கர்மா என்றால் வினைப்பயன். இதன் பொருள் "செயல்'’என்பதாகும். ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர்ச்செயல் உண்டு என்பது கர்மாவின் விளக்கம். தற்கால விஞ்ஞானமும் இதைத்தான் சொல்கிறது.
ஒருவருக்கு நன்மை செய்தால் எதிர்காலத்தில் அதற்குச் சமமான நன்மை நடக்கும். தீமை செய்தால் அதற்குச் சமமான தீமை பிற்காலத்தில் நடக்கும். இவ்வாறு பிற்காலத்தில் நடக்கும் நிகழ்வை விதி என்கி றோம். ஒருவர் வாழ்க்கையில் மிகவும் துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருந்தால் அது அவரது விதி என்கிறோம். ஒருவர் சந்தோஷமாக வாழ்ந்தால் கொடுத்து வைத்தவர் என்கிறோம். அது அவரது விதி என்று சொல்வதில்லை. ஆனால் அதுவும் அவரது விதிதான்.
இந்த விதியை உருவாக்கியது யார்? நாம்தான். முற்காலத்தில் விதைத்ததைத் தற்போது அறுவடை செய்கிறோம். கர்மாவை உணரமுடியும். பார்க்கமுடியாது. ஆனால், கர்மவினையின் தாக்கத்தை அனுபவிக்கும்போது கர்மாவின் வலிமையை உணரமுடியும். ஆத்மா தன்னுள் நிறுத்தும் கர்மாவானது சொத்து, காமம், காசு என்ற மூன்றுவழியாகவே உருவாகிறது. இந்த மூன்றும் தந்தைவழி கர்மவினை, தாய்வழி கர்மவினை, தன் முற்பிறப்பின் கர்மவினை ஆகிய மூன்றுநிலைகளில் உருவாகிறது.
நமது முன்னோர்கள் கர்மவினையை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள். அதன்படி மனிதர்கள் தன் வாழ்நாளில் மூன்றுவகையான கர்மவினைகளாகப் பெற்று அனுபவிக்கிறார் கள். அவை முறையே சஞ்சித கர்மம், பிராரப்த கர்மம், ஆகாமிய கர்மம் ஆகும்.
சஞ்சித கர்மம் என்பது தாய், தந்தையிடம் இருந்து

சஞ்சித கர்மம் என்பது தாய், தந்தையிடம் இருந்தும், நமது முன்னோர்களிடமிருந்தும் நமது ஆத்மா பல்வேறு பிறப்புகளில் செய்த பாவ புண்ணியங்களின் சேர்க்கை. கரு உருவாகும்போதே உடன் உருவாவது. பிராரப்த கர்மம் என்பது இந்தப் பிறவியில் நாம் செய்யும் செயல்களின் பதிவே. இந்த கர்மாவால் வரும் பலனையும் நாம் இந்தப்பிறவியிலேயே அனுபவிக்கவேண்டும். ஆகாமிய கர்மா என்பது மேற்கூறிய இரண்டு கர்மாக்களைக் கழிக்க நாம் செய்யும் செயல்கள்மூலம் இந்தப் பிறவியில் சேர்க்கும் புதிய வினை.
ஜோதிடரீதியாக ஒருவரின் கர்மாவை ராகு (தந்தைவழியிலும்), கேது (தாய் வழியிலும்), பன்னிரண்டாம் அதிபதி சுட்டிக்காட்டும். ஆறாம் வீட்டையும், குருவின் நிலையையும்கொண்டு இந்தப் பிறவியில் எவ்வளவு தீர்க்கப்போகிறார் என்பதையும் அறியலாம்.
