சென்ற இதழ் தொடர்ச்சி...

7. ராசியாதிபதி பொருத்தம்

பெண் பிறந்த ராசியின் அதிபதியும், ஆண் பிறந்த ராசியின் அதிபதியும் நட்பா, பகையா, சமமா என்பதை ஆராய்ந்து திருமணப் பொருத்தத்தை நிச்சயம் செய்யவேண்டும்.

Advertisment

vinayagar

பெண் ராசியாதிபதிக்கு ஆண் ராசியாதிபதி நட்பாகவோ சமமாகவோ இருந்தால் ராசி அதிபதிப் பொருத்தம் உண்டு. பெண் ராசிக்கு ஆண் ராசி பகையாக இருந்து, ஆண் ராசிக்கு, பெண் ராசி பகையில்லாமல் இருந்தால் மத்திமமான பொருத்தம் உண்டு. இருவருக்கும் பகை ராசிகளாக இருந்தால் ராசியாதிபதி பொருத்தமில்லை.

8. வசியப் பொருத்தம் (அன்யோன்யம்)

வசியப் பொருத்தம் கூடிவந்தால் தம்பதிகள் அன்யோன்ய வசீகரத்துடன் இன்புற்று வாழ்வார்கள்.

பெண் ராசிக்கு ஆண் ராசி வசியமாக வந்தால் உத்தமம். ஆண் ராசிக்கு பெண் ராசி வசியமாக வந்தால் மத்திமம்.

9. ரஜ்ஜுப் பொருத்தம் (தீர்க்க சுமங்கலி)

vinayagar

நமது நாட்டில் இது மிகவும் விசேஷமானதாகும். ரஜ்ஜு என்று சொல்லத் தெரியாதவர்கள்கூட இதை கழுத்துப் பொருத்தம் என்று கூறுவர். ரஜ்ஜு தட்டினால் விவாகம் செய்யக்கூடாது.

ரஜ்ஜு இருந்தால்தான் மாங்கல்ய பலம் சிறப்பாக இருக்கும்.

தலை, கழுத்து தவிர மற்ற மூன்று ரஜ்ஜுகளிலும் ஆண்- பெண் இருவருக்கும் ஒன்றாகயிருந்து ஒன்று ஆரோகணமாகவும், மற்றொன்று அவரோகணமாகவும் இருந்தால் திருமணம் செய்யலாம். ஆண்- பெண் இருவருக்கும் ரஜ்ஜுக்கள் மாறி, இருந்தால் ரஜ்ஜுப் பொருத்தம் உண்டு. திருமணம் செய்யலாம். ஆண்- பெண் இருவருக்கும் தலை, கழுத்து ஒரே ரஜ்ஜுவாக இருந்தால் ரஜ்ஜுப் பொருத்தம் இல்லை. தவிர்ப்பது நல்லது.

10 வேதைப் பொருத்தம்

வேதைப் பொருத்தம்

சிறப்பாக இருந்தால் துக்கங்கள், சோகங்கள் இல்லாமல் இல்வாழ்க்கை இன்பகரமாக இருக்கும்.

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் இவை ஒன்றுக்கொன்று வேதை. வேதையானால் பொருந்தாது.

திருமணம் செய்யக்கூடாது.

வேதை இல்லாமல் இருந்தால் திருமணம் செய்யலாம்.

(வேதை அட்டவணை 30-ஆம் பக்கம்)

தச வித பொருத்தத்தில் கவனிக்கப்பட வேண்டிய விசேஷ விதிகள்

அஸ்வினி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம், மகம், சித்திரை, சுவாதி, கேட்டை, பூராடம், பூரட்டாதி ஆகியவை ஆண் நட்சத்திரங்களாகும்.

கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், அஸ்தம், விசாகம், அனுஷம், மூலம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி ஆகியவை பெண் நட்சத்திரங்களாகும்.

உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி ஆகியவை அலி நட்சத்திரங்களாகும்.

vinayagar

திருமணப் பொருத்த விஷயத்தில் ஆண்- ஆண் நட்சத்திரமாகவும், பெண்- பெண் நட்சத்திரமாகவும் இருப்பது உத்தமப் பொருத்தமாகும். ஆண்- பெண் நட்சத்திரமாகவும், பெண்- ஆண் நட்சத்திரமாகவும் இருப்பின் பொருத்தமாகாது. ஆண்- பெண் நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்று அலி நட்சத்திரமாக இருந்தால் மத்திமப் பொருத்தமாகும். இருவரும் ஆண் நட்சத்திரமாகவோ, பெண் நட்சத்திரமாகவோ இருந்தால் மத்திமப் பொருத்தமாகும்.

ஆண்- பெண் இருவருக்கும் திருமணப் பொருத்தம் பார்க்கும்போது நட்சத்திர ரீதியாக பத்துப் பொருத்தங்கள் பார்ப்பது எவ்வளவு அவசியமோ அது போல ஜாதக ரீதியாகவும் கிரகங்களின் ஆதிக்கத்தை ஆராய்ந்து பொருத்தங்கள் பார்ப்பதும் மிகவும் முக்கியம்.

ஒரு பெண்ணுக்குத் தோஷமிருந்தால் அதற்கேற்றாற் போல தோஷமுள்ள ஆணுக்குத் திருமணம் செய்துவைத்தால் தோஷத்தின் பாதிப்பு குறைந்து மணவாழ்வு ஒத்துப்போகும்.

ஒருவர் ஜாதகத்தில் தோஷம் இருந்தால், எவ்வளவுதான் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்துவைத்தாலும், தோஷத்தை ஏற்படுத்திய கிரகங்களின் தசா புக்தி நடக்கும்போது மணவாழ்வில் சில மகிழ்ச்சிக் குறைவு, பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும். அப்படிப் பிரச்சினை ஏற்படும்போது அதற்கு ஈடுகொடுக்கும் ஜாதகமாகப் பார்த்துத் திருமணம் செய்துவைப்பது நல்லது.

vinayagar

பத்துவிதப் பொருத்தங்களில் ஐந்துக்குமேல் இருந்தால்திருமணம் செய்யலாம் என்று கருத்து இருந்தாலும், ஆண்- பெண் இருவருக்கும் ராசியாதிபதிகள் ஒருவராக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும் எந்த தோஷமும் பார்க்காமல் திருமணம் செய்யலாம்.

ஆகவே ஆண்- பெண் இருவருடைய ராசியாதிபதிகள் நண்பர்களாக இருப்பது மிகமிக முக்கியமாகும். முதல் வகை- மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய இந்த ஆறு ராசிகளும் நட்பு ராசிகளாகும். அடுத்த வகை- ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகியவை நட்பு ராசிகளாகும். இதுமட்டுமின்றி இருவருடைய லக்னமும், நண்பர்களாக அமைவது மிகவும் நல்லது.

ஜாதகத்தில் எந்தவித தோஷம் இருந்தாலும் பத்துப் பொருத்தத்தில் ராசிப்பொருத்தம், ராசி அதிபதிப் பொருத்தம், வசியப் பொருத்தம் இருந்தாலும், இருவருக்கும் லக்னாதிபதி நட்பு கிரகமாகஇருந்தாலும் திருமண வாழ்வில் எத்தனை பிரச்சினைகள், சண்டைகள்வந்தாலும் மனதளவில் ஒன்றுபடக்கூடிய அமைப்பு நிச்சயமாக இருக்கும்.

செல்: 72001 63001