Advertisment

வாஸ்துவின் வலிமை! -வாஸ்து இராமு

/idhalgal/balajothidam/strength-vastu-vastu-ramu

ஞ்சபூத ஆற்றலை நாம் வசிக்கும் வீட்டிற்கோ, திருக்கோவில்களுக்கோ கொண்டுவருவதே வாஸ்துவாகும். பஞ்சபூத ஆற்றல் வீட்டிற்கோ திருக்கோவில்களுக்கோ கிடைக்கவில்லை என்றால் அதன் வளர்ச்சி தடைப்படும். வாஸ்துக் கடவுளான விஸ்வகர்மா, மயன் மற்றும் பிரம்மா, பிரஹஸ் பதி, பர்கர், புரந்தரன், வசிஷ்டர், வாசுதேவர், விசாலேஷன், நாரதர், நக்னஜித், நந்தீஸ்வரர், அத்ரி, அநிருந்தர், சுக்கிரன், குமாரஸ்வாமி மற்றும் ஸொனகர் ஆகிய எல்லாரும் வாஸ்துபற்றி நமக்கு அருளியுள்ளார்கள்.

Advertisment

இறைவனே வாஸ்துக் கடவுள்களை அழைத்து தமக்கு திருகோவில் அமைக்கக் கூறியதும், பல்வேறு திருக்கோவில்களில் மூலவருடன் இந்த தேவர்களும் இருப்பதும் வாஸ்துவின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துவதாக உள்ளது. எனவேதான் ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்ட திருகோவில்கள் இன்றும் கம்பீரமாய் வளர்ச்சி யடைந்து வருகின்றன. வீழ்ச்சியடைந்த கோவில்களுக்கு நாம்தான் காரணமாக உள்ளோம். பின்னர் வந்த சந்ததிகள் வாஸ்து விதியைப் பின்பற்

ஞ்சபூத ஆற்றலை நாம் வசிக்கும் வீட்டிற்கோ, திருக்கோவில்களுக்கோ கொண்டுவருவதே வாஸ்துவாகும். பஞ்சபூத ஆற்றல் வீட்டிற்கோ திருக்கோவில்களுக்கோ கிடைக்கவில்லை என்றால் அதன் வளர்ச்சி தடைப்படும். வாஸ்துக் கடவுளான விஸ்வகர்மா, மயன் மற்றும் பிரம்மா, பிரஹஸ் பதி, பர்கர், புரந்தரன், வசிஷ்டர், வாசுதேவர், விசாலேஷன், நாரதர், நக்னஜித், நந்தீஸ்வரர், அத்ரி, அநிருந்தர், சுக்கிரன், குமாரஸ்வாமி மற்றும் ஸொனகர் ஆகிய எல்லாரும் வாஸ்துபற்றி நமக்கு அருளியுள்ளார்கள்.

Advertisment

இறைவனே வாஸ்துக் கடவுள்களை அழைத்து தமக்கு திருகோவில் அமைக்கக் கூறியதும், பல்வேறு திருக்கோவில்களில் மூலவருடன் இந்த தேவர்களும் இருப்பதும் வாஸ்துவின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துவதாக உள்ளது. எனவேதான் ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்ட திருகோவில்கள் இன்றும் கம்பீரமாய் வளர்ச்சி யடைந்து வருகின்றன. வீழ்ச்சியடைந்த கோவில்களுக்கு நாம்தான் காரணமாக உள்ளோம். பின்னர் வந்த சந்ததிகள் வாஸ்து விதியைப் பின்பற்றாமல் தவறான மாற்றங்களைச் செய்ததால் திருக்கோவில்கள் வளர்ச்சிபெறாமல் காட்சிப் பொருளாகப் போனது. அதில் ஒன்றுதான் கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள பெருவுடையார் திருக்கோவில்.

Advertisment

guru

ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ஆட்சிபுரிந்த முதலாம் இராஜராஜ சோழனின் மகன் முதலாம் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழீஸ்வரம் என்னும் கோவில்தான் பெருவுடையார் திருக்கோவிலாகும்.