இவ்விதமாக மூன்றுவகையான கர்மாக்கள் மனிதர்களைச் சூழ்ந்துள்ளன. இந்த கர்மவினைகளிலிருந்து யாரும் தப்பிவிட இயலாது. கர்மவினைகளை நீக்க பரிகாரங்கள் உள்ளன. நமது புராணங்களும், சாஸ்திரங்களும் பறைசாற்றுகின்ற கர்மவினைகளை நீக்கும் உபாயங்களைப் பயன்படுத்தி கர்மவினைகளை சரிசெய்ய முடியும். கர்மவினைகள் ஒருவர் ஜாதகத்தில் எந்த வகையில் தொடர்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப பரிகாரங்களைச் செய்துவந்தால் நலம்பெற முடியும்.
எவ்வகையில் பாவம் செய்தோமோ அவ்வகையில்தானே அதனைத் தீர்க்க முயலவேண்டும். சிலர், ‘"நான் பரிகாரம் செய்தேன்; சரியாகப் பலன் கிடைத்தது. என்னுடைய கஷ்டங்கள் குறைந்து விட்டன' என்று கூறுவார்கள். சிலபேர், "நானும் நிறைய பரிகாரங்கள் செய்து விட்டேன். ஆனால், இன்னும் கஷ்டம் குறையவில்லை' என்பார் கள். இப்படி நடப்பதற்கும் கர்ம வினைகளே காரணம். இந்த கர்மவினைகளில் மூன்றுவகை கள் உண்டு. அவை த்ருத கர்மா- தெரிந்தே செய்த பாவம், த்ருத அத்ருத கர்மா- தெரிந்தே செய்த தப்புக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்பது, அத்ருத கர்மா- தெரியாமல் செய்த தவறு.
த்ருத கர்மா:
இது மிகக்கடுமையான, கொடுமையான பாவம் செய்தவர்களின் கர்மவினையாகும். முற்பிறவியில் பிறருக்குத் துன்பம் தரக்கூடிய குற்றங்களைச் செய்தமையாகும். அதாவது, பிறர் சொத்தை அபகரித்து அவர் களைக் கஷ்டப்படுத்தியது, பணத்துக்காகக் கொலை செய்தது, தாய்-தந்தையரை கவனிக்காமல் அவர்களைத் திண்டாட வைத்தது- அதாவது தெரிந்தே அந்தப் பாவங்களைத் தொடர்ந்து செய்தது. இதற்கு மன்னிப்பே கிடையாது. என்னை சந்திக்கும் பலர் முன்னோர் வழிபாடுசெய்வது எங்களுக்கு பழக்கமல்ல’ என்றும், ‘செய்தால் ஏதாவது பிரச்சினை வருகிறது’ என்றும், ‘பூஜை செய்யவிடாமல் ஏதோ சக்தி தடுக்கிறது’ என்றும் கூறுகின்றனர். இவர்களுக்கு நிச்சயம் குலதெய்வ வழிபாடும் இருக்காது. இதற்கு, பூஜை செய்யவிடாமல் தடுக்கும் ஆன்மாவின் மரணத்திற்கு அந்த சந்ததியினர் ஏதாவது ஒருவிதத்தில் சம்பந்தப்பட்டு இருந்திருப்பர். அதனால் அந்த ஆன்மா தன் தலைமுறையை வாழவிடாமல் தடுத்துக்கொண்டே இருக்கும். எனவே இந்த ஜென்மத்தில் என்ன பரிகாரம் செய்தாலும் பலிக்கவிடாது. ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குருவின் தொடர்போ பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் அதிபதியின் தொடர்போ இருக்காது. சுய ஜாதகத்தில் ராகு, மாந்தி, 9-ஆம் அதிபதியின் நிலையை வைத்தே இவர்களுக்குத் தெளிவான, தீர்க்கமான முடிவைச் சொல்லமுடியும். இவர்கள் தன் சந்ததிகள் நன்றாக இருக்க, நிறைய ஏழைகளுக்கு அன்னதானமும், சிவ வழிபாடும் தொடர்ந்து செய்யவேண்டும்.
த்ருத அத்ருத கர்மா:
மன்னிக்கக்கூடிய குற்றங்களை முற்பிறவியில் செய்தவையாகும். அதாவது, தெரிந்து செய்த தவறுக்காக மனம்வருந்தி மன்னிப்பு கேட்பது. இதற்கு இந்த ஜென்மத்தில் ஜாதகரீதியாக தெய்வப் பரிகாரம் செய்தால், சரியாகி நல்ல பலன் கிடைக்கும். கஷ்டங்கள் தொடர்ந்து வராது. ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குரு அல்லது ஒன்பதாம் அதிபதியின் பார்வையிருக்கும். இதை வைத்து ஜாதகத்தில் தெரிந்து கொள்ளலாம். நம் மனோவிருப்பங்கள் நிறைவேற உதவும் பல பிரயோகங்கள் தாந்த்ரீக சாஸ்திரத்தில் இருந்தாலும், தாந்த்ரீகத்தின் முக்கியமான கர்மாக்கள் ஆறாகும். அவற்றில் சாந்தி கர்மாவும் ஒன்று. ஆனால் மற்ற கர்மாக்கள் அளவுக்கு சாந்தி கர்மாவில் மக்கள் கவனம் செலுத்துவதோ, முக்கியத்துவம் கொடுப்பதோ இல்லை. சாந்தி கர்மாவே மற்றவற்றைவிட பிரதானமானது.
எவ்வளவுதான் செல்வம், சக்தி, புகழ் இருந்தாலும், குடும்பத்தில், மனதில் நிம்மதி, அமைதியின்றி என்ன பயன்? எனவே விதிமுறைப்படி செய்யப்படும் சாந்திகர்மப் பிரயோகம் இல்லத்தில், மனதில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் நல்ல சூழலையும் மலரச்செய்யும். இவர்கள் பாக்கிய ஸ்தானத்தை வலுப்படுத்த பித்ருகளுக்குச் செய்யவேண்டிய திதி, தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றை முறைப்படுத்தினாலே பலன் வீடு தேடிவரும். அத்துடன் தனது சொந்த புத்தியின் விகாரங்களான அதீத காமம், அதீத கோபம், அதீத பேராசை போன்றவற்றால் வந்த நிம்மதிக்குறைவுக்கும் கீழ்க்காணும் சாந்தி மந்திரத்தை ஆத்மார்த்தமாக ஜெபித்து வர நன்மை உண்டாகும்.
ஓம் ஸஹநாவவது ஸஹநௌ
புனக்து ஸஹவீர்யம்
கரவாவஹை தேஜஸ்வி நாவதீ
தமஸ்து மாவித்விஷாவஹை
ஓம் சாந்தி சாந்தி சாந்தி:’
அத்ருத கர்மா:
மிகவும் மன்னிக்கக்கூடிய சிறிய குற்றங்களைத் தெரியாமல் செய்வது. இதற்குப் பரிகாரங்கள் தேவையில்லை. மனம்வருந்தி கடவுளிடம் செய்யும் வேண்டுதலே போதுமானது. இது ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குரு அல்லது பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் அதிபதியின் சேர்க்கை இருப்பதைக் காட்டிக் கொடுக்கும்.
இன்று நாம் துன்பப்படுவதற்குக் காரணம் நமது முந்தைய செயல்கள் என்றால், நாளை நாம் துன்பப்படாமலிருக்க இன்று நல்ல செயலைச் செய்ய வேண்டும். இப்போது நாம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். நாளை எப்படி இருக்கவேண்டும் என்பது நம் கைகளில்தான் இருக்கிறது. அது இன்றைய நமது செயல்களைப்பொருத்து அமைகிறது. இன்று நல்ல செயல்களைச் செய்தால் நாளை நன்றாக இருப்போம். நமது விதியை வேறு யாரோ உருவாக்கவில்லை. நாம்தான் உருவாக்கு கிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேற்கூறிய கர்மவினைகள், ஒருவர் ஜாதகத் தில் எந்த வகையில் தொடர்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப பரிகாரம்செய்து நலம்பெற வேண்டும்.
செல்: 98652 20406