துருவ நாடியில் நட்சத்திரங்கள் யோக சூட்சுமம்!

/idhalgal/balajothidam/stars-pole-nadi

- சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

ஜோதிடத்தின் அடிப்படையான மூலவேர் நட்சத்திரங்கள்தான். ஒரு மரத்தின் வேரிலிருந்து மரம், கிளைகள், பூ, காய், கனி உருவாவதுபோன்று ஜோதிடத்தில் நட்சத்திரங்களைக்கொண்டே ராசி, லக்னம், தசை- புக்தி, அந்தரம் போன்ற எல்லாமும் அறியப்படுகிறது. இருபத்தேழு நட்சத்திரங்களின் சூட்சும ரகசியங்களை துருவ நாடியில் சித்தர் பெருமக்கள் துல்லியமாகக் கூறியுள்ளளர்.

gg

ஜாதகம்

ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தைக் கொண்டுதான் ஜாதகத்தில் ஜென்ம ராசி குறிக்கப்படுகிறது. ஜென்ம நட்சத்திரத்தைக் கொண்டுதான், ஜாதகத்தில் இருப்பு தசை, புக்தி, அந்தரம் கணக்கிடப்படுகிறது.

ஜென்ம நட்சத்திரம், பிறந்த நேரம் ஆகியவற்றைக்கொண்டே லக்ன நிலை குறிக்கப்படுகிறது. ஒருவருக்கு துல்லியமாகப் பலனறிய, அவரின் ஜென்ம லக்னம் எந்த நட்சத்திரங்களின் பாதசாரங்களில் அமைந்துள் ளதோ, அந்த நட்சத்திரத்தினைக் கொண்டே லக்ன நிலை யறிந்து பலன் கூறவேண்டும்.

இன்றைய நாளில் சிலர் இந்த முறையைப் பயன்படுத்திப் பலன் கூறுவதில்லை. லக்னம் எந்த ராசியில் உள்ளதோ, அந்த ராசிநாதனையே லக்னாதிபதி என்றுகூறி, பரிகாரத்தையும் கூறிவிடுகின்றனர். மக்களும் பலன்கூறத் தேவையில்லை; பரிகாரம் மட்டும் சொன் னால் போதும் என்று ஜோதிடர்களிடம் கேட்கின்றனர். பலனறியாமல் எவ்வளவு பணம் செலவுசெய்து பரிகாரம் செய்தாலும் அதனால் பலன் கிடைக்காது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மனிதன்

ஒருவரின் பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டு தான், பிறந்த நாள் விழா கொண்டாடப் படுகிறது. ஒவ்வொரு செயலைச் செய்யத் தொடங்கும்போதும், பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள நட்சத்திரங்களிலேயே தொடங்கிச் செய்கிறர்கள். அவரவர் ஜென்ம

- சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

ஜோதிடத்தின் அடிப்படையான மூலவேர் நட்சத்திரங்கள்தான். ஒரு மரத்தின் வேரிலிருந்து மரம், கிளைகள், பூ, காய், கனி உருவாவதுபோன்று ஜோதிடத்தில் நட்சத்திரங்களைக்கொண்டே ராசி, லக்னம், தசை- புக்தி, அந்தரம் போன்ற எல்லாமும் அறியப்படுகிறது. இருபத்தேழு நட்சத்திரங்களின் சூட்சும ரகசியங்களை துருவ நாடியில் சித்தர் பெருமக்கள் துல்லியமாகக் கூறியுள்ளளர்.

gg

ஜாதகம்

ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தைக் கொண்டுதான் ஜாதகத்தில் ஜென்ம ராசி குறிக்கப்படுகிறது. ஜென்ம நட்சத்திரத்தைக் கொண்டுதான், ஜாதகத்தில் இருப்பு தசை, புக்தி, அந்தரம் கணக்கிடப்படுகிறது.

ஜென்ம நட்சத்திரம், பிறந்த நேரம் ஆகியவற்றைக்கொண்டே லக்ன நிலை குறிக்கப்படுகிறது. ஒருவருக்கு துல்லியமாகப் பலனறிய, அவரின் ஜென்ம லக்னம் எந்த நட்சத்திரங்களின் பாதசாரங்களில் அமைந்துள் ளதோ, அந்த நட்சத்திரத்தினைக் கொண்டே லக்ன நிலை யறிந்து பலன் கூறவேண்டும்.

இன்றைய நாளில் சிலர் இந்த முறையைப் பயன்படுத்திப் பலன் கூறுவதில்லை. லக்னம் எந்த ராசியில் உள்ளதோ, அந்த ராசிநாதனையே லக்னாதிபதி என்றுகூறி, பரிகாரத்தையும் கூறிவிடுகின்றனர். மக்களும் பலன்கூறத் தேவையில்லை; பரிகாரம் மட்டும் சொன் னால் போதும் என்று ஜோதிடர்களிடம் கேட்கின்றனர். பலனறியாமல் எவ்வளவு பணம் செலவுசெய்து பரிகாரம் செய்தாலும் அதனால் பலன் கிடைக்காது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மனிதன்

ஒருவரின் பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டு தான், பிறந்த நாள் விழா கொண்டாடப் படுகிறது. ஒவ்வொரு செயலைச் செய்யத் தொடங்கும்போதும், பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள நட்சத்திரங்களிலேயே தொடங்கிச் செய்கிறர்கள். அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்கு நன்மை தரும், அனுகூலமான நட்சத்திரங்களில் தொடங்கிச் செய்தால்தான், அந்த காரியம் முழுவெற்றியையும், நல்ல பலனையும் தரும்.

திருமணகால சமயத்தில், பெண்ணின் ஜென்ம நட்சத்திரத்தைக்கொண்டே பத்துப் பொருத்தங்களைக் கணக்கிட்டுப் பார்த்துத் திருமணம் செய்கிறார்கள்.

இன்றைய நாளில் பெண்ணின் பிரசவகால சமயத்தில், ஜோதிடர் களிடம் நல்ல நட்சத்திரம் எது என்று கேட்டு, அந்த நட்சத்திரம் வரும் நாள்வரை காத்திருந்து, குழந்தையைப் பெற்றுக்கொள்கிறார்கள். இது தவறான நடைமுறையாகும். இதனால் அந்த குழந்தையின் வாழ்வில் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. இராமர்கூட குருவின் நட்சத்திரமான புனர்பூசம் என்னும் நல்ல நட்சத்திரத்தில்தான் பிறந் தார். ஆனால் அவர் நிம்மதியாக வாழ்ந்தாரா? இதுபோன்ற மூட நம்பிக்கையைத் தவிர்த்து விடுங்கள். பிரசவ சமயத்தில் தாய்க்கும் சேய்க்கும், சுகம் கிடைக் கும் வகையில் குழந்தைப் பேறு அமையட்டும்

கடவுள்

கோவில்களில் அர்ச்சனை செய்யும்போது, ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தைக் கொண்டே அர்ச்சனை செய்யப்படுகிறது.

பெரும்பாலான கோவில்களில் உற்சவம், திருவிழா, தேர் இழுத்தல் போன்ற இன்னும் பல விசேஷங்கள் வருடா வருடம் குறிப் பிட்ட மாதத்தில், ஒரு குறிப்பிட்ட நட்சத்திரம் உள்ள நாளிலேயே தொன்றுதொட்டு செய்யப் பட்டு வருகிறது.

ஒவ்வொரு கடவு ளுக்கும் பூமியில் அவதாரம் எடுத்த ஒரு பிறப்பு நட்சத்திரம் குறிக் கப்பட்டு, அந்த நட்சத்திரம் வரும் நாளிலேயே விசேஷ வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சந்திராஷ்டமம்

ஒருவரின் பிறந்த ராசிக்கு எட்டாவது ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் நாட்களை சந்திராஷ்டமம் எனவும், அந்த நாட்களில் எந்த நல்ல பலனும் நன்மைகளும் நடக்காது எனவும் பொதுவாகக் கருதுவர்.

