Advertisment

திருமண வாழ்வை சிறக்க வைக்கும் சூட்சும பிரார்த்தனை! -ஆர். மகாலட்சுமி

/idhalgal/balajothidam/subtle-prayer-make-married-life-successful-r-mahalakshmi

ற்போதைய காலத்தில் திருமணம் நடப்பது என்பது, குதிரைக்கு கொம்பு முளைத்த கதையாக இருக்கிறது. சீக்கிரமாக கூடிவந்து, அமையமாட்டேன் என்கிறது. உடனே உங்கள் பெற்றோர், ஜாதகத்தை ஜோதியரிடம் காட்டி, தோஷமுள்ளதா, என்ன பரிகாரம் என்றெல்லாம் விசாரிக்கிறார்கள்.

பிறகு அந்தந்த கோவிலுக்குப் போய் பரிகாரம் செய்து பிரார்த்தனைகள் செய்கிறீர்கள்.

Advertisment

dd

இதோடு, மனசுக்குள் சுவாமியிடம் சில கோரிக்கைகளை வைத்து நன்றாக வணங்குகள். இது ஆண்- பெண் இரண்டு பேருக்கும்

ற்போதைய காலத்தில் திருமணம் நடப்பது என்பது, குதிரைக்கு கொம்பு முளைத்த கதையாக இருக்கிறது. சீக்கிரமாக கூடிவந்து, அமையமாட்டேன் என்கிறது. உடனே உங்கள் பெற்றோர், ஜாதகத்தை ஜோதியரிடம் காட்டி, தோஷமுள்ளதா, என்ன பரிகாரம் என்றெல்லாம் விசாரிக்கிறார்கள்.

பிறகு அந்தந்த கோவிலுக்குப் போய் பரிகாரம் செய்து பிரார்த்தனைகள் செய்கிறீர்கள்.

Advertisment

dd

இதோடு, மனசுக்குள் சுவாமியிடம் சில கோரிக்கைகளை வைத்து நன்றாக வணங்குகள். இது ஆண்- பெண் இரண்டு பேருக்கும் சரியாக இருக்கும்.

1. கடவுளே வரப்போகும் மாமியார் நன்றாக இருக்கவேண்டுமென வேண்டுங்கள். இதனால் உங்கள் வாழ்வு செழுமை பெறும்.

Advertisment

2. சுவாமி வரப்போகும் மாமனார் சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக, நல்லபடியாக இருக்கவேண்டுமென பிரார்த்தனை செய்யவும். குறிப்பாக பெண்கள் இதை பலமாக செய்யவேண்டும். ஏனெனில் வரப்போகும் புருஷனுக்கு, எல்லாம் சரியாக இருந்து. சீக்கிரம் பிள்ளை பெற்றுக்கொள்ள முடியும். இது ஆண்- பெண் இரண்டு பேருக்குƒம முக்கியமான வேண்டுதல்.

3. வரப்போகும் வரனின் குலசாமி திவ்யமாக இருக்கவேண்டுமென வேண்டுங்கள். வரனின் மூத்த சகோதரம் முரடாக இல்லாமல் அனுசரணையாக அமையும்.

4. வரப்போகும் வரனின் குடும்பம் நன்றாக இருக்கவேண்டுமென உளமார உருகுங்கள். உங்களின் மாங்கல்ய பலம் பலப்படும்.

5. அவர்களின் தொழில் நன்கு நடக்க வேண்டுமென பிரார்த்தியுங்கள். அவர்களுக்கு நிறைய வீடு, வாகனம் இருந்து, உங்களுக்கும் அதில் பங்கு கிடைக்கும்.

6. அவர்களின் தாய்மாமன் சௌக்கியமாக இருக்கவேண்டுமென வேண்டுங்கள். உங்களுக்கு வெளிநாட்டு பயணமும், சுக வாழ்வும், படுக்கை வசதியும் நன்கு கிடைக்கும்.

7. வரப்போகும் வரனின் மூத்த சகோதரர் நன்றாக இருக்கவேண்டுமென வணங்க, உங்களின் ஆரோக்கியம் மேம்படும்; வாரிசு விருத்தியும் கிடைக் கும்.

8. நல்ல தீர்க்காயுசான வரன் கிடைக்க வேண்டு மென பிரார்த்தனை செய்தால், உங்களுக்கு நல்ல பணவரவு கிடைக்கும்.

9. வரப்போகும் வரன் நன்றாக இருக்கவேண்டு மென, நீங்கள் வேண்டும் போது, தெய்வம் உங்கள் வாழ்வை மேம்படுத்தி, செழிக்கச் செய்யும்.

எல்லாம் சரி- மேற் கண்ட பிரார்த்தனைகளை, உரக்கக் கூறாமல், மனசுக்குள் மத்தாப்பூ மாதிரி, சூட்சுமமாக யாருக்கும் கேட்காமல் வேண்டிக்கொள்ளவும். முக்கியமாக உங்க அம்மாவுக்கு மட்டும் கேட்டது, அடுத்த நிமிடம் கதை கந்தல்- கல்யாணம் கேன்சல்தான். கல்யாணத்துக்கு முன்னாடியே, மாமியார் வீட்டுக்கு வேண்டுதல் வைக்கிறானே, கல்யாணத் துக்குபிறகு, என்னை கவனிக்கவே மாட்டான் என அழ ஆரம்பித்துவிடுவார். எனவே கல்யாண வாழ்வு சிறக்க, சூட்சுமமான பிரார்த்தனையே போதும்.

செல்: 94449 61845

bala271224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe