Advertisment

பங்கு வர்த்தகமும் அரசியல் மாற்றமும்... -ஆர் மகாலக்ஷ்மி

/idhalgal/balajothidam/stock-trading-and-political-change-r-mahalakshmi

வ்வொரு வருடமும் கன்னி ராசியில் சூரியன் நிற்பது புரட்டாசி மாதம் எனப்படும். இவ்வருடம் கன்னி ராசியிலுள்ள சூரியன் எவ்வித அமைப்பில் உள்ளார்?

Advertisment

கன்னிச் சூரியனை, ரிஷபத்தில் நிற்கும் குரு 5-ஆம் பார்வையாகப் பார்க்கிறார். மீன ராசியிலுள்ள ராகு 7-ஆம் பார்வையாக நோக்குகிறார். மிதுனத்தில் அமர்ந்துள்ள செவ்வாய் தனது 4-ஆம் பார்வையால் செவ்வனே விழி பதிக்கிறார்.

ss

கன்னி சூரியனுடன், உச்ச புதனும் கேதுவும் இணைவு.

சூரியன் என்பவர் காலபுருஷனின் 5-ஆம் அதிபதி. 5-ஆம் அதிபதி, பங்கு வர்த்தகத்தைக் குறிப்

வ்வொரு வருடமும் கன்னி ராசியில் சூரியன் நிற்பது புரட்டாசி மாதம் எனப்படும். இவ்வருடம் கன்னி ராசியிலுள்ள சூரியன் எவ்வித அமைப்பில் உள்ளார்?

Advertisment

கன்னிச் சூரியனை, ரிஷபத்தில் நிற்கும் குரு 5-ஆம் பார்வையாகப் பார்க்கிறார். மீன ராசியிலுள்ள ராகு 7-ஆம் பார்வையாக நோக்குகிறார். மிதுனத்தில் அமர்ந்துள்ள செவ்வாய் தனது 4-ஆம் பார்வையால் செவ்வனே விழி பதிக்கிறார்.

ss

கன்னி சூரியனுடன், உச்ச புதனும் கேதுவும் இணைவு.

சூரியன் என்பவர் காலபுருஷனின் 5-ஆம் அதிபதி. 5-ஆம் அதிபதி, பங்கு வர்த்தகத்தைக் குறிப்பார். கூடவே பங்கு வர்த்தக காரக கிரகம் புதன் உச்சம்பெற்று அமர்ந் துள்ளார்.

Advertisment

ராகுவின் பார்வையும், குருவின் பார்வையும் பெருக்கும் தன்மை கொண்டவை. எனில் எந்த பங்குகள் பெருகி வளர்ச்சி பெறும்?

அரசு சார்ந்த உலோகம் சம்பந்த பங்குகள் லாபம் தரும். குரு பார்வையினால் தங்கம் சார்ந்த பங்குகள் விலை அதிகமாகும். செவ்வாய் பார்வையால் செப்புக் கம்பிகள் கொண்ட மின்சார மோட்டார், கட்டடப் பங்குகள், கட்டடம் கட்ட உதவும் சிமென்ட், அவை சார்ந்த இயந்திரங் களின் பங்குகள் விலை உயரும். மருந்துப் பொருட்கள்- குறிப்பாக வேர், இலை போன்ற சித்த, ஆயுர்வேதப் பங்குகள் விலை அதிகரிக்கும். பெரிய மரங்களான தேக்கு, ரப்பர், சந்தனம், ருத்ராட்சம் சார்ந்த பங்குகள் விலை ஏறும். நெல்லிக்காய் சார்ந்த மருந்து, நோய்த்தடுப்பு வகை விலையேற்றம் காணும். நோட்டுப் புத்தகம் சார்ந்த பங்குகள், சமயலறை சாதனங்களின் பங்கு, மின்சார அடுப்பு, இஸ்திரிப்பெட்டி பங்குகள் அதிகமாகும். டாக்குமென்ட் தயாரிக்கும் பத்திரங்கள் விலை அதிகமாகும். தொலைத்தொடர்பு நிறுவனப் பங்குகள், டெக்ஸ்டைல்ஸ் பங்குகள் விலை அபரிதமாகும். இந்த புரட்டாசி மாதம் மேற்கண்ட பங்கு சார்ந்த வர்த்தகம் அதிகமாகும்.

புரட்டாசி மாத அரசியல்

இந்த மாதத்தில் தேசிய அரசியலில் மிகப்பெரிய மாற்றம் வரக்கூடும்.

காலபுருஷ தத்துவப்படி, ஆளும் கட்சி செவ்வாய் தன் பகை வீட்டில் அமர்ந்துள்ளார்.

எதிர்கட்சியான புதன் உச்சம்பெற்று தன் ஆட்சி வீட்டில் அமர்வதோடு, குரு பார்வையும், ராகு பார்வையும் பெறுகிறார். கூடவே அரசு கிரகமான சூரியனும் உள்ளார்.

செவ்வாய் கடும் கோபத்துடன் இவர்களைப் பார்க்கிறார்.

இந்த அமைப்புப்படி, ஆளும் கட்சி செவ்வாய் எந்த கிரகப் பார்வையுமின்றி தனித்து நிற்கிறார். எதிர்கட்சி புதன் பலம் பெறுவது மட்டுமல்ல; குரு, ராகுவின் பார்வையும், சூரியன், கேதுவும் உடன் நிற்க மிக பலம்பெறுகிறார்.

எனவே இந்த புரட்டாசி மாதம், ஆளும் கட்சி தனித்து விடப்படவும், எதிர்கட்சி அரியணை ஏறவும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

குறிப்பாக, செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 6-ஆம் தேதிவரை, இவ்வித முயற்சிகள் மிகப் பலனளிக்கும். எதிர்கட்சிகள் அனைத்தும், ஒருவித குயுக்தி யோசனையுடன் ஒன்றுசேர்ந்து ஆட்சியமைக்கும் வாய்ப்புள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் மட்டுமே இந்நிகழ்வு நடக்கும் கிரகநிலை அமைகிறது.

bala200924
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe