உலகில் மூன்று என்ற எண்ணிற்குள் ஒளிந்துள்ள உண்மைகள் தெரிந்தால் நாம் வியந்துபோவோம். அவ்வளவு புதிர்கள், நிகழ்வுகள், அர்த்தங்கள் உள்ளன.மனிதனுக்கு மூச்சு, உயிர் மூன்று எழுத்துகளே! மனிதனுக்கு மட்டுமல்ல; உலகிலுள்ள அனைத்து ஜீவராசி களுக்கும் இது பொருந்தும். உலகிலுள்ள பொருட்கள் திடம், திரவம், வாயு என்று மூன்று வடிவங்களில் உள்ளன. இயல், இசை, நாடகம் மூன்றாக அமைந்து முப்பெரும் விழா எடுக்கின்றனர். இந்த தத்துவங்களையே ஜாதகத்திலும் முன்னோர்கள் நடப்பது, நிற்பது, அசைவது என்று மூன்றுவித இயக்கங்களாக சரம், ஸ்திரம், உபயம் என்று ராசிகளைப் பிரித்துள்ளார்கள்.
சரம் என்றால் வளர்ச்சி என்று பொருள். வளர்ச்சி என்ற பதம் குறிக்கும் அர்த்தங்கள் ஏராளம். நாம் எதிர்பார்க்காத, கற்பனைக்கு எட்டாத அளவுக்கு எண் கோணங்களிலும், நான்கு திசைகளிலும், முப்பெரும் பரிணாமங்களில் இயக்கப்படும் நிகழ்விற்கே சரம் என்பது பொருளாகும். நெருப்பு, நீர், காற்று, நிலம், ஆகாயம் என்று சொல்லக்கூடிய பிரபஞ்சத்தில் உள்ள பூதங்களில், தங்களு டைய வளர்ச்சியைக் கொடுக்கும்விதமாக மேஷம், கடகம், துலாம், மகரம் போன்ற ராசிகளுக்கு வழங்கப்பட்
உலகில் மூன்று என்ற எண்ணிற்குள் ஒளிந்துள்ள உண்மைகள் தெரிந்தால் நாம் வியந்துபோவோம். அவ்வளவு புதிர்கள், நிகழ்வுகள், அர்த்தங்கள் உள்ளன.மனிதனுக்கு மூச்சு, உயிர் மூன்று எழுத்துகளே! மனிதனுக்கு மட்டுமல்ல; உலகிலுள்ள அனைத்து ஜீவராசி களுக்கும் இது பொருந்தும். உலகிலுள்ள பொருட்கள் திடம், திரவம், வாயு என்று மூன்று வடிவங்களில் உள்ளன. இயல், இசை, நாடகம் மூன்றாக அமைந்து முப்பெரும் விழா எடுக்கின்றனர். இந்த தத்துவங்களையே ஜாதகத்திலும் முன்னோர்கள் நடப்பது, நிற்பது, அசைவது என்று மூன்றுவித இயக்கங்களாக சரம், ஸ்திரம், உபயம் என்று ராசிகளைப் பிரித்துள்ளார்கள்.
சரம் என்றால் வளர்ச்சி என்று பொருள். வளர்ச்சி என்ற பதம் குறிக்கும் அர்த்தங்கள் ஏராளம். நாம் எதிர்பார்க்காத, கற்பனைக்கு எட்டாத அளவுக்கு எண் கோணங்களிலும், நான்கு திசைகளிலும், முப்பெரும் பரிணாமங்களில் இயக்கப்படும் நிகழ்விற்கே சரம் என்பது பொருளாகும். நெருப்பு, நீர், காற்று, நிலம், ஆகாயம் என்று சொல்லக்கூடிய பிரபஞ்சத்தில் உள்ள பூதங்களில், தங்களு டைய வளர்ச்சியைக் கொடுக்கும்விதமாக மேஷம், கடகம், துலாம், மகரம் போன்ற ராசிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட லக்னத்தில் பிறந்தவர்கள் அபரிமிதமான வளர்ச்சியைத் தங்களுடைய வாழ்நாள் முழுவதும் அனுபவிப்பார்கள்.
அடுத்து ஸ்திர ராசியின் குணங்களைக் காண்போம். ஸ்திரம் என்றால் நிலையானது என்பதாம். எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒருவர் நிலையான கொள்கைகளை, எண்ணங்களை, சுகங்களை, வசதி வாய்ப்புகளை, பொருளாதார வாய்ப்புகளைத் தக்கவைத்து, நிலைத்த தன்மையுடன் வாழ்நாளில் அமையப்பெற்றிருப்பர். இதேபோன்று ஒருவரது அதிகாரம், மதிப்பு, அந்தஸ்து போன்றவையும் நிலைத்திருக்கும். ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் இந்த நான்கு ராசிகளுடையவர்கள் நிலைத்த குணங்களைப் பெற்றிருப்பர்.
அடுத்ததாக உபய ராசிகளின் இயக்கத்தைப் பார்ப்போம். உபயம் என்பது ஊசலாடிக்கொண்டிருக்கும் நிலையாகும். .அந்தக் காலத்தில் பெண்டுலம் உள்ள சுவர் கடிகாரத்தைப் பார்த்திருப்பீர்கள். அந்த பெண்டுலம் போன்று ஒரு எல்லைக்குள்ளேயே ஊசலாடும் நிலையிலுள்ள அமைப்பில் உபய ராசிகள் செயல்படும். இத்தகைய உபய ராசிகள் சர ராசிகளின் குணங்களையும், ஸ்திர ராசிகளின் குணங்களையும் இணைந்தே அமையப் பெற்றிருந்தாலும், அத்தகைய குணங்கள் நிலையாக இருப்பதில்லை. ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துக் கொண்டே இருப்பர். கடல் அலைகளைப்போல் தத்தளித்துக்கொண்டே இருப்பார்கள். பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வு, மனதில் உறுதியற்ற தன்மை, அதிகாரம், அந்தஸ்து போன்றவற்றில் ஏற்ற- இறக்கங்கள் என அனைத்து செயல்களிலும் மிகுந்த ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்துக்கொண்டே இருப்பார்கள். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய ராசிகள் எனப்படும்.
இவ்வாறு மூன்று இயக்கங்களையும் நான்கு பூதங்களான நெருப்பு, நிலம், காற்று, நீர் ஆகியவற்றை இணைத்து 12 ராசிகளாகப் பகுத்துள்ளனர். ஐந்தாவது பூதம் ஆகாயம். ஆகாயத்திலுள்ள 27 நட்சத்திரங்களையும் 12 ராசிகளுக்கு ஒன்பது கிரகங்களாகப் பகுத்துள்ளனர். 9ஷ்12 = 108 பாதங்களும் 12 ராசிகளில் உள்ளன. இதுவே ஜோதிடத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.
சரம், ஸ்திரம், உபய ராசிகளின் குணங்களைத் தெரிந்துகொண்டு, நடைமுறையில் நாம் அத்தகைய லக்ன நேரங்களை நமக்கு சாதகமாகப் பயன் படுத்துதல் வேண்டும். எப்படி என்பதைப் பார்ப்போம்.
சர ராசி வளர்ச்சியை மையப்படுத்தி இயங்குவதால், சர லக்னத்தில் வளர்ச்சியடையும் செயல்களை, நிகழ்வுகளைத் தொடங்கினால், அத்தகைய செயல்களால் உண்டாகும் பலன்களானது நாளுக்கு நாள் வளர்ச்சியடையும். ஒரு தொழிலை ஆரம்பிப்பது, குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது, மங்கள காரியங்களைத் தொடங்குவது, ஒருவர் உத்தியோகத்தில் சேர்வது, உத்தியோக உயர்வில் அமர்வது போன்ற வளர்ச்சியடையும் நிகழ்ச்சி களை சர லக்ன நேரத்தில் செய்வது சிறப்பானது.
அதேபோல் ஸ்திர லக்னத்தில் ஆரம்பித்து செய்வதும் நன்மை பயக்கும். அந்தக் காரியங் கள் வாழ்வாங்கு வாழ வழிவகை செய்யும். சர லக்னத்தைப்போல் வளர்ச்சி அதிகம் உண்டா காமல் இருந்தாலும், வளர்ச்சியானது நிலைத் துப் பயன்தரக்கூடிய சூழலைக் கொடுக்கும்.
உபய லக்ன நேரத்தில் செய்யப்படும் காரியங்கள் தொடர்ச்சியாக நன்மைகளை உண்டாக்குவதில்லை. அந்த நேரத்தில் ஆரம்பிக்கும் செயல்களினால் ஏற்றத்தாழ்வான பலன்களையே சந்திக்க நேரிடும். உபய லக்ன நேரத்தில் ஆரம்பிக்கும் செயல்கள் ஒருமுறை செய்தால் அடுத்தமுறை அந்த செயல் திரும்பவும் நடைபெறாத வகையில் இருத்தல் அவசியம். உதாரணத்திற்கு, உடல்நலம் இல்லாமல் மருத்துவரை சந்திக்கும் நேரம், வாடகைதாரரை சந்திக்கும் நேரம், வாடகைப் பத்திரத்தில் கையொப்பமிடும் நேரம் போன்ற செயல்கள் மாறிக்கொண்டே இருத்தல் வேண்டும் என்பதால், உபய லக்னம் இத்தகைய செயல்களுக்குச் சிறந்தது. .அதாவது வாடகைதாரர்கள் ஒரே நபராக இல்லாமல் வேறொரு நபர் மாறுவதைக் குறிக்கும். சர லக்னத்தில் மருத்துவரை சந்தித்தால், திரும்பத் திரும்ப மருத்துவரை சந்திக்கும் சூழ்நிலையும், வியாதி வளரும் அபாயமும் உண்டாகும்.
ஒரு நபரை வெளியூரில் சந்திக்கவேண்டுமென்று நினைக்கும் பொழுது, அந்த நேரத்தில் சர லக்னம் அமைந்தால், அந்த நபர் வெளியூர் சென்றிருப்பதால் இப்பொழுது சென்றால் சந்திக்க இயலாது என்றும்; ஸ்திர லக்னம் அமைந்தால் வீட்டிலேயே இருப்பார், சந்திக்க இயலும் என்பதையும்; உபய லக்னமாக அமைந்தால் வெளியில் சென்றிருப்பார் என்பதை உட்கார்ந்த இடத்திலிருந்தே பிரசன்ன ஜோதிடத்தின்மூலம் சொல்லி விடலாம். ஒரு கர்ப்பமான பெண்ணிற்கு குழந்தை பிறக்கும் நேரம் எப்பொழுது என்பதை சரம், ஸ்திரம், உபய லக்ன நேரங்கள்மூலம் அறியலாம். சரம் என்றால் காலையிலும், ஸ்திரம் என்றால் மாலையிலும், உபயம் என்றால் இரவுப் பொழுதி லும் குழந்தை பிறக்கும்.
இவ்வாறு சரம், ஸ்திரம், உபய இயக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்து மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துகின்றன என்றால் அது மிகையாகாது.
செல்: 91767 71533