இக்கோவிலின் அமைப்பு கூர்மப்பிருஷ்ட அமைப்பாகும். இந்த அமைப்புள்ள கோவில்கள் எல்லாம் பல்வேறு சிறப்புகளும் வளர்ச்சியும் கொண்டிருக்கும்போது, இக்கோவில் வளர்ச்சிபெறாமல், சக்தியில்லாமல் போனது ஏன் என்பது ஆய்வுக்குட்பட்டதாகும். மனை அமைப்புகளை கஜப் பிருஷ் டம், நாகப் பிருஷ்டம், தைத்தியப் பிருஷ்டம் என மனை நூல்கள் மூலம் அறியலாம். பிரம்ம ஸ்தானம் உயர்ந்தும் (மையப் பகுதி) ஏனைய சந்திர திசை, குபேர திசை, குரு திசை, இந்திரன் திசை, சுக்கிர திசை, எமன் திசை, ராகு திசை, வருணன் திசை தாழ்ந்தும் இருப்பின் கூர்மப் பிருஷ்ட மனை என கூறுவர்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இக்கோவிலின் சுற்று மதில் சுவர்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு கொள்ளிடத்தின் குறுக்கே கீழணை கட்டப்பட்டது. இக்கோவில் எப்போது சிதைக் கப்பட்டதோ, அப்போதே அதன் வாஸ்து விதி மாறிப் போனது. மேலும் அங்கு தவறான கிணறுகள் சோழ மன்னருக்குப் பின்னால் வந்த சந்ததிகளால் தோண்டப் பட்டதும் வீழ்ச்சிக்குக் காரணமாகிறது. காலம் கடந்து செல்லச்செல்ல திருக்கோவிலின் வடக்கு திசையில் தாழ்வாக இருந்த சாலை உயர்ந்துகொண்டே வந்துவிட்டது. இன்று குபேர திசையான கோவிலின் வடக்கு திசை சாலை மிகமிக உயர்ந்தும், சாலையின் தெற்கு திசையான எமன் திசை தாழ்வாகவும் மாறிப் போனது. மேலும் சிதைக்கப்பட்ட சுற்றுச் சுவர்களால் சுக்கிர திசையான தென்கிழக்கு வளர்ந்ததும் தவறான அமைப்பாகும்.

சிவாலயங்கள் பெரும்பாலானவற்றில் மூலவருக்குத் தெற்கிலும், மேற்கிலும் மேடை அமைத்து, அவற்றில் அறுபத்து மூன்று நாயன்மார்கள், பிள்ளையார், முருகப் பெருமானின் சந்நிதிகள் அமைத்து, மூலவருக்குத் தெற்கும் மேற்கும் உயர்ந்து அவ்விடங்களில் சந்நிதிகள் இருக்கும். ஆனால் இங்கு தெற்கும் மேற்கும் காலியாகப்போனது.

பின்னர் வந்த சந்ததிகள் திருக்கோவிலில் செய்த மாற்றத்தினாலும், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பெருமளவு வெளிப் பிராகாரம் சிதைக்கப்பட்டதாலும், உலகப் புகழ் பெறவேண்டிய திருக்கோவில் வளர்ச்சி பெறாமல் போனது.

பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பு திருக்கோவிலுக்கு அவசியமானது. அனைத்து புகழ்பெற்ற கோவில்களிலும் தென்கிழக்கில் மடப்பள்ளி இருக்கும். அதில் இறைவனுக்கான பிரசாதம் தாயரிக்கப்படும். நெருப்பு சரியான இடத்தில் இருந்தால் அது எதிரியை அழிக்கும். இது வீட்டிற்கும் பொருந்தும், இக்கோவிலில் மடப்பள்ளி சிதைக்கப் பட்டதால் பஞ்சபூதங்களில் நெருப்பாற்றால் இல்லாது போனது. பள்ளமாக இருக்கவேண்டிய சாலை (மண்) அமைப்பு உயர்ந்து நிலத்தின் ஆற்றல் குறைந் தது. சுற்றுச் சுவர் இடிக்கப் பட்டதால் காற்றின் ஆற்றல் மாறுபட்டது. பஞ்சபூதங்களில் நீர், நெருப்பு, காற்றின் ஆற்றல் இழந்து நிற்பதால் இக் கோவில் வளர்ச்சிபெறாமல் போனது.

சிறிய கோவில்களில்கூட பக்தர்கள் பரவசத்துடன் இறைவனை வணங்கிவரும் நிலையில், இத்திருக்கோவில் இன்று காட்சிப் பொருளாக மாறிப்போனது.

மூலவரின் மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் கோவில் வளாகத்திற்குள், மூலவர் இருக்கும் தரை அமைப்பைவிட உயரமான மண்டபம் கட்டி அதன் அமைப்பு உயர்ந்தாலும், சுக்கிர திசை வளர்ச்சி குறைந்தாலும், இடிக்கப்பட்ட கிழக்கு சுற்றுச்சுவர் அமைத்து கோபுரம் அமைந்தாலும் இத்திருக்கோவிலுக்கு பக்தர்கள் திரண்டுவருவர்.

ஒரு ஆறுதலான தகவல். இங்கு சிங்கமுக கிணறு அமைந்து நீரின் ஆற்றல் உள்ளதால், இந்த அளவுக்காவது இக்கோவில் உள்ளது. பஞ்சபூதங்களின் ஆற்றலை இத்திருக்கோவிலுக்குக் கொண்டுவந்தால் மீண்டும் இக்கோவில் மிகப்பெரிய வளர்ச்சி பெறும்.

வீடு கட்டி பத்து வருடங்கள் கடந்த போதும் வளர்ச்சியில்லாமல் இருந்தால் வீடு வலுவிழந்துள்ளது என அறிந்து கொள்ளலாம். எனவே பஞ்சபூத ஆற்றலை திருக்கோவிலுக்கும், நமது வீட்டிற்கும் கொண்டுவந்து வளமோடு வாழ்வோம்.

செல்: 94434 80585

bala150722
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe