திருவாதிரை, சுவாதி, சதயம்
ராகுவின் நட்சத்திரங்கள்..
எதையும் பெரிதாய்
சிந்திக்கும் ராகு
பெரிதான வெற்றிகளைத் தரும்..
பிரம்மாண்டமான
வாழ்க்கையைத் தரும் ராகுவிற்கு
சுப கிரக பார்வை கிடைத்தால்
சொகுசான வாழ்க்கையை கொடுக்கும்...
ஆறு, எட்டு, பன்னிரண்டில்
மறையாத ராகு..
சொந்த ஊரில் புகழோடு வாழவைக்கும்..
கேந்திர, திரிகோணங்களில் இருக்கும் ராகு
எப்படியும் நன்மையே தருவார்..
ராகு தசையில்
நினைத்து பார்க்கமுடியாத
யோகங்களை அள்ளித் தருவார்..
8, 12-ல் இருக்கும் ராகுவை
லக்ன சுபர்கள்
வலுவோடு பார்த்தால்
வெளிநாட்டுக்குச் சென்று
வெகுமானம் பெருவான்..
ராகுவை ராஜ கிரகங்கள்
சுப வலுவோடு பார்த்தால்
ராகு தசையில்
நாடாளும் யோகம் தருவார்..
ராகுவிற்கு வீடு கொடுத்தவன்
சுபராகி ராகுவை பார்த்தால்
நாடறிந்த பணக்காரனாவான்..
ராகுவோடு சனி சேர்ந்து
சுப கிரகங்கள் பல பார்த்தால்
பல்தொழில் செய்து
தொழிலதிபராவான்..
ராகு என்றாலே பிரம்மாண்டம்
பிரம்மாண்ட தொழில் செய்து
பிரபலமாய் வாழ்வான்...
யாருக்கும் தெரியாத ரகசியங்களை
கண்டறிந்த
திருவாதிரை, சுவாதி, சதயம்
ராகுவின் நட்சத்திரங்கள்..
எதையும் பெரிதாய்
சிந்திக்கும் ராகு
பெரிதான வெற்றிகளைத் தரும்..
பிரம்மாண்டமான
வாழ்க்கையைத் தரும் ராகுவிற்கு
சுப கிரக பார்வை கிடைத்தால்
சொகுசான வாழ்க்கையை கொடுக்கும்...
ஆறு, எட்டு, பன்னிரண்டில்
மறையாத ராகு..
சொந்த ஊரில் புகழோடு வாழவைக்கும்..
கேந்திர, திரிகோணங்களில் இருக்கும் ராகு
எப்படியும் நன்மையே தருவார்..
ராகு தசையில்
நினைத்து பார்க்கமுடியாத
யோகங்களை அள்ளித் தருவார்..
8, 12-ல் இருக்கும் ராகுவை
லக்ன சுபர்கள்
வலுவோடு பார்த்தால்
வெளிநாட்டுக்குச் சென்று
வெகுமானம் பெருவான்..
ராகுவை ராஜ கிரகங்கள்
சுப வலுவோடு பார்த்தால்
ராகு தசையில்
நாடாளும் யோகம் தருவார்..
ராகுவிற்கு வீடு கொடுத்தவன்
சுபராகி ராகுவை பார்த்தால்
நாடறிந்த பணக்காரனாவான்..
ராகுவோடு சனி சேர்ந்து
சுப கிரகங்கள் பல பார்த்தால்
பல்தொழில் செய்து
தொழிலதிபராவான்..
ராகு என்றாலே பிரம்மாண்டம்
பிரம்மாண்ட தொழில் செய்து
பிரபலமாய் வாழ்வான்...
யாருக்கும் தெரியாத ரகசியங்களை
கண்டறிந்து வெளியிடுவான்..
உண்மை கசக்கத்தான் செய்யும் ஆனாலும்
உண்மையைச் சொல்ல
பயப்பட மாட்டான்..
ஞானத்தால் தேவ ரகசியங்களை
தெரிந்துகொள்வான்..
எல்லோரும் செய்வதை செய்யாது
எதிர்மறையாய் செயல்படும்
ஆற்றல் பெற்றவன்..
எதிர் திசையில் நடப்பான்..
சுப கிரகத்தோடு இருக்கும் ராகு
கொண்டவன்..
இந்த உலகத்துக்கு
புதிய கண்டுபிடிப்புகளை
உருவாக்கித் தருவான்..
சித்தர் வழிபாடு செய்பவனுக்கு
நற்சிந்தனைகள் கை கொடுக்கும்...
மனித தலை கொண்ட ராகுவிற்கு
உடல் இல்லை..
பாவியால் கெட்டுப்போன ராகு
உடலை தேடியே அலைய வைக்கும்..
ராகு என்றாலே வாய்தான்
எப்பொழுதும் ஏக்கமாய் இருக்கும்..
தேவைக்கு பொய் சொல்லும்
தேவையில்லாத
காரியங்களில் ஈடுபடும்..
போகத்தில் மோகம் கொண்டு
அவமானப்பட்டு அலைவான்..
அவன் நினைத்ததை மட்டுமே
செயல்படுத்துவான்..
அவனைச் சொல்லி க்
குற்றமில்லை
கெட்டுப்போன ராகு
விட்டுப் போகும் பந்தத்தையே தருவான்...
காமத் திரிகோணத்தில்
இருக்கும் ராகுவிற்கு
முறையற்ற உறவுகள் மேலே நாட்டம் வரும்..
ஒருவரோடு வாழ மாட்டான்
பல பேருடனும் வாழ மாட்டான்
ஆசைக்கு ஊர் சுற்றி
தனிமையிலேயே தவிப்பான்..
ஆசையை தூண்டிவிடும் பேராசைக்காரன்..
சுக்கிரன் வீட்டில் நின்ற ராகு
சுக்கிரனோடு சேர்ந்த ராகு
தன் தசா புக்திகள்
தாரத்தை இழக்க வைக்கும்..
பெண்களுக்கு செவ்வாய் ராகு
சேர்ந்தாலே குற்றமப்பா..
கணவரோடும் வாழ விடாது
வந்தவனோடும் வாழ விடாது..
இத்தோடு பாவ கிரகங்கள்
பலமாய் சேர்ந்தால்..
கணவனோடு
கலவரம் செய்வாள்
கைகலப்பில் கைது ஆவார்..
களத்திரத்துடன் கெட்ட ராகு சேர்ந்தால்
திருப்தி இல்லா திருமணமே நடக்கும்...
ராகுவிற்கு இரட்டை குணம்
ரெண்டில் ஒன்று பார்க்கத் துடிக்கும்..
சுப கிரகம் கை கொடுத்தால்
சுத்தமான வாழ்க்கை உண்டு..
பாவ கிரகம் பார்த்துவிட்டால்
பயந்து பயந்து வாழவேண்டும்..
ராகு என்றால் கத்தரிக்கோல்
உறவுகளை எல்லாம்
வெட்டிப் போடும்..
ஆசையை தூண்டி
அவதிப்படுத்தும்..
துஷ்ட எண்ணத்தால்
தூக்கமின்றி துடிக்க வைக்கும்...
ராகு ஒரு நிழல் கிரகம்..
நினைத்ததெல்லாம் நிறைவேற
நிழல் தரும் மரக்கன்றை
நீ தானம் கொடு..
ராகுவோடு சேர்ந்த
கிரகத்தின் நிறத்தில்
வால் போன்ற ரிப்பன் வாங்கி..
ராகு காலத்தில் வெட்டிப்போடு..
துன்பமெல்லாம் துண்டு துண்டாய் போகும்..
கெட்டுப்போன ராகுவிற்கு
கருங்கல்லி ல் சிலை செய்து
அரசு வேம்பு இருக்கும் இடத்தில்
பிரதிஷ்டை செய்துவிட்டால்
பீடையெல்லாம் விலகிவிடும்..
கோர்ட் கேசிற்கு
அலைபவனெல்லாம்
கோமேதக கல் அணிந்தால்
சாதகமாய் சமாதானமாகி
சந்தோசமாய் வெளிவருவாய்..
நவகிரக தசைகளில்
ராகு புக்தி கொடுமையப்பா..
பொல்லாத ராகு இல்லாமல் செய்துவிடும்..
சூரியனோடு ராகு புக்தி
தந்தைக்கு ஆபத்து தரும்..
அரசாங்க தண்டனையும் தரச்செய்யும்...
சந்திரனோடு சேர்ந்த ராகு
தாயாரை பாதிக்கும்..
ராகு புக்தியில் தன் புக்தி பேதலி க்கும்..
செவ்வாய் தசையில் ராகு புக்தி
சகோதரனை பாதிக்கும்
சகோதரனாலும் பாதிப்பு வரும்..
பெண்ணுக்கு ராகு புக்தி
கட்டியவனோடு கலவரம் வரும்..
குரு தசையில் ராகு புக்தி
ஜாதகனை கதற வைக்கும்..
சனி தசையில் ராகு புக்தி
வேலை இன்றி தவிக்க வைக்கும்..
ராகு புக்தி ரணப்படுத்தாமல் விடாது..
புதன் தசையில் ராகு புக்தி
மொத்த அறிவையும்
அடகு வைக்கும்..
கொடுக்கல் வாங்கலி ல்
ஏமாற்றம்தான்..
ராகு புக்தி என்றாலே
பஞ்சாயத்து கோர்ட் கேசு
போலீஸ், அவமானம் தேடிவரும்..
தெரிஞ்சு தப்பு செஞ்சாலும்
தெரியாம தப்பு செஞ்சாலும்
தப்பான வழிக்கு
போகாமல் இருந்தாலும்..
பேரு கெட்டு நிக்க வைப்பான்..
நோய், எதிரி, கடன் மட்டுமல்ல
என்னென்னவோ நடக்கும்
எதுன்னு நான் சொல்லுவேன்?!..
எந்த தசையில்
ராகு புக்தி நடந்தாலும்
கேட்டது எதுவும் நடக்காதப்பா..
சுக்கிர தசை ராகு புக்தி
சுத்தமாக கெடுத்துடுமப்பா..
கலக்குற கிரகம் சுக்கிரன்
குடும்பத்துல கலங்கி நிற்க வைப்பான்..
யாரையாவது முழங்கிவிட்டு
கர்ம பாதகம் செய்ய வைப்பான்..
சுக்கிரன் என்றால் சொகுசுதான்
ராகு கொடுத்து
கெடுத்து அழவைப்பான்..
அள்ளிக் கொடுக்கும்
ராகு தசையில்
கிள்ளிக் கொடுப்பது
ராகு புக்தியில்..
நல்லவனுக்கு நல்லது நடக்கும்
எனக்கு ஏம்பா
தொல்லையா நடக்குது?!..
நல்ல கிரகம் பார்த்துபுட்டா
ராகு தசையும் ராகு புக்தியும்
நல்லதை மட்டும் செய்யுமப்பா..
நம்பிக்கையோடு நீ இருந்தால்
நினைச்சதெல்லாம் கைகூடுமப்பா...!
செல்: 96003 53748