. இந்த தோஷமுள்ள வர்கள் கிருஷ்ணரின் திருவுருவப் படத்தையோ சிலையையோ வீட்டில் வைத்துப் பூஜை செய்யவேண்டும். பால்கோவா, கற்கண்டு, துளசி வைத்து குழந்தைப் பருவ கிருஷ்ணர் உருவத்தை வழிபடவேண்டும்.

Advertisment

lk

ஒருவர் ஜாதகத்தில் புதன் அஸ்த மனமாக இருந்தால் அவர் அதிகமாக சிந்திப்பார். அதனால் ரத்த கொதிப்ப

ரு மனிதரிடம் இருக்கும் குறைகளை நீக்கி, அவரைச் சொந்தக்காலில் நின்று கடுமையாக உழைக்கவைத்து, பெரிய மனிதராகும் வாய்ப்புகளை உருவாக்கி, தன் திறமைகளை உணரச் செய்பவர் கிருஷ்ண பகவான். பகவத் கீதையில், "என்னிடம் சரணாகதி அடையுங்கள்; உங்களை நான் காப்பாற்று வேன்' என்று கூறுகிறார் கண்ண பரமாத்மா. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் பலவீன மாக இருந்தால், அவர் பய உணர் வுடன் இருப்பார். மனநோயாலும் பாதிக்கப்படலாம். பலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரும். சரியாகத் தூக்கம் வராது. இந்த தோஷமுள்ள வர்கள் கிருஷ்ணரின் திருவுருவப் படத்தையோ சிலையையோ வீட்டில் வைத்துப் பூஜை செய்யவேண்டும். பால்கோவா, கற்கண்டு, துளசி வைத்து குழந்தைப் பருவ கிருஷ்ணர் உருவத்தை வழிபடவேண்டும்.

Advertisment

lk

ஒருவர் ஜாதகத்தில் புதன் அஸ்த மனமாக இருந்தால் அவர் அதிகமாக சிந்திப்பார். அதனால் ரத்த கொதிப்பு, மன பயம் இருக்கும். அந்த புதனை பாவகிரகம் பார்த்தால், சிலருக்கு தோல் நோய் வரும். சிலரின் சகோதரிகள் சந்தோஷமாக வாழமாட்டார்கள். இந்த குறைபாடு உள்ளவர்கள் கிருஷ்ணரின் படத்தை வைத்து, பாயசம் செய்து அதில் துளசி இலையைப் போட்டு, பிரசாதமாக வைத்து வழிபடவேண்டும். கிருஷ்ணரின் "க்ளீம கிருஷ்ணாய நமஹ' என்ற மந்திரத்தைக் கூறவேண்டும். ஏகாதசியன்று விரதமிருந்து, ஒருவேளை சாப்பிடவேண்டும். இதனால் குறைகள் நீங்கி சந்தோஷமாக வாழலாம்.

ஒரு ஜாதகத்தில் செவ்வாய், சனி சேர்ந்து லக்னம் அல்லது 4, 7, 12-ல் இருந்தால், கணவன்- மனைவி உறவில் பிரச்சினை இருக்கும். எப்போதும் வீட்டில் சண்டை நடக்கும். அப்படி உள்ளவர்கள் ராதா கிருஷ்ணனின் படத்தை வைத்து, சிவப்பு நிற மலர்கள், இனிப்பு வகைள், துளசி ஆகியவற்றைப் படைத்துப் பூஜை செய்யவேண்டும். அதன்பிறகுதான் காலை உணவு சாப்பிடவேண்டும்.

Advertisment

ஒருவரின் ஜாதகத்தில் 5-ஆம் பாவாதிபதி அஸ்த மனமாக அல்லது நீசமாக அல்லது பாவகிரகத்தின் பார்வையுடன் இருந்தால் அவருக்கு வாரிசு இருக்காது. அவர் தினமும் பாலகிருஷ்ணனின் படத்தை வைத்துப் பூஜை செய்யவேண்டும். பாயசம், பால்கோவா, வெண்ணெய், துளசியைப் பிரசாதமாக வைத்து, சந்தான கோபாலனுக்குரிய மந்திரத்தைக்கூறி வழிபட்டால் வாரிசு உண்டாகும்.

ஜாதகத்தில் 2-ஆம் பாவம் கெட்டுப்போனால், வீட்டில் சண்டை நடக்கும். 2-ஆம் பாவத்தில் செவ்வாய், சூரியன் அல்லது சுக்கிரன், சூரியன், செவ்வாய் இருந்தால், அவரின் வீட்டில் பிரச்சினைகள், வீண்விவாதங்கள் இருக்கும். அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது.

லக்னத்தில் செவ்வாய், 4-ல் சூரியன், 7-ல் சனி இருந்தால், அந்த ஜாதகரின் குடும்பத்தில் பல சிக்கல்கள் இருக்கும்.

அவரின் குடும்பத்தில் இருப்பவர்களே அவரை ஏமாற்றுவார்கள். அவரின் சொத்து களை அபகரிப்பார்கள்.

3-ல் சுக்கிரன், ராகு, 4-ல் சூரியன், புதன், 7-ல் சனி இருந்தால், அவரின் வீட்டில் சண்டை நடக்கும். ஜாதகருக்கு சிலர் சூனியம் வைப்பார்கள்.

இந்த குறைகள் இருப்பவர்கள் பூஜையறையில் ஊஞ்சலிலில் பாலகிருஷ்ணனை வைத்து, அதற்குக் கிரீடம் சூட்டி, தினமும் பூஜை செய்யவேண்டும். அதன்பிறகுதான் சாப்பிட வேண்டும். வீட்டில் செய்யப்படும் சைவ உணவை கிருஷ்ணனுக்குப் படைத்த பிறகுதான் மற்றவர்கள் சாப்பிட வேண்டும். பிறருக்கும் தரவேண்டும். இதனால் அந்த உணவு பிரசாதமாக மாறிவிடும். இவ்வாறு செய்தால், சகல தோஷங்களும் நீங்கி சந்தோஷச் சூழல் உண்டாகும்.

குழந்தைகள் பேசுவதில் பிரச்சினை, திக்கு வாய்க் குறைபாடிருந்தால், ஜாதகத்தில் புதன் அஸ்தமனமாக இருக்கிறதென்று பொருள். செவ்வாயும் சரியாக இருக்காது. இந்த குறை யுள்ள குழந்தைகளின் பெற்றோர் மதுராவின் அருகிலுள்ள ரமணரேத்தி என்ற இடத்திலிருக்கும் கிருஷ்ணனின் ஆலயத்திற்குச் சென்று வழிபடவேண்டும். அங்கிருக்கும் மண்ணை எடுத்து, குழந்தையின் நாக்கில் வைத்தால் குறை நீங்கும்.

ஒருவருக்கு ஏழரைச்சனியில் பாதிப்பு அதிகமாக இருந்தால் அல்லது ஜாதகத்தில் சனி சரியில்லாமல் இருந்தால், சனி பகவானுக்கு கிருஷ்ணர் தரிசனம் தந்து வரமளித்த இடமான- மதுராவிற்கு அருகிலுள்ள கோகில வனத் திற்குச் சென்று சனி பகவானை வழிபட்டால், கிருஷ்ணரின் அருள் கிடைக்கும். சனியின் தாக்கம் குறையும்.

ஒருவருக்கு தொழில் சரியாக அமையாமல் கஷ்டங்களை அனுபவித்தால், அவர் பிருந்தா வனத்திலுள்ள "பாங்கே பிஹாரி' என்ற கிருஷ்ணரின் உருவத்தை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். "என் அனைத்து கஷ்டங்களையும் நீக்க வேண்டும்' என்று மனமுருக வழிபட்டால் எல்லா பிரச்சினைகளும் தீரும். தைரியம் உண்டாகும். தொழிலில் வெற்றிகாணலாம்.

செல்: 98401 11534

bala070220
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe