விரல் நகங்களின் சூட்சுமம்! -ஆர். சுப்பிரமணியன்

/idhalgal/balajothidam/subtlety-fingernails-r-subramanian

ருவில் உருவாகும் குழந்தையின் உறுப்புகளின் வளர்ச்சி வாலிப வயதில் முழுமை பெறுகிறது. வெட்டப்பட்ட மரக்கிளைகள் மீண்டும் துளிர்த்து வளர்வதுபோன்ற அதிர்ஷ்ட அமைப்பு மனிதனுக்கில்லை எனினும், மனிதனின் இறுதி மூச்சுவரை வளர்ந்துகொண்டே இருக்கும் உறுப்பு ஒன்றுண்டு. அத்தகைய சிறப்பு வாய்ந்த உறுப்பு நகங்களே என்றால் மிகையாகாது. கால் விரல்களைவிட கை விரல்களே மனிதனுடைய செயல்களில் பெரிதும் பயன்படுத்தப்படுவதால், நகங்களுக்கு ரேகை சாஸ்திரம் முக்கியத்துவம் தருகிறது.

f

விரல

விரல்களுக்கு உறுதியையும் அழகையும் தருபவை நகங்களே. மேலும் மனிதனது உடல் ஆரோக்கியத்திற்கும் விரல் நகங்களுக் கும் நெருங்கிய தொடர்புண்டு. இனி ரேகை சாஸ்திரப்படி சில பொதுவான குறிப்பு களைக் காண்போம்.

விரல் நகங்கள் இளஞ்சிவப்பு, தாமரை மலர் வண்ணம் போன்ற நிறங்களில் அமைவதே சிறந்தது. சீரான ரத்த ஓட்டம், ஆரோக்கிய மான உடல்நிலை, நோய் வந்தாலும் எளிதில் குணமாகும் நிலை போன்றவை அமையப் பெறும். வெளிர்நீலம், வெளிர்மஞ்சள் மற்றும் சிறுசிறு புள்ளிகள் இருந்தால் உடல்நலக் குறைபாடுகள் வருமென்று எதிர்பார்க்கலாம்.

விரல் நகங்களின் அடிப்பகுதிகளில் இளஞ்சிவப்பு நிறத்தில் தெளிவான சந்திர வளையம் அமைவது, நல்ல உடல்நலம் மற்றும் வலிமையை சுட்டிக்காட்டும். சின்னஞ் சிறு சந்திர வளையம் அல்லது தென்படா மலே இருந்தால் ரத்த ஓட்டக் குறைபாடுகள் ஏற்படுமென கருதலாம்.

நீண்ட நகங்கள் கொண்ட நபர்களுக்கு பெரும்பாலும் மார்பு, நுரையீரல் தொடர் பான நோய்கள் ஏற்படலாம். அந்த நபர்கள் அமைதியானவராகவும், மென்மையானவராகவும் இருப்பார்கள். கற்பனை வளம் கொண்டவர்கள். கலைகளில் ஈடுபாடு இருக் கும். உயர்ந்த குறிக்கோள், எண்ணம் கொண்டவர்கள்.

குட்டையான நகங்களைக் கொண்ட வர்களுக்கு பெரும்பாலும் இதயம் சார்ந்த ஆரோக்கியக் குறைபாடுகள் அமையும்.

அதனுடன் சந்திர வளையமும் இல்லையென் றால் இதயக் கோளாறுகள் ஏற்படும் எனலாம். இத்தகைய நபர்கள் எதையும் விமர்சனம் செய்வதில் சிறந்தவர்கள். விவாதங்களில் அதிக ஆர்வமிருக்கும். சாமர்த்தியமாகப் பேசும் திறமை மிகுந்தவர்கள்.

நீண்ட மற்றும் குறுகலான நக அமைப்பு கொண்டவர்களுக்கு முதுகுத்தண்டு தொடர் பான குறைபாடுகள் உண்டாகலாம். நீண்ட, அகலமான நக அமைப்பு கொண்டவர்கள் அதிக உணர்ச்சி வசப்படுவார்கள். எதிலும் கவலை கொள்வார்கள். அடுத்தவர் விஷயங் களில் தலையிடுவார்கள்.

நகங்கள் கீழே குறுகலாக அமையப் பெற்றால் மூளை நரம்பு தொடர்பான குறைபாடுகள் வரலாம். அடிக்கடி விரல் நகங்களைக் கடிக்கும் பழக்கமுள்ள நபர்களும் அதிகம் உணர்ச்சிவசப்படுபவராகவும், கவலை கொள்பவராகவும் இருப்பர்.

மேற்கூறிய கருத்துகள் மேலைநாட்டு ஜோதிட மாமேதை ஷீரோ (1866-1936) அவர் களால் உறுதிப்படுத்தப்பட்டவை.

bala250621
இதையும் படியுங்கள்
Subscribe