ஆனால், ஜென்ம ராசிக்கு எட்டாவது ராசியிலுள்ள மூன்று நட்சத்திரங்களில் சந்திரன் சஞ்சாரம் செய்தாலும், அவரின் ஜென்ம நட்சத்திரத்திற்கு நன்மை தரும் நட்சத்திரம் அந்த எட்டாவது ராசியில் இருந்துவிட்டால், அனுகூலமான அந்த நட்சத்திர பாத சாரங்களில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் நாளில் சந்திராஷ்டமத் திற்குண்டான தீமையான பலன்கள் நடக்காது. அந்த அனுகூல நட்சத்திர நாளில் அவர் தொடங்கிச் செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றியையும் லாபத்தையும் அடைவார் என்று துருவ நாடியில் கூறப்பட்டுள்ளது.

ஏழரைச்சனி

இன்றைய நாளில் ஜாதகத்திலும், கோட்சார நிலையினையும் கொண்டு, சனிகிரகத்தைப் பற்றி பயங்கரமான பல கதைகளையும், பாடல்களையும் கூறி மக்களை மிக அதிகமாக பயமுறுத்துகி றார்கள். அதிலும் கோட்சாரத்தில் நான்காமிடத் துச் சனி, எட்டாமிடத்துச் சனி, ஏழரைச்சனிக் காலம் என பலவிதமாகக் கூறி, சனி சொல்ல முடியாத துன்பங் களைதச் செய்யும்; அதற்குப் பரிகாரம் செய்யவேண்டும் எனச் சொல்லி, மக்களை பயமுறுத்துகிறார்கள். இவற்றைப் பற்றி வாசகர்கள் பயப்பட வேண்டாம்.

கோட்சார நிலையில், ஒருவரின் பிறப்பு ராசிக்கு 12, 1, 2-ஆகிய மூன்று ராசிகளில், ஒரு ராசிக்கு இரண் டரை வருடங்கள் வீதம் ஏழரை யாண்டுகள் சனி சஞ்சாரம் செய்யும் காலத்தையே ஏழரைச் சனிக் காலம் எனக் கூறுவார்கள்.

இந்த மூன்று ராசிகளிலும் உங்களின் ஜென்ம நட்சத்திரத்திற்கு நன்மை தரும் நட்சத்திரங்கள் இருந்தால், அந்த நட்சத்திரங்களின் பாதசாரங்களில் கோட்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில், அளவுக்கதிகமான நன்மைகளைத் தந்து அனுபவிக்கச் செய்துவிடுவார்.

ஏழரைச்சனிக் காலத்தில்தான் இந்திராகாந்தி, தான் இழந்த பிரதம மந்திரிப் பதவியை சனியின் அருளால் திரும்பவும் அடைந்தார். இவரைப்போன்று பல அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் தாங்கள் இழந்த பதவியை தங்களுக்கு ஏழரைச்சனி நடந்த காலத்தில் திரும்பவும் அடைந்துள்ளார்கள் என்பது அனுபவத் தில் நாம் அறிந்த உண்மை.

ஏழரைச்சனி எல்லாரையும் ஏழரை ஆண்டுகள் பாதிக்காது. இந்த ஏழரைச்சனிக் காலத்தில் அமையும் சொத்து, தொழில், பதவி போன்றவை ஆயுள் இறுதிவரை அவரைவிட்டுப் போகாது என்று துருவ நாடியில் கூறப்பட்டுள்ளது. சனி கொடுத்தால் எவர் தடுப்பார்?

அதுபோல ஜென்ம ராசிக்கு நான்காமிடம், எட்டாமிட ராசிகளில் உங்களின் ஜென்ம நட்சத்திரத்திற்கு நன்மை தரும் நட்சத்திரங் களின் பாதசாரங்களில் சனி சஞ்சாரம் செய்யும் நாட்களில், சனி பகவான் தீமைகளைத் தராமல் நன்மைகளையே தருவார்.

குரு

இந்த உலகில் மனிதர்களிடையே மதம், சாதி, இனம் என்று பேதப்படுத்தி, பிரித்து வைத்துள்ளதுபோல், ஜோதிடமுறையிலும் ஒன்பது கிரகங்களில் சிலவற்றை சுபகிரகங்கள் என்றும், சிலவற்றை அசுபகிரகங்கள் என்று பிரித்து வைத்து பலன் கூறி வருகிறார்கள். இந்த உலகில் எல்லா மனிதர்களும் ஒன்று போலவே பிறக்கிறார்கள்.

ஒன்றுபோல சக்தி படைத்த நல்லவர்கள் தான். எல்லா கிரகங்களும் ஒன்றுபோல சக்திபடைத்த நல்ல கிரகங்கள்தான் என்பதே ஜோதிடம் கூறும் உண்மை.

குரு என்னும் கிரகம் சுபகிரகம், கிரக ஜாதியில் பிராமணன், நன்மை மட்டுமே செய்யும் கிரகம்; குருவின் பார்வை இருந்தால் சகல பாவ-சாப-தோஷங்களும் காரியத் தடைகளும் நீங்குமென்று கூறுவார்கள்.

ஆனால் ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில், அவரின் ஜென்ம நட்சத்திரத்திற்கு நன்மை தரும் நட்சத்திரங்களின் பாதசாரங்களில் குரு இருந்தால் மட்டுமே நன்மைகளைத் தரும்.

ஜென்ம நட்சத்திரத்திற்கு நன்மை தராத பிரதிகூலமான நட்சத்திர பாதசாரங்களில் குரு இருந்தால் எந்த நன்மைகளையும் தராது. மற்ற கிரகங்களைவிட அளவுக்கதிகமான தீமை, தடைகளைத் தந்து, வாழ்க்கையை கொட்டிக்கவிழ்த்து விடும்.

கோட்சார நிலையில் குரு தான் இருக்கும் ராசியிலிருந்து 2, 5, 7, 9-ஆம் ராசிகளைப் பார்க்கும் என்றும், அந்த சமயத்தில் குருவின் பார்வையால் திருமணம், வீடு, வாகனம் போன்ற அனைத்து நன்மைகளையும் குரு தருவார் என்றும் கூறுவார்கள்.

ஜீவநாடி படிக்க என்னிடம் வருபவர்களில் நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும், ""ஐயா, எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. எந்த நன்மைகளையும் அடையவில்லை. அனைத்து பரிகாரங்களைச் செய்தும் இன்னும் அலைந்துகொண்டுதான் இருக்கிறேன். பலமுறை குருவின் பார்வை கிடைத்தும் எந்த நல்ல பயனும் கிடைக்கவில்லையே, ஏன்? என்று கேட்கிறார்கள். அவர்களின் திருமணத் தடைக்கு காரணத்தை ஜீவநாடியில் அறிந்து, முற்பிறவி பாவ- சாபத்திற்குண்டான நிவர்த்திகளைச் செய்யக்கூறி அனுப்புவேன்.

பாவம் - சாபம்

எந்த ஒரு கிரகமும் தனி மனிதனை பாதிப்பதில்லை. அவரவர் தன் முற்பிறவிகளில் செய்த பாவ-சாப-புண்ணியப் பதிவுகளே இப்பிறவி வாழ்வில் உண்டாகும் நன்மை- தீமைகளுக்கு காரணம்.

எந்தவொரு பாவ-சாப தோஷப் பதிவுக்கும், ஜாதகத்திலேயே பரிகாரமாகி இருந்தால் மட்டுமே தோஷம் பாதிப்பு தராது. வேறு பரிகாரம், பூஜை, யாகம், விரதம் போன்ற எந்த செயல்களையும் செய்து தீர்க்கமுடியாது; மாற்ற முடியாது.

பாவ-சாபப் பதிவுகளால் உண்டாகும் தீமைகளைத் தடுக்க சரியான சாபநிவர்த்தி வழிமுறைகளை அந்த நட்சத்திரங்களே நமக்கு வழிகாட்டி அறியச்செய்யும் என்பதே துருவ நாடியில் சித்தர்கள் வாக்காகும்.

செல்: 99441 13267

bala021020
இதையும் படியுங்கள்
Subscribe