திருமணத்திற்காக வரன் தேடும் படலம் தொடங்கியதும் முதலில் பார்ப்பது நட்சத்திரம் பொருந்துகிறதா என்பதுதான். நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது மட்டுமின்றி, ஜாதக ரீதியாகவும் பொருத்தங்கள் உள்ளனவா என தெளிவாக ஆராய வேண்டும். பெயர் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்வது கூடாது.

Advertisment

முதலில் பத்து வகையான பொருத்தங்களைப் பார்க்கவேண்டும். பிறகு ஜாதக ரீதியாக உள்ள சாதக, பாதகப் பலன்களைப் பற்றி ஆராயவேண்டும். இப்படிப் பொருத்தங்கள் பார்த்துச் செய்யும் திருமணங்கள் நீண்டகால சந்தோஷப் பலன்களை ஏற்படுத்தும். இப்பொழுது பத்துப் பொருத்தங்களைப் பற்றி பார்ப்போம்.

1. தினப் பொருத்தம்

தினப் பொருத்தம் நன்றாகக் கூடிவந்தால் தம்பதிகள் நோய் நோடியின்றி சுக வாழ்க்கை வாழ்வார்கள். தினப்பொருத்தம் சிறப்பாக இருந்தால் ஆயுள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

ஒருவருக்கு தன்னுடைய நட்சத்திரத்திற்கு- ஜென்ம நட்சத்திரம்- பகை, இரண்டாவது நட்சத்திரம்- செல்வம், மூன்றாவது நட்சத்திரம்- விபத்து, 4-ஆவது நட்சத்திரம்- சுகம், 5-ஆவது நட்சத்திரம்- மனசஞ்சலம், 6-ஆவது நட்சத்திரம்- அனுகூலம், 7-ஆவது நட்சத்திரம்- வதம், மரணம், 8-ஆவது நட்சத்திரம்- நட்பு, 9-ஆவது நட்சத்திரம்- பரம நட்பு.

Advertisment

பெண் நட்சத்திரத்திலிருந்து தொடங்கி ஆண் நட்சத்திரம் எத்தனையாவதாக வருகிறதென்று எண்ணுகின்றபோது ஒன்றுமுதல் ஒன்பது வரை உள்ளது 1-ஆவது பர்யாயம், பத்து முதல் 18 வரையுள்ள நட்சத்திரங்கள் 2-ஆவது பர்யாயம், 19 முதல் 27 வரையுள்ள நட்சத்திரங்கள் 3-ஆவது பர்யாயம் ஆகும்.

பெண் நட்சத்திரம் தொடங்கி ஆணின் நட்சத்திரம்வரை எண்ணுகின்றபோது 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20, 24, 26-ஆவது நட்சத்திரங்களாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு. 12-ஆவது நட்சத்திரத்தில் 1-ஆம் பாதமும், 14-ஆவது நட்சத்திரத்தில் 4-ஆம் பாதமும், 16-ஆவது நட்சத்திரத்தில் 3-ஆம் பாதமும் பொருந்தாது. மற்ற பாதங்கள் பொருந்தும். 22-ஆவது நட்சத்திரத்தில் 88-ஆவது பாதமாக இருந்தாலும் தினப்பொருத்தம் இருக்காது. பெண் நட்சத்திரத்திலிருந்து ஆண் நட்சத்திரம் 27-ஆவதாக வந்து, இருவரும் ஒரே ராசியானால் தினப்பொருத்தம் உண்டு. வேறு ராசியானால் பொருத்தமில்லை.

வதவை- வைநாசிகம்

வதம்- பெண் நட்சத்திரத்திலிருந்து ஏழாவது நட்சத்திரம் ஆண் நட்சத்திரமாகும்.

Advertisment

வைநாசிகம்- ஆண் நட்சத்திரத்திலிருந்து ஏழாவது நட்சத்திரம் பெண் நட்சத்திரமாகும். வதவை, வைநாசிகம் என்றால் தவிப்பது நல்லது.

ஏக நட்சத்திரப் பொருத்தம்

உத்தம நட்சத்திரங்கள் ரோகிணி, திருவாதிரை, மகம், விசாகம்,

அஸ்தம், திருவோணம், ரேவதி, உத்திரட்டாதி ஆகியவை. ஆனால் தசா சந்தி வராமலிருக்க வேண்டும்.

murugan

மத்திம நட்சத்திரங்கள்

பூரம், உத்திரம், பூசம், சித்திரை, புனர்பூசம், அஸ்வினி, கார்த்திகை, பூராடம், உத்திராடம், மிருகசீரிஷம், அனுஷம் ஆகியவை.

மேற்கூறிய நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் உண்டு. திருமணம் செய்யலாம். ஆண், பெண் இருவரும் ஏக நட்சத்திரம், ஏக ராசியாக இருந்தால் ஆண் நட்சத்திரம் முதலாவதாகவும், பெண் நட்சத்திரம் அடுத்ததாகவும் இருப்பது நல்லது. பெண் நட்சத்திரம் முந்தியதாகவும், ஆண் நட்சத்திரம் பிந்தியதுமாக இருந்தால் தவிர்ப்பது நல்லது.

2. கணப்பொருத்தம்

உலகில் பிறந்த மானிடர்கள் எல்லாரும் ஒரேவித குணங்களுடன் இருப்பதில்லை. கணப் பொருத்தம் என்றால் இனப் பொருத்தம் என பொருள் கொள்ளவேண்டும். கணப் பொருத்தம் சரியாக இருந்தால் தம்பதிகள் சுபப்பலனை அடைவார்கள்.

உயர்ந்த நோக்கங்களைக் கொண்டவர்களை தேவ கணம் என்றும், சாதாரண எண்ணங்களைக் கொண்டவர்களை மனுஷ கணம் என்றும், கீழ்த்தரமான எண்ணங்களை உடையவர்களை ராட்ஷச கணம் என்றும் குணத்தின் அடிப்படையைக் கொண்டு மூன்று வகையாகப் பிரித்துள்ளனர்.

தேவ கணம்

அஸ்வினி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி ஆகியவை தேவ கணமாகும். இவை சாத்வீக குணமுடையவை.

மனுஷ குணம்

பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகியவை மனுஷ கணமாகும். இவை தமோ குணத்தை உடையவை.

ராட்சஷ கணம்

கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் ஆகியவை ராட்சஷ கணமாகும். இவை ராட்சஷ குணத்தை உடையது.

கணப்பொருத்தம் பார்க்கும்போது ஆண்- பெண் இருவருக்கும் ஒரே கணமானால் உத்தமம். பெண் தேவ கணத்திலும், ஆண் மனுஷ அல்லது ராட்சஷ கணத்தில் இருப்பதும், பெண் மனுஷ கணத்திலும் ஆண் தேவ கணத்திலும் இருப்பது நல்லது. பெண் மனுஷ கணத்திலும் ஆண் ராட்சஷ கணத்திலும் இருக்கக்கூடாது.

3. மகேந்திரப் பொருத்தம் (சம்பத்து விருத்தி)

மகேந்திரப் பொருத்தம் சிறப்பாக இருந்தால் நல்ல புத்திர பாக்கியமும், பெண்ணின் மாங்கல்ய பலமும், கணவன்- மனைவியின் ஆயுளும் நல்லபடியாக அமையும். பெண்ணுக்கு மாங்கல்ய பலமும், ஆணுக்கு ஆயுள் தீர்க்கமும் அவசியம் என்பதால் எந்தவித பொருத்தமும் இல்லாவிட்டாலும் இந்தப் பொருத்தம் மிகவும் அவசியம் என்பதால் இதனைத் தெய்வீகப் பொருத்தம் என்கிறார்கள்.

மகேந்திரப் பொருத்தம் அமைந்தவர்களின் திருமணம் சொர்க்கத்திலுள்ள தேவர்களாலே நிச்சயிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. பெண் நட்சத்திரத்திலிருந்து எண்ணும்பொழுது ஆண் நட்சத்திரம் 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25- ஆக வந்தால் மகேந்திரப் பொருத்தம் உண்டு.

4. ஸ்திரீ தீர்க்கம் (சகல சம்பத்து விருத்தி)

ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் சிறப்பாக இருந்தால் மணமக்களின் மணவாழ்க்கையில் எல்லா நலத்தையும், செல்வ வளத்தையும் அளிக்கும். ஸ்திரீ என்பது திருமகளைக் குறிக்கும். பெண் நட்சத்திரத்திலிருந்து எண்ணும்போது ஆண் நட்சத்திரம் 13-க்குமேல் இருக்கவேண்டும். ஏழு நட்சத்திரத்திற்குமேல் இருந்தாலே திருமணம் செய்யலாம்.

5. யோனிப் பொருத்தம் (அன்யோன்ய நட்பு)

திருமணப் பொருத்தங்களைப் பார்க்கும்போது, திருமணம் செய்யவேண்டிய ஆண்- பெண் இருவருக்கும் தாம்பத்ய உறவு எந்த அளவுக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதைப் பற்றி அறிந்துகொள்ள உதவும்.

யோனிப் பொருத்தம் 14 வகையான மிருகங்களின் உணர்வு, 27 நட்சத்திரங்களில் பிறந்தோரின் உணர்வுடன் ஒப்பிடப்படுகிறது.

ஆண்- பெண் இருவருக்கும் ஒரே யோனியாக இருந்தால் உத்தமமாகவும், வெவ்வேறு யோனியானால் மத்திமமாகவும் கருதப்படுவதால் பகை யோனியாக இருந்தால் பொருத்தமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

6. ராசிப் பொருத்தம் (வம்ச விருத்தி)

ராசி என்பது, ஒருவரின் ஜனன ஜாதகத்தில் அவர் பிறந்தபோது சந்திரன் எந்த ராசியில் அமைந்துள்ளாரோ அவரை அந்த ராசிக்காரர் என்று சொல்வது வழக்கம். ராசிப் பொருத்தமிருந்தால் வம்சம் விருத்தியாகும்.

பெண் ராசிக்கு ஆறு

ராசிகளுக்குமேல் ஆண் ராசி இருந்தால் உத்தமம். பெண் ராசிக்கு 3, 4-ஆவது ராசியாக ஆண் ராசி இருந்தால் மத்திமம். பெண் ராசிக்கு 8-ஆவது ராசியாக ஆண் ராசி இருக்கக்கூடாது.

(தொடர்ச்சி அடுத்த இதழில்...)

செல்: 72001 63001